வேலன்-போட்டோஷாப்-விதவிதமான ஸ்டைல் எழுத்துக்கள்.

 விதவிதமான டிசைன்களில் நாம் எழுத்துக்கள் கொண்டுவந்தாலும் ரெடிமேடாக கிடைக்கும் ஸ்டைல்களே அழகு அதிகம். போட்டோஷாப்பில் பயன்படும் விதவிதமான ஸ்டைல்களில் சுமார் 15 ஸ்டைல்கள் இங்கே இணைத்துள்ளேன்.1 எம்.பிக்கும் குறைவான கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.போட்டோஷாப்பினை திறந்துகொள்ளவும். வேண்டிய அளவினில் புதிய விண்டோவினை திறந்துகொள்ளவும்.தேவையான வார்த்தையை தட்டச்சு செய்துகொள்ளவும். இப்போது கீபோர்டில் F9 அழுத்தவும் வரும் விண்டோவில் ஸ்டைல் என்பதனை தேர்வு செய்யவும். உங்களுக்கு ஸ்டைல்கள் நிறைய தோன்றும். இப்போது வலதுபக்க மூலையில் உள்ள சிறிய அம்புகுறியை கிளிக் செய்யவும்.தோன்றும் பாப்அப்மெனுவில் Load Style கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் கணிணியில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள ஸ்டைல்கள் ஒவ்வொன்றாக தேர்வு செய்யுங்கள்.இப்போது மீண்டும் வார்த்தையை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்தமான ஸ்டைலை கிளிக் செய்யுங்கள். அவ்வளவுதான ....நொடியில் ஸ்டைலுக்கு ஏற்ப உங்கள் எழுத்துக்ள் மாறிவிடும்.சில ஸ்டைல்லான பெயர்கள் கீழே-







நீங்களும் பெயர்களை தட்டச்சு செய்து விதவிதமாக ஸ்லைடல் செய்துகொள்ளுங்கள. திருமண டிசைன் செய்யும் ஸ்டுடியோ நண்பர்களுக்கு இது பெருமளவில் உதவும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

6 comments:

மாய உலகம் said...

உங்களால் போட்டோ ஷாப் கற்று மேலும் மேலும் மெருகேரிக்கொண்டிருக்கிறேன்... நன்றி

மாய உலகம் said...

உங்களது பதிவை காப்பி செய்து வைத்து நேரம் கிடைக்கும் பொழுது பயிற்சி எடுத்துக்கொள்கிறேன்....

ஸ்டைலுக்கு ஏற்ப எழுத்துக்களை மாற்றும் முறையை சொன்னமைக்கு நன்றிண்ணா

மச்சவல்லவன் said...

நீன்ட இடைவெளிக்கு பிறகு தற்போது போட்டோஷாப் பதிவு.
வாழ்த்துக்கள்.

வேலன். said...

மாய உலகம் said...
உங்களால் போட்டோ ஷாப் கற்று மேலும் மேலும் மெருகேரிக்கொண்டிருக்கிறேன்... நன்றி
ஃஃ

மாய உலகம் said...
உங்களது பதிவை காப்பி செய்து வைத்து நேரம் கிடைக்கும் பொழுது பயிற்சி எடுத்துக்கொள்கிறேன்....

ஸ்டைலுக்கு ஏற்ப எழுத்துக்களை மாற்றும் முறையை சொன்னமைக்கு நன்றிண்ணா
ஃஃ

தங்கள் வருகைக்கும் கருத்துகு்கும் நன்றி மாய உலக நண்பரே...
வாழக் வளமுடன்.
வேலன்.

வேலன். said...

மச்சவல்லவன் said...
நீன்ட இடைவெளிக்கு பிறகு தற்போது போட்டோஷாப் பதிவு.
வாழ்த்துக்கள்.
//

நன்றி மச்சவல்லவன் சார்..
வாழ்க வளமுடன்.
வேலன்.

positivekarthick said...

வணக்கம் அண்ணா ! என்னுடைய idm காலாவதி ஆகி விட்டது. ரிமூவ் பண்ணி புதுசா தரவிறக்கம் செய்தாலும் இன்ஸ்டால் ஆக மாட்டேன் என்கிறது.ரிஜிஸ்டர் செய்ய சொல்கிறது.எனக்கு ஒன்றும் புரிய வில்லை.நானோ கம்ப்யூட்டருக்கு புதியவன்.நண்பர்கள் கிராக்க் செய் என்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை.இந்த சமயத்தில் உங்கள் நினைவு வந்தது.எதையும் விளக்கமாக சொல்லி கொடுக்கும் நீங்கள் எனக்கு ஒரு நல்ல இலவச idm ஆதியில் இருந்து தெளிவாக சொல்லி குடுக்க முடியுமா ? உங்கள் பதிலுக்காக காட்டு இருக்கிறேன். நன்றி.

Related Posts Plugin for WordPress, Blogger...