வேலன்-ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவதும் பயன்படுத்துவதும்


புது புது நோய்கள்-புது புது வைத்தியங்கள். இன்று இருக்கும் உடல்நிலை நாளை இருப்பதில்லை..நேற்றுவரை நன்றாக இருந்தார்ப்பா...இன்று இப்படி ஆகிவிட்டது என்று புலம்புவார்கள். நோய்வாய்பட்டவர்கள் இறைவனிடம் வரம்கேட்டால் எனது முன்பிருந்த நல்ல உடல்நிலையை கொடு என்பார்கள்.ஆனால் இறைவனும் வருவதில்லை..வரமும் தருவதில்லை....சரி...நாம் கம்யூட்டருக்கு வருவோம். இதே சூழ்நிலை நமது கம்யூட்டருக்கு வரலாம். நன்றாக ஓடிக்கொண்டிருக்கும். தீடிரென்று வேலைகளில் முரண்டுபிடிக்கும். இவ்வாறான சமயங்களில் நாம் நமது பழைய நிலைக்கு நமது கம்யூட்டரை கொண்டு செல்லலாம். புதிய ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவதையும் செயல்ப்டுத்துவதையும் இன்று பார்க்கலாம்.நமது கம்யூட்டர் நல்ல நிலையில் உள்ளபோதே நாம் ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்கி வைத்துக்கொள்வது நல்லது..முதலில் Start-Help and Support கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் வலதுபக்கம் Performance and Maintenance கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் System Restore to undo change கிளிக் செய்யவும். இப்போழுது இடதுபக்கம் Run the system restore wizard கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Create a Restore Point என்பதில் எதிரே உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். 
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் வரும் கட்டத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரையோ அல்லது அன்றைய தேதியையோ தட்டச்சு செய்யுங்கள்.
கீழே உள்ள Create என்பதனை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு சில நொடிகளில் புதிய ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாகிவிடும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குளோஸ் செய்து வெளியேறிவிடுங்கள். சில நாட்கள் கழித்து உங்களுக்கு மீண்டும் பழைய நிலைக்கு கம்யூட்டரை உபயோகிக்கும் நிலை வந்தால் மீண்டும் பழையபடி Start-Help and Support center கிளிக் செய்யவும்.வரும் விண்டோவில்  வலதுபக்கம் Performance and Maintenance கிளிக் செய்யவும். திறக்கின்ற விண்டோவில் System Restore to undo change கிளிக் செய்யவும். இப்போழுது இடதுபக்கம் Run the system restore wizard கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Restore my computer to an earlier time என்பதில் எதிரே உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் நீங்கள் நல்ல நிலையில் கம்யூட்டர் உள்ளபோது குறித்துவைத்த தேதி - அல்லது பெயரை கிளிக் செய்யவும்.
next கொடுக்கவும். சில நொடிகள் காத்திருங்கள். உங்களுக்கு பழைய நிலைக்கு கம்யூட்டர் மாறிவிடும்.புதியதாக ரீ-ஸ்டோர் பாயிண்ட் உருவாக்குவதையும் அதனை பயன்படுத்துவதையும் தெரிந்துகொண்டீர்கள் அல்லவா? நீங்களும் புதிய பாயிண்ட் உருவாக்கிபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

7 comments:

மாய உலகம் said...

உபயோகமான பதிவு நன்றி சகோதரரே... தங்களால் எனது பதிவும் கலை கட்டுகிறது.. நன்றிகள்

'பரிவை' சே.குமார் said...

உபயோகமான பதிவு.

Anonymous said...

maruthtvar than varuvar

வேலன். said...

மாய உலகம் said...
உபயோகமான பதிவு நன்றி சகோதரரே... தங்களால் எனது பதிவும் கலை கட்டுகிறது.. நன்றிகள்
//

நன்றி நண்பரே..
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

சே.குமார் said...
உபயோகமான பதிவு.//

நன்றி குமார் சார்...
வாழ்க வளமுடன்.
வேலன்.

வேலன். said...

Anonymous said...
maruthtvar than varuvarஃஃ

ஆம் ...மருத்துவர்தான் வருவார்...
வாழக் வளமுடன்.
வேலன்.

Nathar Oli said...

windows 7 nil epadi restore point uruvakuvathu enbathi tamilil podungal plz

Related Posts Plugin for WordPress, Blogger...