போட்டோஷாப்பில் முக்கியமான பாடமாக இதனை குறிப்பிடலாம். முப்பரிமாண படம் நிறைய பார்த்திருப்பீர்கள். ஆனால் அதை எவ்வாறு செய்வார்கள் என உங்களுக்கு தெரியுமா? இன்றைய பதிவில் அதனை பார்க்கலாம்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.அன்பே ஆருயிரே படத்தில் சூர்யா அவர்களும் சந்தானம் அவர்களும் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றை பார்த்திருப்பீர்கள். அதில் சூர்யா தெரிகிறது என்று சொல்லுவார். சந்தானம் தெரியவில்லை என்று சொல்லுவார். அதுபோல் சந்தானம் இப்போது தெரிகின்றது என்று சொல்லுவார். சூர்யா தெரியவில்லை என்று சொலலுவார். அதைப்போல் கீழே உள்ள படத்தை பாருங்கள். இந்த படத்தை நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட 3 டி கண்ணாடியை போட்டுபார்க்கும் சமயம் ஒரு கண்ணை மூடி பார்க்கும் சமயம் நான் தெரிவேன். மறுகண்ணால் பார்க்கும் சமயம் நான் தெரியமாட்டேன். அதை எவ்வாறு செய்வது என்று பாரக்கலாம். முதலில ஒரே அளவிலான இரண்டுபடத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.நான் தேர்வு செய்துள்ள படம் கீழே-
இந்த சாப்ட்வேரை திறந்துகொள்ளுங்கள். வரும் விணடோவில் முதலில் உள்ள படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
வலதுபுறம் வரும் படத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
தேவையான செட்டிங்ஸ் தேர்வு செய்ததும் சிகப்பு -நீலம் கட்டத்தை கிளிக் செய்யவும் .கீழே உள்ள விண்டோ தெரியும்.
தேவையான இடத்தில் சேவ்செய்துகொள்ளுங்கள். நேரடியாக பிரிண்ட்டும் எடுத்தும் கொள்ளலாம்.மற்றும் ஒரு உதாரணம் பாருங்கள்.கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை.
பின்புறத்தில் இவைகள் வருமாறு நான் எடுத்த புகைப்படம் கீழே-
இப்போது இரண்டு படங்களையும் மிக்ஸ் செய்ததும வந்துள்ள 3 டி படம் கீழே-
பார்ப்பதற்கு மங்கலாக தெரியும் படமானது நீங்கள் 3 டி கண்ணாடி போட்டுகொண்டு நீலகலர் கண்வழியாக பார்க்கும் சமயம் உங்களுக்கு விவேகானந்தர் பாறையும் திருவள்ளுவர் சிலைமட்டும் தெரியும். இதே படத்தை நீங்கள் சிகப்புகலர் வழியாக பார்க்கும் சமயம் என்னுடம் படம் தெரியும். நீங்களும் இவ்வாறு உங்களது புகைப்படத்தில் செய்து பாருங்கள்.
பதிவினை பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.