Thursday, December 9, 2010

வேலன்-போட்டோஷாப் - போட்டோக்களில் ரிப்ளக்ஷன் கொண்டுவர

போட்டோக்களில் பிரதிபலிப்பை பார்த்திருப்பீர்கள். கண்ணாடியில் அழகான பிரதிபலிப்பை காண்பீர்கள்.அந்தமாதிரியான பிரதிபலிப்பை போட்டோவில் எப்படி கொண்டுவருவது என்று இன்று பார்க்கலாம். இதனை ஆக்ஷன் டூல் மூலம் கொண்டு வரலாம். 30 கே.பி. கொண்ட ஆக்ஷன் டூலை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.ஆக்ஷன் டூல் மூலம் டிசைன்செய்த படத்தை கீழே பாருங்கள்.
சாதாரண படம் கீழே உள்ளது. அதை எவ்வாறு மாறிஉள்ளது என்று பாருங்கள்.
மாற்றியபின்வந்துள்ள படம் கீழே-
 போட்டோஷாப்பின் மூலம் ஆக்ஷன் டூலை கொண்டுவந்துவிடுங்கள். ஆக்ஷன் டூலில் இரண்டு வகைகள் உள்ளது. அதில் முதல்வகையை தேர்வு செய்து படத்தை கிளிக் செய்யுங்கள். அனைத்துக்கும் ஒ.கே. தாருங்கள்.
வேண்டிய எழுத்துக்களை சேர்க்க வரும் விண்டோவிடல் தேவையான வார்த்தைகளை தட்டச்சு செய்யுங்கள் கீழே உள்ள விண்டோவினை பாருஙகள்.
வரும வார்த்தைகளை மூவ் டூல் மூலம்தேவையான இடத்திற்கு நகர்த்தி வைத்துக்கொள்ளுங்கள்.அனைத்து பணிகளும் முடிந்ததும வந்துள்ள படம் கீழே-
வேண்டிய புகைப்படங்களையும் வேண்டிய வார்த்தைகளையும் அமைத்து புகைப்டத்தை மேலும் அழகாக்கலாம். வெறும் பெயரை மட்டும் இதைப்போல ரிப்ளக்ஷனாக உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

17 comments:

  1. அருமை சார் மீண்டும் போட்டாஷாப் பாடம்...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  2. போட்டாவுல இருக்கறது ஜூனியர் வேலனா, செம கலக்கலா போஸ் கொடுக்கறாரு அவர நலம் விசாரித்ததா சொல்லுங்க சார்...

    நன்றி

    ReplyDelete
  3. முஹம்மது நியாஜ்December 9, 2010 at 11:41 AM

    திரு வேலன் அவர்களுக்கு
    நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷாப் பாடம். நீண்ட நாளாக இல்லை ஆனாலும் இது நிறைவான பாடம்.
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  4. முஹம்மது நியாஜ்December 9, 2010 at 7:09 PM

    திரு வேலன் அவர்களுக்கு
    போட்டோ ஷாப் பற்றிய சந்தேகங்கள்

    1.படத்தின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து வேறு இடத்தில் பேஸ்ட் செய்யும் போது நமக்கு தேவைப்படும் சைஸ்யில் எப்படி பேஸ்ட் செய்வது அல்லது Adjust செய்வது
    (சில சமயங்களில் மிக பெரிதாக வருகின்றது)?

    2.சில Tools நாம் பயன் படுத்தும் போது அதில் நீண்ட நாட்களுக்கு முன் நாம் பயன்படுத்திய பழைய Tools தான் வருகின்றது அதனை எப்படி நீக்குவது?

    3.ஒரு புதிய Page திறக்கும் போது கட்டம் கட்டம் ஆக வருகின்றது Plain ஆக வருவதில்லை Plain ஆக வருவதற்க்கு என்ன செய்ய வேண்டும்?

    தயவு செய்து விளக்கமளிக்க வேண்டுகின்றேன்.

