Friday, October 9, 2009

வேலன்:-1000 மர்பி விதிகள்

நமக்கு வாழ்க்கையில் சில அனுபவங்கள் கிடைக்கும்.
அதே போல் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கும் கிடைக்கும்.
ஒருவருக்கம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு மற்றவர்
வாழ்க்கையை ரசிக்கலாம்.உணரலாம். இங்கு மர்பி விதிகளை
அதைப்போல் ஒருவர் தொகுத்துள்ளார். அதை உங்களுக்கு
இங்கு அளிக்க உள்ளேன்.

உதாரணத்திற்கு சில:-
(1000 விதிகளில் சில பிடித்த விதிகள்.
இதில் உள்ள எண்ணை முதலில் குறிப்பிட்டுள்ளேன்)

19.நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கியவுடன்
அதைவிட மலிவாக இன்னொரு இடத்தில் அந்த பொருள் கிடைக்கும்(அது
சரியாக உங்கள் மனைவின் கண்ணில் மாட்டும்)

26.முட்டாள்களுடன் விவாதம் வைத்துக்கொள்ளாதீர்கள்.பார்ப்பவர்களுக்கு
(யார் முட்டாள் என) வித்தியாசம் தெரியாமல் போய்விடும்.

43.உங்கள் நகத்தை வெட்டிய ஒரு மணிநேரத்தில் அதைவைத்து செய்ய
வேண்டிய வேலை உங்களுக்கு வந்து சேரும்.

64.ஒருவரிடம் 300 கோடி நட்சத்திரங்கள் உள்ளது என சொல்லுங்கள்.
அவர் நம்பிவிடுவார். ஆனால் பக்கத்தில் உள்ள டேபிளில் இப்போதுதான்
வண்ணம் பூசப்பட்டுள்ளது என சொல்லுங்கள். தொட்டுப்பார்க்காமல்
விட மாட்டார்.

127. ஒரு சாப்ட்வேரை 1000 பேர் சேர்ந்து சோதனை செய்திருந்தாலும் அதை
காசு கொடுத்து வாங்குபவரே அனைத்து பிழைகளையும் கண்டுபிடிப்பார்.

138. எந்த ஒரு கணிணி உபயோகிப்பாளர்களுக்கும் தேன்வந்து பாயும்
மழலை வாரத்தை-"அப்பா:- இந்த "C " பார்மெட் செய்யப்படுகின்றது என
கணிணி செல்லுகின்றதே அதன் அர்த்தம் என்ன?" என குழந்தை கேட்பது
தான்.

இதர விதிகள் கீழே:-

Murphys Law

பதிவுகளை பாருங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இன்றைய PSD பைலுக்கான புகைப்படம்:-

டிசைன் செய்தபின் வந்துள்ள படம் கீழே:-
பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இதுவரை 1000 விதிகள் படித்தவர்கள்:-

web counter

6 comments:

  1. வேலன் சார்,
    \\
    19.நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கியவுடன்அதைவிட மலிவாக இன்னொரு இடத்தில் அந்த பொருள் கிடைக்கும்(அதுசரியாக உங்கள் மனைவின் கண்ணில் மாட்டும்)\\

    அனுபவம் பேசுகிறார்ப்போல் தெரிகிறதே.

    \\ 127. ஒரு சாப்ட்வேரை 1000 பேர் சேர்ந்து சோதனை செய்திருந்தாலும் அதைகாசு கொடுத்து வாங்குபவரே அனைத்து பிழைகளையும் கண்டுபிடிப்பார் \\

    சரியாய்ச் சொன்னீர்கள் ஏனென்றால் காசு கொடுத்து வாங்கியதால் தலைகீழாக சோதனை செய்து பார்த்து பிழையை கண்டுபிடிக்காமல் தூக்கம் வராது.

    \\ 138. எந்த ஒரு கணிணி உபயோகிப்பாளர்களுக்கும் தேன்வந்து பாயும் மழலை வாரத்தை-"அப்பா:- இந்த "C " பார்மெட் செய்யப்படுகின்றது எனகணிணி செல்லுகின்றதே அதன் அர்த்தம் என்ன?" என குழந்தை கேட்பதுதான். \\

    மறுபடியும் அனுபவம் பேசுகிறார்ப்போல் தெரிகிறதே.

    நல்ல பதிவு நல்ல தகவல்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்.

    ReplyDelete
  2. Dear Velan Sir,

    http://www.4shared.com/file/
    139861256/94b663d5/Murphy_Law.html

    If anybody want to download the murphy law pdf book use this link.

    Best wishes
    Muthu Kumar.N

    ReplyDelete
  3. நிஜம்தாங்க,ஆனா இதையெல்லாம் யோசிச்சு ஒரு லிஸ்டா போட்டீங்க பாருங்க, அது அருமைங்க. இன்னும் நிறைய யோச்சிச்சு சொல்லுங்க.

    ReplyDelete
  4. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,
    \\
    19.நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு பொருளை வாங்கியவுடன்அதைவிட மலிவாக இன்னொரு இடத்தில் அந்த பொருள் கிடைக்கும்(அதுசரியாக உங்கள் மனைவின் கண்ணில் மாட்டும்)\\

    அனுபவம் பேசுகிறார்ப்போல் தெரிகிறதே.

    \\ 127. ஒரு சாப்ட்வேரை 1000 பேர் சேர்ந்து சோதனை செய்திருந்தாலும் அதைகாசு கொடுத்து வாங்குபவரே அனைத்து பிழைகளையும் கண்டுபிடிப்பார் \\

    சரியாய்ச் சொன்னீர்கள் ஏனென்றால் காசு கொடுத்து வாங்கியதால் தலைகீழாக சோதனை செய்து பார்த்து பிழையை கண்டுபிடிக்காமல் தூக்கம் வராது.

    \\ 138. எந்த ஒரு கணிணி உபயோகிப்பாளர்களுக்கும் தேன்வந்து பாயும் மழலை வாரத்தை-"அப்பா:- இந்த "C " பார்மெட் செய்யப்படுகின்றது எனகணிணி செல்லுகின்றதே அதன் அர்த்தம் என்ன?" என குழந்தை கேட்பதுதான். \\

    மறுபடியும் அனுபவம் பேசுகிறார்ப்போல் தெரிகிறதே.

    நல்ல பதிவு நல்ல தகவல்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்.//

    அட எப்படீங்க....கரேக்டா சொல்றீஙக..சரி..சரி...வாழ்க்கையில்இதெல்லாம் சகஜமப்பா...

    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    Dear Velan Sir,

    http://www.4shared.com/file/
    139861256/94b663d5/Murphy_Law.html

    If anybody want to download the murphy law pdf book use this link.

    Best wishes
    Muthu Kumar.N//

    மீண்டும் ஒரு முறை நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்.
    வேலன்.

    ReplyDelete
  6. CHANDRA கூறியது...
    நிஜம்தாங்க,ஆனா இதையெல்லாம் யோசிச்சு ஒரு லிஸ்டா போட்டீங்க பாருங்க, அது அருமைங்க. இன்னும் நிறைய யோச்சிச்சு சொல்லுங்க

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சந்திரா அவர்களே...
    வாழ்க வளமுட்ன.
    வேலன்.

    ReplyDelete