Wednesday, October 14, 2009

வேலன்:-இ-மெயில் தவறுகளை அறிய


அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இது எனது 175 வது பதிவு.
இதுவரை பார்வையிட்ட 42,115 நண்பர்களுக்கும் பின்தொடரும்
240 அன்பு உள்ளங்களுக்கும் எனது மனபூர்வமான நன்றியை
தெரிவித்துக்கொள்கின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

பின்தொடரும் அன்பு உள்ளங்கள் கீழே:-

































இன்று வித்தியாசமான பதிவு ஓன்றை பார்க்கலாம்.

நாம் இ-மெயில் அனுப்பும் போது அதில் உள்ள பிழைகளை
நீக்கிவிட்டு மெயில் அனுப்புவோம். ஆனால் என்ன என்ன
பிழைகள் செய்தோம். அதை நீக்கி என்ன வார்த்தை சேர்த்தோம்
என இந்த தளம் மூலம் அறியலாம்.

அலுவலக உபயோகம் தவிர சொந்த உபயோகத்திற்கு
-நண்பர்களுக்கு - காதலிக்கு - மனைவிக்கு - என
இ-மெயில் அனுப்பும் போது இதை பயன் படுத்தலாம்.

உதாரணத்திற்கு

அழகான ராட்சஸியே....என தட்டச்சு செய்துவிட்டு
அதை டிலிட் செய்துவிட்டு அதில்
அழகான அன்னமே....என மாற்றுகின்றோம் என வைத்துக்
கொள்ளுவோம் ...இந்த தளத்தில் இது இரண்டுமே
டிஸ்பிளே ஆகும்.வித்தியாசத்தை விரும்புகின்றவர்கள்
இதை முயற்சிசெய்து பார்க்கலாம்.

முதலில் இந்த தளம் கிளிக் செய்யவும்.

உங்களுக்கு இந்த தளம் ஓப்பன் ஆகும்.







இதில் உங்கள்பெயர், இ-மெயில் முகவரி, அதைப்போல் பெறுபவர் முகவரி
அளித்து செய்தியை தவறுதலாகவும், சரியாகவும்தட்டச்சு செய்யுங்கள்.

இறுதியில் Sent கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.


நாம் தட்டச்சு செய்ததை அப்படியே பதிவு செய்து அவர்களுக்கு
லிங்க் அனுப்பி விடுவார்கள். அவர்கள் அந்த லிங்க் கிளிக்
செய்ததும் அவர்களுக்கு நாம் தட்டச்சு செய்த தகவலும் -
திருத்திய தகவலும் டிஸ்பிளே ஆகும்.
அனுப்பிய இ-மெயில் தகவல் அப்படியே படிக்கலாம்.
ஆனால் நாம் சொல்லவிரும்பிய தகவல் - சொல்லிய
தகவல் இவற்றை படிப்பவர்களுக்கு சுவாரஸ்யம் கூடும்.
சும்மா ஜாலிக்காக பயன்படுத்திப்பாருங்களேன்.

இன்றைய போட்டோஷாப் பதிவிற்கானPSD படம்:-



டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இந்த படத்திற்கான லிங்க் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்
செய்யவும்.



தீபாவளிக்கான ஸ்பேஷல் போனஸ் இது:-

இதில் உள்ள பட்டாசுக்களை யார் வேண்டுமானாலும்
வெடிக்கலாம். எப்போதும் தீர்ந்து போகாது. தீ காயம் ஏற்படும்
என்கின்ற பயம் இல்லை. தைரியமாக குழுந்தைகளை
வெடிக்க சொல்லிவிட்டு நாம் வேறு வேலைகளை பார்க்கலாம்.

இந்த தளம் சென்று இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்து
கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் நடுவில் உள்ள பட்டனை கிளிக் செய்யவும்.



இதில் விதவிதமான பட்டாசுக்கள் இருக்கும். வேண்டியதை
கொளுத்த கிளிக் செய்யுங்கள்.

வெடித்து சிதறுவதை கண்டு களியுங்கள்.

பட்டாசுக்களை மொத்தமாக வாங்க இங்கு கிளிக்-1, ,கிளிக்-2, செய்யுங்கள்.

பதிவுகளை பாருங்கள். வாழ்த்தினை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இதுவரை பட்டாசு வெடித்து தீபாவளிக் கொண்டாடியவர்கள்:-

web counter

10 comments:

  1. சார் நான் உங்களுடைய தொடர் வாசகன் உங்களுடைய பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் நீங்கள் தரும் சாப்ட்வேர்ஸ் மற்றும் போட்டோஷாப் பாடங்கள் மிகவும் பயன்யளிக்கிறது நன்றிகள் பல பல தொடரங்கள்...(இதுவரை வந்த போட்டோஷாப் பாடங்களை ஒரே pdf file யாக கொடுத்தால் பயன்யளிக்கும். )

    பதிவுக்கு நன்றி சார்.

    ReplyDelete
  2. Nice! Advance Diwali Wishes to All of you!!! Enjoy!!!!!!

    ReplyDelete
  3. வேலன் சார்,

    நல்ல பதிவு, கடந்த காலத்தில் என்னென்ன தவறாக அல்லது சரியாக அடித்தோமென காணக்கிடைப்பது நன்றாகத்தான் இருக்கிறது.

    உங்கள் இலவச பட்டாசு நன்றாக வெடிக்கிறது. இந்த தீபாவளிக்கு இந்த பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  4. அன்பு நன்பர் திரு வேலன் அவர்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
    இன்பமே பொங்க எல்லோரும் மகிழ்
    தீபங்களை ஏற்றி திப திருநாளை கொண்டாடு அனைத்து உங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  5. வலைப் பூங்கா இணையத்தளத்தில் நடந்த வாக்கெடுப்பில் உங்கள் வலைத்தளம் விருதை பெற்றுள்ளது

    http://valaipoongaa.blogspot.com/2009/10/blog-post.html

    ReplyDelete
  6. Thomas Ruban கூறியது...
    சார் நான் உங்களுடைய தொடர் வாசகன் உங்களுடைய பதிவுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் நீங்கள் தரும் சாப்ட்வேர்ஸ் மற்றும் போட்டோஷாப் பாடங்கள் மிகவும் பயன்யளிக்கிறது நன்றிகள் பல பல தொடரங்கள்...(இதுவரை வந்த போட்டோஷாப் பாடங்களை ஒரே pdf file யாக கொடுத்தால் பயன்யளிக்கும். )

    பதிவுக்கு நன்றி சார்ஃஃ

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..போட்டோஷாப் பாடங்கள் மட்டும் தனியே தொகுத்தளிக்க நேரம் இல்லை...விரைவில் தருகின்றேன்.

    வாழ்கவளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. Malu கூறியது...
    Nice! Advance Diwali Wishes to All of you!!! Enjoy!!!!!

    நன்றி மாலு அவர்களே...தங்களுக்கும் எங்களுடைய தீபாவளி வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  8. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    நல்ல பதிவு, கடந்த காலத்தில் என்னென்ன தவறாக அல்லது சரியாக அடித்தோமென காணக்கிடைப்பது நன்றாகத்தான் இருக்கிறது.

    உங்கள் இலவச பட்டாசு நன்றாக வெடிக்கிறது. இந்த தீபாவளிக்கு இந்த பட்டாசுகளைத்தான் வெடிக்க வேண்டும்.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்
    ந.முத்துக்குமாஃஃ


    தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    என்றும் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  9. mdniyaz கூறியது...
    அன்பு நன்பர் திரு வேலன் அவர்களுக்கு எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்..
    இன்பமே பொங்க எல்லோரும் மகிழ்
    தீபங்களை ஏற்றி திப திருநாளை கொண்டாடு அனைத்து உங்களுக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்ஃ

    தங்கள் வாழ்த்துக்கு நன்றி நண்பரே...
    தங்களை போல் நல்ல உள்ளங்களை வணக்குகின்றோம்...வாழ்த்துகின்றோம்..
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  10. ஈழவன் கூறியது...
    வலைப் பூங்கா இணையத்தளத்தில் நடந்த வாக்கெடுப்பில் உங்கள் வலைத்தளம் விருதை பெற்றுள்ளது

    http://valaipoongaa.blogspot.com/2009/10/blog-post.htmlஃஃ

    நன்றி நண்பரே...விருதினை வலைப்பதிவில இணைத்துவிட்டேன்...விருதினை வழங்கியமைக்கு மிக்க நன்றி..

    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete