Sunday, May 31, 2020

வேலன்:- புகைப்படங்கள் பிரிண்ட் செய்திட ஸ்லைட்ஷோ உருவாக்க. இணையபுகைப்படங்கள்உருவாக்க -TalaPhoto.

புகைப்படங்களை தனிப்படமாகவோ,மொத்தமாகவோ.இணைய புகைப்படமாகவோ.ஸ்லைட் ஷோ உருவாக்கவும் இந்த மென்பொருள் உதவுகின்றது. இதன்இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக்  செய்யவும்.


 இதன் பதிவிறக்கம் முடிந்ததும் வரும் விண்டோவில் இலவச உபயோகம் (Free Use) என்பதனை கிளிக் செய்திடவும். பின்னர் இதில உள்ள பைல் கிளிக் செய்து உங்களிடம் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்திடவும்.இதில் தனிதனி புகைப்படமாக நாம் பிரிண்ட் செய்துகொள்ளலாம். பேப்பரின் அளவினை நாம் தேர்வு  செய்துகொள்ளலாம்.


 இதில் உள்ள மல்டிபிரிண்ட் கிளிக் செய்திட உங்களிடம் உள்ள  புகைப்படங்கள் அனைத்தும வருவதை காணலாம்.அனைத்து புகைப்படங்களையும் தேவையான பேப்பரில் ஒரே படமாக பிரிண்ட் செய்து கொள்ளலாம்.
 புகைப்படங்களை இணைய புகைப்படங்களாக நாம் மாற்றிக்கொள்ளலாம்.
 தேவையான புகைப்படத்தினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ளவெப்டிசைனர் கிளிக் செய்யவும்..புகைப்படங்களில் வாட்டர் மார்க்காக டெக்ஸ்ட்டினை நாம் சேர்க்கலாம். 

அதுபோல பின்புற நிறத்தினை (Backround Color) நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
பின்னர் இதில் உள்ள வழிகாட்டுதல் படி கிளிக் செய்துவாருங்கள்


 புகைப்படங்களை நாம் ஸ்லைட் ஷோவாக உருவாக்கலாம். 
 அதற்கு இதில் உள்ள ஸ்லைட்ஷோ பட்டனை கிளிக் செய்து வழிகாட்டுதல்படி கிளிக் செய்திடவும்.
 புகைப்படங்களில் பிரைட்நஸ் மற்றும் கான்டாஸ்ட் கொண்டுவரலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

ஓரே மென்பொருளில் தனிபுகைப்படம் பிரிண்ட் செய்திட.,மொத்தமாக பிரிண்ட் செய்திட.வெப் பக்கங்கள் உருவாக்க.ஸ்லைட் ஷோ கொண்டுவர என பயன்படுகின்றது. பயன்படுததிப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

3 comments:

  1. அருமையான தொகுப்பு
    பயனுள்ளது

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete