Monday, February 1, 2010

வேலன்:-ஆங்கிலத்தில் திறனை அறிய

கணிணியின் தொழில்நுட்பமே போட்டுக்கொண்டு
இருந்தால் சற்றே போர் அடித்துவிடும். அதனால்
இன்று சற்று வித்தியாசமான பதிவாக ஆங்கில
அறிவை வளர்க்கும் விளையாட்டை பதிவிட்டுள்ளேன்.
உங்கள் ஆங்கில அறிவை சோதிக்கும் விதமாக
இதில் கட்டங்கள் கொடுக்கப்படும். மேலே
ஆங்கில எழுத்துக்கள் கொடுக்கப்படும். கர்சர் மூலம்
நாம் ஆங்கில எழுத்துக்களை தேர்வு செய்து வார்த்தை
களை அமைக்க வேண்டும். சரியாக அமைந்து
விட்டால் உங்களுக்கு பாராட்டு கிடைக்கும். 
தவறாக இருந்தால் அதில் வரையப்படும் மனிதன்
தூக்கு மாட்டிக் கொள்வான்.விளையாடிப்பாருங்கள்.
இது மொத்தம் 60 கே.பி.தான்.. இதை பதிவிறக்க
இங்கு கிளிக் செய்யவும்.
இதை பதிவிறக்கி ஓப்பன் செய்ததும் உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகி அதில் ஒரு
பென்சில் வந்து தானே கோடு போடும்..
கோடுபோட்டு முடித்ததும் கீழ்கண்ட விண்டோ வரும்.
இதில் மேல்புறம் உள்ள Categories கிளிக் செய்தால் கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில உள்ள கட்டத்தில் உங்களுக்கு
தேவையானதை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு
செய்த கட்டத்திற்கு சம்பந்தமான வார்த்தைகள் இதில்
வரும்.
இப்போது மேலே உள்ள கட்டத்தில் இருந்து எழுத்துக்களை
தேர்வு செய்யுங்கள். நான் கர்சர் மூலம் A தேர்வு
செய்தேன்.
நீங்கள் தேர்வு செய்யும் எழுத்துக்கள் சரியாக இருந்தால் 
கட்டம் பூர்த்தியாகும். இல்லையென்றால் எழுத்துக்கள் மேலே
சென்று தூக்கு மேடை ரெடியாகும்.
நான் வார்த்தைகளை சரியாக சேர்தததினால் வந்த படம்
கீழே:-
சரியாக சேர்க்கவில்லையென்றால் வரும் படம் கீழே:-
உங்கள் ஆங்கில அறிவை வளர்த்து மனிதன் தூக்கு போட்டுக்
கொள்வதிலிருந்து காப்பாற்றுங்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்கள் கூறுங்கள்.
வாழ்க வளமுடன்,
வேலன்.
JUST FOR JOLLY PHOTOS:-
கீழே பார்த்தாலே பயமாக இருக்கின்றதே....!

இன்றைய பதிவிற்க்கான புகைப்படம் கீழே:-
டிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-
இதை பதிவிறக்க இங்குகிளிக் செய்யவும்.

25 comments:

  1. சூப்பர்ர் பதிவு!!

    ReplyDelete
  2. நல்ல பதிவு வேலன் வாழ்த்துகள்

    அதுபோல் அடுத்த மாதம் முதல் முழு ஆண்டு தேர்வுக்குப் பின் விடுமுறையை இது போல் எளிய கைவினை முறைகளை தரவும்.

    உ.ம்
    பறவை வடிவில் சைனா காத்தாடி செய்முறை.....

    ReplyDelete
  3. after loang time, i found this game
    thanks my friend.

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி தலைவா

    ReplyDelete
  5. பெயரில்லா கூறியது...
    Good.
    Nice to play!!//

    நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்.வேலன்.

    ReplyDelete
  6. Mrs.Menagasathia கூறியது...
    சூப்பர்ர் பதிவு!!ஃஃ நன்றி சகோதரி....வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  7. ♠புதுவை சிவா♠ கூறியது...
    நல்ல பதிவு வேலன் வாழ்த்துகள்

    அதுபோல் அடுத்த மாதம் முதல் முழு ஆண்டு தேர்வுக்குப் பின் விடுமுறையை இது போல் எளிய கைவினை முறைகளை தரவும்.

    உ.ம்
    பறவை வடிவில் சைனா காத்தாடி செய்முறை... நிறைய இருக்கு நண்பரே...நீங்கள் சொல்வதுபோல் விடுமுறை விட்டவுடன் பதிவிடுகின்றேன்.வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  8. அண்ணாமலையான் கூறியது...
    நன்றி... நன்றி நண்பரே...வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  9. mohammed கூறியது...
    after loang time, i found this game
    thanks my friend.ஃஃ நன்றி நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  10. டெக்‌ஷங்கர் @ TechShankar கூறியது...
    தகவலுக்கு நன்றி தலைவா

    நன்றி நண்பரே....வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றிங்க.
    அன்புடன் மஜீத்.

    ReplyDelete
  12. வேலன் சார். பயனுள்ள பதிவு. தங்கள் சேவை தொடரட்டும்..!மேலும் தாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் என்று குறிப்பிட்டது மிகவும் பெருமையாக உள்ளது.
    பாராட்டுகள் தொடரட்டும்... உங்கள் வெற்றி. பகிர்வுக்கு நன்றி..!

    ReplyDelete
  13. போட்டோஷாப் வேலன் சார். வணக்கம். எத்தனை நாட்கள் முயற்சி செய்து இன்றுதான் கருத்துகள் கூற முடிந்தது.
    சார் உங்கள் டெம்பிளேட்டில் 10 கருத்துகள் வரை தெளிவாக தெரிகிறது. பிறகுபாதி மறைந்து விடுகிறது. நன்றி சார்.

    ReplyDelete
  14. பெயரில்லா கூறியது...
    பதிவுக்கு நன்றிங்க.
    அன்புடன் மஜீத் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  15. பிரவின்குமார் கூறியது...
    வேலன் சார். பயனுள்ள பதிவு. தங்கள் சேவை தொடரட்டும்..!மேலும் தாங்கள் காஞ்சிபுரம் மாவட்டம் என்று குறிப்பிட்டது மிகவும் பெருமையாக உள்ளது.
    பாராட்டுகள் தொடரட்டும்... உங்கள் வெற்றி. பகிர்வுக்கு நன்றி..! நன்றி பிரவின்குமார் சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  16. பிரவின்குமார் கூறியது...
    போட்டோஷாப் வேலன் சார். வணக்கம். எத்தனை நாட்கள் முயற்சி செய்து இன்றுதான் கருத்துகள் கூற முடிந்தது.
    சார் உங்கள் டெம்பிளேட்டில் 10 கருத்துகள் வரை தெளிவாக தெரிகிறது. பிறகுபாதி மறைந்து விடுகிறது. நன்றி சார்.
    எனது பிளாக்கில் ்சரியாக உள்ளது.இருப்பினும் பார்க்கின்றேன் நண்பரே...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. இளமுருகன் கூறியது...
    useful information.good for children.
    Thanks வாங்க சார்..பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என நினைக்கின்றென்.தங்கள்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.......வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. ungkalai thodarkiren,ungkal idukaikalukku nanri.

    ReplyDelete
  19. பெயரில்லா கூறியது...
    ungkalai thodarkiren,ungkal idukaikalukku nanri.ஃ தொடருங்கள் ஆனால் பெயருடன் தொடருங்கள்...பயமாக இருக்கின்றது.தங்கள் வருகைக்கும கரு்த்துக்கும் நன்றி வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  20. // கணிணியின் தொழில்நுட்பமே போட்டுக்கொண்டு
    இருந்தால் சற்றே போர் அடித்துவிடும் //
    .
    சற்றே அள்ள படு பயங்கர "மொக்கை " பதிவுகள். நல்ல வேலையாக" பலருக்கும் " நினைவு படுத்தினீர்கள் மாப்ஸ்.
    நீகள் மிக புத்திசாலி என்று எனக்கு தெரியும்தானே! carry on.நிறைய verities கொடுங்க மாப்பு.

    ReplyDelete
  21. கக்கு - மாணிக்கம் கூறியது...
    // கணிணியின் தொழில்நுட்பமே போட்டுக்கொண்டு
    இருந்தால் சற்றே போர் அடித்துவிடும் //
    .
    சற்றே அள்ள படு பயங்கர "மொக்கை " பதிவுகள். நல்ல வேலையாக" பலருக்கும் " நினைவு படுத்தினீர்கள் மாப்ஸ்.
    நீகள் மிக புத்திசாலி என்று எனக்கு தெரியும்தானே! carry on.நிறைய verities கொடுங்க மாப்பு//

    இப்போதாவது எங்க ஞாபகம் வந்ததே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி... வாழ்க வளமுடன், வேலன்.

    ReplyDelete
  22. சார் அந்த நாய்க்குட்டி டூல் எந்த இடத்தில் இருக்கிறது.. என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, உதவுங்கள் ப்ளீஸ்....

    ReplyDelete
  23. கண்ணகி கூறியது...
    சார் அந்த நாய்க்குட்டி டூல் எந்த இடத்தில் இருக்கிறது.. என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை, உதவுங்கள் ப்ளீஸ்//

    தங்கள் கேள்வி எனக்கு புரியவில்லை சகோதரி...தங்கள் வருகைக்கு நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete