Wednesday, September 29, 2010

வேலன்- 25 க்கு மேற்பட்ட கணிணி பணிகளுக்கான ஓரே சாப்ட்வேர்.

வழக்கமாக கம்யுட்டர் பணிகளுக்கு நாம் தனிதனி சாப்ட்வேர்கள் வைத்திருப்போம். Disc Cleaner முதற்கொண்டு System Information வரை வெவ்வேறு சாப்ட்வேர்களை கொண்டு செய்வோம். சில பணிகளை கம்யுட்டரிலேயே இணைந்து வரும் System Tool  மூலம் செய்வோம். ஆனால் இந்த சாப்ட்வேரில் 
25க்கும் மேற்பட்ட செயல்களை செய்யலாம். 8 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.,இதனை இன்ஸ்டால் செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் 1 Click Maintenance ல் Registry Cleaner.Shortcuts fixer.Startup Manager.Temporary Files Cleaner.Spyware Remover என செயல்கள் இருக்கும். 
இதில உள்ள Scan for issues கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டொ ஓப்பன்ஆகும்.
எதில் எதில குறைகள் உள்ளதோ அந்த குறைகள் நமக்கு சுட்டிகாட்டும். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
இரண்டாவது டேபில் Modules 5- Tapகளும் ஒவ்வொன்றிலும் 4 செயல்பாடுகளும் இருக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
இதில முதலில உள்ள Disc Cleaner மூலம் தேவையான டிரைவை தேர்வு செய்து கிளின் செய்யலாம்.


ஒவ்வொரு டேப்களாக ஓப்பன் செய்து தேவையானதை பயன்படுத்திகொள்ளவும்.
நான்காவதாக உள்ள டேப் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதில் டிஸ்க் அனலைஸ் செய்யலாம். ஒரே மாதிரியான பைல்களை கண்டுபிடித்து எளிதில நீக்கலாம்.சில சமயங்களில் காலி போல்டர்கள் இருக்கும். இதில அதனை எளிதில கண்டுபிடித்து நீ்க்கலாம்.கீழே உள் ள விண்டோவினை பாருங்கள்.
கடைசியாக உள்ள டேபினை பாருங்கள்.
இதில் உள்ள System information  மூலம் நமது கம்யுட்டரின் அனைத்து ஹார்ட்வேர் சாதனங்களின் பெயர் - வகைகள் - எண்களை எளிதில் அறிந்து கொள்ளலாம்.தேவையானதை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொண்டால் தேவையான சமயம் பயன்படும்.


8 எம்.பி. சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் உள்ளது மலைக்க வைக்கின்றது. உங்களுக்கு எந்த வசதி தேவைபடுகின்றதோ அதனை இந்த சாப்ட்வேர் மூலம் எளிதிலபயன்படுத்திக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.உங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, September 28, 2010

வேலன்-வீட்டு அலங்கார பொருட்கள்.

ஆள்பாதி - ஆடை பாதி என்று சொல்வார்கள். சிம்பிளான வீடாக இருந்தாலும் நல்ல டிசைனில் உள் அலங்காரம் செய்துவிட்டால் வீட்டின் அமைப்பே மாறிவிடும்.இந்த பதிவில் உள் அலங்காரம் செய்ய விதவிதமான டிசைன்கள் பதிவிட்டுள்ளேன். 4.469 மாடல்கள் இதில் உள்ளன.இந்த டிசைன்களை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.














விதவிதமான கப்போர்ட்டுகள். மேஜைகள்.நாற்காலிகள்.சோபா செட்டுகள்.கட்டில்கள்.வாஷ்பேஷின்கள்.குழாய்கள்.ஜன்னல்கள்.
குளியலறை ஷெவர்கள் என விதவிதமான டிசைன்கள் உள்ளது.
பதிவின் நீளம் கருதி சிறிதளவே படங்களை இங்கு பதிவிட்டுள்ளேன்.தேவையான மாடல் தேர்வு செய்து அந்த
 மாடல்போல் நாம் வாங்கிக்கொள்ளலாம். அல்லது அந்த மாடல் 
போல் செய்ய சொல்லலாம்.இதெல்லாம் பணக்காரர்கள் பயன்
படுத்துவது். நமது வாசகர்கள் அதிகம் பேர் நடுத்தரவர்க்கத்தை
 சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் மறந்துவிடவேண்டாம் என 
கேட்பது புரிகின்றது. நானும் நடுத்தரவர்க்கத்தை சேர்ந்தவன்தான். யார் கண்டது. நமக்கு நாளையே வசதிகள் வரும் போது இதையெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லவா..திரு. அப்துல்கலாம் அவர்கள் சொன்னதுபோல் கனவு காணுங்கள்.நாமும் பெரிய பணக்காரர் 
ஆகி அழகான வீட்டினை கட்டி உள்அலங்காரமாக இந்த பொருட்களை பயன்படுத்துவது போல.....
வாழ்க வளமுடன்.
வேலன்.



Monday, September 27, 2010

வேலன்-தமிழில் ஜாதகப்பலன்கள் பார்க்க


ஆயிரம்தான் சொல்லுங்க...தமிழில் நமது ஜாதகத்தின் பலன்கள் படித்துப்பார்ப்பதில் உள்ள சுகமே அலாதிதான்.பிறந்த குறிப்பு - ஜாதக கட்டம் -----செவ்வாய் தோஷம்-பிறந்த போது உள்ள தசை இருப்பு-ராசி மற்றும் நட்சத்திரப்பலன்கள்-கோசார பலன்கள் என இதில் இல்லாததே இல்லை என்று சொல்லலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவு்ம்.இதை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகு்ம்.
இதி்ல் உங்கள் பெயர் - நீங்கள் ஆணா - பெண்ணா - நீங்கள் பிறந்த தேதி - அதன் கீழே பிறந்த நேரம் ஆகியவற்றை குறிப்பிடுங்கள். அதற்கும் கீழே நீங்கள் பிறந்த இடம் குறிப்பிடுங்கள்.சரியான ஸ்பெல்லிங் தெரிந்தால் தட்டச்சு செய்யுங்கள். அல்லது அதில் ஊரின் முதல் எழுத்தை கொடுத்து தேடுங்கள்.சமீபத்தி்ல் உங்கள் ஊரின் பெயர் மாறியிருந்தால் அது லிஸ்டில் வராது.(உதாரணத்திற்கு இதி்ல் சென்னைchennai என்று போட்டால் வராது - மெட்ராஸ் madras என்றால்தான் பெயர் வரும்) அப்படியும் உங்கள் ஊர் பெயர் லிஸ்டில் வரவில்லையா - கவலையை விடுங்கள் உங்கள் ஊர் அருகாமையில் உள்ள கொஞ்சம் பெரிய ஊர் பெயர் வருகின்றதா என்று பார்த்து அந்த பெயர் வந்தால் ஓ.கே.தாருங்கள். 
சில வினாடிகளில் உங்கள் ஊரின் அட்சரேகை தீர்க்க ரேகை பதிவாகும்.(ஞாபகமாக நீங்கள் பிறந்த ஊரை குறிப்பிட் வேண்டும் - மறந்தும் இப்போது நீங்கள் வசிக்கும் ஊரை குறிப்பிட வேண்டாம்.இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நீங்கள் பிறந்த நேரம் - நாள் - கிழமை சரியாக வந்துள்ளதா என சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
இந்த ஜாதகத்தில் ஒரு விஷேஷம் என்ன என்று கேட்கின்றீர்களா..இதில் இந்த பதிவை பதிவிட்டள்ள நேரத்தை ஜாதகமாக கணித்து போட்டுள்ளேன்.  க ர்சரை இப்போழுது கீழே நகர்த்துங்கள். நீங்கள் பிறந்த போது எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த வீட்டில் இருந்ததோ அதனை காணலாம். இதனை ஜாதகத்தின் ராசி சக்கரம் என்றும் குறிப்பிடுவார்கள்.அதன்கீழேயே உங்களுடைய தசா இருப்பு விவரம் கொடுக்கப்பட்டுள்ளதை கவனியுங்கள்.

பையனோ - பெண்ணோ ஜாதகத்தி்ல் முக்கியாக பார்க்கவேண்டியது செவ்வாய் தோஷம். இந்த சாப்ட்வேரில் அதனை சுலபமாக பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவினில் பாருங்கள். இதில செவ்வாய் தோஷம் இல்லை என்று பச்சை வர்ணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள். 

இந்த ஜாதகத்தில் பாருங்கள்.இருப்பதை சிகப்பு வர்ணத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

ஜாதகத்தில் அடுத்து என்ன திசை - புக்தி நடைபெறுகின்றது என்று பார்க்கவேண்டும். அதற்கேற்ப பலன்கள் மாறு படு்ம்.கீழே பாருங்கள் திசை மற்றும் புத்தி ஆரம்பம் மற்றும் முடிவு பற்றி போட்டுள்ளார்கள்.

இதில் நட்சத்திரப்பலன்களும் ராசியின் பலன்களையும் நாம் அறிந்து கொள்ளலாம்.இறுதியாக உள்ளது கோசார பலன்கள். அன்றைய நிலையை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.

உங்களின் பலன்களுக்கு ஏற்ப சுமார் 40 பக்கங்கள் வரை வரு்ம். மறக்காமல் பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். 4 வருடங்களுக்கு முன்னர் இந்த சாப்ட்வேரை ரூபாய் 2,000 கொடுத்து இரண்டு பேர் சேர்ந்து வாங்கினோ்ம்.இப்போது இந்த சாப்ட்வேரின் மதிப்பு உங்களுக்கு புரிந்திருக்கும் என எண்ணுகின்றேன். வகுப்பறை வாத்தியாரின் பதிவு மூலம் நண்பர் கரூர் தியாகராஜன் வெளியிட்டதி்ல் சுமார் 13,000 பேர் பதிவிறக்கி பயன்படுத்தி உள்ளனர். பழைய எம்.ஜி.ஆர் - சிவாஜி படங்களை புத்தம் புதிய காப்பியாக வெளியிடுகையில் மீண்டும் படம் சக்கை போடு போடும். அதைப்போலவே நானும் இந்த சாப்ட்வேரை தியாகராஜன் சார் அனுமதி பெற்று புத்தம் புதிய காப்பியாக வெளியிடுகின்றேன்.படம் வெற்றி பெற உதவுங்கள். ஜாதகம் பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

Sunday, September 26, 2010

வேலன்-மால்வேரிலிருந்து பதிவை காப்பாற்றுங்கள்.ஓர் எச்சரிக்கை.

இன்று மாலை எனது வலைதளத்தை velang.blogspot.com திறக்கையில் உங்கள் தளம் Malware Detected என்று வந்தது. அடடா...வடை போச்சா...என திகைத்துவிட்டேன்.நண்பர்களிடம் விசாரித்தபோது பதற்றம் வேண்டாம் ...நிறைய பதிவர்களின் பிளாக்குகள் இதுபோல் Malware Detected வந்துள்ளதாக சென்னார்கள்.கொஞசம் ரிலாக்ஸ் செய்து கொண்டேன்.என்னுடைய பிளாக் திறந்தபோது வந்த தளம் கீழே பார்க்கவும்.

இதற்கான காரணமாக தமிழ்10 தளம் என அறிந்தேன்.தமிழ்10 தள ஒட்டுப்பட்டைகளை யார் யார் இணைத்துள்ளார்களோ அவர்களுக்குதான் இநத மாதிரி மெசெஜ் வருவதாக அறிந்துகொண்டேன்.ஆபத்து சமயத்தில் அருமை நண்பர் திரு. A.G.E.வெங்கடேஷ் அவர்கள் உதவிக்கு வந்தார்கள். அவரின் உதவியுடன நான் சேர்த்த தமிழ்10 தள கோடிங்கை எனது விட்ஜெட்டிலிருந்து நீக்கி விட்டு ஒப்பன் செய்தேன் சரியாக வந்தது. நீங்களும் உங்கள் தளம் இவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் இவ்வாறு செய்து மால்வேரிலிருந்து உங்கள் தளத்தை காப்பாற்றுங்கள்.தமிழ்10 மேல் எனக்கு எந்த கோபமோ - வெறுப்போ இல்லை..
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு-சக பதிவர்களுக்கு பயன்படட்டும் என இதனை பதிவிடுகின்றேன்.நாளை காலை (27.09.2010)வழக்கமான பதிவும் வெ ளிவரும்.

வேலன்- பைக் ரேஸ் விளையாட்டு

இளைஞராக இருக்கு்ம் சமயம் பைக்கில் ஸ்கிட் அடித்து 
போவதே தனி இன்பம்.திருமணம் ஆகாதவர்கள் செல்லுவதை கேட்கவே வேண்டாம். யாருக்கும் எந்த வித ப்ரச்சனையும் இன்றி பைக் ஓட்ட இந்த சாப்ட்வேர் உதவும்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் பைக் ஒட்டலாம். லைசன்ஸ் வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை. 20 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்க் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
நீஙகள் இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்து உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்யவும. அதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்டவாறு ஓப்பன் ஆகும்.


முதலில் உள்ள Crack என்பதனை கிளிக் செய்யுங்கள் .அடுத்து Roadrash என்பதனை கிளிக் செய்யவும்.(உங்கள் வசதிக்காக சிகப்பு அம்பு குறியில் குறிப்பிட்டுள்ளேன்) இப்போது வரும் விண்டோவில் தேவையான நகரத்தை தேர்வு செய்து விளையாடுங்கள்.
பயனபடுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- நாளைய பதிவில் தமிழில் ஜாதகப்பலன்கள் தரும் சாப்ட்வேர் பதிவிடுகின்றேன்.


Saturday, September 25, 2010

வேலன்-போட்டோஷாப் - 100 சவரன் தங்க நகைகள் உங்களுக்காக

இன்று 1 கிராம் தங்கம் விலை தோராயமாக ரூபாய் 1800 -க்கு விற்கினறது. ஏழை மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கம் போட்டு அழகுபார்க்க முடியுமா? அதனால் நாம் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் 100 சவரன் தங்க நகை களை தரலாம் என்று உள்ளேன். 20 செட் தங்க நகைகளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
போட்டோஷாப்பில் இந்த PSD பைலை ஒப்பன் செய்து கொள்ளுங்கள்.நீங்கள் நகை போட்டு அழகு பார்க்க தேவையான படத்தை தேர்ந்தெடுங்கள். நான் கீழே 
சசிகுமார்-அனன்யா அவர்களின் படத்தை தேர்வு செய்துள்ளேன்.
நெக்லஸ் மாடலில உங்களுக்கு எது பிடித்துள்ளதோ அதை தேர்வு செய்து கொள்ளுங்கள். பின்னர் படத்தில் அந்த நகையை இழுத்துவந்து விடுங்கள். பின்னர் Ctrl+T மூலம் நகையை தேவையான அளவு மாற்றி குறைத்துக்கொள்ளுங்கள்.கழுத்தில தேவையான இடத்தில் மூவ் டூல் மூலம் நகர்த்தி வைத்துவிடுங்கள்.நான் இவ்வாறு நகை டிசைன் செய்தபின் வந்துள்ள புகைப்படம் கீழே-
நமது வாசகர்களுக்கு ஏற்கனவே PSD பைலை எப்படி பயன்படுத்துவது என்று போட்டோஷாப் பாடத்தில் பதிவிட்டுள்ளேன். முந்தைய பாடததை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பதிவினை பாருங்கள். கருததினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன். 

பின்குறிப்பு-நாளை ஞாயிறு கடை உண்டு.மறக்காமல் வந்து விடுங்கள்.

Friday, September 24, 2010

வேலன்-இன்டர்நெட்டில் தேவையானதை மட்டும் பதிவிறக்க

இன்டர்நெட்டில் உலா வருகையில் சில புகைப்படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். சில சமயம் பாடல்கள் மட்டும் தேவைப்படும். சிலசமயம் வீடியோ மட்டும் தேவைப்படும்.சில வேளைகளில் மொத்தமும் தேவைப்படும். இந்த மாதிரி சமயங்களில் உங்கள் தேவை எதுவோ அதை மட்டும் பதிவிறக்க 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாபட்வேர உங்களுக்கு பயன்படும். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளேரர். பயர்பாக்ஸ். ஓப்ரா என மூன்று ப்ரவ்சர்கள் உள்ளது. இதில் நீங்கள் எந்த ப்ரவுசரை உபயோகிக்கின்றீர்களோ அதை தேர்வு செய்யவும். அதில் நீங்கள தேர்வு செய்த இணைய தள முகவரிகள் URL Address  உங்களுக்கு வலது பக்கம் வரும்.அதில் தேவையான முகவரியை தேர்வு செய்யுங்கள்.
நான் கீழ்கண்ட விண்டோவில் புகைப்படத்தை தேர்வு செய்துள்ளேன். அந்த பக்கத்தில் உள்ள அனைததுப்புகைப்படங்களின் இணைய முகவரிகளும் உங்களுக்கு இடது பக்கம் கிடைக்கும்.தேவையான முகவரியை கிளிக் செய்தால் அதற்கான படம் கீழே உள்ள வி்ண்டோவில் வரும்.
படத்தை பற்றிய முழுவிவரமும் கீழே உள்ள தகவல் மூலம் நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
தேவையானதை தேர்வு செய்து வேண்டிய இடத்தில் சேமித்துக்கொள்ளலாம்.
இதன் உபயோககங்கள் ஆங்கிலத்தில்-
Cache View Plus is an advanced, easy to use viewer for web browser cache. You can view and extract any video clips, audio tracks, pictures and other files from the web browser cache with categorized review list. The intuitive Windows interface makes Cache View Plus fast to learn and easy to use.
Cache View Plus has convenient features to view recent (Hot) items. Simply start Cache View Plus, visit an interested web page, press Load Cache button in Cache View Plus and get highlighted hot items from this web page to view and extract.

Usage:
  • Collecting documents, images, etc.
  • Researching applications (script, css files, etc) embedded in the document.
  • Checking what, where and when the user of the computer (like family members, friends) visited the Internet.

Main Features:
  • Categorized review list. Cache View Plus allows you to browse cache items by their types like Pictures/Video/Sounds/SWF, etc.
  • Sort cache list. It lets you sort the list by simply clicking on list head (URL/File Size/Access Time/Content-Type).
  • Copy function. It allows you to copy cache files to specified folder.
  • Hot cache items. Cache View Plus highlight recent cache items and URLs.
  • Favorite URLs. It allows you to collect favorite URLs for quick access.
  • Display function. It explicitly shows the cache item in the preview panel.
  • Send to E-Mail Function. Cache View Plus lets you to send selected cached files via E-Mail.

  • இதன் ஓரே குறை என்று சொன்னால் குரோம் உபயோகிப்பவர்கள் இதனை பயன்படுத்த முடியாது.மற்றவர்கள் இதனை தாராளமாக உபயோகிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Thursday, September 23, 2010

வேலன்-ஜாதக விவரம் அறிய - ஆங்கிலத்தில.


ஜோதிடம் என்றாலே நமது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று மனதில் எண்ணங்கள் ஓடும். இந்த சின்ன சாப்ட்வேரில் உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதி - பிறந்த இடம் கொடுத்தால் ஜாதக விவரங்கள் வினாடியில் தயார் செய்து கொடுத்து விடுகின்றது. 2 எம்.பி கொள்ளளவு கொண்ட இதில் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டுமே உள்ளது்.இந்த சாபட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும;இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Give birth details கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்கள் பெயர் உட்பட விவரங்கள் தரவும்.
கடைசியாக ஓ.கே. கொடுத்தால் உங்கள் ஜாதக விவரங்கள் ஒவ்வொன்றாக வரும். தேவையானால் பிரிண்ட எடுத்துக்கொள்ளலாம்.
இதில் உள்ள விண்டொவினை நீங்கள் மூடினால் தான் அடுத்த விண்டோ ஒப்பன் ஆகும். 
எனவே தேவையானதை பிரிண்ட் எடுத்துவைத்துக்கொண்டோ -அல்லது படித்து முடித்தோ அடுத்த விண்டோவிறகு செல்லுங்கள்.தமிழில் பலன்களுடன் அருமையான சாப்ட் வேர உள்ளது அதனை பின்னர்  பதிவிடுகின்றேன். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


JUST FOR JOLLY PHOTOS:-


நாம் இருவர நமக்கு ஒருவர் திட்டம் நமக்கு கூடவா...?

Wednesday, September 22, 2010

வேலன்-20 எம்.பியில் இலவச போட்டோஷாப்.Zoner photo studio

போட்டோஷாப் நாம் பரவலாக பயன்படுத்திவருகின்றோம். போட்டோஷாப்பில் செய்யும் வேலையில் சுமார் 80% இதில்
 நாம் செய்யலாம்.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை 
பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
இதில் போட்டோக்களின் வகைகளில் சுமார் 80 விதமான பார்மெட்களை -வகைகளை இது ஆதரிக்கின்றது.அது ஆதரிக்கும் வகைகளை பாருங்கள்.
இந்த சாப்ட்வேரை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Manager,Viewer,Editorஎன டேப்புகள் இருக்கும். அதில் Manager என்பதை கிளிக் செய்யவும். இதில் இடது ஓரம் உங்கள் கம்யுட்டரின் டிரைவ லிஸ்ட் கள் இருக்கும். இதில் புகைப்படம் உள்ள டிரைவிலிருந்து போல்டரை தேர்வு செயததும் உங்களுக்கு அதில் உள்ள படஙகள் ஓப்பன் ஆகும்.படத்தினுடைய பார்மெட்டும் சேர்ந்து ஓப்பன் ஆகும்.இதில் எந்த படத்தினை நீங்கள் தேர்வு செய்கின்றீர்களோ அந்த படம் இடது மூலையின் கீழ் வரும்.
இரண்டாவதாக உள்ளது Viewer.பெரிது பண்ணி பார்க்கலாம். ஸ்லைடைஷோ கொண்டுவரலாம்.மேலும் நீங்கள் புகைப்டம் எடுத்த தேதியும் ,கேமரா ப்ளாஷ் மற்றும் கேமரா சம்பந்தமான தொழில்நுட்ப விவரங்கள் இதன் கீழே வருவதை காணலாம;.
மூன்றாவதாக இதில் Editor. போட்டோஷாப்பில் வருவது போன்று இதில் சைடில் 11 டூல்வகைகள் கொடுத்துள்ளார்கள்.கிராப்பிங்.குளோனிங். மார்பிங் என வகைவகையான டூல்கள் உள்ளது. இதில் உள்ள Droste effect கிளிக் செய்தால் நமது கர்சரானது + அம்புகுறியாக மாறிவிடும். புகைப்படத்தின் நடுவில்வைத்து கிளிக் செய்ய உங்களுக்கு புகைப்படம் கீழ்கண்டவாறு வரும். தேவையான மாற்றங்கள் செய்து ஓ,கே. கொடுததால் வட்ட வட்ட வடிவத்தில் புகைப்படங்கள கிடைக்கும்.
இதன் மேலே உள்ள டேபிள் பார்த்தீர்களே யானால் Effects உள்ளது. இதில் விதவிதமான டூல்கள் உளளது.
பென்சில் டிராயிங் உட்பட ஏதுவேண்டுமானாலும் டூலை தேர்வு செய்து நாம் படத்தை மாற்றிக்கொள்ளலாம்.படத்தை resize செய்யும் வசதியும் உள்ளது. கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
புகைப்படத்தில் நாம் சுலபமாக எழுத்துக்களையும் நாம் கொண்டு வரலாம். இந்த சின்ன வயதில் இவ்வளவு திறமையா என நாம் கேட்பது போல இந்த சின்ன சாப்ட்வேரில் இவ்வளவு வசதிகள் இலவசமாக கிடைப்பது வியப்பை அளிக்கின்றது. பதிவின் நீளம் கருத்தில் கொண்டு இத்துடன் முடித்துக்கொள்கின்றேன். பதிவுகளை பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.