Friday, December 17, 2010

வேலன்-ஆங்கிலத்தில் சுலபமாக தட்டச்சு செய்ய


எளிதாக தட்டச்சு செய்ய -டைப் ரைட்டிங் கற்று கொள் என்று சொன்னால் பசங்கள் கேட்கமாட்டார்கள். ஆனால் விளையாட சொன்னால் நாள்முழுவதும் விளையாடிகொண்டே இருப்பார்கள். விளையாட்டுடன் தட்டச்சும் பழகினால் விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு...டைப்ரைட்டிங்கும் கற்றுகொண்டது போல் ஆச்சு...இந்த சாப்ட்வேரில் எளிய முறையில் தட்டச்சு சொல்லி தருகின்றார்கள்.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
முதலில சுலபமானதையே தேர்வு செய்துகொள்ளுங்கள். இதில் ஒவ்வொரு எழுத்தாக மீன் உருவத்தில் மேலே இருந்து கீழே வரும். நீங்கள் கீ போர்டில் கையை சரியான பொஷிசனில் வைத்துக்கொண்டு வரும் எழுத்துக்கு ஏற்ப கீ போட்டில் தட்டச்சு செய்யவேண்டும். சரியாக தட்டச்சு செய்தால் பென்குயின் அந்த எழுத்துடைய மீனை சாப்பிட்டுவிடும். தவறாக இருந்தால் மீன் கீழே விழுந்துவிடும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
தட்டச்சு செய்வதின் அடுத்த லெவல் இது. இதில் எழுத்துக்கு பதில் சின்ன சின்ன வார்த்தைகளாக வரும் .வார்ததைகளை சரியாக தட்டச்சு செய்யவேண்டும்.
இறுதி நிலை இது. இதிலும நீஙகள் வார்த்தைகளை சரியாக தட்டச்சு செய்யவேணடும்.
ஆரம்பத்தில் சுலபமானதை தேர்வு செய்துகொண்டு பிறகு படிப்படியாக கடினமானதற்கு செல்லுங்கள். இதை நான்கு நாட்கள் நீங்கள் பழகினால் ஆங்கில் தட்டச்சு உங்களுக்கு சுலபமாகிவிடும். பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்.
வேலன்.

பின்குறிப்பு- வாழ்த்தலாம் வாங்க பதிவில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் வே.பிரியா அவர்களின் தந்தை உங்களுக்கு நன்கு தெரிந்தவர். யார் என்று கேட்கின்றீர்களா..? அட நான்தாங்க அது.என்னுடைய மகள்தாங்க அவர்.

திருக்கழுக்குன்றத்தில் 13.12.2010 அன்று நடைபெற்ற 1008 மகா சங்காபிஷேக வீடியோ தொகுப்பினை காண இங்கு கிளிக் செய்யவும்.வீடியோவினை பாரு்ங்கள். இறைவன் அருள்பெறுங்கள்.

22 comments:

  1. முஹம்மது நியாஜ்December 17, 2010 at 7:20 AM

    ப்ரியாவிற்க்கு எனது
    பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பெரு வாழ்வு வாழ வாத்துகின்றேன்.
    பிரியமுடன்
    முஹம்மது நியாஜ்

    ReplyDelete
  2. //விளையாட்டுடன் தட்டச்சும் பழகினால் விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு...டைப்ரைட்டிங்கும் கற்றுகொண்டது போல் ஆச்சு...இந்த சாப்ட்வேரில் எளிய முறையில் தட்டச்சு சொல்லி தருகின்றார்கள்//

    விளையாட்டுடன் தட்டச்சு பழக மென்பொருளா அருமை சார்,

    பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி

    தொடரட்டும் பணி...

    ReplyDelete
  3. உங்கள் செல்ல மகள் வே.பிரியாவிற்கு எனது இதயகனிந்த நல்வாழ்த்துக்கள் சார் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இறைவனின் பிரார்த்தனையுடன் எனது வாழ்த்துக்களும்...

    ReplyDelete
  4. நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்.
    நான் பசங்க கிட்டே கொடுத்துட்டேன் .

    ReplyDelete
  5. ப்ரியாவிற்க்கு எனது
    பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!

    ReplyDelete
  6. மிக்க நன்றி வேலன் அவர்களே..! நல்ல பயனுள்ள சாப்ட்வேர்..! பிரியாவிற்கு பிறந்த வாழ்த்துக்கள்..!

    ReplyDelete
  7. அய்யா மிக்க பயனுள்ள மென்பொருள்
    நன்றி
    வணக்கம்

    ReplyDelete
  8. ப்ரியாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...தட்டச்சு சாஃப்ட்வேர் நல்ல அறிமுகம்..

    --செங்கோவி

    ReplyDelete
  9. தேவையான மென்பொருள்

    நன்றி

    ReplyDelete
  10. எனக்கு தேவையான மென்பொருள்,
    வாழ்த்துக்கள் சார்.

    ReplyDelete
  11. முஹம்மது நியாஜ் கூறியது...
    ப்ரியாவிற்க்கு எனது
    பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் எல்லா வளமும் நலமும் பெற்று பெரு வாழ்வு வாழ வாத்துகின்றேன்.
    பிரியமுடன்
    முஹம்மது நியாஜ்
    //

    தங்கள் வ்ருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  12. மாணவன் கூறியது...
    //விளையாட்டுடன் தட்டச்சும் பழகினால் விளையாட்டுக்கு விளையாட்டும் ஆச்சு...டைப்ரைட்டிங்கும் கற்றுகொண்டது போல் ஆச்சு...இந்த சாப்ட்வேரில் எளிய முறையில் தட்டச்சு சொல்லி தருகின்றார்கள்//

    விளையாட்டுடன் தட்டச்சு பழக மென்பொருளா அருமை சார்,

    பயனுள்ள மென்பொருளை பகிர்ந்தமைக்கு நன்றி

    தொடரட்டும் பணி...
    //

    நன்றி சிம்பு சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  13. மாணவன் கூறியது...
    உங்கள் செல்ல மகள் வே.பிரியாவிற்கு எனது இதயகனிந்த நல்வாழ்த்துக்கள் சார் வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இறைவனின் பிரார்த்தனையுடன் எனது வாழ்த்துக்களும்...


    வாழ்த்துக்கு நன்றி சிம்பு சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  14. கக்கு - மாணிக்கம் கூறியது...
    நல்லாத்தான் இருக்கு மாப்ஸ்.
    நான் பசங்க கிட்டே கொடுத்துட்டேன் .ஃ

    நன்றி மாம்ஸ்...வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  15. அன்புடன் அருணா கூறியது...
    ப்ரியாவிற்க்கு எனது
    பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் பூங்கொத்தோடு!
    ஃஃ

    தங்கள் பூங்கொத்து வாழ்த்து என்றும் அவருக்கு(எனது மகளுக்கு) வேண்டும் சகோதரி.தங்கள் வருகைக்கும் கருததுக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  16. தங்கம்பழனி கூறியது...
    மிக்க நன்றி வேலன் அவர்களே..! நல்ல பயனுள்ள சாப்ட்வேர்..! பிரியாவிற்கு பிறந்த வாழ்த்துக்கள்..!
    ஃஃ

    நன்றி தங்கம் பழனி சார்.தங்கள் படமும் அருமை..வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  17. dharumaidasan கூறியது...
    அய்யா மிக்க பயனுள்ள மென்பொருள்
    நன்றி
    வணக்கம்
    ஃஃ

    அட...தமிழில் தட்டச்சு செய்ய கற்றுகொண்டிர்களா?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  18. எஸ்.கே கூறியது...
    அருமை சார்ஃஃ

    நன்றி எஸ்.கே. சார்...
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  19. செங்கோவி கூறியது...
    ப்ரியாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்...தட்டச்சு சாஃப்ட்வேர் நல்ல அறிமுகம்..

    --செங்கோவி

    நன்றி செங்கோவி சார்....
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  20. ஆ.ஞானசேகரன் கூறியது...
    தேவையான மென்பொருள்

    நன்றிஃஃ

    நன்றி ஞர்னசேகரன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete
  21. மச்சவல்லவன் கூறியது...
    எனக்கு தேவையான மென்பொருள்,
    வாழ்த்துக்கள் சார்ஃஃ

    நன்றி மச்சவல்லவன் சார்..
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    ReplyDelete