Thursday, May 17, 2012

வேலன்:-விலங்குகளின் அழகிய வால்பேப்பர்கள்.

காட்டுவிலங்குளானாலும் சரி - வீட்டு விலங்குகளானாலும் சரி..அழகிய கேமராவில் படம் பிடித்து அதை பார்ப்பதிலே அலாதி இன்பம். இங்கு 40 வகையான விலங்குகளின் புகைப்படத்தின் வால்பேப்பர்கள் இணைத்துள்ளேன். 12 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.. தேவையான விலங்கினை நீங்கள் உங்கள் டெக்ஸ்டாப்பின் வால்பேப்பர்களாக வைத்துக்கொள்ளலாம்.










பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

5 comments:

  1. என்ன சார் ப்ளாக் காத்து வாங்குது? வியாழன் போட்ட பதிவுக்கு ரெண்டே ரெண்டு கமென்ட் தானா? அதுவும் "உங்கள் பதிவுகளை இணைத்துப் பயன் பெறுங்கள்"... பிரபல பதிவர்னு சொல்லிக்கறீங்களே? செம காமெடிப்பா...

    ReplyDelete
  2. krishy said...
    அருமையான பதிவு ...
    உங்கள் பதிவுகளை DailylLib ல் இணைத்து பயன் பெறுங்கள். DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

    தமிழ்.DailyLib

    we can get more traffic, exposure and hits for you

    To link to Tamil DailyLib Logo or To get the Vote Button
    தமிழ் DailyLib Vote Button

    உங்கள் பதிவுகளை இணைத்து பயன் பெறுங்கள்

    நன்றி
    தமிழ்.DailyLib//

    நன்றி நண்பரே..பதிவினை இணைக்கின்றேன்.
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  3. Anonymous said...
    என்ன சார் ப்ளாக் காத்து வாங்குது? வியாழன் போட்ட பதிவுக்கு ரெண்டே ரெண்டு கமென்ட் தானா? அதுவும் "உங்கள் பதிவுகளை இணைத்துப் பயன் பெறுங்கள்"... பிரபல பதிவர்னு சொல்லிக்கறீங்களே? செம காமெடிப்பா//

    பெயரில்லத நண்பருக்கு வணக்கம்.கடந்த ஆட்சியிலாவது எப்போ கரண்ட் போகும் எப்போ வரும் என்று சரியாக தெரியும். அதற்கேற்றவாறு வேலையை சரிசெய்து ஓய்வு நேரத்தில் பதிவிடலாம். இப்போது வயிற்றுக்காக சாப்பிடும் சாப்பாட்டையே நேரத்திற்கு சாப்பிட முடியவில்லை.நேரங்கட்ட நேரத்தில் சாப்பிட முடிகின்றது.இதில் பதிவு காற்றுவாங்காமல் என்னசெய்யும்? விமர்சனம் செய்யும்சமயம் சற்று யோசித்து பெயருடன் விமர்சனம் செய்யுங்கள் பெயரில்லத நண்பரே....இருப்பினும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  4. ஆதவன் -யாழ்ப்பாணம்May 23, 2012 at 8:36 AM

    வேலன் அண்ணா .நான் உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் தவறாமல் பார்த்து வருகிறேன்.பதிவுகள் எல்லாமே அருமை.பெயர் குறிப்பிடாத நண்பரின் விமர்சனத்தை பார்த்ததும் மிகவும் எரிச்சலாக இருந்தது.இணையத்தில் என்னவென்றாலும் எழுதலாம் என சிலர் நினைக்கிறார்கள்.மற்றவர்களின் பதிவுகளை பிரதி பண்ணாமல் சொந்தமாக பதிவு ஒன்றை இடுவது எவ்வளவு கடினமான காரியம் என்பது உங்களை போன்ற நேர்மையான பதிவாளர்களுக்கு மட்டுமே தெரியும்.அதுவும் நீங்கள் இலகு தமிழில் எழுத்துப்பிழைகள் ஏதுமின்றி பதிவுகளை இடுகிறீர்கள். சொந்தமாக பெயர்கூட இல்லாத இவரைப்போன்ற நபர்களின் விமர்சனங்களை குப்பை தொட்டியில் வீசிவிட்டு உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்.உங்கள் சேவை தமிழ் கணணி உலகத்துக்கு தேவை.

    ReplyDelete
  5. ஆதவன் -யாழ்ப்பாணம் said...
    வேலன் அண்ணா .நான் உங்கள் பதிவுகள் எல்லாவற்றையும் தவறாமல் பார்த்து வருகிறேன்.பதிவுகள் எல்லாமே அருமை.பெயர் குறிப்பிடாத நண்பரின் விமர்சனத்தை பார்த்ததும் மிகவும் எரிச்சலாக இருந்தது.இணையத்தில் என்னவென்றாலும் எழுதலாம் என சிலர் நினைக்கிறார்கள்.மற்றவர்களின் பதிவுகளை பிரதி பண்ணாமல் சொந்தமாக பதிவு ஒன்றை இடுவது எவ்வளவு கடினமான காரியம் என்பது உங்களை போன்ற நேர்மையான பதிவாளர்களுக்கு மட்டுமே தெரியும்.அதுவும் நீங்கள் இலகு தமிழில் எழுத்துப்பிழைகள் ஏதுமின்றி பதிவுகளை இடுகிறீர்கள். சொந்தமாக பெயர்கூட இல்லாத இவரைப்போன்ற நபர்களின் விமர்சனங்களை குப்பை தொட்டியில் வீசிவிட்டு உங்கள் பணியை தொடர்ந்து செய்யுங்கள்.உங்கள் சேவை தமிழ் கணணி உலகத்துக்கு தேவைஃஃ

    நன்றி ஆதவன் சார்..தங்கள்போன்றவர்களின் ஆதரவும் அன்பும்தான் பதிவுலகில் எங்களைபோன்றவர்களை சோர்வடையாமல் வைத்துள்ளது. தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete