Thursday, June 10, 2010

வேலன்-மாயக்கண்ணாடியும் - நான்கு மேஜிக்குகளும்.


பொருட்காட்சியில் மாயக்கண்ணாடி பார்த்திருப்போம்
 அதைப்போல இந்த மாயக்கண்ணாடியில் உருவத்தை 
வேண்டிய அளவு மிக அழகுப்படுத்தலாம்.ஒருவரை அழகுப்
படுத்தி பழிவாங்க வேண்டுமானால் இந்த சாப்ட்வேரினைபயன்படுத்திவிதவிதமாகஅழகுபடுத்தி
பயன்படுத்தலாம்.முதலில் இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம்
 செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட 
விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில் உள்ள Warping கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு தாத்தா ஒருவர்படம் வரும். இதி்ல் கீழ்புறம் பார்த்தீர்களேயானால் ஒரு அம்புக்குறியிருக்கும். அதை கிளிக்செய்து உங்கள் கம்யூட்டரில் இருந்து -கிளிப் ஆர்ட்டிலிருந்து -வீடியோவில் இருந்து என ஏதாவது ஒரு படத்தை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இப்போது படத்ததில் வேண்டிய இடத்தில் கர்சரைவைத்து உங்கள் விருப்பபடி அதை இழுங்கள். படம் கர்சர் செல்லும் திசையில் ரப்பர் மாதிரி செல்வதை கவனியுங்கள்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
வேறு யாருடையதாவது போட்டால் அவர்களுக்கு மனம் சஞ்சலப்படும் என்று எனது படம் போட்டுள்ளேன். வேண்டிய அளவு அழகுபடுத்திவிட்டு இப்போது வலது மூலையில் உள்ள அம்புக்குறியை கிளிக்செய்யுங்கள்.உங்கள் பைலை புகைப்படமாகவோ - வீடியோ பைலாகவோ சேமிக்கலாம். நான் வீடியோ பைலை சேமித்ததை கீழே காணலாம்.

அடுத்துள்ளது Morphing.இதில இரண்டு உருவங்களை ஒன்றிலிருந்து ஒன்று வருவது மாதிரி செட்செய்திடலாம். இரண்டு படங்களை திறந்து கொள்ளுங்கள். ஒரு படத்தில் மஞ்சள் புள்ளி வையுங்கள். அடுத்த படத்தில் பாருங்கள். அதை முன்புள்ள படத்தில் உள்ளவாறு வையுங்கள். உதாரணத்திற்கு முதல் படத்தில மூக்குக்கு மேல் பு்ள்ளி வைத்தீர்களே யானால் அடுத்த படத்திலும் மூக்குக்கு மேலே புள்ளி வையுங்கள்.அப்போதுதான மாறும் போது சரியாக வரும்.கீழே உள்ள படத்தை பாருங்கள். (இந்த போட்டோமார்பிங் சாப்ட்வேர் என்று தனியாக உள்ளது. அதை பற்றி நான் 100 ஆவது பதிவாக போட்டுள்ளேன். புதியவரகள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளவும்) 
மாறுதல் செய்தபின் சேமிித்த விடியோ பைல் கீழே-

அடுத்துள்ளது Mirrors.இதில் நமது படத்தை கொண்டுவந்துவிட்டவுடன் நான்கு விதமான கண்ணாடிகள் பக்கத்தில இருக்கும். இதில் வேண்டிய கண்ணாடியை தேர்வு செய்து அதில் வேண்டிய அளவு கர்சரை நகர்த்த படம் அகோரவிகாரமாக மாறும். கீழே உள்ள படங்களை பாருங்கள்.
கேலிச்சித்திரங்கள் -கார்ட்டூன்கள் வரைய இதனை பயன்படுத்தலாம்.
கடைசியாக உள்ளது Blending. இதிலும் இரண்டு படங்களை தேர்வு செய்து கொண்டு பின்னர் இதில் உள்ள சிகப்பு வட்டத்தை வேண்டிய இடத்திற்கு நகர்த்துகங்கள். அதைப்போல நடுவில் உள்ள படத்தில் அந்த சிகப்பு வட்டம எந்த இடத்தில் உள்ளதோ அந்த இடத்தில் நடுவில் உள்ள படத்தில் கர்சரால் தேயுங்கள். இப்போது நடுவி்ல் உள்ள படம் மறைந்து உங்களுக்கு பக்கத்தில் உள்ள படம் வரும். செய்துபாருங்கள். வித்தியாசமாக இருக்கும்.
பயன்படு்த்தி பாருங்கள். கருததுக்களை சொல்லுஙகள்.
 பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன.
நன்றி. 
வாழ்க வளமுடன்.
வேலன்.

