Saturday, February 29, 2020

வேலன்:-ஆடியோ கட்டர்-Weeny Free Audio Cutter

ஆடியோ பைல்களில் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வெட்டி எடுத்து வெட்டி எடுத்ததை எல்லால் ஒன்றாக சேர்த்து ஒரே ஆடியோவாக கேட்க இந்த சாப்ட்வேர்பயன்படுகின்றது.7 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் வெட்ட வேண்டிய ஆடியோ பைலினை தேர் வு செய்யவும்.
 இதில் ஸ்டார்ட் என்ட பட்டன்கள் கொடுத்துள்ளார்கள். எந்த இடத்தில் இருந்து எந்த இடத்திற்கு பாடல்கள்தேவையோ அதனை தேர்வு செய்து பின்னர் கட் ஆடியோ கிளிக்செய்யவும். பிளே செய்து பார்க்கும் ;வசதியும் உள்ளதால் துல்லியமாக நாம் பாடலை கட் செய்துகொள்ளலாம்.
துண்டு துண்டாக வெட்டிய பாடல்களை ஒன்றாக இணைத்து ஒரே பைலாக மாற்றும் வசதியும் இதில்கொடுத்துள்ளார்கள். அதன்படி நாம் வெட்டப்பட்ட அனைத்து பாடல்களையும் ஓரே பாடலாக மாற்ற இதில் உள்ள ஆடியோ மேர்ஜ் கிளிக் செய்து ;ஒன்றாக்கலாம். வெட்டுவதும் ஒட்டுவதும் சுலபமாகி விடுகின்றது:. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்தக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

வேலன்:-பாஸ்வேர்ட் மேனேஜர்-Weeny Free Password Manager

நாம் கணிணியில் பயன்படுத்தும் இணைய பக்கங்கள்.இமெயில்.விண்டோக்கள்.பர்சனல் பேங்கிங்.போன்ற தகவல்களுக்கான யூஆர்எல் மற்றும் பாஸ்வேர்ட் களை தனியே ஒரு பாஸ்வேர்ர்ட் கொடுத்து பாதுகாத்தது பின்னர் பயன்படுத்த இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.1எம்.பி.கக்கு குறைவாக உள்ள இதனை பதிவிறக்கம் செய்திட
இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கிழ்கண்ட விண்டோ ஓப்ன் ஆகும்.
 இந்த அப்ளிகேஷன் உள்ளே நாம் நுழையும் முன்பே நம்மிடம் மாஸ்டர் பாஸ்வேர் கேட்கும். அதனை தட்டச்சு செய்யவும். அதனையே ரீ என்டர் செய்து உள் நுழையவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் ஆறுவகையான கேட்டகிரி கொடுத்துள்ளார்கள். தேவையானதை தேர்வு செய்து இதில் உள்ள Add Entry கிளிக் செய்யவும். பினினர் உங்கள இணைய பக்கததின் யூஆர்எல் முகவரி மற்றும் பாஸ்வேர்டினை தட்டச்சு செய்து வெளியேறவும். 
மீண்டும் ;இந்த அப்ளிகேஷனை நீங்கள் திறக்கையில் உங்களுக்கான மாஸ்டர் பாஸ்வேர்ட் கேட்கும் அதனை உள்ளீடு செய்தால் தான் நீங்கள் உள்ளே செல்லமுடியும். பின்னர் உங்கள் அனைத்து பாஸ்வேர்ட்களையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்கள் கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, February 28, 2020

வேலன்:-பிடிஎப் பைல்களை இமெஜ் பைல்களாக மாற்ற -Weeny Free PDF to Image Converter

பிடிஎப் பைல்களை TIF.BMP.PNG.GIF.JPG.WMF போன்ற பார்மெட்டுக்களில் மாற்ற இநத் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். 


 இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உங்களுடைய பிடிஎப் பைலினை தேர்வு செய்யவும்.
 இமெஜ் பார்மெட்டில் எந்த பார்மம்ட்டுக்கு புகைப்படங்களை மாற்றிட விரும்புகின்றீர்களோ அநத பார்மேட்டினை தேர்வு செய்யவும்.
 பிடிஎப் பைலின் மொத்த பக்கங்களையா அல்லது குறிப்பிட்ட பக்கங்களை இமெஜ் ;பைலாக மாற்றவேண்டுமொ அதனை தேர்வு செய்யுங்கள்.
இறுதியாக ஒ.கே.தாருங்கள் குறிபிட்ட நிமிடங்கள் கழித்து உங்களுடைய பிடிஎப் பைலானது இமேஜ் ;பைலாக மாறியிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத:துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, February 27, 2020

வேலன்:-கணிணியில் தட்டச்சு பயில

கணிணியில் விரைந்து பணியாற்ற தட்டச்சு செய்திட டைப்ரேட்டிங் நமக்கு தெரிந்துஇருக்கவேண்டும். அவ்வாறு டைப்ரேட்டிங் பயிலகத்திற்கு செல்லாமல் நாம் நமது கணிணியிலேயே தட்டச்சு பயின்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்'டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.

 இதில் உங்களுக்கு ஒரு டேப் கிடைக்கும் அதில் கீபோர்டடில் உள்ள எழுத்துக்கள் ஸ்கோரல் ஆகும். அதன் கீழ் கொடுத்துள்ள கீபோர்ட் படத்தில் அந்த எழுத்துருவுக்கான எழுத்துரு சிகப்பு  நிறத்தில் தெரியும். ஸ்கோரலில் எழுத்து வரவர நாம் கீபோர்டில் ஒவ்வொரு எழுத்தாக தட்டச்சு செய்யவேண்டும். தவறுதலாக நீங்கள் கீயை அழுத்திவிட்டால் வினோத ஒலி நமக்கு கிடைக்கும்.
 நாம் அனைத்தையும் தட்டச்சு செய்து முடித்தவுடன் உங்களுடைய தட்டச்சு முடிவு உடனுக்குடன் தெரியவரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அதில் உங்கள் தட்டச்சு செய்த வேகம் மற்றும் பிழைகளின் சதவீதம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, February 26, 2020

வேலன்:-சாப்ட்வேர்களை அன்இன்ஸ்டால் செய்திட-Z SOFT UNINSTALLER

நமது கணிணியில் நிறுவியிருக்கும் அப்ளிகேஷன்களை நாம் கன்ட்:ரோல் பேனல் சென்று நீக்குவோம். ஆனால் கண்ட்ரோல் பேனல் செல்லாமல் கணிணியில் தேவையில்லாமல் அல்லது உபயோகப்படுத்தாமல் இருக்கும் அப்ளிகேஷன்கள் ;சாப்ட்வேர்களை சுலபமாக நீக்கிட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆவது மட்டுமல்லாமல் உங்கள் கணிணியில் நிறுவியுள்ள அனைத்து அப்ளிகெஷன்களும் தெரியும்.

 தேவையானதை தேர்வு செய்து எளிதில் நீக்கிவிடலாம். சில சாப்ட்வேர்கள் தெரியவில்லை என்றால் இதில் உள்ள சர்ச் பாக்ஸில் தட்டச்சு செய்து தேடலாம். பைலினை பற்றிய முழுவிவரமும் கீழே உள்ள இன்போ பாக்ஸ் மூலம் அறியலாம். 
பைல்களை டெலிட ;செய்வது மட்டும் அல்லாமல் ஒவ்வொரு டிரைவிலும் உள்ள டெம்ப்ரவரி பைல்களையும் ஸ்கேன் செய்து நீக்கிவிடலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இந்த சாப்ட்வேர் பைல்களை நீக்கிட உதவுகின்றது.டெம்ரவரி பைல்களை நீக்கிட உதவுகின்றது.காலியாக உள்ள போல்டர்களை நீக்கிட உதவுகின்றது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Tuesday, February 25, 2020

வேலன்:-FLV கட்டர்-FLV CUTTER

யூ டியூப் வீடியோக்களில் Funny Video எனப்படும் வேடிக்கையான வீடியோக்கள் அதிகம் இடம் பெறுகின்றன. அதுபோல சில திரைப்படங்களும்.பாடல்களும்.வீடியோ கிளிப்புகளும் .FLV என்கின்ற பைல் வகைகளில் வெளியிடப்படுகின்றது. அவ்வாறான பைல்களை தேவைப்படும் இடத்தினை மட்டும் வெட்டி பயன்படுத்த இந்த FLV CUTTER பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.
 இதில் தேவைப்படும் வீடியோவினை முழுவதுமாக ஓட விடவும். தேவைப்படும் இடங்களை குறித்து வைக்துக்கொள்ளவும். மீண்டும் வீடியோவினை ஓட விட்டு தேவைப்படும் வீடியோவின்  ஆரம்பத்தில் இதில் உள்ள Select Start கிளிக் செய்யவும். வீடியோ ஒடிக்கொண்டிருக்கும் தேவைப்படும் வீடியோ முடிந்ததும் Select End  கிளிக் செய்து பின்னர் தேவைப்படும் இடத்தில் சேவ் செய்துகொள்ளவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தேர்வு செய்த வீடியோவினை  ஒட விட்டும் நாம் ப்ரிவியூ பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, February 24, 2020

வேலன்:-இபுக் ரீடர் -Ice Cream E BOOK READER

இபுக் ரீடர் என்கின்ற இந்த சாப்ட்:வேர் ஆனது PDF.EBOP.MOBI.FB2.CSR.CB2 ஆகிய பைல்களை ஒப்பன் செய்து படித்திட உதவுகின்றது.இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் நீங்கள் திறக்க விரும்பும் பைலினை தேர்வு செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுடைய லைப்ரவரியில் புத்தகங்களை சேர்க்வும். புக் மார்க் செய்திடவும் செய்யலாம். மேலும் ஓவ்வொரு பக்கமாகவும் ஒரே பக்கத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்கும் வசதி உள்ளது. 
மேலும் இதில் செட்டிங் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இரவு.பகல்.சோபியா என செட்டிங்ஸ் செய்திடலாம். மேலும் பாண்ட்களின் அளவினை வேண்டிய அளவிற்கு ஏற்றியும் இறக்கியும் வைத்தக்கொள்ளலாம். மேலும் எழுத்துக்களின் நிறத்தினையும் பின்புற நிறத்தினையும் வேண்டிய நிறத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, February 23, 2020

வேலன்:-ஸ்கிரீன் ரிகார்டர்-Ice Cream Screen Recorder

சில டிவிடிக்களில் வீடியோ பதிவிட்டிருப்பார்கள். அதனை நாம் பார்க்க மட்டுமே முடியும் அதனை டிவிடியிலிருந்து டிவிடியாகவோ காப்பி செய்யவோ முடியாது அவ்வாறான வீடியோக்களையும் நமக்கு பிடித்த படங்களில் இருந்து பிடித்த காட்சியையும்.நகைச்சுவை காட்சியையும்.பாடல்களையும் காப்பி செய்திட இந்த ஸ்கிரீன் ரிக்கார்டர் நமக்கு பயன்படுகின்றது.இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இப்போது நமக்கு தேவையான வீடியோவினை ஸ்கிரீனில் ஓடவிடவும. இதில் உள்ள ஸ்டார் ரிகார்டிங் கிளிக் செய்யவும்.தேவைப்படும் இடம் வந்ததும் ஸ்டாப் ;ரிகார்டிங் கிளிக் செய்யவும்.
நீங்கள் விரும்பி தேர்வு செய்த வீடியோவானது நீங்கள் சேமித்த .இடத்தில் வீடியோ பைலாக அமரந்திருப்பதை காணலாம். இதனை தனியே ப்ளே செய்து பார்க்கலாம்.
அதுபோல விரும்பிய புகைப்படத்தினையும் வீடியோவிலிருந்த நாம் ஸ்கிரீன்ஷாட் எடுத்து புகைப்படங்களாக சேமிக்கும் வசதியையும் இதில் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Saturday, February 22, 2020

வேலன்:-இணையம் மூலம் சொத்துவரி -குடிநீர் வரி செலுத்த-e Town Panchayat

மாநகராட்சி.நகராட்சி தவிர்த்து பஞ்சாயத்து.கிராம பஞ்சாயத்து.ஊராட்சி.பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் இருப்பிடத்தின் சொத்துவரி.குடிநீர்வரி.தொழில்வரி போன்றவற்றை இணையம் மூலம் செலுத்தும் வசதியை தமிழகஅரசு செய்துள்ளது.இதன் மூலம் நாம் நம்முடைய வரியை சுலபமாக வீடடிலிருந்தே கட்டிவிடலாம். இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும். இதனை கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
 இதில் இடதுபுறம் உள்ள Online Tax Payment என்பதனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் முதன்முறையாக வரி செலுத்துபவர் எனில் புதியதாக கணக்கிணை ஆரம்பித்து உள்நுழையவும். 
இதில் உள்ள New Registration கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உங்களுடைய பெயர்.முகவரி.தொலைபேசி எண்.இமெயில் முகவரி.பாஸ்வேர்ட் முதலியவற்றை தட்டச்சு செய்து இதில் உள்ள சப்மிட் கிளிக் செய்யவும்.
 இப்போது உங்கள் தொலைபேசிக்கு பாஸ்வேரட் ஒன்று வரும். அதுபோல உங்கள இமெயில் முகவரிக்கும் பாஸ்வேரட் ஒன்று வரும் இரண்டையும் சேர்த்து நீங்கள் அவர்களின் இணையபக்கத்தில் உள் நுழையவும். பின்னர் ;;இதில் வலதுபுறம் Edit Profile.Change Password.Add Assiments.Payment Details.Payment History.Address Change.Log Out என நிறைய ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள். மாற்றங்கள் எதும் செய்யவிரும்பினால் செய்துகொள்ளுங்கள். பின்னர் இதில் உள்ள வரிகள் சேர்ப்பு காலத்தினை கிளிக் செய்ய அதில் Property Tax.Water Changes.Profession Tax.Non Tax போன்ற டேப்புகள் கிடைக்கும் இதில் எது தேவையோ அதனை கிளிக் செய்யவும். 
 நீங்கள் சொத்துவரிக்கான காலத்தினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்கள் மாவட்டம்பெயரை தேர்வு செய்யுங்கள். அடுத்து உங்கள் பஞ்சாயத்து பெயரை தேர்வு செய்யுங்கள். அடுத்து உள்ள கட்டத்தில் உங்கள் வரி விதிப்பு எண்ணை தட்டச்சு செய்யுங்கள். (இந்த வரி விதிப்பு எண் உங்களுடைய பழைய ரசீதில் இருக்கும்)
 உங்கள் தகவல்களை தட்டச்சு செய்து சர்ச் கொடுத்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உங்கள் மாவட்டம்.பஞ்சாயத்து பெயர்.சொத்துக்கு உரிமைஉள்ளவர் பெயர்.கதவிலக்கம் எண்.வார்ட் எண்.தெரு பெயர் என அனைத்து விவரங்களும் கிடைக்கும்.
 விவரங்கள் சரியாக இருந்தால் இதில் உள்ள சப்மிட் கிளிக் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதுபோல உங்களின் சொத்துவரி.குடிநீர் கட்டணம்.தொழில் வரி ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளவும். இப்போது மீண்டும் லாக்அவுட் செய்துவிட்டு பின்னர் லாக்ஆன் செய்து உள் நுழையவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்களுக்கு நீங்கள் பதிவு செய்த விவரங்கள் கிடைக்கும்.இதில் நீங்கள் வரி செலுத்து விரும்பினால் இதில் உள்ள கை அடையாளத்தினை கர்சர் கொண்டு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் நீங்கள் செலுத்தவேண்டிய வரி நிலுவைதொகை தெரியவரும்.இணைய வங்கி மூலம் பணம் செலுத்துங்கள்.
 நீங்கள் வரி எதுவும் பாக்கியில்லையென்றால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் உங்களுக்கு வரி ஏதும் பாக்கி யில்லை என்கின்ற தகவல் கிடைக்கும்.
இதன் மூலம் ஆறுமாதத்திற்கு ஓரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ உங்கள் சொத்துவரி.தொழில்வரி.குடிநீர் இணைப்பு வரிகளை சுலபமாக செலுத்திவிடலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Friday, February 21, 2020

வேலன்:-இலவச மீடியா ப்ளேயர்-Aiseesoft Free Media Player

வீடியோ பைல்களான MP4/AVI/MKV/FLV/MOV videos, மற்றும் ஆடியோ பைல்களான MP3/FLAC/AAC/WAV/OGG audio files மற்றும் இமேஜ் பைல்களான  JPG/PNG போன்றவற்றை பிளே செய்து பார்க்க இந்த மீடியா பிளேயர் பயன்படுகின்றது. 40 எம் பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  
 இதில் நீங்கள் உங்கள் கணிணியிலிருந்தோ அல்லது டிவிடி பிளோயரிலிருந்தோ பைல்களை தேர்வு செய்யவும்.

வீடியோ பைல்களில் நாம் ஆடியோவினை நிறுத்தி வைத்தும் அதுபோல் வீடியோவினை நிறுத்தி ஆடியோ மட்டுமோ கேட்கும் வசதி உள்ளது. .
 மேலும் வீடியோக்களிலிருந்து நாம் ஸ்னாப் ஷாட் எடுக்கும் வசதி உள்ளது. அதனை நாம் தனியே சேமித்து வைத்துப்பார்க்கலாம்
மேலும் உங்கள் புகைப்படங்களையும் இந்த ;பிளேயர் மூலம் நாம் சுலபமாக பார்வையிடலாம். வீடியோ ஆடியோ மற்றும் புகைப்படங்களை நாம் நாம் இந்த பிளேயரில் பார்க்கலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, February 20, 2020

வேலன்:-ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை இணைக்க-Weeny Free PDF Merger

ஒன்றுக்கும் மேற்பட்ட பிடிஎப் பைல்களை ஒரே பைல்களாக மாற்ற இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் ஒன்றாக இணைக்க வேண்டிய பிடிஎப் பைல்களை தேர்வு செய்யவும். இதில் உள்ள மூவ் அப் மூவ்  டவுண்.கிளிக் செய்து பிடிஎப் பைல்களை மேலும் கீழும் மாற்றி அமைத்து கொள்ளலாம். வரிசைகள் அமைத்தபின்னர் இதில் உள்ள மெர்ஜ் கிளிக் செய்திட பிடிஎப் பைலானது நமக்கு ஒரே பைலாக கிடைக்கும். இதன் மூலம் அனைத்து பிடிஎப் பைல்களையும் ஒரே பைலாக சுலபமாக மாற்றிக்கொள்ளலாம. பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, February 19, 2020

வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism

சிகப்பு,பச்சை.நீலம் ஆகிய நிறங்களை கொண்டு பல்லாயிரக்கணக்கான நிறங்களை நாம் கொண்டுவரலாம். 0 லிருந்து 255 வரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் என 3 நிறங்களையும் சேர்த்து எண்ணற்ற நிறங்களை கொண்டுவரலாம்'. ஒவ்வொரு நிறத்தின் கலவையும் அதற்கான குறியீட்டு எண்ணையும் கொண்டு வேண்டிய நிறத்தினை பெறலாம்.அவ்வாறு நிறங்களை கொண்டு வர இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கலர் ஜெனரேட்டர் கொடுத்துள்ளார்கள். மூன்று நிறத்திற்கான ஸ்லைட் கொடுத்துள்ளார்கள். ஸ்லைடை மெதுவாக நகர்ததுவதன் மூலம் இதற்கான விண்டோவில் நிறங்கள் தெரிவதுடன் அதற்கான கோடிங் எண்ணும் நமக்கு கிடைக்கும். நிறங்களை தனியாக சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
  அதற்கு அடுத்துள்ள கலர் பிக்கர் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.இதில் கர்சரை கொண்டு வேறு ஒரு படத்தில் உள்ள நிறத்தினை கிளிக் செய்ய இதற்கான விண்டோவில் நமக்கு நிறம் கிடைக்கும. எப்.7 அழுத்துவதன் மூலம் நிறத்தினை சேமித்து வைத்துக்கொள்ளலாம். 
 இறுதியாக இதில் உள்ள கலர் ப்ரேவ்சர் கிளிக் செய்கையில் உங்களுக்கு கலர் விண்டோ கிடைக்கும். கர்சரை வேண்டிய இடத்திற்கு நகர்த:துவதன் மூலம் தேவையான நிறத்தினை பெறலாம்.
வேண்டிய நிறம் கிடைத்ததும் உங்களுக்கான கோடிங் எண்ணை காப்பி செய்துகொள்ளுங்கள்.இதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை நாம் எளிதில் பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, February 18, 2020

வேலன்:-டிஸ்க் கவுண்டர் வியூ-Disk Counter View

நமது ஹார்டிஸ்கில் உள்ள ஒவ்வொரு டிரைவ் மற்றும் அதனுள் உள்ள டிஸ்க் கவுண்டர்ஸ் அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 40 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில ;நாம் கணணியில் இணைத்துள்ள ஒவ்வொரு டிரைவினையும் மற்றும அதில் எழுதப்பட்டுள்ள பைல்களின் அளவு.ரீட் கவுண்ட்.ரைட் கவுண்ட்.ரீட் பைட்ஸ்.ரைட் பைட்ஸ் மற்றும் ரீடிங் ;டைம் சிலிண்டர்கள் எண்ணிக்கை.போன்று  19 க்கும் மேற்பட்ட விவரங்கள். நமக்கு கிடைக்கும. பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Monday, February 17, 2020

வேலன்:-புகைப்படங்களை இசையுடன் பார்க்க -Photo Music

பிறந்தநாள்விழா,மஞ்சள்நீராட்டுவிழா,காதணிவிழா,நிச்சய தாம்பூலம்,திருமணம்,வளைகாப்பு விழா என நிறைய நிகழ்ச்சிகளுக்கு புகைப்படம் எடுப்போம். அதனை கணினியில் ஒவ்வொன்றாக ஸ்கோரல் செய்து பார்ப்பதை விட புகைப்படங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் இசையும் கேட்டால் நன்றாக இருக்கும் அல்லவா...அவ்வாறு புகைப்படங்களை இசையுடன் கேட்க இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நீங்கள் பார்க்க விரும்பும் புகைப்படங்கள் உள்ள போல்டரினை திறக்கவும். 
கணினியில் அல்லது சிடியில் உள்ள பாடல்களை தேர்வு செய்திடவும். 
ஒவ்வொரு படத்திற்கும் எவ்வளவு செகண்ட் இடைவெளி தேவையோ அந்த நேரத்தினை செட் செய்திடவும்.
சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கான புகைப்படம் இசையுடன் ஒவ்வொன்றாக மாறுவதனை காணலாம்.
2 எம்.பி கொள்ளவில் நிறைய வசதிகள் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்.
வேலன்.