Tuesday, August 30, 2011

வேலன்-ரம்ஸான் வாழ்த்துக்கள்


அன்பு சகோதர சகோதரிகளே- இனிய ரம்ஸான் நல் வாழ்த்துக்கள்.புதியவர்களுக்காக எனது பழைய பதிவுகள் இரண்டினை உங்களுக்காக இங்கே பதிவிடுகின்றேன்.


எனது பதிவிற்கு இஸ்லாமிய சகோதர - சகோதரிகள் அதிகம். அவர்களுக்கான ஏதாவது செய்யலாம் என தேடும் சமயம் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. ஒவ்வோரு இஸ்லாமியரும் 5 வேளை தொழுகை கட்டாயம்.இந்த சாப்ட்வேர் நீங்கள் எந்த நாட்டில் எந்த இடத்தில் இருந்தாலும் உங்கள் தொழுகைக்கானmosque நேரத்தை அறிவிக்கின்றது. இதிலேயே kuran குர்ஆன் வசனங்கள்(தொழுகை பாடல்களும்)உள்ளது. இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்.நீங்கள் இதை உங்கள் கம்யூட்டரில் இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில குரானை செட் செய்து கொள்ளலாம்.


செலக்ட் சுராஸ் செய்ய:-


உங்கள் நாட்டினை -நீங்கள் இருக்கும இடத்தினை தேர்வு செய்து கொள்ளலாம்.


தொழுகைக்கான நேரத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.
நீங்கள் எந்த இடத்தில இருந்தாலும் QUIBLAH DIRECTION  இருக்கும் திசையை காட்டும்.




மேலும் விவரம் அறிய கீழே கொடுத்துள்ள விவரம் பார்த்துக்கொள்ளவும்.


Here are some key features of Salaat Time :
  • Select from a variety of included athans or use your own athan for each prayer.
  • Set different athans at different prayer times or use the random feature.
  • Selection of different discreet visual alerts including balloon tips and tray flash.
  • Qiblah direction in graphical compass-like format.
  • Time until next prayer with a dynamic graphical interface for time-remaining.
  • Daily, monthly and yearly prayer time views.
  • Perpetual side-by-side monthly Hijri/Gregorian calendar with full forward/backward navigation.
  • Important Islamic dates highlighted in calendars.
  • Moon phases in Hijri and Gregorian calendars.
  • Transform Hijri dates to Gregorian and vice-versa.
  • Export and print monthly prayer time calendars in both Hijri and/or Gregorian formats.
  • Listen to the Quran from a selection of Suras and Ayaats.
  • Optional before and/or after reminders using audio and/or visual alerts.
  • Collect your Athans/Quran Recitations/Images in Custom Folder to be randomly selected.
  • Select your location from a huge database of included cities.
  • Automatic daylight savings time adjustment of all prayer times.
  • Change the color and appearance of the daily clocks and calendars to suit your own tastes.
  • Display a random Islamic image at each prayer time or use your own.
  • Multilingual module which lets you select from English, French or by loading a language file.
  • All prayer time calculation methods available. Optional adjustment of calculated times.
  • Extreme geographical locations of cities close to the poles are also calculated.
  • Dynamic Data Exchange Server support. Rich DDE Interface.
இஸ்லாமிய மதம் பற்றி முழுவதுமாக தெரியாததால் எனக்கு தெரிந்தவரை பதிவிட்டுள்ளேன். பிழை இருப்பின் மன்னிக்கவும்.

---------------------------------------------------------------------------------
மற்றும் ஒரு பதிவு -.

இஸ்லாமிய நண்பர்களின் ஈத் 

பெருநாள் இன்று.. அவர்களுக்கு ஈத் பெருநாள் பரிசாக
 இஸ்லாமியர்களின் புனித குரான் பற்றிய இணையதளத்தை
 உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன். அத்துடன் அதன்
 சிறு விளக்கமும்படங்களும் உங்களின் பார்வைக்காக
 இணைத்து இருக்கின்றேன் நீங்களும் இந்த வெப்தளத்திற்க்கு
 சென்று பார்த்துவிட்டு இந்த இணையதளத்தை
 எனது ஈத் பெருநாள் பரிசாக பெற்றுக்கொள்ளுங்கள்.
 மேலும் உங்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு
 ஈத் பெருநாள் பரிசாக இந்த வெப்தளத்தை
அறிமுகம்செய்யுமாறுகேட்டுக்கொள்கின்றேன்.  
மதங்களை கடந்து மனித நேயம் வளர வாழ்த்துக்கள்.
இந்த தளத்தை பார்வையிடஇங்கு கிளிக் செய்யவும்.www.tanzil.info  

இந்த இனணயதளம் இஸ்லாமியர்களுக்கு மிக
 பயனுள்ளது. திருகுராஅனை கற்று கொள்பவர்களுக்கு
 மிக மிக இந்த தளம் பயனுள்ளது. நீங்கள் கிளிக்
 செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் 
ஆகும்.பயனுள்ளது
இதன் மேல்புறம் பார்த்தீர்களேயானால் உங்களுக்கு கீழு்கண்ட விண்டோதெரியும;.தேவையானமொழியைத்தேர்வு செய்துகொள்ளலாம்
இதில் Search பகுதிக்கு சென்று நமக்கு தேவையானவற்றை 
எழுதுக்களின்மூலம்  தேவையான ஆயத்துகளை தேடிக்
கொள்ளலாம்அரபி டைப்தெரியவில்லை என்றால் 
அருகில் இருக்கும் Roots  மூலமாக  அரபி
 எழுதுக்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.

Browse பகுதியில் நமக்கு தேவையான சூராக்கள்,ஆயத்துக்கள்,
பக்கங்களை தேடிக்கொள்ளலாம் மட்டுமின்றி அருகில் காணப்படும்
 (-),(+)மூலமாக எழுத்துருக்களை பெரியதாகசிறியதாக அமைத்துக்
கொள்ளலாம்,Recitation பகுதியில் நமக்கு பிடித்தமான ஓதுபவர்களின் பெயர்களைதேர்ந்தெடுக்கொள்ளலாம் அதன் அருகில்
 காண்ப்படும் பெருக்கல் குறிஎன்பதுஒதுப்படுகின்ற வரிகளை  
ஒருதடவைகேட்க நினைத்தால் பெருக்க்ல் குறியை ஒரு முறையும்
இரண்டு அல்லது மூன்று தடவை கேட்க நினைப்பவர்கள் 
விருப்பதிற்கேற்ப அதில் கிளிக் செய்து தேர்வு செய்துகொள்ளலாம்

Translation பகுதியில் சென்று தமிழை தேர்வு செய்து 
மேலே காணப்படும்Quran பகுதியில் கிளிக் செய்தால் 
ஒதப்படும் ஆயத்துகளின் மேல் Mouse  வைத்தால் 
அதன் விளக்கம் தமிழில் தெரியும்,  மேலே
 காணப்படும்Translation பகுதியில் கிளிக் செய்தால்
 குரான் முழுவதையும் தமிழில்காணலாம்.
Translation பகுதியில் கீழ் காணப்படும் 
Fixed Translation Box என்பது ஓதுகின்ற 
போது தானாக அதன் விளக்கம் அருகில் தெரியும்
Translation on Mouse Over
 என்பது ஓதப்படுகின்ற போது  Mouse   
ஆயத்துகளின்மேலே வைத்தால் தமிழில் விளக்கம் 
தெரியும்


Quran என்ற பகுதிக்கு சென்று அரபி எழுத்துகளை
தேர்ந்தெடுத்துக்கொள்ளாலம்





ஆங்கிலத்திலும் நீங்கள் விளக்கங்கள் பெறலாம்.



Display Options  சென்றும் எழுத்துருக்களின்அளவு 
மற்றும் Align  செய்து கொள்ளலாம்முயற்சி 
செய்து பாருங்கள்நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.

மதம் சம்பந்தமான பதிவு என்பதால் இதில்
 ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகின்றேன்.

வாழ்க வளமுடன்.
வேலன்


தளத்தை அறிமுகம் செய்த நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களுக்கு நன்றி..

Sunday, August 28, 2011

வேலன்-போட்டோஷாப் -விதவிதமான ஸ்டைல் எழுத்துக்கள்-2

சாதாரண எழுத்தையே ஸ்டைல் எழுத்தாக எழுதினால் பார்க்க மிக அழகாக இருக்கும். போட்டோஷாப்பில் ஸ்டைல் எழுத்தின் மூலம் விதவிதமான டிசைன்கள் கொண்டுவரலாம். 33 ஸ்டைல் எழுத்துக்களை இங்கு இணைத்துள்ளேன். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால்செய்த பின் போட்டோஷாப் திறந்துகொள்ளுங்கள்.தேவையான எழுத்தினை தட்டச்சு செய்துகொள்ளுங்கள். பின்னர் தேவையான ஸ்டைலை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்டவாறு உங்கள் எழுத்துக்கள் மாறிவிடும்.
எனது முந்தைய போட்டோஷாப் -ஸ்டைல் எழுத்துக்களை பார்க்காதவர்கள் இங்கு கிளிக் செய்யவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Saturday, August 27, 2011

வேலன்-ஆறு வகையான சீட்டுகட்டு விளையாட்டு

கட்டுமஸ்தான ஆளை சிக்ஸ்பேக் என்று சொல்லுவார்கள்.சீட்டு கட்டில் சிக்ஸ்பேக் என்று ஒரு விளையாட்டு உள்ளது. 6 வகையான சீட்டுகட்டு விளையாட்டு்.254 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள ஆப்ஷனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையானதை தேர்வு செய்துகொள்ளவும்.
இதில் கீழே 6 சீட்டுக்கள் இருக்கும். மேலே நான்கு பாக்ஸ்கள் இருக்கும். ஏஸ்ஸில் ஆரம்பித்து ஒவ்வொரு சீட்டாக வரிசைபடி சேர்த்துவரவேண்டும்.
அனைத்துசீட்டுக்களையும் சேர்ததுவிட்டால் வெற்றிபெற்றவர்களாவீர்கள்.இது பெரியவர்களுக்கான விளையாட்டாதலால் குழந்தைகளிடம் சொல்லவேண்டாம். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.


Friday, August 26, 2011

வேலன்- 80 நாளில் உலகை அறிந்துகொள்ள

உலகம் சுற்றும் வாலிபன் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இது உலகை 80 நாளில் சுற்றி வருவதை பற்றியது.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாட்டினை பற்றி விவரங்கள் அறிந்துகொள்ளலாம்.ஒரு நாட்டினை அறிந்துகொண்டதும் அடுத்த நாடு அதனைப்ற்றிய விவரம் என போய்கொண்டே இருக்கும்.45 எம்.பி. கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்ப்ன ஆகும்.
உங்களுக்கான வண்டி வந்துவிட்டது. இனி தேவையான செட்டிங்ஸ் செய்து பின்னர் பிளே அழுத்துங்கள்.
இதில் உள்ள பட்டன்களின் நிறங்களை ஒரே வரிசையில் சேர்க்கவேண்டும். தவிர இதில் மறைந்துள்ள பொருளையும் மீட்க வேண்டும்.குறைந்த அளவு நேரமே பயன்படுத்தவேண்டும்.
விளையாடிப்பாருங்கள். எவ்வளவு நாளில் நீங்கள் உலகை சுற்றி வருகிறீர்கள் என காணலாம்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Thursday, August 25, 2011

வேலன்-இலவச ஸ்டாப் வாட்ச்.

ஒரு பணியை குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதில ஆகட்டும். அல்லது ஒரு பணியை முடிக்க ஆகும் நேரத்தை கணக்கிட ஸ்டாப் வாட்ச் நமக்கு பெரிதும் பயன்படும். இன்றைய செல்போன்களில் ஸ்டாப்வாட்ச்சை கூடுதல் வசதியாக இணைத்துள்ளார்கள். கம்யூட்டரிலும் நாம் அந்த வசதியை பெறலாம். 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இஙகு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் அன்றைய தேதி -நேரம் -வினாடி ஒடிக்கொண்டு இருக்கும். இதன் கீழே உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்தால் கெடிகாரம் ஒட ஆரம்பிக்கும். தேவையான பணி முடிந்ததும் நிறுத்தி விடலாம்.
கூடுதல் வசதியாக இதனை சேமித்து வைத்தும் - பிரிண்ட் எடுத்தும் பயன்படுத்தலாம். அவசரத்திற்கு உங்களுக்கு இது பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Wednesday, August 24, 2011

வேலன்-அறைகளை அழகுப்படுத்த(Room Arranger)

சிலர் வீடுகளில் வைத்துள்ள பொருட்கள் பார்க்க அழகாக இருக்கும். சிலர் வீடுகளில் பொருட்களை கண்ட இடத்தில் போட்டு வைத்திருப்பார்கள்.நண்பர் ஒருவர் வீட்டில் இறைந்துள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தக்கூடாதா என கேட்டதற்கு வீடு இப்படி இருந்தால்தான் வீடு மாதிரி இருக்கும். இல்லையென்றால் மியூசியம் போல் இருக்கும்.என்றார்..கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் நடைமுறைக்கு உதவாதல்லவா? புதிய வீடு கட்டினாலும் -வீடு மாறி குடித்தனம் சென்றாலும் தலைவலி பிரச்சனை வீட்டில் உள்ள பொருட்களை ஒழுங்குபடுத்தி வைப்பதுதான். நாம் பொருட்களை வைக்கும் அழகிலேயே வீடு மேலும் அழகாகும். உங்களுக்கு அதற்கு உதவ இந்த சின்ன சாப்ட்வேர உதவும்.
 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
புதிய ப்ராஜக்ட் ஆக நீங்கள் உங்கள அறையின் அளவினை தேர்வு செய்யுங்கள.அளவு இன்ச் அல்லது மீட்டரில் வைத்துக்கொள்ளுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதன் வலதுபுறம் உள்ள விண்டோவில் பாருங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் இருக்கும்.
அதில் உள்ள ஒவ்வொரு ஆப்ஜக்ட்டையும் தேர்வு செய்து பாருங்கள்.

நான் வீட்டுக்கு தேவைப்படும் Accessories தேர்வுசெய்துள்ளேன். அதன் படங்கள் கீழே உள்ளது. தேவையான படத்தினை தேர்வு செய்து கர்சர் மூலம் (டிராக் & டிராப்) செய்து தேவையான இடத்தில் வைக்கவும். 
இப்போது கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். தரையின் நிறத்தையும் -சுவரின் நிறத்தையும்நாம் விருப்ப படி தேர்வு செய்துகொள்ளலாம்.
இதற்குமேலும் உங்களுக்கு சந்தேகம் இருப்பின் விளக்கமாக அறிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்.வீட்டினை அழகுப்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.