Sunday, March 25, 2012

வேலன்:-வீடியோ மேஜிக்.

வீடியோக்களை விதவிதமாக எடிட் செய்ய நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன. அதில் இந்த சாப்ட்வேரும் ஒன்று. 6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான வீடியோவினை டிராப் & டிராக் முறையிலோ - பைல்மூலமோ தேர்வு செய்யலாம். 
இதில் கீழே உள்ள settings கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள போனுக்கு தேவையான பார்மெட்டினை தேர்வுசெய்யலாம்.


 இதில் உள்ள Profile கிளிக் செய்ய நமக்கு தேவையான வீடியோ கோடக் - ஆடியோ கோடக் - ப்ரேம் ரேட்- என விதவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வுசெய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 அனைத்து செட்டிங்ஸ் முடிந்ததும் நாம் ப்ரிவியு பார்க்கும் வசதியும் உள்ளது:.
 இறுதியாக இதன் கீழே உள்ள Start பட்டனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் வீடியோவினை எடிட் செய்ய. சேர்க்க,பிரிக்க.யூ-டியூபிலிருந்து பதிவிறக்கம் செய்ய - ரிங்டோன உருவாக்க என எண்ணற்ற பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

11 comments:

  1. sir intha file 6 mb il varavillai,.33mb ullathu

    ReplyDelete
  2. மாப்ஸ்......தல நோவு ,தல நோவு அப்டீன்றான்களே அத்து என்னா மாப்ஸ்?

    ReplyDelete
  3. Raaja said...
    sir intha file 6 mb il varavillai,.33mb ullathu//

    ஆம் நண்பரே...36 என வருவதற்கு 6 என வந்துவிட்டது. தவறினை சுட்டிகாட்டியமைக்கு நன்றி..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. கக்கு - மாணிக்கம் said...
    மாப்ஸ்......தல நோவு ,தல நோவு அப்டீன்றான்களே அத்து என்னா மாப்ஸ்?
    ஃஃ

    ஒரு முறை மதுரை சென்று வாருங்கள் சரியாகிவிடும்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  5. BEST PTC said...
    very use...ஃஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. மென்பொருள் பிரபு said...
    லின்க் கொடுப்பியா?கணினி இதழ்களில் எழுதும் நண்பர்களுக்கு...உங்கள் கட்டுரை பிரசுரமானால் உங்கள் பெயர் போடுவதற்கு பதில் உங்கள் வலைப்பூவிற்கு லின்க் கொடுக்கச்சொல்லுங்கள்.இல்லாவிட்டால் அந்த இதழில் பார்த்தேன் என்று புகழ் அவர்களுக்கு போய்விடும். கஷ்டப்பட்டு எழுதிய உங்களுக்கு வராது.நாம் எழுதாவிட்டால் கணினி இதழ்கள் பிழைப்பு நடத்த முடியாது.அவர்களை நம்பி நாம் இல்லை. நம்மை நம்பித்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நன்றாக புரிந்துகொள்ளுங்கள்.தொழில்நுட்ப பதிவர்களின் நலன் வேண்டி..மென்பொருள் பிரபு.ஃஃ

    நம்மிடம் இன்னும் ஒற்றுமை வரவில்லை..அனைவரும் ஒன்றுசேரும் சமயம் நிலமை மாறகூடும்.தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. பயனுள்ள மென்பொருளுக்கு நன்றி வேலன் சார்.

    ReplyDelete