தேவையில்லாத படங்களை எளிதில் நீக்க மற்றும் ஒரு சாப்ட்வேர்உள்ளது..InstantMask என பெயரிட்டுள்ள இந்த சாப்ட்வேர் 5 எம்.பி்.கொள்ளளவு கொண்டது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். வரும் விண்டோவில் உங்களுக்கான புகைப்படத்தினை தேர்வு செய்யவும். நான் இந்த புகைப்படத்தினை தேர்வு செய்துள்ளேன். இதில் இரண்டு சிறுவர்களுக்கு இடையில் நபர் ஒருவர் நின்றுகொண்டுள்ளார். இப்போது அவரை நாம் நீக்க வேண்டும்.
இந்த விண்டோவில் பச்சை மற்றும் சிகப்பு நிறத்தில் ஸ்கெட்ச கொடுத்திருக்கின்றார்கள். இதில் உள்ள சிகப்பு நிற ஸ்கெட்ச் தேர்வு செய்து படத்தில் நீக்க விரும்பும் நபர்மீது அல்லது பொருள் மீது வரையவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.இப்போது பச்சைநிற ஸ்கெட்ச் எடுத்து எந்த எந்த இடங்கள் வேண்டுமோ அதன் மீது வரையுங்கள்.கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
இறுதியாக இதில் கடைசியல் உள்ள பட்டனை கிளிக் செய்யுங்கள்.உங்களுக்கான பணிநடைபெறும்.இறுதியாக நீக்கப்பட்ட படம் உங்களுக்கு கிடைக்கும். அதனை தனியே சேமித்துவைத்துக்கொள்ளலாம்.
இந்த சாபட்வேர் கொண்டு உங்களுக்கு தேவையில்லாததை எளிதில் நீக்கிவிடலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் வேலன்.
6 comments:
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...
நண்பரே தங்கள் போட்ட சோப் பதிவிட்டவை மின்நூலக தர முடியுமா தயவு செய்த...
I THINK ALREADY YOU HAVE GIVEN THIS SOFTWARE, BUT THIS IS VERY FUNNY THANK YOU
திண்டுக்கல் தனபாலன் said...
பயன்படுத்திப் பார்க்கிறேன்... நன்றி...//
நன்றி தனபாலன் சார்...
தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வாழக் வளமுடன் வேலன்.
k neroje said...
நண்பரே தங்கள் போட்ட சோப் பதிவிட்டவை மின்நூலக தர முடியுமா தயவு செய்த...ஃஃ இதுபற்றி நான் ஏற்கனவே கொடுத்துள்ளேன் நண்பரே..எடுத்து பயனப்டுத்திக்கொள்ளுங்கள. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன் வேலன்.
Anonymous said...
I THINK ALREADY YOU HAVE GIVEN THIS SOFTWARE, BUT THIS IS VERY FUNNY THANK YOU
இதுபோல் இன்னும் நிறைய இருக்கின்றது. நண்பரே..ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடுகொண்டது:.தங்கள் வருகைக்கு நன்றி... வாழக் வளமுடன் வேலன்.
Post a Comment