Saturday, October 22, 2011

வேலன்:-எங்கள் தந்தைக்கு எங்களின் கண்ணீர் அஞ்சலி....



அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
வாழ்ந்த உங்களுக்கு எங்கள் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள்
மூச்சுகாற்று-
19.10.2011 -பிரியும்வரை-எங்கள் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு எங்கள் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கின்றோம்!

ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்கு
எங்கள் கண்ணீரை அஞ்சலியாக்குகின்றோம் .

நீங்கள் எங்களுக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல்,துன்பம் வரும்வேளையிலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் ,மற்றும்
அனேக விசயங்களை எங்கள் தோழனாய்
எங்கள் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த
தந்தை எனும்
எங்கள்  உயிர் தோழனை நாங்கள் இழந்து தவிக்கிறோம் .

காற்றில் கலந்த எங்கள் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகின்றோம் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தோம் !
ஏனென்றால் எங்கள் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும்
நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !

ஒளி நட்
த்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை எங்கள் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை
எங்கள் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது எங்கள் மனம்
எரிமலையாய் அக்னி
பிழம்பாய்
வெடித்து சிதறியது .எங்களை மன்னிப்பீர்களா தந்தையே !



அடுத்தவேளை உணவுக்கு  வழியில்லாமல் வந்தவருக்கு உதவிட இடம்கொடுத்த உத்தமரே.இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் இனப்பிறவிகள் அவர்கள் என்பது உங்களுக்குபுரியாதது ஏன்?
நல்லவர்களை இறைவன் கைவிடுவதில்லை....நீதி இறுதியில் வெல்லும்.உங்கள் ஆன்மா நிம்மதி அடையட்டும்.

வாழ்நாளில் நாங்கள் அறியாமல் தவறு செய்திருந்தால்
எங்களை மன்னிக்கவும் ,
எங்களை விட்டு உடலால் பிரிந்தாலும்
எங்கள் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வோம்.
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறோம்,,,,,,,,,,




அன்பு மகன்கள்.....
க.மூர்த்தி.
க.சரவணன்.
க.வேலன்.

72 comments:

  1. வருந்துகிறேன் சகோ!
    ஆன்மா நிம்மதி அடைய வேண்டுகிறேன்!

    ReplyDelete
  2. May the beautiful memories give you and family enough strength to move on!!!!! Heartfelt condolence....
    May his soul rest in peace..
    அப்பா...
    http://mahalingam.yolasite.com/blog.php

    ReplyDelete
  3. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். பெரியவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  4. வருந்துகிறேன் சகோ!
    ஆன்மா நிம்மதி அடைய வேண்டுகிறேன்!
    may his soul rest in peace..
    michael
    indian express
    tirunelveli

    ReplyDelete
  5. தங்கள் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.

    ReplyDelete
  6. அப்பாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன். தாங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..
    A.Gnanasekaran and family

    ReplyDelete
  7. ""நீங்கள் எங்களுக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
    நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
    உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
    நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல்,துன்பம் வரும்வேளையிலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் ,மற்றும்
    அனேக விசயங்களை எங்கள் தோழனாய் எங்கள் தோள்மீது
    கை போட்டு கற்றுகொடுத்த தந்தை எனும்
    எங்கள் உயிர் தோழனை நாங்கள் இழந்து தவிக்கிறோம் ""

    உலகில் தலை சிறந்த தந்தையாக வாழ்ந்து உடலால் பிறந்தாலும் உள்ளத்தால் என்றும் பிரியாமல் இனி நீங்கள் சுவாசிக்கும் மூச்சு காற்றில் வாழும் தந்தையின் ஆன்மா சாந்தியடையவும் ,அவரை உடலால் பிரிந்து வாடும் உங்கள் அனைவருக்கும் ஆறுதல் தர இறைவனை வேண்டுகிறேன்

    வருத்ததுடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  8. தங்களுக்கு வழிகாட்டியாக விளங்கிய தங்கள் தகப்பனாரின் பிரிவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

    ReplyDelete
  9. வருந்துகிறேன் சகோ....தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்..

    ReplyDelete
  10. அமரர் தஞ்சை ராமையாதாஸ் அவர்கள் எழுதி, அமரர் மாமா கே.வி.மகாதேவன் அவர்கள் இசையில் அண்ணன் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்ற தாய்க்குப்பின் தாரம் படத்தில் வரும் " தந்தையைப் போல் உலகிலே தெய்வம் உண்டோ....ஒரு மகனுக்கு சர்வமும் அவரென்றால் விந்தை உண்டோ.. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்..அவ்வையின் பொன்மொழி வீணா...ஆண்டவன் போலே நீதியைப்புகன்றாள் அனுபவமே இதுதானா ...உண்ணாமல் உறங்காமல் உயிரோடு மன்றாடி என் வாழ்வின் இன்பமே எதிர்பார்த்த தந்தை எங்கே....கண்ணிமை போலே என்னை வளர்த்தார்...கடமையை நான் மறவேனா..காரிருள் போலே பாழான சிதையில் கனலானார் விதிதானா.....தந்தை கனலானார் விதிதானா...." என்று வரும் பாடல் நான் தினமும் கண்ணுறங்கும் முன் கேட்கும் பாடல்....கேட்கும் போது ஒவ்வொரு முறையும் கண்ணீர் என் இமைகளைத் தாலாட்டும் ...என் தந்தை மறைந்து பதினாறு ஆண்டுகள் ஆகின்றன.........உங்கள் அப்பாவின் புகழ் என்றும் உங்கள் மனதில் நிலைத்திருக்கட்டும்...அவரின் ஆன்மா அமைதி அடையட்டும்....

    ReplyDelete
  11. அஸ்திவாரத்தை இழந்து தவிக்கும்
    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும்
    ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்
    கொள்கிறேன்.அவரின் ஆன்மா சாந்தி
    அடைய இறைவனை வேண்டுகிறேன்.

    ReplyDelete
  12. வருந்துகிறோம் நண்பரே... ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்...

    தமிழ்த்தோட்டம்
    www.tamilthottam.in

    ReplyDelete
  13. வருத்தங்கள் & ஆழ்ந்த அனுதாபங்கள்

    பெரியவரின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  14. வருந்துகிறேன் நண்பரே. தங்களின் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன். அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய பிராத்திப்போம்.

    தங்களின்
    ஈஸ்வரன்.

    ReplyDelete
  15. Dear Velan,
    Kindly accept my condolences.
    May God be with you during this testing time.May the soul of your dear dad merge with the Almighty.
    Sincerely yours,
    Ganpat

    ReplyDelete
  16. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். பெரியவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.rip

    ReplyDelete
  17. வருந்துகிறோம் நண்பரே... ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்...

    ReplyDelete
  18. வேலன் சார்,

    தங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  19. ஆழ்ந்த அனுதாபங்கள்... தந்தையாரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவரை உடலால் பிரிந்து வாடும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். ஆறுதல் தர இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  20. என் ஆழ்ந்த அனுதாபங்கள் சகோ.

    ReplyDelete
  21. ungal thanthai aathma saanthiyadaya iraivanai vendukirom ungalitkum engal aantha anuthabangal velan sir.

    ReplyDelete
  22. ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  23. தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  24. தகப்பனாரின் ஆத்மா சாந்தியடைடும்
    எனது அழ்ந்த அனுதாபங்கள்
    அன்புடன்
    முஹம்மது நியாஜ்
    கோலாலம்பூர்

    ReplyDelete
  25. எனது வருத்தங்களும் ஆழ்ந்த அனுதாபங்களும் சகோதரம்...

    ReplyDelete
  26. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும்.

    ReplyDelete
  27. மனம் அமைதியடையட்டும். அவர் என்றும் உங்கள் அனைவரின் நினைவிலும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் மாப்ஸ். நான் இதனை சற்றும் எதிர்பார்க்க வில்லை. ஆனால் சமீபகாலாமாக நம்ப மாப்ஸ் கூட அதிகம் எழுதுவதில்லை என்ற எண்ணத்தில் இருந்தேன். சரி நடந்தது நிதர்சனம் என்று உணர்ந்து அமைதியடவேண்டுகிறேன் வேலன். இது எல்லோருக்கும் வாய்த்த ,வாய்க்கும் ஒன்றுதான் மாப்ஸ். தினமும் அவர்களை நினைத்து வணங்குங்கள். நானும் இதைத்தான் செய்கிறேன் . வேறு என்ன நான் சொல்ல மாப்ஸ்.

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. வருந்துகிறேன் சகோ!தங்களின் துயரத்தில் நானும் பங்குகொள்கிறேன். என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். பெரியவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ரபிக் மௌலானா .

    ReplyDelete
  31. வருந்துகிறேன் சார்!
    ஆன்மா நிம்மதி அடைய வேண்டுகிறேன்!

    ReplyDelete
  32. உங்கள் துயரத்தில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம் வேலன் சார். தந்தையின் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறோம். உங்களுக்கும் மன அமைதி கிட்டிடவும் வேண்டுகிறோம்.

    ReplyDelete
  33. உங்கள் அருமைத் தந்தையின் ஆன்மா சாந்தியடைய ஆண்டவைன பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  34. நீங்களும் உங்கள் குடும்பமும் அமைதி பெற எமது பிரார்த்தனைகள் ...

    ReplyDelete
  35. தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  36. தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  37. வருந்துகிறோம் சகோ,தங்கள் தந்தையாரின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்கிறோம்.

    ReplyDelete
  38. தளிர் துளிர்த்தல்,சருகு விலகுதல் இயற்கை.ஆனால் மனம் ஏற்பதில்லை.
    தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய எம்பெருமான் பழனி முருகனை பிரார்த்திக்கிறேன்.
    அரவரசன்.

    ReplyDelete
  39. varunthugiren matrum aazhntha anuthabangal nanbare !

    ReplyDelete
  40. வருந்துகிறேன் சகோ!

    அப்பாவின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  41. தங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  42. தங்கள் துயரத்தில் என்னையும் இணைத்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  43. தங்கள் தந்தையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்.

    ReplyDelete
  44. ஆழ்ந்த அனுதாபங்கள் வேலன் சார்.

    ReplyDelete
  45. ஆழ்ந்த அனுதாபங்கள் வேலன் சார்.

    ReplyDelete
  46. அய்யா அவர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிறாத்திகின்றேன்

    ReplyDelete
  47. ஆழ்ந்த அனுதாபங்கள்..
    ஒரு சிறு வேண்டுகோள்.
    நினைவாக ஒரு மரம் நட்டு பராமரியுங்கள்..

    ReplyDelete
  48. எனது ஆழ்ந்த அனுதாபத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன் அண்ணா.அப்பாவின் ஆத்மாசாந்திஅடைய எனது குடும்பத்தோடு பிராத்தனைசெய்கிறோம்.

    ReplyDelete
  49. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும். பெரியவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். ஒரு நல்ல "வேல(வ)னை" தந்ததற்கு மகிழ்ச்சி

    ReplyDelete
  50. அன்பு சகோதரரே , தந்தையின் மரணச்செய்தியை இன்றுதான்அறிந்தேன்(என்னுடைய மடிகணிணி பழுதடைந்துள்ளது).தந்தையின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். சகோதரரே தந்தையின் உடல் மட்டுமே ,தங்களை விட்டு சென்றுள்ளது .அவர் ஆத்மா உங்கள் வீட்டிலேயேஉள்ளது .அனைவரையும் அவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். அவர் பிரிவை எண்ணி குடும்பத்தினர் வருந்துவதை அவர் ஆத்மாவால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை, அவருடைய ஆத்மாவை சந்தோஷப்படுத்துங்கள்.துன்பத்தை பகிர்ந்துகொள்ள ,தங்கள் இல்லம் வர விரும்புகிறேன்.முகவரி தாருங்கள். கு.திருவள்ளுவன், 10பல்லாவரம் சாலை,குன்றத்தூர்,சென்னை-600069 போன் -9380915157-9043460014

    ReplyDelete
  51. வருந்துகிறேன் வேலன்!தந்தையார்
    ஆன்மா நிம்மதி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்!

    ReplyDelete
  52. வருந்துகிறேன் சகோ!
    ஆன்மா நிம்மதி அடைய வேண்டுகிறேன்!

    ReplyDelete
  53. அப்பாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன். தாங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  54. அப்பாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன். தாங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  55. அப்பாவின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகின்றேன். தாங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete
  56. May his soul rest in peace.

    ReplyDelete
  57. May his soul rest in peace.

    ReplyDelete
  58. தங்கள் தந்தையாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.-விஜய்

    ReplyDelete
  59. ஆழ்ந்த அனுதாபங்கள் நண்பரே. உங்கள் தந்தையின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனை செய்துகொள்கிறேன்.

    ReplyDelete
  60. illaiyenru ninaiththaal than kavalai varum. enga appa kooda 4 years a enga koodave than irukkaanga. unga appavum irukkanga. dont worry. namma mela uyiraye vachirunthavanga vera enga povanga? nammala vittutu?

    ReplyDelete
  61. please share your sad feelings with others, automatically it will reduce and it will give strength and positive attitude in life!! Heartfelt condolence......

    ReplyDelete
  62. வருந்துகிறேன் நண்பரே

    அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நண்பரே

    ReplyDelete
  63. என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்
    sherif madurai

    ReplyDelete
  64. எங்களது தந்தையின் மறைவுக்கு நேரிலும்-தொலைபேசியிலும் - பதிவின் மூலமும் ஆறுதல் சொன்ன அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.
    வாழ்க வளமுடன்.
    க.மூர்த்தி,க.சரவணன்,க.வேலன்.

    ReplyDelete
  65. Dear Velan,
    deep condolences

    By SG Bala

    ReplyDelete
  66. கம்பியுட்டர் வைரஸ் பிரச்சனையால் இப்ப தான் பார்க்க நேர்ந்தது மிகவும் வருத்தமான செய்தி, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்

    ReplyDelete
  67. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரை சுவனபதியில் சேர்ப்பாராக ஆமீன்.

    ReplyDelete