Sunday, October 4, 2009

வேலன்:-போட்டோஷாப் பாடம்-25 (செய்முறை பயிற்சி)



முன்பு பதிவிட்ட போட்டோ ஐ.டி.சுலபமாக என்கின்ற பதிவில்

நண்பர் திரு.அன்ரன் அவர்கள் கிழு்கண்டவாறு கேட்டிருந்தார். .
வணக்கம் வேலன் சார்.
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.நான் உங்கள் நீண்ட
கால வாசகன்.சார் நீங்கள் இணைக்கும் PSD பைல்களின்
எவ்வாறு படங்களை இணைப்பது என்று தயவுசெய்து விளக்கமாக
கூறமுடியுமா?
என்றும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

நட்புடன் -- அன்ரன் ஜேர்மனியில் இருந்து


அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க
இன்று மீண்டும் PSD பைலில் எப்படி போட்டாக்களை இணைப்பது
என செய்முறை விளக்குகின்றேன்.
முதலில் இந்த PSD பைலை பதிவிறக்கம் செய்ய .
இஙகு கிளிக் செய்யுங்கள்
உங்களுக்கு கீழ்கண்ட புகைப்படம் ஓப்பன் ஆகும்..

"
இதன் மேல்புறம் உள்ள நீல கலர் பட்டியில் வைத்து இதன்
Image size பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.இதைப்பற்றி முந்தைய
பாடங்களில் விவரித்துள்ளேன்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ
ஓப்பன் ஆகும். இதில் உள்ள ரெசுலேசனை மட்டும் குறித்துக்
கொள்ளுங்கள்.

இப்போது தனியே நீங்கள் விரும்பும் புகைப்படத்தை பென்டூலால் கட் செய்து
அதன் ரெசுலேசன் 300 வருமாறு வைத்து தனியே சேமித்துக்
கொள்ளுங்கள். நான் கீழ்கண்ட இந்த தம்பதியரின் படத்தை
தேர்வு செய்துள்ளேன்.

இப்போது இதை மூவ் டூலால் நகர்த்தி PSD பைலில்
வேண்டிய இடத்தில் வையுங்கள்.உயரத்தையும்
அகலத்தையும் சரிசெய்ய டிரான்ஸ்பார்ம் டூல் கொண்டு
சரிசெய்யுங்கள். (இதைப்பற்றியும் முன்பு சொல்லியுள்ளேன்)
Ctrl+T பற்றி இப்போது ஞாபகம் வரும் என் நினைக்கின்றேன்.



சரி செய்தபின் வந்த படம் கீழே கொடுத்துள்ளேன்.

இனி மணப்பெண் படத்தை மட்டும் தனியே எடுத்துள்ளேன்.


இப்போது நீங்கள் படத்தை இதைப்போல் வைத்துக்
கொள்ளுங்கள். உயரம் - அகலம் முன்பு சொன்னது போல்
டிரான்ஸ்பார்ம் டூல் கொண்டு சரி செய்யுங்கள்.

சரி செய்தபின் வந்த படம் கீழே:-


இந்த டிசைனில் உள்ள ரோஜப்பூ - பட்டாம்பூச்சி - மஞ்சள் நிற
பூ - Sweet Dreams - என எதை வேண்டுமானாலும் நீங்கள் தனியே
பிரித்து எடுத்து அதை தனி லேயராக மாற்றி தனியே டிசைன்
உருவாக்கலாம். அதற்கு நீங்கள் F7 -ஐ அழுத்துங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில வேண்டிய லேயரை தேர்வு செய்து மூவ் டூலால்நகர்த்தி
புதிய விண்டோவினில் விட்டால் உங்களுக்கு புதிய
லேயருடன் படம் உருவாகும்.பலமுறை முயற்சி செய்யுங்கள்.
புகைப்படம் சுலபமாக வந்துவிடும்.
தொழில்நுட்ப பதிவர் இடையே வாக்கு பெட்டி
வைத்துள்ளனர். உங்களுக்கு விருப்பம் இருந்தால் ஓட்டுப்
போடுங்கள். ஒட்டுப்போட இங்கு கிளிக் செய்யவும்.


வாழ்க வளமுடன்.

வேலன்.



Just for Jolly Photos:-

இதுதான் புள்ளையே கண்ணுக்குள்ளே வைச்சி காப்பத்தறதோ!


இதுவரை டிசைன் போட்டோவை உபயோகித்தவர்கள்:-
web counter

33 comments:

  1. அன்பிற்குரிய நண்பர் வேலன் அவர்களுக்கு வணக்கம் பல..
    தங்களின் முந்தைய போட்டோஷாப் பாடங்களை (1-24) படிப்பதற்கு அல்லது தரவிறக்கம் செய்வதற்கு ஏதும் வழிவகை உண்டா ??

    அன்புடன்,
    எஸ்.அன்பு
    அமீரகத்திலிருந்து...

    ReplyDelete
  2. மதிப்புக்குரிய நண்பர் வேலன் அவர்களுக்கு வணக்கம்

    photoshop இலவசமாக download செய்ய முடியுமா? அல்லது ஒரிஜினல் software தான் வாங்க வேண்டுமா?

    நன்றி

    ReplyDelete
  3. //photoshop இலவசமாக download செய்ய முடியுமா?//- shan கூறியது.

    நண்பர் திரு ,shan அவர்களுக்கு photoshop software free download கிடைக்கிறது, நமக்கு தேவையான version கிடைக்கும் , நீங்கள் google serch இல் தேடி பாருங்கள்
    உதாரணத்திற்கு சில

    http://www.brothersoft.com/adobe-photoshop-download-59748.html

    ReplyDelete
  4. அன்பு நண்பர் வேலன் சாருக்கு, போட்டோஷாப்பில் பயனுள்ள பாடங்களை பதிவிடும் தங்களுக்கு விருது கொடுக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. ஏதோ போட்டோஷாப்பில் டிசைன் செய்யும் நான் உங்களின் வலைபூங்காவிற்காக ஒரு "header" ஐ உருவாக்கியிருக்கிறேன். தாங்கள் தயவுகூர்ந்து இதனை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி

    http://i303.photobucket.com/albums/nn153/paristamilan/velanblogheader.jpg

    ReplyDelete
  5. அன்பு கூறியது...
    அன்பிற்குரிய நண்பர் வேலன் அவர்களுக்கு வணக்கம் பல..
    தங்களின் முந்தைய போட்டோஷாப் பாடங்களை (1-24) படிப்பதற்கு அல்லது தரவிறக்கம் செய்வதற்கு ஏதும் வழிவகை உண்டா ??

    அன்புடன்,
    எஸ்.அன்பு
    அமீரகத்திலிருந்து//
    நிறைய நண்பர்கள்கேட்டுள்ளனர் நண்பரே..விரைவில் அனைத்து பாடங்களையும் பிடிஎப் பைலாக தருகின்றேன். நேரமில்லை..கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்க்ள.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. shan கூறியது...
    மதிப்புக்குரிய நண்பர் வேலன் அவர்களுக்கு வணக்கம்

    photoshop இலவசமாக download செய்ய முடியுமா? அல்லது ஒரிஜினல் software தான் வாங்க வேண்டுமா?

    நன்றிஃஃ

    இணையத்தில் முடியாதது இல்லை.நண்பர் டவுசர் பதில் சொல்லியுள்ளார். பாருங்கள்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. நான் ஒரு ஐந்து போட்டோ அனுப்புகிறேன், என் குழந்தையின் படம்.
    அதை போட்டோஷாப்பில் டிசைன் செய்து தரமுடியுமா நண்பரே? முடியுமெனின்
    பதில் அனுப்பவும்.
    நன்றி குமார்.

    ReplyDelete
  8. நான் ஒரு ஐந்து போட்டோ அனுப்புகிறேன், என் குழந்தையின் படம்.
    அதை போட்டோஷாப்பில் டிசைன் செய்து தரமுடியுமா நண்பரே? முடியுமெனின்
    பதில் அனுப்பவும்.
    நன்றி குமார்.
    kumar_d36@yahoo.com,
    vdkarup@gamil.com

    ReplyDelete
  9. வேலன் சார்,

    அருமையாக உள்ளது உங்கள் போட்டோஷாப் பாடங்கள். வாழ்த்துகள் உங்கள் கடுமையான உழைப்பிற்கு.

    நம் நண்பர்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் எல்லா பதிவுகளையும் நான் பிடிஎஃப் பைலாக சேமித்து வைத்துள்ளேன் தேவையுள்ளவர்கள் தறவிறக்கிக் கொள்ளலாம்.

    கீழே உள்ள லிங்கை கிளிக்கி பதிவிறக்கிக் கொள்ளவும்.

    http://www.4shared.com/file/137976757/deae2859/Velan_2009_Upto_Oct_6.html

    http://www.4shared.com/file/137976763/f2eebf83/Velan_2008.html

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  10. டவுசர் பாண்டி கூறியது...
    //photoshop இலவசமாக download செய்ய முடியுமா?//- shan கூறியது.

