Saturday, December 27, 2008

மின்கட்டணம் நாமே சரிபார்க்கும் முறை







மின்சார கணக்கை நாமே சோதனைசெய்யலாம் .
படத்தைச் சேர்
 பெரும்பாலும் நாம் மின்சார அலுவலர்

 ரீடிங் எடுத்து அவர் குறித்து கொடுக்கும்

 தொகையை கார்டில் குறித்து

 அதை அப்படியே மின் அலுவலகத்தில்

 சென்று பணம் கட்டி வருகிறோம். 

அந்த தொகை சரியானதா? ரீடிங் சரியா -

 மின்தொகை ரூபாய் சரியா என

 பெரும்பாலானோர் சரிபார்ப்பதில்லை.

 சரி அதை எப்படி சரிபார்ப்பது.

கீழே கொடுத்துள்ள கணக்கு அதற்கு உதவும்.

முதலில் தற்போதைய ரீடிங் அளவை

 குறித்துக்கொள்ளவும். 

அதன் கீழே முன்மாத அளவை

 குறித்துக்கொள்ளவும்.

 புதிய ரீடிங்கிலிருந்து பழைய ரீடிங் அளவை கழிக்கவும்.

உதாரணம்:-     தற்போதைய ரீடிங் 0516
                           
                           பழைய ரீடிங் 0330                                                                   
                                                         ----------
                                    ரீடிங் அளவு 186    யூனிட்கள்
                                                                    --------


 கணக்கு போட தோதாக ரவுண்ட் டாக

 மாற்ற (180யூனிட் என -கணக்கீட்டாளர்களும்

 கணக்கு போடஅப்படியே செய்வார்கள்)

180 என குறித்துக்கொள்ளுங்கள்.

1< 50 unit வரை 0.75 காசு எனில் தொகை = ரூ.37.50 



51< 100 unit வரை 0.85 காசு எனில் தொகை =ரூ.42.50



 மீதி 80 unit  வரை 1.50 காசு எனில் தொகை=   ரூ.120.00
                                                       ---------
                                          மொத்தம் ரூ.200.00

                           நிர்ணய கட்டணம் ரூ.  10.00
                                                         ----------
                                 ஆக மொத்தம் ரூ.210.00.
                                                       ----------

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை குறைந்த மின்கட்டண விகிதம்
       -----------------------------------------------------------------------------------

1 முதல் 50 யூனிட் வரை       - 0.75 (பைசா)  ஒருயூனிட்டுக்கு

51 முதல் 100யூனிட் வரை    -0.85 (பைசா)   ஒருயூனிட்டுக்கு

101 முதல் 200யூனிட் வரை ரூ -1.50     ஒருயூனிட்டுக்கு

201 முதல் 601யூனிட் வரை ரூ -2.20     ஒருயூனிட்டுக்கு

601யூனிட்டுக்கு மேல்         ரூ -3.05    ஒருயூனிட்டுக்கு

                                    
                                              -------0O0-------

யப்பா எனக்கு இந்த கணக்கெல்லாம்

 போட வராது. அட போப்பா வேறுவேலை

 இல்லை என்கிறீர்களா. 

 உங்களுக்கான அட்டவணையை

 இணைத்துள்ளேன். பார்த்து

 கணக்கை தெரிந்துகொள்ளுங்கள்.

 அடுத்த முறை கணக்கீட்டாளர்கள்

 வரும் சமயம் உங்கள் கணக்கு சரியா

 என சோதனை செய்து கொள்ளுங்கள்





உங்கள் மின்கட்டண அட்டவணை கொண்டு மின்கட்டணத்தை சரிபார்க்கவும்.

இந்த அட்டவணை வீட்டு உபயோகத்திற்கானது மட்டுமே.

மற்ற மின் உபயோகத்திற்கான அட்டவணையை தங்கள் மேலான ஆதரவு கண்டு

வெளியிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன். 















































8 comments:

  1. உபயோகமான பதிவு (தமிழ் நாட்டில் வசிப்பவர்களுக்கு.
    நன்றி வேலன்

    ReplyDelete
  2. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
    நன்றி அய்யா.

    வாழ்க வளமுடன்,
    வேலன்

    ReplyDelete
  3. Hi. Please create a word document with proper alignment and upload it in file sharing service like liveskydrive.com or 4shared.com or esnips.com

    It is more useful information for us.

    Because, We can download this .doc for future.

    Thanks Buddy

    by
    TN

    ReplyDelete
  4. நடைமுறை வாழ்க்கைக்குப் பயன் படும் வகையில் ஒரு பதிவினைப் பார்த்து வெகு நாட்களாகிவிட்டது.
    நற்பணி இது. தொடரட்டும். வாழ்த்துக்கள்.

    சுப்பு ரத்தினம்.
    http://vazhvuneri.blogspot.com

    ReplyDelete
  5. sirapana pathivu
    matra min kattana patiyalayum kodukka vendukiren
    nanri
    Raja
    nathikarai.blogspot.com

    ReplyDelete
  6. உங்கள் நற்பனி தொடர்க...

    ReplyDelete
  7. அன்புடையீர்,வணக்கம்.
    மிகவும் உபயோகமான செய்தியை வழங்கியுள்ளீர்கள்.
    மின்சார பயனீட்டு அளவினை வாரியத்தின் தளத்திலும் அறிந்துகொள்ளலாம்.

    ReplyDelete
  8. அன்புடையீர்,வணக்கம்.
    மிகவும் உபயோகமான செய்தியை வழங்கியுள்ளீர்கள்.
    மின்சார பயனீட்டு அளவினை வாரியத்தின் தளத்திலும் அறிந்துகொள்ளலாம்.

    ReplyDelete