Wednesday, September 22, 2010

வேலன்-20 எம்.பியில் இலவச போட்டோஷாப்.Zoner photo studio

போட்டோஷாப் நாம் பரவலாக பயன்படுத்திவருகின்றோம். போட்டோஷாப்பில் செய்யும் வேலையில் சுமார் 80% இதில்
 நாம் செய்யலாம்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை 
பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
இதில் போட்டோக்களின் வகைகளில் சுமார் 80 விதமான பார்மெட்களை -வகைகளை இது ஆதரிக்கின்றது.அது ஆதரிக்கும் வகைகளை பாருங்கள்.
இந்த சாப்ட்வேரை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Manager,Viewer,Editorஎன டேப்புகள் இருக்கும். அதில் Manager என்பதை கிளிக் செய்யவும். இதில் இடது ஓரம் உங்கள் கம்யுட்டரின் டிரைவ லிஸ்ட் கள் இருக்கும். இதில் புகைப்படம் உள்ள டிரைவிலிருந்து போல்டரை தேர்வு செயததும் உங்களுக்கு அதில் உள்ள படஙகள் ஓப்பன் ஆகும்.படத்தினுடைய பார்மெட்டும் சேர்ந்து ஓப்பன் ஆகும்.இதில் எந்த படத்தினை நீங்கள் தேர்வு செய்கின்றீர்களோ அந்த படம் இடது மூலையின் கீழ் வரும்.
இரண்டாவதாக உள்ளது Viewer.பெரிது பண்ணி பார்க்கலாம். ஸ்லைடைஷோ கொண்டுவரலாம்.மேலும் நீங்கள் புகைப்டம் எடுத்த தேதியும் ,கேமரா ப்ளாஷ் மற்றும் கேமரா சம்பந்தமான தொழில்நுட்ப விவரங்கள் இதன் கீழே வருவதை காணலாம;.
மூன்றாவதாக இதில் Editor. போட்டோஷாப்பில் வருவது போன்று இதில் சைடில் 11 டூல்வகைகள் கொடுத்துள்ளார்கள்.கிராப்பிங்.குளோனிங். மார்பிங் என வகைவகையான டூல்கள் உள்ளது. இதில் உள்ள Droste effect கிளிக் செய்தால் நமது கர்சரானது + அம்புகுறியாக மாறிவிடும். புகைப்படத்தின் நடுவில்வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு புகைப்படம் கீழ்கண்டவாறு வரும். தேவையான மாற்றங்கள் செய்து ஓ,கே. கொடுததால் வட்ட வட்ட வடிவத்தில் புகைப்படங்கள கிடைக்கும்.
இதன் மேலே உள்ள டேபிள் பார்த்தீர்களே யானால் Effects உள்ளது. இதில் விதவிதமான டூல்கள் உளளது.
பென்சில் டிராயிங் உட்பட ஏதுவேண்டுமானாலும் டூலை தேர்வு செய்து நாம் படத்தை மாற்றிக்கொள்ளலாம்.படத்தை resize செய்யும் வசதியும் உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படத்தில் நாம் சுலபமாக எழுத்துக்களையும் நாம் கொண்டு வரலாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா என நாம் கேட்பது போல இந்த சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் இலவசமாக கிடைப்பது வியப்பை அளிக்கின்றது. பதிவின் நீளம் கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

20 comments:

  1. நண்பரே நீண்ண்ண்ண்ட காலமாகவே இம்மென்பொருளைப் பயன்படுத்திவருகிறேன் விண்டேசின் போட்டோ கேலரிக்கும், பிக்சர் மேனசருக்கும் மாற்றாகவும் பயன்படும் இதன் தொழில்நுட்ப வசதிகள் விரும்பத்தக்கதாகவுள்ளன.

    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  2. புகைப்படத்தில் நாம் சுலபமாக எழுத்துக்களையும் நாம் கொண்டு வரலாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா என நாம் கேட்பது போல இந்த சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் இலவசமாக கிடைப்பது வியப்பை அளிக்கின்றது.


    .......அதாவது, இந்த "சின்ன" வயதில், உங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கிற மாதிரி..... அட, அட, அட...... வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  3. வேலன் சார் அசத்தல்... போட்டோஷாப்பிற்கு இனையான ஒரு மென்பொருள் அதுவும் 20 எம்.பி.யில்
    உங்கள் மூலம் போட்டோஷாப் தெரியாதவர்கள்கூட நிறய கற்று வருகிறார்கள் உங்கள் பணி மகத்தானது சார்...
    பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் சார்,நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்...
    நன்றி

    ReplyDelete
  4. "Chitra " "மாணவன்" கருத்துக்களை ஒருமிக்க ஆதரிப்பதுடன்

    பிறர் நலம் கருதி தன் பொருளை நேரத்தை பிறருக்காக அயராது பயனுள்ள வழியில் த‌ரும் "வேலன்" க்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    ....

    ReplyDelete
  5. மிக்க நன்றி மிக்க நன்றி!

    ReplyDelete
  6. புகைப்படத்தில் நாம் சுலபமாக எழுத்துக்களையும் நாம் கொண்டு வரலாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா என நாம் கேட்பது போல இந்த சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் இலவசமாக கிடைப்பது வியப்பை அளிக்கின்றது.


    .......அதாவது, இந்த "சின்ன" வயதில், உங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கிற மாதிரி..... அட, அட, அட...... வாழ்க வளமுடன்!

    //

    ஹாஹாஹ வேலன் சித்து சொன்னதை வழிமொழிகிறேன்..:))

    ReplyDelete
  7. நன்றிங்க வேலன்.... வாழ்க வளமுடன்

    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  8. நன்றி வேலன்சார்.நல்ல பதிவு.

    வழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. முனைவர்.இரா.குணசீலன் கூறியது...
    நண்பரே நீண்ண்ண்ண்ட காலமாகவே இம்மென்பொருளைப் பயன்படுத்திவருகிறேன் விண்டேசின் போட்டோ கேலரிக்கும், பிக்சர் மேனசருக்கும் மாற்றாகவும் பயன்படும் இதன் தொழில்நுட்ப வசதிகள் விரும்பத்தக்கதாகவுள்ளன.

    நல்ல பகிர்வு//

    நன்றி குணா சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. Chitra கூறியது...
    புகைப்படத்தில் நாம் சுலபமாக எழுத்துக்களையும் நாம் கொண்டு வரலாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா என நாம் கேட்பது போல இந்த சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் இலவசமாக கிடைப்பது வியப்பை அளிக்கின்றது.


    .......அதாவது, இந்த "சின்ன" வயதில், உங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கிற மாதிரி..... அட, அட, அட...... வாழ்க வளமுடன்!ஃஃ

    ஆஹா...சகோரியிடம் இன்று நான் மாட்டிக்கொண்டேனா? தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. மாணவன் கூறியது...
    வேலன் சார் அசத்தல்... போட்டோஷாப்பிற்கு இனையான ஒரு மென்பொருள் அதுவும் 20 எம்.பி.யில்
    உங்கள் மூலம் போட்டோஷாப் தெரியாதவர்கள்கூட நிறய கற்று வருகிறார்கள் உங்கள் பணி மகத்தானது சார்...
    பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் சார்,நாங்கள் எப்போதும் உங்களோடு இனைந்திருப்போம்...
    நன்றி
    ஃஃ

    நன்றி சிம்பு சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. VANJOOR கூறியது...
    "Chitra " "மாணவன்" கருத்துக்களை ஒருமிக்க ஆதரிப்பதுடன்

    பிறர் நலம் கருதி தன் பொருளை நேரத்தை பிறருக்காக அயராது பயனுள்ள வழியில் த‌ரும் "வேலன்" க்கு எனது நன்றி கலந்த பாராட்டுக்கள்.

    வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

    நன்றி வாஞ்ஜூர் சார்..தங்கள் வருகைக்கும கருத்துக்கும நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. எஸ்.கே கூறியது...
    மிக்க நன்றி மிக்க நன்றி!


    நன்றி எஸ்.கே.சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. சசிகுமார் கூறியது...
    அருமை நண்பரே//

    நன்றி சசி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. சே.குமார் கூறியது...
    நல்ல பகிர்வுஃஃ


    ந்ன்றி குமார் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. தேனம்மை லெக்ஷ்மணன் கூறியது...
    புகைப்படத்தில் நாம் சுலபமாக எழுத்துக்களையும் நாம் கொண்டு வரலாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா என நாம் கேட்பது போல இந்த சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் இலவசமாக கிடைப்பது வியப்பை அளிக்கின்றது.


    .......அதாவது, இந்த "சின்ன" வயதில், உங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கிற மாதிரி..... அட, அட, அட...... வாழ்க வளமுடன்!

    //

    ஹாஹாஹ வேலன் சித்து சொன்னதை வழிமொழிகிறேன்..:))


    தங்கள் வருகைக்கும் கருத்துககும் நன்றி சகோதரி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. ஆ.ஞானசேகரன் கூறியது...
    நன்றிங்க வேலன்.... வாழ்க வளமுடன்

    ஆ.ஞானசேகரன்ஃஃ


    வாங்க சார்..உங்கள் வருகைககும் கருத்துககும் நன்றி...
    வாழக் வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  18. மச்சவல்லவன் கூறியது...
    நன்றி வேலன்சார்.நல்ல பதிவு.

    வழ்த்துக்கள்


    நன்றி மச்சவல்லவன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete