வேலன்-போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட்போட்டோ எடுக்க

பாஸ்போர்ட் போட்டோ முதற்கொண்டு மேக்ஸி சைஸ் வரை புகைப்படங்கள் அளவிறகு கொண்டுவர போட்டோஷாப் அப்ளிகேஷன்கள் அவசியம்.ஆனால் போட்டோஷாப் இல்லாமலேயே நாம் பாஸ்போர்ட் புகைப்படங்கள் கொண்டுவரலாம். 6 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள Step:-1 ல் உள்ள Add a Passport Photo கிளிக் செய்து உங்கள் கணிணியில் உள்ள போட்டேவினை தேர்வு செய்யவும்.
இப்போது உங்களுக்கு ஒரு நீள் வட்டமும் அதை சுற்றி செவ்வகமும் கிடைக்கும் நீள்வட்டத்தினை நீங்கள் முகத்துக்கு ஏற்றார்போல சரியாக பொருத்தவும்.
இப்போது வலது பக்கம் பார்த்தீர்களே யானால் உங்களுக்கு கீழ்கண்ட் விண்டோ கிடைக்கும். அதில் நீங்கள் எந்த நாட்டுடைய பாஸ்போர்ட் வேண்டுமோ அந்த நாட்டினுடையதை தேர்வு செய்யுங்கள்.அதன் கீழேயே போட்டோ அளவுகளை மாற்றுதலுக்காக நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். மேலும் போடோவில் நாம் நமது விருப்பமான வார்த்தைகளையும் கொண்டுவரலாம்.
ஒ.கே.கொடுத்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு எவ்வளவு புகைப்படம் தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
போட்டோ பிரிண்ட் சைஸையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
கடைசியாக ஓ,கே.கொடுங்கள். உங்களுக்கு போட்டோஷாப் துணையில்லாமல் பாஸ்போர்ட் போட்டோ ரெடி.குறிப்பாக இது டிரையல் விஷன் பதிப்பு. நன்றாக இருந்தால் வாங்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

3 comments:

'பரிவை' சே.குமார் said...

Romba avasiyamana pathivu velan sir... Thanks for sharing.

வேலன். said...

சே.குமார் said...
Romba avasiyamana pathivu velan sir... Thanks for sharing.
ஃஃ

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.

சுமதி said...

haloo Friend,

I want to know how ro resize the poto to 10kb in size. i tried many time with MP Manager also but I could not done it within the size. please help me. Thank u

Related Posts Plugin for WordPress, Blogger...