Friday, June 30, 2017

வேலன்:-போட்டோஷாப் மூலம் அதிக புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க.

புகைப்படங்கள் நாம் கேமராவில் எடுக்கும் சமயம் கேமரா தரத்திற்கு ஏற்ப நமக்கு கிடைக்கும் புகைப்படங்கள் அதிக ரெசுலேஷனுடன் கிடைக்கும். அதனை மற்றவர்களுக்கு இணையம் மூலம் இமெயிலில் அனுப்பும் சமயம் சிரமமாக இருக்கும். அவ்வாறு புகைப்படங்களை ரெசுலேஷன் அளவினை தரம் குறையாமல் அளவினை குறைத்திட போட்டோஷாப் பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரு போல்டரில் உள்ள படங்களை ஓரே சமயத்தில் ரெசுலேஷனை குறைத்து விடலாம். இதனை பயன்படுத்த முதலில் போட்டோஷாப்பினை திறந்துகொள்ளவும். பின்னர் அதில் உள்ள 
பைல் கிளிக் செய்திட விரியும் மெனுவில் Script < image processer கிளிக் செய்திடவும்.

 உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் மாற்றம் செய்யவேண்டிய போல்டரையும் சேமிக்க விரும்பும் இடத்தினையும் தேர்வு செய்யவும்.
இதில் JPEG.PSD.TIFF  என மூன்று டேப்புகள் கொடுத்துள்ளார்கள். உங்களுக்கு எந்த பார்மெட்டுக்கு புகைப்படங்கள் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும். பின்னர் புகைப்படததில் JPEG படம் 0 விலிருந்து 12 வரையில் உள்ள Quality யில் எந்த எண் தேவையோ அதனை தட்டச்சு செய்யவும். அதுபோல பிக்ஸல் அளவினில் எதுதேவையோ அந்த அளவினை தட்டச்சு செய்யவும்.
இறுதியாக இதில் உள்ள ரன் கிளிக்செய்யவும். சில நிமிடங்கள்காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் புகைப்படமானது  தரம் குறையாமல் அளவு குறைந்து கிடைக்கும். அதன் மூலம் நாம் மற்றவர்களுக்கு சுலபமாக புகைபடங்களை பரிமாறிக்கொள்ளவோ இமெயிலில் அனுப்பவோ செய்யலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, June 23, 2017

வேலன்:- குறிப்பிட்ட நேரத்தில் கணிணி ரீஸ்டார்ட் ஆகவும் நின்றுவிடவும் செய்திட

கணிணி பயன்படுத்துகையில் குறிப்பிட்ட நேரம் ஆனதும் தானே நின்றுவிடவும். ரீ ஸ்டார்ட் ஆகிவிடவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பிகொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங் குகிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள ரீஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும். இதில் எவ்வளவு நேரம் கழித்து உங்களுடைய கணிணி ரீஸ்டார்ட் ஆகவேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 அதுபோல எவ்வளவு நேரம் கழித்து உங்கள் கணிணி நின்றுவிடவேண்டுமோ அந்த நேரத்தினை செட் செய்திடலாம்.
குறிப்பிட்ட  நேரம் ஆனதும் உங்களுடைய கணிணி நீங்கள் செட் செய்தவாறு ரீஸ்டார்ட் ஆவதும் நின்றுவிடவும் செய்யும். இதன் மூலம் நாம் கணிணியின் வேலையை சுலபமாக முடித்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.. 
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, June 12, 2017

வேலன்:-போர்ட்.சிபியூ.ரேம் பயன்பாட்டினைஅறிந்துகொள்ள

நாம் கணிணியில் பயன்படுத்தும் போர்ட்.ரேம்.சிபியு முதலியவற்றின் பயன்பாட்டின் வகைகளை அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 600 கே.பி. அளவுள்ள 
இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் மூன்று விதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். முதலில் போர்ட் பற்றி தகவல்களும் இரண்டாவது டேபிள் சிபியூ பற்றி தகவல்களும் மூன்றாவது டேபிள் ரேம் பற்றி தகவல்களும் கொடுத்துள்ளார்கள்.


ரேம் பற்றிய தகவலில் எவ்வளவு ரேம் உபயோகிக்கப்படுகின்றது. எவ்வளவு காலி இடம் உள்ளது என்கின்ற தகவல்களை அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.