    அன்புடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  5. பயன்படுத்தி பார்த்தேன் அருமையாக உள்ளது நன்றிகள்

    ReplyDelete
  6. மீண்டும் ஒருமுறை போட்டோஷாப் பற்றிய பதிவு.. பயனளிக்கும் வகையில் உள்ளது..

    நன்றி! வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. மாணவன் கூறியது...
    அருமை சார் மீண்டும் போட்டாஷாப் பாடம்...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

    வாழ்க வளமுடன்
    ஃஃ

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிம்பு சார்..
    வாழ்கவளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  8. மாணவன் கூறியது...
    போட்டாவுல இருக்கறது ஜூனியர் வேலனா, செம கலக்கலா போஸ் கொடுக்கறாரு அவர நலம் விசாரித்ததா சொல்லுங்க சார்...

    நன்றி

    ஜீனியர் வேலன் பெயர் ராஜராஜன்...அவசியம் சொல்கின்றேன் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  9. வெறும்பய கூறியது...
    அருமைஃ


    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  10. Chitra கூறியது...
    Super tip. Thank you.ஃ

    நன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  11. முஹம்மது நியாஜ் கூறியது...
    திரு வேலன் அவர்களுக்கு
    நீண்ட நாட்களுக்கு பிறகு போட்டோ ஷாப் பாடம். நீண்ட நாளாக இல்லை ஆனாலும் இது நிறைவான பாடம்.
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்


    நன்றி முஹம்மது நியாஜ் சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. TAMIL MUTTAM கூறியது...
    thanksஃ

    நன்றி நண்பரே...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. திரு வேலன் அவர்களுக்கு
    போட்டோ ஷாப் பற்றிய சந்தேகங்கள்

    1.படத்தின் ஒரு பகுதியை மட்டும் கட் செய்து வேறு இடத்தில் பேஸ்ட் செய்யும் போது நமக்கு தேவைப்படும் சைஸ்யில் எப்படி பேஸ்ட் செய்வது அல்லது Adjust செய்வது
    (சில சமயங்களில் மிக பெரிதாக வருகின்றது)?ஃஃ//

    இரண்டு படங்களின் ரேசுலேஷன்களும் ஒரே அளவாக இருந்தால் இந்த பிரச்சனை வராது...

    2.சில Tools நாம் பயன் படுத்தும் போது அதில் நீண்ட நாட்களுக்கு முன் நாம் பயன்படுத்திய பழைய Tools தான் வருகின்றது அதனை எப்படி நீக்குவது?
    //

    போ்ட்டோஷாப்பில் நீங்கள் கடைசியாக பயன்படுத்திய டூல்தான் மீண்டும் நீங்கள் போட்டோஷாப் திறக்கும்போது வரும்...நீங்கள் பணிபுரிந்து போட்டோஷாப் மூடும் சமயம் மார்க்யு டூல் வைத்து முடிவிடவும்.சரியாக வரும்.

    3.ஒரு புதிய Page திறக்கும் போது கட்டம் கட்டம் ஆக வருகின்றது Plain ஆக வருவதில்லை Plain ஆக வருவதற்க்கு என்ன செய்ய வேண்டும்?
    //

    நீங்கள் புதிய பக்கம் திறக்கும் சமயம் வரும் விண்டோவில் அதில் உள்ள Backround Contends என்பதில் உள்ள Transparent என்பதை White என மாறறிவிடுங்கள் சரியாக வரும்...

    நேற்று பணிகாரணமாக உடன்பதில் அளிக்க முடியவில்லை..தாமதத்திற்கு மன்னிக்கவும்.
    தங்கள் வருகைக்கும கருததுகு்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. jasmin கூறியது...
    பயன்படுத்தி பார்த்தேன் அருமையாக உள்ளது நன்றிகள்


    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. தங்கம்பழனி கூறியது...
    மீண்டும் ஒருமுறை போட்டோஷாப் பற்றிய பதிவு.. பயனளிக்கும் வகையில் உள்ளது..

    நன்றி! வாழ்த்துக்கள்..!


    நன்றி தங்கம் பழனி சார்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete