Sunday, October 25, 2009

வேலன்:-தேவைகளை சுலபமாக தேட


நாம் அனைவருக்கும்புதியதாக ஒரு பொருள் -மெஷின்-

தளவாடங்கள்-மூலப்பொருள்கள் தேவைப்படலாம்.
ஒரு குண்டுசி வாங்குவதானாலும் நாலு இடத்தில் விசாரித்து
நமக்கு கட்டுப்படியாகும் விலையில் - இடத்தில் வாங்குவதே
நல்லது.ஆனால் அது எங்கு கிடைக்கும்-முகவரி என்ன - நமது
இருப்பிடத்திற்கு அருகாமையில் எந்த நிறுவனம் உள்ளது
என விவரங்கள் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
அந்த குறைகளை இந்த தளம் நிறைவு செய்கின்றது.

நீங்கள் இணைய இணைப்பில் விவரங்கள் தேட
இங்கு கிளிக் செய்யவும்.

உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


இதில் முதலில்உள்ள நகரத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
அடுத்துள்ள கட்டத்தில் நிறுவன பெயர் அல்லது பொருளின்
பெயர் கொடுத்து அடுத்துள்ள கட்டத்தில் குறிப்பிட்ட நகரத்தில்
உள்ள ஊரின் பெயர் - என குறிப்பிட்டு Go கிளிக் செய்தால்
உங்களுக்கு வேண்டிய விவரங்கள் - முகவரியுடன்-
கிடைக்கும்.

சரி இணைய இணைப்பு இல்லை.அப்போது என்ன செய்வது.
நீங்கள் 044-264 44 444 என்ற எண்ணுக்கு போன் செய்து
உங்களுடைய பெயர் - செல்போன் எண் கொடுத்து -
உங்களுக்கு என்ன தேவை என சொல்லி போனை வைத்ததும்
உங்கள் செல்போனுக்கு முகவரியுடன் sms வரும்.
நீங்கள் ஒரு தயாரிப்பாளர் - உங்கள் பொருட்களை இதுபோல்
விற்கவேண்டும்.அவர்களிடமே உங்கள் பொருட்களைபற்றி
சொல்லிவிட்டு முகவரி - போன் நம்பர் -கொடுத்துவிட்டால்
நமது பொருட்களை பற்றி யாராவது கேட்கும் சமயம் அவர்களுக்கு
நமது பொருட்களை பற்றி கூறுவார்கள்.நமது வியாபாரம்
மேலும் விரிவடையும்.

புதியதாக தொழில் தொடங்கபவர்களுக்கு இந்த தளம் -
தொலைபேசி எண் - மிகவும் பயன்படும் என எண்ணுகின்றேன்.

சமீபத்தில்தான் இந்த தளம் பற்றி அறிந்தேன்.என்னுடைய
தொழிலுக்கு தேவையான விவரங்கள் அவர்களிடம்
கேட்டேன்.விவரங்கள் தந்தார்கள்.அவர்களின்
சேவைகளும் நன்றாக இருக்கின்றது. நமது வாசகர்களும்
அறியவே இதை பதிவிடுகின்றேன்.

வாழ்க வளமுடன்,

வேலன்.


இதுவரை புதிய பொருட்களின் விவரம் அறிந்துகொண்டவர்கள்:-
web counter

20 comments:

  1. நல்ல தகவல், பகிர்வு மிக்க நன்றி நண்பா

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள நல்ல தகவல். நன்றி சார்..

    ReplyDelete
  3. மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி.அதற்குப் பரிசாக இணைய பொதுசேவை மந்திரியாக கடவீர்:)

    ReplyDelete
  4. ஆ.ஞானசேகரன் கூறியது...
    நல்ல தகவல், பகிர்வு மிக்க நன்றி நண்பா//

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...கைவசம் நிறைய தகவல்கள் உள்ளது..ஒவ்வோன்றாக வெளியிடுகின்றேன்...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  5. Thomas Ruban கூறியது...
    மிகவும் பயனுள்ள நல்ல தகவல். நன்றி சார்.//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  6. ராஜ நடராஜன் கூறியது...
    மிகவும் பயனுள்ள தகவல்.நன்றி.அதற்குப் பரிசாக இணைய பொதுசேவை மந்திரியாக கடவீர்:)//

    நண்பரே...பொதுசேவை மந்திரி எல்லாம் வேண்டாம்....நான் மக்களில் ஒருவன்-உங்களில்ஒருவனாகவேஇருந்துவிடுகின்றனே.