    நண்பர் திரு ,shan அவர்களுக்கு photoshop software free download கிடைக்கிறது, நமக்கு தேவையான version கிடைக்கும் , நீங்கள் google serch இல் தேடி பாருங்கள்
    உதாரணத்திற்கு சில

    http://www.brothersoft.com/adobe-photoshop-download-59748.html//

    என்னாப்பா ரொம்பநாளா உன்ன ஆளையே காணோம. குசாலா எங்கிட்டுனா போய்ட்டியா..அடிக்கடி வந்து கண்டுக்குணு போபா...

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  11. நித்தியானந்தம் கூறியது...
    nice one velan..keep it up.ஃஃ

    நன்றி நித்தியானந்தம் அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. நித்தியானந்தம் கூறியது...
    அன்பு நண்பர் வேலன் சாருக்கு, போட்டோஷாப்பில் பயனுள்ள பாடங்களை பதிவிடும் தங்களுக்கு விருது கொடுக்கும் அளவிற்கு நான் பெரிய ஆள் இல்லை. ஏதோ போட்டோஷாப்பில் டிசைன் செய்யும் நான் உங்களின் வலைபூங்காவிற்காக ஒரு "header" ஐ உருவாக்கியிருக்கிறேன். தாங்கள் தயவுகூர்ந்து இதனை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    நன்றி
    தங்கள் டிசைனுக்கு மிக்க நன்றி
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. வாய்ப்பாடி குமார் கூறியது...
    நான் ஒரு ஐந்து போட்டோ அனுப்புகிறேன், என் குழந்தையின் படம்.
    அதை போட்டோஷாப்பில் டிசைன் செய்து தரமுடியுமா நண்பரே? முடியுமெனின்
    பதில் அனுப்பவும்.
    நன்றி குமார்//

    தாங்களே எளிமையாக டிசைன் செய்யலாம்.நானும் சுயமாக கற்றுக்கொண்டதுதான்.
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. வாய்ப்பாடி குமார் கூறியது...
    நான் ஒரு ஐந்து போட்டோ அனுப்புகிறேன், என் குழந்தையின் படம்.
    அதை போட்டோஷாப்பில் டிசைன் செய்து தரமுடியுமா நண்பரே? முடியுமெனின்
    பதில் அனுப்பவும்.
    நன்றி குமார்.
    kumar_d36@yahoo.com,
    vdkarup@gamil.com//
    தங்களுக்கு தனியே மெயில் அனுப்பிஉள்ளேன்.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    அருமையாக உள்ளது உங்கள் போட்டோஷாப் பாடங்கள். வாழ்த்துகள் உங்கள் கடுமையான உழைப்பிற்கு.

    நம் நண்பர்களுக்கு வேண்டுமென்றால் உங்கள் எல்லா பதிவுகளையும் நான் பிடிஎஃப் பைலாக சேமித்து வைத்துள்ளேன் தேவையுள்ளவர்கள் தறவிறக்கிக் கொள்ளலாம்.

    கீழே உள்ள லிங்கை கிளிக்கி பதிவிறக்கிக் கொள்ளவும்.

    http://www.4shared.com/file/137976757/deae2859/Velan_2009_Upto_Oct_6.html

    http://www.4shared.com/file/137976763/f2eebf83/Velan_2008.html

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்//

    சார் வணக்கம். நீண்ட நாட்களுக்கு பின் தங்களின் வருகை மகிழ்ச்சியை அளிக்கின்றது.எனது பதிவுகளின் பிடிஎப் பைல்களாக மாற்றியமைக்கு அனைத்து உறுப்பினர் சார்பாக நன்றி..
    லிங்கை பதிவில் இணைத்துவிடுகின்றேன்.

    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  16. வந்தனம் வேலன் அவர்களே ! சிறந்த பல தகவலை தந்துள்ளீர்கள். அதற்காக என் நன்றிகள் முதலில். தொடரட்டும் உங்கள் பணி. உங்கடிடமிருந்து நிறைய பாடங்களை எதிர்பார்க்கிறேன். நன்றி
    ஸ்நேகமுடன்
    Fawa

    ReplyDelete
  17. fawa கூறியது...
    வந்தனம் வேலன் அவர்களே ! சிறந்த பல தகவலை தந்துள்ளீர்கள். அதற்காக என் நன்றிகள் முதலில். தொடரட்டும் உங்கள் பணி. உங்கடிடமிருந்து நிறைய பாடங்களை எதிர்பார்க்கிறேன். நன்றி
    ஸ்நேகமுடன்
    Fawa//

    முதன் முதலில் கருத்துரை சொல்லியுள்ளீர்கள் என நினைக்கின்றேன்.
    தங்கள் வருகைக்கும் கரு்த்துக்கும் நன்றி

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  18. very useful....

    Keep it up....

    Thanks....

    ReplyDelete
  19. simbu கூறியது...
    very useful....

    Keep it up....

    Thanks....//

    நன்றி சிம்பு அவர்களே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  20. please add copyright notice to your blog. otherwise magazines will steal it freely.
    if you add copyright notice you can send vakil notice.

    ReplyDelete
  21. shirdi.saidasan@gmail.com கூறியது...
    please add copyright notice to your blog. otherwise magazines will steal it freely.
    if you add copyright notice you can send vakil notice.ஃஃ

    தங்கள் ஆலோசனைக்கு நன்றி..விரைவில் நிறைவேற்றுகின்றேன்
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  22. அன்பார்ந்த வேலன் அவர்களே,
    எனக்கு photoshopல் பார்டர் போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கவும்.
    என் மெய்ல் ஐடி siruthakutti@gmail.com

    ReplyDelete
  23. தங்களின் போட்டோஷாப் பயிற்சி வகுப்பில் தாங்கள் மிக அருமையாகவும் விளக்கமாகவும் நடத்துவதிர்க்கு நன்றிகள்
    போட்டோஷாப்பில் தமிழில் டைப் செய்தால் சரியாக வருவதில்லை அதை பற்றி சற்று விளக்கமாக செல்லுக்களோன்.

    ReplyDelete
  24. தங்களின் போட்டோஷாப் பயிற்சி வகுப்பில் தாங்கள் மிக அருமையாகவும் விளக்கமாகவும் நடத்துவதிர்க்கு நன்றிகள்
    போட்டோஷாப்பில் தமிழில் டைப் செய்தால் சரியாக வருவதில்லை அதை பற்றி சற்று விளக்கமாக செல்லுக்களோன்.

    ReplyDelete
  25. siruthakutti கூறியது...
    அன்பார்ந்த வேலன் அவர்களே,
    எனக்கு photoshopல் பார்டர் போடுவது எப்படி என்று கற்றுக்கொடுக்கவும்.
    என் மெய்ல் ஐடி siruthakutti@gmail.com
    //

    ஏற்கனவே அதுபற்றி நிறைய பதிவூகள் போ்ட்டுள்ளேன் நண்பரே..முந்தைய பதிவுகளை பாரு்ஙகள்.
    வாழக்வ ளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  26. மோகன்காந்தி கூறியது...
    தங்களின் போட்டோஷாப் பயிற்சி வகுப்பில் தாங்கள் மிக அருமையாகவும் விளக்கமாகவும் நடத்துவதிர்க்கு நன்றிகள்
    போட்டோஷாப்பில் தமிழில் டைப் செய்தால் சரியாக வருவதில்லை அதை பற்றி சற்று விளக்கமாக செல்லுக்களோன்.
    ஃஃ

    ஏற்கனவே பதிவிட்டுள்ளேன்காந்திசார்.உங்களுக்காக மீண்டும் பதிவிடுகின்றென்.
    நன்றி..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  27. வேலன் அவர்களுக்கு,
    உங்கள் நேரடியாகத் தொடர்பு கொள்ள்வ்து எப்படி. ஈ-மெயில் விவரம் தந்தால் நல்லது. அன்புடன் பி. எஸ். ஆர்

    ReplyDelete
  28. வணக்கம்
    உங்களுடைய இந்த பணி சிறக்க வாழ்த்துக்கள்

    எனக்கு போடோஷப் மிகவும் பிடிக்கும்
    உங்களுடைய போடோஷப் கற்று கொடுக்கும் முறை நன்றாக உள்ளது
    யார் எந்த கேள்வி கேட்டாலும் பதிலும் சரியாய் கிடைகிறது
    நன்றி

    ReplyDelete
  29. சார்
    நீங்கள் போடோஷோப் எந்த வர்ஷன் பயன்படுத்துகிறீர்கள்



    மகேஸ்

    ReplyDelete
  30. சார்
    நீங்கள் போடோஷோப் எந்த வர்ஷன் பயன்படுத்துகிறீர்கள்



    மகேஸ்வரி

    ReplyDelete
  31. அன்பார்ந்த வேலன் அவர்களே.... நான் உங்கள் பதிவூகள் அனைத்தும் படித்து வருகிறேன் அருமையாகவும் அனைத்தும் பயனுள்ளதகவும் இருக்கின்றது...

    நன்றி

    அன்புடன்..
    முஹம்மது ஆஸிக்

    ReplyDelete
  32. சார் நீங்கள் போடோஷோப் எந்த வர்ஷன் பயன்படுத்துகிறீர்கள் மகேஸ்

    ReplyDelete