Saturday, January 15, 2011

வேலன்-கற்பனை உருவங்கள் உருவாக்கும் விளையாட்டு

ஒரே களிமண்தான். அதில் விதவிதமான கடவுள் உருவஙகள் உருவாக்குவதில்லையா...அதுபோல் விதவிதமான கற்பனை உருவங்களை உருவாக்கி விளையாடும் விளையாட்டை இன்று காணலாம்.7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
அதில் நியு கேம் கிளிக் செய்தால் பல தலைப்புகளில் பல உருவங்கள் கிடைக்கும். ஒவ்வொன்றாக கிளிக் செய்ய பக்கத்தில் உள்ள கட்டத்தில் உருவங்கள் தெரியும். ஓ. கே. தாருங்கள். நான் அனிமெல்ஸ்ல் ஆடு உருவம் தேர்வு செய்துள்ளேன்.
பக்கத்தில் உள்ள கட்டத்தில் இருந்து துண்டுகளை எடுத்து உருவத்தில் பொருத்த வேண்டும்.
உருவங்களின் அளவுக்கு ஏற்ப துண்டுகளை சுழற்றும வசதியும் உள்ளது. துண்டின் மேல் ரைட் கிளிக் செய்ய விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும். அதில் விதவிதமான போசிஷனில் துண்டுகள் இருக்கும். தேவையானதை கிளிக் செய்து கட்டத்தில் பொருத்தவேண்டும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்து நிறங்கள் - பின்புற நிறங்கள் -அளவுகள் என தேவையானதை தேர்ந்தெடுக்கலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
நாம் கற்பனைக்கு ஏற்றவாறும் டிசைன் செய்து ஒரு பெயரை அதற்கு கொடுத்து அதனை சேமிக்கலாம். நானே டிசைன் செய்துவைத்துள்ள உருவத்தை கீழே பாருங்கள்.
சரியான நீங்கள் பொருத்திவிட்டால் பாராட்டு விண்டோ ஒன்று உங்களுக்கு  தோன்றும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 

வாழ்க வளமுடன்.
வேலன்.

அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

17 comments:

  1. விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விளையாட்டு அருமையா இருக்கு

    ReplyDelete
  3. உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும்மற்றும்நண்பர்களுக்கும்,இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்...

    -அன்புடன் மஜீத்

    ReplyDelete
  4. அருமையான பதிவு,, நன்றி..
    நண்பா, on line இல் வரும் ebook மற்றும் epaper களை hard டிஸ்க் இல் டவுன்லோட் செய்து பின் படித்துக்கொள்ள உதவும் வகையில் ஏதேனும் இலவச சாப்ட்வேர் இருக்கிறதா?l

    ReplyDelete
  5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :-)

    ReplyDelete
  6. இனிய பொங்க்ல வாழ்த்துகக்ள்

    ReplyDelete
  7. வணக்கம் வேலன் ஸார், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சிறியவர் முதல் பெரியவர் வரை பயனளிக்கும் சிறந்ததொரு விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நான் கணிணி விற்பனை செய்து கொண்டு இருக்கிறேன்.நான் விற்பனை செய்த ஒரு கணிணியில் internal tv tuner card மாட்டி விட வேண்டி இருந்தது.இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் கணிணியின் மதர்போர்டில் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கரில் கணிணீயில் இசைக்கப்படும் பாடல்களின் ஒலியானது கேட்கிறது.ஆனால் அதேநேரம் tv tuner card ல் கேபிள் இணைத்து படம் பார்க்கும் போது படம் தெரிகிறது,ஆனால் ஒலி கேட்பதில்லை.tv tuner card ல் இருந்து மதர்போர்டிற்கு ஒரு இணைப்பு ஒயர் வழங்கி உள்ளார்கள்.அதனை இணைத்த பின்பும் ஒலி கேட்கவில்லை. tuner card க்கான driver மென்பொருள் சரியாக நிறுவப்பட்டுள்ளது.இப்பொழுது tuner card வழியாக படம் பார்க்கும் போது ஒலி கேட்க வேண்டும் என்றால் ஸ்பீக்கரை tuner card ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஸவுண்டு போர்ட்டில் இணைக்க வேண்டி இருக்கிறது.நான் ஏதாவது செட்டிங்ஸ் செய்ய வேண்டுமா?.என்னிடம் கணிணி வாங்கியவரிடம் நான் உங்களை நம்பி வரும் திங்கள் கிழமை
    சரி செய்து தருவதாக உறுதி கூறி உள்ளேன்.தயவு செய்து என்னை காப்பற்றவும்.

    ReplyDelete
  8. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. மாணவன் said...
    விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//

    நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் வாழ்ததுக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்

    ReplyDelete
  10. தமிழ்த்தோட்டம் said...
    விளையாட்டு அருமையா இருக்கு//

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. Anonymous said...
    உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும்மற்றும்நண்பர்களுக்கும்,இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்...

    -அன்புடன் மஜீத்ஃஃ

    நன்றி மஜீத் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. 2009kr said...
    அருமையான பதிவு,, நன்றி..
    நண்பா, on line இல் வரும் ebook மற்றும் epaper களை hard டிஸ்க் இல் டவுன்லோட் செய்து பின் படித்துக்கொள்ள உதவும் வகையில் ஏதேனும் இலவச சாப்ட்வேர் இருக்கிறதா?ஃ

    கேஆர் சார்..இதனை பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டுள்ளேன் எனது முந்தைய பதிவினை பார்க்கவும்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. ஜெய்லானி said...
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !! :

    நன்றி ஜெய்லானி சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. Jaleela Kamal said...
    இனிய பொங்க்ல வாழ்த்துகக்ள்ஃஃ

    நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. வணக்கம் வேலன் ஸார், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.சிறியவர் முதல் பெரியவர் வரை பயனளிக்கும் சிறந்ததொரு விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நான் கணிணி விற்பனை செய்து கொண்டு இருக்கிறேன்.நான் விற்பனை செய்த ஒரு கணிணியில் internal tv tuner card மாட்டி விட வேண்டி இருந்தது.இப்பொழுது பிரச்சினை என்னவென்றால் கணிணியின் மதர்போர்டில் இணைக்கப்பட்டிருக்கும் ஸ்பீக்கரில் கணிணீயில் இசைக்கப்படும் பாடல்களின் ஒலியானது கேட்கிறது.ஆனால் அதேநேரம் tv tuner card ல் கேபிள் இணைத்து படம் பார்க்கும் போது படம் தெரிகிறது,ஆனால் ஒலி கேட்பதில்லை.tv tuner card ல் இருந்து மதர்போர்டிற்கு ஒரு இணைப்பு ஒயர் வழங்கி உள்ளார்கள்.அதனை இணைத்த பின்பும் ஒலி கேட்கவில்லை. tuner card க்கான driver மென்பொருள் சரியாக நிறுவப்பட்டுள்ளது.இப்பொழுது tuner card வழியாக படம் பார்க்கும் போது ஒலி கேட்க வேண்டும் என்றால் ஸ்பீக்கரை tuner card ல் கொடுக்கப்பட்டிருக்கும் ஸவுண்டு போர்ட்டில் இணைக்க வேண்டி இருக்கிறது.நான் ஏதாவது செட்டிங்ஸ் செய்ய வேண்டுமா?.என்னிடம் கணிணி வாங்கியவரிடம் நான் உங்களை நம்பி வரும் திங்கள் கிழமை
    சரி செய்து தருவதாக உறுதி கூறி உள்ளேன்.தயவு செய்து என்னை காப்பற்றவும்.//

    உங்களது டுயுனர் கார்ட்டில் உள்ள இன்புட் - அவுட்புட்டையும் -கம்யூட்டரில் வரும் இன்புட்-அவுட்புட்டையும் மாற்றி போட்டு பார்க்கவும் சரியாக வரும்.எங்காவது சிறிய தவறினை செய்திருப்பீர்கள்
    வேறு சந்தேகம் இருப்பின் உங்கள் மெயில் ஐடிதரவும் தொடர்பு கொள்கின்றேன்.வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. சே.குமார் said...
    இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.//

    நன்றி குமார் சார்.உங்களுக்கும உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

    நன்றி
    யாழ் மஞ்சு

    ReplyDelete