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  7. உபயோகமானப் பகிர்வு நண்பரே....

    ReplyDelete
  8. வேலன் சார்,

    நல்ல தகவல், வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்.
    ந.முத்துக்குமார்

    ReplyDelete
  9. நல்ல பயன்மிக்க தகவல்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். பகிர்வுக்கு நன்றி!
    வாழ்த்துக்கள்!
    ஜிஆர்ஜி
    புதுவை.

    ReplyDelete
  10. இத்தோடா ...!!!!!.. மாப்ள வெளுத்துகட்டுறீங்க. உங்களுக்கு தொழில் மினிஷ்டரு பதவி தந்துகினா நம்ம நாடு எவ்ளோ நல்லாருக்கும்!
    எந்தந்த பண்ணாடைகளோ அங்க குந்திகினு கீதுங்கோ.
    நல்ல நல்ல பதிவா உட்டுகினுகீரீங்கோ ஏதானும் இதுக்கு கவரவும் பன்னுகோ தலைகளா. ஆக்காங் !!

    ReplyDelete
  11. புலவன் புலிகேசி கூறியது...
    உபயோகமானப் பகிர்வு நண்பரே..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  12. ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் கூறியது...
    வேலன் சார்,

    நல்ல தகவல், வளர்க உங்கள் பணி.

    வாழ்க வளமுடன்
    என்றும் நட்புடன்.
    ந.முத்துக்குமார்ஃஃ

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...தாங்களை ஒரு வாரமாக காணவில்லையே...
    வாழ்க வளமுடன்,
    என்றம் அன்புடன்,
    வேலன்.

    ReplyDelete
  13. பெயரில்லா கூறியது...
    நல்ல பயன்மிக்க தகவல்களை தந்து கொண்டிருக்கின்றீர்கள். பகிர்வுக்கு நன்றி!
    வாழ்த்துக்கள்!
    ஜிஆர்ஜி
    புதுவைஃ

    நன்றி ஜிஆர்ஜி அவர்களே...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  14. கக்கு - மாணிக்கம் கூறியது...
    இத்தோடா ...!!!!!.. மாப்ள வெளுத்துகட்டுறீங்க. உங்களுக்கு தொழில் மினிஷ்டரு பதவி தந்துகினா நம்ம நாடு எவ்ளோ நல்லாருக்கும்!
    எந்தந்த பண்ணாடைகளோ அங்க குந்திகினு கீதுங்கோ.
    நல்ல நல்ல பதிவா உட்டுகினுகீரீங்கோ ஏதானும் இதுக்கு கவரவும் பன்னுகோ தலைகளா. ஆக்காங் !!

    அட மாம்ஸ் நீங்க வேற என்னை வம்பில் மாட்டிவிடாதீர்கள்...

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  15. மிகவும் பயனுள்ள நல்ல தகவல். நன்றி

    ReplyDelete
  16. My husband is doing AC business. He has registered in that site as Vendor. It is very useful.

    ReplyDelete
  17. mohanpuduvai கூறியது...
    மிகவும் பயனுள்ள நல்ல தகவல். நன்றிஃஃ

    நன்றி மோகன் அவர்களே...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  18. Malu கூறியது...
    My husband is doing AC business. He has registered in that site as Vendor. It is very useful.ஃ

    நன்றி மாலு அவர்களே...தொழில்தொடர்பாக விரைவில் பதிவு ஒன்றை வெளியிட உள்ளேன்...தங்களை போன்ற தொழில் முனைவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அது அமையும்...

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  19. USE THIS , BUT DNT PAY MONEY .....ONE OF THE MOST 420 IN THE WORLD... IF U WANT MORE DETILS.. CALL 09916630300

    ReplyDelete
  20. Asistmi is also Local Search engine and one stop shopping directory for buying and selling used products and services.

    ReplyDelete