Wednesday, November 16, 2011

வேலன்:-எல்லா அலகுகளையும் எளிதில் மாற்ற -Convertall

அந்தகால படிப்பில் 5 ஆம் வகுப்பு வரை வாய்ப்பாடு சொல்லிதருவார்கள்.. ஒன்றிலிருந்து 20 வரை எழுதிகாண்பிக்கவேண்டும். காலங்கள் மாறும்சமயம் வாய்பாடும் மறைந்துவருகின்றது..வேலையை சுலபமாக்க இந்த Convertall என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது. 6 எம்.பி.கெர்ளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் A முதல் Z வரையில் நமக்கு யுனிட்டுகள் உள்ளது. நமக்கு தேவையான அலகினை தேர்வு செய்துகொள்ளலாம்.இதில் உள்ள யுனிட் பைன்டர் என்பதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான அலகினை தேர்வு செய்துகொள்ளலாம்.அதைப்போலவே இதில் Preferences கொடுத்துள்ளார்கள்.. அதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையான டெசிமல் எண்ணிக்கையையும் கடைசியாக பயன்படுததிய அலகின் எண்ணிக்கை அளவையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.அதைப்போலவே இதில் உள்ள அலகின் நிறத்தையும் - எழுத்துக்களின் நிறத்தையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.; படித்துகொண்டு இருப்பவர்களுக்கும் - மாணவர்களுக்கும் - தொழில் முனைவருக்கும் இந்த சின்ன சாப்ட்வேர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

8 comments:

  1. தங்களின் நட்சத்திர பதிவுகள் அனைத்தும் சிறக்க வாழ்த்துகள் !

    வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  2. நட்சத்திரமானதும் பிரகாசம் கூடியிருக்கிறது நண்பரே... மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள ஒரு சாஃப்ட்வேரைத் தந்திருக்கிறீர். வாழ்த்துக்கள்! நன்றி!

    ReplyDelete
  3. நட்சத்திர வாழ்த்துக்கள்.

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. பயனுள்ள பதிவு நன்றி வேலன் சார்.
    Mother's Diary டவுன்லோட் செய்து வைத்துள்ளேன், நேரம் கிடைக்குப்போது விளையாடிப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  5. ♠புதுவை சிவா♠ said...
    தங்களின் நட்சத்திர பதிவுகள் அனைத்தும் சிறக்க வாழ்த்துகள் !

    வாழ்க வளமுடன்...//

    நன்றி சிவா சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி...
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  6. கணேஷ் said...
    நட்சத்திரமானதும் பிரகாசம் கூடியிருக்கிறது நண்பரே... மாணவர்களுக்கு மிகப் பயனுள்ள ஒரு சாஃப்ட்வேரைத் தந்திருக்கிறீர். வாழ்த்துக்கள்! நன்றி!ஃஃ

    நன்றி கணேஷ் சார்...
    வாழக் வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. சே.குமார் said...
    நட்சத்திர வாழ்த்துக்கள்.

    பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.ஃஃ

    நன்றி குமார் சார்...
    வாழக் வளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  8. Thomas Ruban said...
    பயனுள்ள பதிவு நன்றி வேலன் சார்.
    Mother's Diary டவுன்லோட் செய்து வைத்துள்ளேன், நேரம் கிடைக்குப்போது விளையாடிப் பார்க்கிறேன்.ஃஃ

    விளையாட்டினை போடும்சமயம் உங்களைதான் நினைத்துக்கொண்டேன் தாமஸ் சார்..விளையாட்டு நீண்டுகொண்டே செல்கின்றது..விளையாடடிப்பாருங்கள. தங்கள் வருகைக்கு நன்றி..
    வாழக்வளமுடன்
    வேலன்.

    ReplyDelete