20 comments:

  1. ரொம்ப நல்லா இருக்குங்க வேலன் .
    நிறைய கத்துகிறோம்.
    கொஞ்சம் அழகா காமிக்க எதாவது software இருக்கா? :))

    ReplyDelete
  2. மாயக்கண்ணாடி சாப்ட்வேரை பாத்துட்டு நானே பயந்து போய் இருந்தேன் . நிங்க ஞாபகபடுத்தி விட்டீங்க..

    ReplyDelete
  3. சிறுவர்கள் ரசிக்கும்படி உள்ளது.
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  4. மாப்ஸ், இந்த "கொரங்கு சேட்டைகள" நாம போட்டோ ஷோப்பிலும் பண்ணலாமுன்னு நினைக்கிறன்
    சரியா? பசங்களுக்கு ரொம்பவே சேவை செய்கிற மனசு உங்களுக்கு :)

    ReplyDelete
  5. ha,ha,ha,ha,ha,..... very funny!
    Mac (Apple) has similar iphoto application..... I like playing with it. :-)

    ReplyDelete
  6. "கொஞ்சம் அழகா காமிக்க எதாவது software இருக்கா? :))"

    :-)))

    "ஒருவன் மனது ஒன்பதடா
    அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
    உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
    அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
    உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
    அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா"


    நன்றி வேலன்

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  7. புதுசு புதுசா சொல்லித் தருகிறீர்கள்!நன்றி!

    ReplyDelete
  8. super sir,
    Thank you,அழகாக காமிக்க ஏதாவது உண்டா,,ஏன் இல்லாமல்???
    புதுவை சிவா அவர்களே கிழே இருக்கும் தளத்திற்கு செல்லுங்கள்,,,உங்கள் முகத்தை பைசா
    செலவில்லாமல் ஒரு பிலாஸ்டிக் சர்ஜரி
    பார்க்கலாம்,,செய்தால் எப்படி இருக்கும்
    என்று ஒரு அனுபவமும் கிடைக்கலாம்
    காசா,,,பணமா ஜமாய்ங்கோ்
    http://www3.liftmagic.com/liftmagic/lift.php?id=

    ReplyDelete
  9. நீங்க ரெம்ப அழகா இருக்கீங்க ச்சும்மா தமாசுக்கு.
    நன்றி சார்.

    ReplyDelete
  10. "moulefrite

    super sir,
    Thank you,அழகாக காமிக்க ஏதாவது உண்டா,,ஏன் இல்லாமல்???
    புதுவை சிவா அவர்களே கிழே இருக்கும் தளத்திற்கு செல்லுங்கள்,,,உங்கள் முகத்தை பைசா
    செலவில்லாமல் ஒரு பிலாஸ்டிக் சர்ஜரி
    பார்க்கலாம்,,செய்தால் எப்படி இருக்கும்
    என்று ஒரு அனுபவமும் கிடைக்கலாம்
    காசா,,,பணமா ஜமாய்ங்கோ்
    http://www3.liftmagic.com/liftmagic/lift.php?id="

    தங்களின் தகலுக்கு நன்றி

    ReplyDelete
  11. பத்மா கூறியது...
    ரொம்ப நல்லா இருக்குங்க வேலன் .
    நிறைய கத்துகிறோம்.
    கொஞ்சம் அழகா காமிக்க எதாவது software இருக்கா? :)//

