Friday, August 5, 2011

வேலன்-டிரக் விளையாட்டு

 மாணவர்களுக்கு இன்னும் பாடங்கள் துவங்கவில்லை..அதற்குள் ஒருசின்ன டிரக் விளையாட்டினை விளையாடிவிடலாம்.சற்றே பெரிய அளவில் 43 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் பெயரினை தட்டசசு செய்யவும்.
ஆரம்ப நிலையில் உங்களுக்கு ஒரு மாடல் கார்தான் கொடுக்கப்படும். நீங்கள் வண்டி ஓட்டி மெடல் வாங்கினால்தான் அடுத்த மாடல் கார் கொடுக்கப்படும்.குறிப்பிட்ட நேரத்தில் நீங்கள் அடைய வேண்டும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
குறிப்பிட்ட இலக்கினை 37 வினாடிகளில் நீங்கள் முடித்தால் உங்களுககு தங்கப்பதக்கம் கிடைக்கும் நீங்கள் அடுத்த லெவல் செல்லும் போது உங்களுக்கான பூட்டு திறந்து மாடல் வண்டிகள் கிடைக்கும். வெள்ளி பதக்கம் பெற 42 வினாடிகளும் வெண்கல பதக்கம் பெற 48 வினாடிகளில் நீங்கள் இலக்கினை அடைய வேண்டும்.
இந்த விளையாட்டினை எனது மகன் விளையாடும் போது அனாசயமாக தங்கப்பதக்கம் வாங்கினார். இளம்கன்று பயமறியாது அல்லவா? இதையே நான் விளையாடும் போது நோ மெடல் என்று வந்தது....பார்க்கலாம் நீங்களாவது மெடல் வாங்குகின்றீர்களா-அல்லது உங்கள் குழந்தைகள் மெடல் வாங்குகின்றார்களா என பார்க்கலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

4 comments:

  1. Chitra said...
    nice. :-)ஃஃ

    அட...சுட சுட கருத்தா...
    நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  2. நாம வெட்டியா இருக்குரது தெரிஞ்சு, சூப்பர் போஸ்ட் போட்டீங்க ஸார்.. சூப்பர்...

    பல கோடி நன்றிகள்

    ReplyDelete
  3. விளையாட்டு மென்பொருள் பகிர்வுக்கு நன்றி சார்!

    ReplyDelete