வேலன்- Scotland-நாட்டின் அழகிய ஸ்கிரீன்சேவர்கள்

உலகில் குற்றங்களை கண்டுபிடிப்பதில் திறமையான காவல்துறையாக ஸ்காட்லாண்ட் காவல்துறையை குறிப்பிடுவார்கள்.அதற்கு அடுத்தபடியாக நமது தமிழ்நாடு காவல்துறையை குறிப்பிடுவார்கள். ஸ்காட்லாண்ட நாம் போனதில்லை. ஆனால் அந்த நாட்டின் அழகான இயற்கைகாட்சிகளை நாம் ஸ்கிரீன் சேவராக வைத்துக்கொள்ளலாம். 2 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதில் 15 க்கும் மேற்பட்ட இயற்கைகாட்சிகள் ஸ்கிரீன்சேவர்களாக உள்ளது.மாதிரிக்கு சில கீழே-



பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-அனிமேட்டட் டெக்ஸ்டாப்

விதவிதமான அனிமேட்டட் டெக்ஸ்ட்டாப்புகளை நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா..?பயமுறுத்தும் மண்டைஓடு...ஓடும் பூச்சிஇனங்கள் என இங்கே விதவிதமான டெக்ஸ்டாப்புகள் உள்ளன. 6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள்
இங்கே கிளிக் செய்யவும்.பயமுறுத்தும் டெக்ஸ்டாப் சில கீழே-
இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். வேண்டிய டிசைனை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
நீர்குமிழி போன்ற தோற்றத்துடன் டெக்ஸ்டாப் கீழே-
இதன் பயன்கள் ஆங்கிலத்தில் கீழே-
Features:

  • Animated Desktop
  • Create your own animations for your desktop.
  • Convenient settings menu
  • Collections of ANIMATED themes for your desktop
  • Collections of pictures for your desktop
  • Supports numerous graphic formats
  • Multi-lingual support
  • User-friendly interface
  • Convenient and comprehensive help system
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப் - 3 டி முப்பரிமாண படம் தயாரிக்க.

போட்டோஷாப்பில் முக்கியமான பாடமாக இதனை குறிப்பிடலாம். முப்பரிமாண படம் நிறைய பார்த்திருப்பீர்கள். ஆனால் அதை எவ்வாறு செய்வார்கள் என உங்களுக்கு தெரியுமா? இன்றைய பதிவில் அதனை பார்க்கலாம்.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.அன்பே ஆருயிரே படத்தில் சூர்யா அவர்களும் சந்தானம் அவர்களும் இடம்பெறும் நகைச்சுவை காட்சி ஒன்றை பார்த்திருப்பீர்கள். அதில் சூர்யா தெரிகிறது என்று சொல்லுவார். சந்தானம் தெரியவில்லை என்று சொல்லுவார். அதுபோல் சந்தானம் இப்போது தெரிகின்றது என்று சொல்லுவார். சூர்யா தெரியவில்லை என்று சொலலுவார். அதைப்போல் கீழே உள்ள படத்தை பாருங்கள்.
இந்த படத்தை நான் சென்ற பதிவில் குறிப்பிட்ட 3 டி கண்ணாடியை போட்டுபார்க்கும் சமயம் ஒரு கண்ணை மூடி பார்க்கும் சமயம் நான் தெரிவேன். மறுகண்ணால் பார்க்கும் சமயம் நான் தெரியமாட்டேன். அதை எவ்வாறு செய்வது என்று பாரக்கலாம். முதலில ஒரே அளவிலான இரண்டுபடத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.நான் தேர்வு செய்துள்ள படம் கீழே- 

இந்த சாப்ட்வேரை திறந்துகொள்ளுங்கள். வரும் விணடோவில் முதலில் உள்ள படத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
வலதுபுறம் வரும் படத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள்.
தேவையான செட்டிங்ஸ் தேர்வு செய்ததும் சிகப்பு -நீலம் கட்டத்தை கிளிக் செய்யவும் .கீழே உள்ள விண்டோ தெரியும்.
தேவையான இடத்தில் சேவ்செய்துகொள்ளுங்கள். நேரடியாக பிரிண்ட்டும் எடுத்தும் கொள்ளலாம்.மற்றும் ஒரு உதாரணம் பாருங்கள்.கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை.
பின்புறத்தில் இவைகள் வருமாறு நான் எடுத்த புகைப்படம் கீழே-
இப்போது இரண்டு படங்களையும் மிக்ஸ் செய்ததும வந்துள்ள 3 டி படம் கீழே-
பார்ப்பதற்கு மங்கலாக தெரியும் படமானது நீங்கள் 3 டி கண்ணாடி போட்டுகொண்டு நீலகலர் கண்வழியாக பார்க்கும் சமயம் உங்களுக்கு விவேகானந்தர் பாறையும் திருவள்ளுவர் சிலைமட்டும் தெரியும். இதே படத்தை நீங்கள் சிகப்புகலர் வழியாக பார்க்கும் சமயம் என்னுடம் படம் தெரியும். நீங்களும் இவ்வாறு உங்களது புகைப்படத்தில் செய்து பாருங்கள்.
பதிவினை பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்- விண்வெளி விளையாட்டு Arcadrome.


கம்யூட்டரில் தரையில் சண்டையிடுவதுபோல் இருந்தாலேமகிழ்ச்சியாக இருக்கும் இது ஆகாயத்தில் சண்டையிடுவதாக இருந்தால் குழந்தைகளுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நமது பூமியை நாம் காக்கவேண்டும்.துப்பாக்கி. பாம்.அணுகுண்டு என அனைத்தும் நமக்கு உடனுக்குடன் கிடைக்கும். 4 எம்பியில் அருமையான விளையாட்டினை கொடுத்துள்ளார்கள். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள டைமண்ட்களை நாம் சேகரித்துக்கொள்ளவேண்டும். நகர்நதுவரும் எதிரிகளை சுட்டுவீழ்த்தவேண்டும்.
நம் இருப்பிடம் தேடி பறந்துவரும் ஆயுதங்களை பிடித்து பயன்படுத்திடவேண்டும்.
விளையாட ஆரமபித்த சிறிது நேரத்திலேயே ஆர்வம் நம்மை தொற்றிக்கொள்ளுவதால் விளையாட நேரம் போவதே தெரிவதில்லை...
பயன்படுத்திப்பாருங்ககள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- நேற்று 3 டி கண்ணாடி பற்றிய பதிவினை பார்த்திருப்பீர்கள் என எண்ணுகின்றேன்.பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்து பார்த்துக்கொள்ளுங்கள். கண்ணாடியை தயார் செய்துகொள்ளுங்கள்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-வேர்ட்டில் கிளிப் போர்டினை பயன்படுத்த


கம்யூட்டரில் பணிபுரிகையில் தகவல் -படங்கள் - குறிப்புகளை ஒரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற காப்பி - பேஸ்ட் செய்வோம். மற்ற இடங்களில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் இந்த வசதி -வேர்ட்டில் பலமுறை பயன்படுத்தலாம். வேர்டில் 24 முறை காப்பி செய்ததில் வேண்டியதை தேர்வு செய்துபின் பேஸ்ட் செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். 
இதில் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு Pasteஎன்பதின் கீழே Clipboad என்கின்ற சின்ன அம்புகுறி இருக்கும். அதை கிளிக செய்யுங்கள். 
வரும் விண்டோவில் பார்த்தீர்களேயானல் உங்களுக்கு நீங்கள் இதுவரை காப்பி செய்தவை வரிசையாக இருக்கும். தேவையானதை தேர்வு செய்துகிளிக் செய்தால் உங்கள் கர்சர் எங்கு உள்ளதோ அங்கு பேஸ்ட் ஆகும்
இதில் உள்ள 24 முறை காப்பி செய்ததகவல்களை மாறி மாறி பேஸ்ட் செய்யலாம்.ஒரே தகவலை பல நபர்களுக்கு அனுப்ப இந்த கிளிக் போர்ட்வசதி உங்களுக்கு பயன்படும்.இந்த கிளிப் போர்டினை தேவையானால் வைத்துக்கொள்ளவும் தேவையான இடங்களுக்கு நகர்த்தியும் வைத்துக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.


பின்குறிப்பு- போட்டோஷாப்பில மிக முக்கியமான 3D படம் பற்றிய பதிவை திங்கள்கிழமை காலை பதிவிடுகின்றேன்.அதற்கு உங்களுக்கு 3 D  கண்ணாடி அவசியம் வேண்டும். ஏற்கனவே இதை ஆனந்தவிகடன் புத்தகத்துடனும் ஜெயா டிவியிலும் கொடுத்தார்கள்.பழைய கண்ணாடி இருந்தால் சரி. இல்லாதவர்கள் இங்கு கிளிக் செய்து அந்த பதிவினை பார்த்து புதியதாக செய்துகொள்ளுங்கள்.பதிவின் லிங்க் கொடுததமைக்கு கொக்கரக்கோ நண்பர் பிரேம் அவரகளுக்கு நன்றி.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-டெக்ஸ்டாப்பில் உள்ளவைகளை சுலபமாக பெற



டெக்ஸ்டாப்பில் உள்ளவைகளை - நமது சாப்ட்வேர்களின் ஷார்ட்கட்களை இதில் உள்ள பாக்ஸில் போட்டுவைததுக்கொள்ளலாம். வேண்டியவைகளை ஒரே கிளிக் மூலம் திறந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் மறைத்தும் வைக்கலாம். மேலே - கீழே - பக்கவாட்டில் என எங்குவேண்டுமானாலும் இதை நகர்த்திவைத்துக்கொள்ளளலாம்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதன் எளிதில் விளக்கம் வீடியோவாக கீழே-

இதில் உள்ள இதர பயன்களின் ஆங்கில தொகுப்பு கீழே-
Features:
  • Minimize windows to the dock
  • Real-time window previews in Vista
  • Running application indicators
  • Simple drag-n-drop interface
  • Multi-monitor support
  • Supports alpha-blended PNG and ICO icons
  • Icons zoom and transition smoothly
  • Auto-hide and Popup on mouse over
  • Positioning and layering options
  • Fully customizable
  • Completely Portable
  • ObjectDock Docklet support
  • Compatible with MobyDock, ObjectDock, RK Launcher, and Y'z Dock skins
  • Runs great on slower computers
  • Unicode compliant
  • Supports many languages and can easily be translated
  • A friendly user base :)
  • And best of all... its FREE!!!

பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-Youtube -லிருந்து வேண்டிய பார்மெட்டுக்கு பதிவிறக்கம் செய்ய


இணையம் பயன்படுத்தினாலே அதில் youtube தவிர்க்க முடியாது. ஏதாவது ஒரு சமயத்தி்ல் நாம் youtube லிருந்து வீடியோவை தரவிறக்கம் செய்வோம்.  youtube லிருநது டவுண்லோடு செய்ய எவ்வளவோ சாப்ட்வேர்கள் இருந்தாலும் சற்று வித்தியசமாக இந்த சாப்ட்வேர் உள்ளது. 4 எம்.பி .கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு இன்ஸ்டால் செய்தததும் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து Youtube URL ஐ காப்பி செய்து இதில் பேஸ்ட் செய்யவும்.

தரவிறக்கம் செய்யப்படும் பைல் எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு இதில் எளிதில மாற்றிக்கொள்ளலாம். இது ஆதரிக்கும் பார்மெட்டாக
 1)None (No converting, FLV file type)
(2)AVI (Microsoft Windows Media File Type)
(3)WMV (Zune/PocketPC File Type)
(4)MOV (QuickTime File Type)
(5)MP4 (iPod/PSP/MP4 Player File Type)
(6)3GP (Mobile Phone Video File Type) உள்ளன. 3 GP ஐ இது ஆதரிப்பதால் செல்போன் மற்றும் ஐ-பாட்டுக்கு இதிலிருந்து நேரடியாக பதிவேற்றிக்கொள்ளலாம்.அதுபோல சில ஆடியோ பைல்கள் பாடல்களை நாம் கேட்கமட்டுமே முடியும். அதை பதிவிறக்கம் செய்ய முடியாது. அந்த மாதிரியான பாடல்களை இதன் மூலம் எளிதில பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அடோப் பிரிமியர் உபயோகிப்பவர்கள் யு டியுப்பிலிருந்து பதிவிறக்கம் செய்யும் பாடல்களை பிரிமியரில் நேரடியாக பயன்படுத்தமுடியாது. அந்த சமயங்களில் இந்த சாப்ட்வேர் மூலம் MOV பைலாக பதிவிறக்கம் செய்து எளிதில்பயன்படுததிக்கொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப் - மேங்களின் பிரஷ் டூல்.


மழை - மேகம் - இடி- மின்னல் - இயற்கையின்அழகே அழகு.போட்டோஷாப்பில் இவை அனைத்தையும் அருமையாக கொண்டு வரலாம். ஏற்கனவே முந்தைய பதிவுகளில் மழை - இடி-மின்னல் என பிரஷ் டூல்கள் பற்றி பதிவிட்டுள்ளேன். அந்த வரிசையில் இன்று மேகங்கள் பிரஷ் டூல் பற்றி பதிவிடுகின்றேன்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இந்த பிரஷ் டூலில் என்னற்ற மேங்களின் பிரஷ் டூல் படங்கள் உள்ளது. ஏற்கனவே நீங்கள் பயன்படுத்திவந்ததை போல இந்த டூலையும் உங்கள் போட்டோஷாப்பில இணைத்துக்கொள்ளவும். கீழே உதாரணங்களுடன் புகைப்படங்கள் கொடுத்துள்ளேன்.
திருச்செந்துர் முருகன் கோயில்-
வெண்மைநிற மேகங்களின் பிரஷ் டூல் உபயோகித்தப்பின் வந்த படம் கீழே-
கருமை நிற மேங்கள் உபயோகித்தப்பின் வந்த படம் கீழே-
சாதாரண கடற்கரை-
கருமை மேங்கள் புடைசூழ கொண்டுவந்த புகைப்படம் கீழே-
இதில் 4 புகைப்படங்கள் இணைத்துள்ளேன். இதில எது எது ஒரிஜினல்படம் - எது எது பிரஷ் டூல் கொண்டு வரைந்த படம் என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.




பிரஷ டூலின் நிறத்தை வேண்டிய கலரில் இடத்திற்கு தகுந்தவாறு கொண்டுவந்துவிடுங்கள். பெறும்பாலும் வெள்ளை மற்றும் கருப்பு நிறத்தையே உபயோகியுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-கம்யூட்டரின் ஐ.டி.கார்ட்.


பள்ளியில் ஆரம்பித்து கம்பெனி வேலை செய்யும் வரை ஐ.டி.கார்ட் அவசியமாகின்றது.இப்போது பள்ளிக்கு செல்லும் பெற்றோரும் ஐ.டி.கார்ட்.வைத்திருக்க அவசியம் வந்துள்ளது.ஒருவரைப்பற்றிய விவரம் இந்த ஐடி கார்ட் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.நமக்கு ஐ.டி.கார்ட் உள்ளதுபோல் கம்யூட்டரின் சிபியுவிற்கும் ஐடிகார்ட் உள்ளது உங்களுக்கு தெரியுமா? 1.5 எம்.பி கொள்ளளவு கொண்ட சிறிய ஐ.டி.கார்ட் இது.இதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.இதை இயக்கியதும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் CPU.Caches.Mainboard.Memory.SPD.Graphics.About போன்ற டேப்புகள் இருக்கும். 



 

 



சரி என்னதான் இந்த சாப்ட்வேரில் இருக்கு ? கீழே உள்ள ஆங்கில விளக்கம் பாருங்கள்


What is CPU-Z

CPU-Z is a freeware that gathers information on some of the main devices of your system.
CPU

  • Name and number.
  • Core stepping and process.
  • Package.
  • Core voltage.
  • Internal and external clocks, clock multiplier.
  • Supported instruction sets.
  • Cache information.
Mainboard

  • Vendor, model and revision.
  • BIOS model and date.
  • Chipset (northbridge and southbridge) and sensor.
  • Graphic interface.
Memory

  • Frequency and timings.
  • Module(s) specification using SPD (Serial Presence Detect) : vendor, serial number, timings table.
System

  • Windows and DirectX version.


கம்யூட்டர் சரி செய்யும் நிபுணர்களுக்கு இந்த சாப்ட்வேர் வரபிரசாதமாக இருக்கும். நமது கம்யூட்டரில் அப்படி என்னதான் இருக்கின்றது என தெரிந்துகொள்ள இந்த சாப்ட்வேரை பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-போட்டோஷாப் - முகத்தை அழகாக்க

கவிஞர்கள் -முகத்தை முழுநிலவு முகம் என்று சொல்லுவார்கள்
நிலவை அருகில் சென்று பார்த்தால்தான் அதில் உள் ள மேடுபள்ளங்கள்தெரியும். அதுபோல் முகத்தை குளோசப்ஷாட்டில் எடுத்து பார்க்கும்போது அதில் உள்ள மேடுபள்ளங்கள் தெரியவரும்.அதுபோல் உள்ள முகங்களை மேலும் அழகாக்க இந்த சாப்ட்வேர் உதவுகின்றது. 30 நாள் டிரையல் உளள இந்த சாப்ட்வேரை உபயோகிக்க இங்கு கிளிக் செய்யவும்.அவர்களே உபயோகிக்க எளிதான வீடியோ தொகுப்பை அளித்துள்ளார்கள்.கீழே உள்ள வீடியோவினை பாருங்கள்.

மற்றும் ஒரு வீடியோ தொகுப்பு-

முகத்தில் உள்ள சின்ன சின்ன குறைபாடுகளை இதில் போக்கிவிடலாம்.அப்புறம் திரைப்பட நடிகர் தண்டபாணி முகத்தை சரிசெய்யலாமா என கேட்டுவிடாதீர்கள்.போட்டோஸ்டுடியோ வைத்துள்ள -வைக்கப்போகும் நண்பர்களுக்கு உபயோகமான சாப்ட்வேர் இது. டிரையல் பாருங்கள் .கருத்துக்களை கூறுங்கள்.


வாழ்க வளமுடன்.
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்-கம்யூட்டரில் உபயோகிக்கும் நேரத்தை செட்செய்ய

குழந்தைகள் ஆசைப்படுகின்றது என்று கம்யூ்ட்டர் வாங்கி கொடுத்துவிடுவோம். ஆரம்பத்தில் ஆசை தீர விளையாடுவார்கள் விடுமுறை நாட்களில் விளையாடினால் சரி....ஆனால் பள்ளி செல்லும் நாட்களில் பாடங்கள் படிக்காமல் கம்யூட்டரிலேயே விளையாடிகொண்டிருந்தால் படிப்பு என்ன ஆவது? நாம் வீட்டில இருந்தால் அவர்களை கட்டுப்படுத்தலாம். ஆனால் வேலை விஷயமாக வெளியில் செல்லும் சமயம் குழந்தைகள் படிக்கின்றார்களா ? கம்யூ்ட்டரில் விளையாடுகின்றாரகளா ? என நமக்கு தெரியாது. அவர்கள் பள்ளியில் இருந்து வந்ததும் அரை மணி நேரமோ - அல்லது ஒரு மணி நேரமோ கம்யூ்ட்டரில் விளையாடும் மாறு நேரம் செட்செய்துவிடலாம். குறிப்பிட்ட நேரம் விளையாடி முடித்ததும கம்யூ்ட்டர் ஆப் ஆகிவிடும்.3 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன ஆகும்.
இதில் உள்ள டைம் செட்யூல் கிளிக் செய்ய டைம் விண்டோ ஓப்பன ஆகும். இதில் அப்போதைய நேரம் டைம் டெபிளில் தெரியும்.
நேரம் செட் செய்ததும் அந்த இடம் சிகப்பு மார்க்குடன் அமைந்துவிடும்.
மொத்தம் செட்செய்த நேரத்தை அதில் உள்ள யூசர் டைம் இன்போ வில் அறிந்துகொள்ளலாம்.
தேவையான போல்டர்களையும மறைத்து வைக்கலாம். 
குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் ஏதும் இலலையென்றால் கூடுதலாக உபயோகிக்கும் நேரத்தை கூட்டிககொள்ளலாம்.
கீழ்கண்ட விண்டோவில் உங்களுக்கு எளிதில் புரியும்.
அதிகரிக்கும் நேரத்தையும் எளிதில் செட்செய்துகொள்ளலாம்.
தேவையை பொருத்து டைம் செட் செய்து கொள்ளலாம்.மொத்தமாக ஒரு வாரத்திற்கான டைமும் செட்செய்துகொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...