    உங்களுக்கான சாப்ட்வேர் பதிவிட்டுள்ளேன் சகோதரி..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  12. ஜெய்லானி கூறியது...
    மாயக்கண்ணாடி சாப்ட்வேரை பாத்துட்டு நானே பயந்து போய் இருந்தேன் . நிங்க ஞாபகபடுத்தி விட்டீங்க.//

    ஞாபகமறதியாக உஙக உருவத்தை பார்த்திட்டீங்களா என்ன? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  13. யூர்கன் க்ருகியர் கூறியது...
    சிறுவர்கள் ரசிக்கும்படி உள்ளது.
    பகிர்வுக்கு நன்றி..//


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  14. கக்கு - மாணிக்கம் கூறியது...
    மாப்ஸ், இந்த "கொரங்கு சேட்டைகள" நாம போட்டோ ஷோப்பிலும் பண்ணலாமுன்னு நினைக்கிறன்
    சரியா? பசங்களுக்கு ரொம்பவே சேவை செய்கிற மனசு உங்களுக்கு :)//

    ஒரு சில வேலைகள்மட்டும் தான் போட்டோஷாப்பில் செய்யலாம். நான்கு மேஜிக்குகளும் செய்யமுடியாது. தங்கள் வருகைக்கு நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  15. Chitra கூறியது...
    ha,ha,ha,ha,ha,..... very funny!
    Mac (Apple) has similar iphoto application..... I like playing with it. :-)//

    தங்கள் வருகைக்கும கருத்துக்கும் நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  16. ♠புதுவை சிவா♠ கூறியது...
    "கொஞ்சம் அழகா காமிக்க எதாவது software இருக்கா? :))"

    :-)))

    "ஒருவன் மனது ஒன்பதடா
    அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
    உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
    அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
    உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
    அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா"


    நன்றி வேலன்

    வாழ்க வளமுடன்.//

    நன்றி சிவா சார்..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  17. அன்புடன் அருணா கூறியது...
    புதுசு புதுசா சொல்லித் தருகிறீர்கள்!நன்றி!//

    தங்கள் வருகைக்கு நன்றி சகோதரி...வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  18. moulefrite கூறியது...
    super sir,
    Thank you,அழகாக காமிக்க ஏதாவது உண்டா,,ஏன் இல்லாமல்???
    புதுவை சிவா அவர்களே கிழே இருக்கும் தளத்திற்கு செல்லுங்கள்,,,உங்கள் முகத்தை பைசா
    செலவில்லாமல் ஒரு பிலாஸ்டிக் சர்ஜரி
    பார்க்கலாம்,,செய்தால் எப்படி இருக்கும்
    என்று ஒரு அனுபவமும் கிடைக்கலாம்
    காசா,,,பணமா ஜமாய்ங்கோ்
    http://www3.liftmagic.com/liftmagic/lift.php?id//

    தங்கள் குறிப்பிட்ட வலைதளமும் நன்றாக உள்ளது நண்பரே..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  19. ரஹ்மான் கூறியது...
    நீங்க ரெம்ப அழகா இருக்கீங்க ச்சும்மா தமாசுக்கு.
    நன்றி சார்.//

    வாங்க ரஹ்மான் சார்..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.

    ReplyDelete
  20. ♠புதுவை சிவா♠ கூறியது...
    "moulefrite

    super sir,
    Thank you,அழகாக காமிக்க ஏதாவது உண்டா,,ஏன் இல்லாமல்???
    புதுவை சிவா அவர்களே கிழே இருக்கும் தளத்திற்கு செல்லுங்கள்,,,உங்கள் முகத்தை பைசா
    செலவில்லாமல் ஒரு பிலாஸ்டிக் சர்ஜரி
    பார்க்கலாம்,,செய்தால் எப்படி இருக்கும்
    என்று ஒரு அனுபவமும் கிடைக்கலாம்
    காசா,,,பணமா ஜமாய்ங்கோ்
    http://www3.liftmagic.com/liftmagic/lift.php?id="

    தங்களின் தகலுக்கு நன்றி//

    நன்றி சிவா சார்...வாழ்க வளமுடன்,:வேலன்.

    ReplyDelete