Wednesday, February 22, 2012

வேலன்:-யூடியூப் விடியோக்களை டிவிடியாக மாற்ற

யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை டிவிடியாக மாற்றுவது எப்படி என்று திரு.பழனி கந்தசாமி அவர்கள் கேட்டிருந்தார்கள்.அவருக்காக இந்த பதிவு. முதலில் நீங்கள் டிவிடியாக மாற்றவேண்டிய யூடியூப் வீடியோக்களை உங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்னர் 35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும். உங்கள் பதிவிறக்கம் முடிந்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள import கிளிக் செய்து உங்கள் யூடியுப் விடியொக்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
 நீங்கள் யூடியுப் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்கள் படம் தேர்வானதும் கீழே உள்ள ஸ்லைடரில் படத்திற்கான அளவினை காணலாம். அதைப்போல டிவிடியின கொள்ளளவு எத்தனை ஜி.பி.என்பதனையும் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இதனை ப்ரிவியுவும் பார்க்கும் வசதி உள்ளது.
 இதில் உள்ள மெனு தேர்வு செய்தால் எட்டுவிதமான ஸ்லைடுக்ள உங்களுக்கு கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நீங்கள் தேர்வு செய்ததனை ப்ரிவியு பார்க்கும் வசதி உள்ளதால் ப்ரிவியு பார்த்து மாற்றங்கள் ஏதும் தேவையிருப்பின் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
 கடைசியாக பார்ன் கொடுங்கள். அதற்குமுன் உங்கள் டிவிடிக்கு பெயரையும் நீங்கள் வைக்கலாம்.
 எல்லா வழிமுறைகளும் முடிநதபின் நீங்கள் கீழே உள்ள Burn கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
அவ்வளவுதான் உங்கள் டிவிடி ரெடி;. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.









Sunday, February 19, 2012

வேலன்:-வேர்ட் ஜீஸ்.(வார்த்தைகள் கண்டுபிடியுங்கள்)

வெயில்காலம் ஆரம்பித்துவிட்டது. விதவிதமான ஜீஸ்கள் போட்டு நாம் பருக தொடங்குவோம். அதுபோல் ஆங்கில வார்த்தையை ஜீஸ்போட்டு நாம் தேவையானதை தேர்வு செய்யலாம். 7.5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நமது பெயரை தட்டச்சு செய்து விளையாட் தொடங்கவேண்டும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான வார்த்தையை நாம் கர்சர் மூலம் தேர்வு செய்யவேண்டும். சரியான வார்த்தை கிடைக்கையில் வார்த்தை மறைந்து நமக்கு பாயிண்ட்கள் கிடைக்கும். மேலும் சரியான வார்தைக்கான எழுத்து வரவில்லையோ அந்த எழுத்துக்கான ஒரங்களில் உள்ள சிறிய முக்கோணத்தை கிளிக் செய்ய பாக்ஸானது ஒவ்வொரு கட்டமாக நகர ஆரம்பிக்கும்.சரியான வார்த்தை வந்தால் நாம் தேர்வு செய்யவேண்டும்.
இதில் உள்ள பாம்ப் (வெடிகுண்டை) நாம் வெடிக்க செய்யலாம்இதன் மூலம் கட்டங்கள் மறைந்து வார்த்தைகள் தோன்றும்.. நாம் புதிதுபுதிதாக வார்த்தைகள் கண்டுபிடிக்கலாம். குழந்தைகள் மட்டுமல்ல நாமும் புதிபுதியதாக வார்த்தைகள் கண்டுபிடிக்கலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, February 17, 2012

வேலன்:-பாயிண்டர் ஸ்டிக்.


படிக்கும் காலங்களில் வரலாறு-புவியியல் பாடங்கள் எடுக்கும் சமயம் போர்டில் பெரிய பெரிய மேப்களை மாற்றிவிட்டு நீண்ட கொம்புகொண்டு ஒவ்வொரு இடங்களைபற்றியும் ஆசிரியர் விளக்குவார்.அதைப்போல நாம் நமது கம்யூட்டரில் நீண்ட கொம்புகொண்டு ப்ரோகிராம்களை நாம் பார்க்கலாம்.வேர்டில் இதுபோல் ஒவ்வொரு வரியாக நாம் நீண்ட குச்சிகொண்டு பார்க்கலாம். சின்ன சாப்ட்வேரான இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் கொம்பின் அளவினையும் அடர்த்தியையும் நிர்ணயிக்கலாம். அதைப்போல கொம்பின் நிறங்களையும் நாம் தேர்வுசெய்யலாம்.மேலும் தேவையான வசதிக்கு ஏற்ப ரேடியோபட்டன் மூலம் தேர்வு செய்யலாம்.


நான் தேர்வு செய்துள்ள சிகப்பு நிற கொம்பு படம் மேலே உள்ளது.இதன் மூலம் வேர்டில் நாம் வரிகளை சோதனை செய்ய பயன்படுத்தலாம்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, February 15, 2012

வேலன்:-கணிணியில் உள்ளபைல்களை பெரிதுபடுத்திப்பார்க்க-Magnifixer


ஏற்கனவே நாம் பூதக்கண்ணாடியை பார்த்தோம். அந்த வரிசையில்இந்த Magnify சாப்ட்வேர் நமக்கு கூடுதல் வசதிகளுடன் பயன்படுகின்றது.1 எம்.பிக்குள் உள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு உங்கள் டாக்ஸ்பாரில் பூதக்கண்ணாடியுடன் வந்து அமர்ந்துகொள்ளும். அதனை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான பகுதியை தேர்வு செய்யலாம். உங்கள் கர்சர் எங்குஎங்கு செல்கின்றதோ அந்த பகுதியெல்லாம் உங்களுக்கு விண்டோவில் தெரியவரும்.
அதில் கீழ்புறம் உங்களுக்கு தேவையான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையான அளவினை கொடுத்து படத்தினை பெரியதாக மாற்றிக்கொள்ளலாம்.அதைப்போல நீங்கள் கர்சரை கொண்டு குறிப்பிடும் பகுதியின் நிற அளவினை பார்த்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
இதில் நாம் இன்வர்ட் கலரிலும் கொண்டுவரலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, February 14, 2012

வேலன்:-SLR கேமரா பயன்படுத்தும் வழிமுறைகள்.

பள்ளியில் படிக்கும் காலங்களில் குரூப் புகைப்படம் எடுக்கையில் அனைத்து மாணவர்களையும் நிற்க வைத்து டிரங் பெட்டி சைஸ் கேமராவை கருப்பு துணியை போர்த்தி புகைப்படம் எடுப்பார்கள்.அடுத்து கருப்பு வெள்ளை புகைப்படங்கள் வந்தது.அடுத்து கலர் புகைப்படங்கள் வந்தது. அதுவும் முதலில் சிங்கப்பூர் மலேசியாவில் சென்று பிரிண்ட் போட்டுவருவார்கள்.தற்போது டிஜிட்டல் வரை வந்து அதற்கு மேலும் மாடல்கள் கேமரா வந்துவிட்டது.SLR கேமராவும் அந்த வகையில் வந்துள்ள கேமரா..இதில் பல செட்டிங்ஸ் உள்ளது. ஒவ்வொரு செட்டிங்ஸ்ஸையும் நாம் செட் செய்து பிரிண்ட்போட்டு ரிசல்ட் எப்படி வருகின்றது என பார்க்கவேண்டும். ஆனால் இந்த தளத்தில் SLR கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை விதவிதமான செட் செய்து அப்போதே ரிசல்ட் பார்க்கலாம்.அந்த முகவரி தளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில ஓரு சிறுமியின் புகைப்படம் இருக்கும். அதில் கீழே பலவிதமான செட்டிங்ஸ் இருக்கும். நாம்அதில் உள்ள ஸ்லைடரை தேவையான அளவுக்கு நகர்த்தி பின்னர் அதில் உள்ள Snap Photo கிளிக் செய்யவும்.
இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.நமது செட்டிங்ஸ்க்கு ஏற்ப படம் நமக்கு டிஸ்பிளே ஆகும்.
நமது புகைப்படத்தை பற்றிய விமர்சனமும் உடன் தோன்றும். அதற்கேற்ப நாம் புகைப்படங்கள் எடுக்கும் திறமையை வளர்த்துக்கொள்ளலாம்.இந்த பதிவு புதிதாக கேமரா வாங்க நினைப்பவர்களுக்கும் ஏற்கனவே கேமரா வைத்துள்ளவர்களுக்கும் பயன்படும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Monday, February 13, 2012

வேலன்:-காதலர்தின ஸ்கிரீன்சேவர்கள்

காதலர்தினத்திற்கு வாழ்த்து அட்டைகள்.பரிசு பொருட்கள் என விதவிதமாக வந்துள்ளது. நான் இந்த பதிவில் காதலர்தின ஸ்கிரீன்சேவரை பதிவிட்டுள்ளேன்.12 எம்.பி;.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய
இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்குவரும் ஸ்கிரீன்சேவர்களின் வீடியோ தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, February 12, 2012

வேலன்:-விரும்பியவாறு ஸ்கிரீன்ஷாட் எடுக்க

பதிவுலக நண்பர்களுக்கு. மாணவர்களுக்கு ஸ்கிரீன்ஷாட் இன்றியமையாத தேவையாகும். முழு ஸ்கிரீனோ - அல்லது தேவையான அளவிலோ நாம் ஸ்கிரீன்ஷாட் மூலம் புகைப்படங்களை தேர்வு செய்யலாம். வேண்டிய பார்மாட்டுக்கு தேர்ந்தெடுக்கலாம். 300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் முழுதிரையோ அல்லது தேவையான அளவு வேண்டுமோ அதனை தேர்வு செய்துகொள்ளுங்கள். தேவையான அளவினை நீங்கள் கிளிக் செய்தால் உங்களுக்கு சிகப்பு நிற கட்டம் வரும். அதில் கர்சரை வைத்து ஒரங்களை நகர்த்துவது மூலம் உங்களுக்கு தேவையான அளவினை நிர்ணயித்துக்கொள்ளலாம்.JPG.PNG.BMP என் எந்த பார்மெட்டில் புகைப்படம் வேண்டுமோ அந்த பார்மெட்டுக்கு எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்துகொள்ளலாம். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
தேவையானதை தேர்வு செய்துகொள்ளுங்கள்.AREA மூலம் நான் தேர்வு செய்த புகைப்படம் கீழே:-

நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, February 9, 2012

வேலன்:-ஜிமெயில் வந்துள்ளதை மெயில்திறக்காமலேயே அறிந்து கொள்ள

மெயில் நமக்கு வந்துள்ளதா - இல்லையா என நாம் ஒவ்வொருமுறையும் மெயில் ஓப்பன் செய்து பார்க்கவேண்டும்.நாம் இணையத்தில் பணிபுரியும்போதே நமக்கு மெயில் வந்துள்ளது என தகவல் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். அதற்கான வசதியை ஜிமெயில் தந்துள்ளது. ஜிமெயில் Peeper என்கின்ற இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் உள்ள செட்டிங்ஸ்ல் நீங்கள் உங்கள் ஜிமெயில் முகவரியையும் பாஸ்வேர்டினையும் தட்டச்சு செய்யவும். ஜிமெயிலே இந்த வசதியை தருவதால் நம்பி பாஸ்வேர்டினை தரலாம். 
அடுத்து எவ்வளவு நிமிடத்திற்கு ஒரு முறை நமக்கு தகவல் வரவேண்டுமோ அதனை செட் செய்துவிடவும்.மெயில் வரும்சமயம் நமக்கு ஒலி வேண்டுமானால் Sound Alert  செட் செய்யலாம் இறுதியாக சேவ் செய்து வெளியேறவும்.


 இப்போது நமக்கு மெயில் வந்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்;.
அதனை கிளிக்செய்து பார்க்கையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அதில் மெயில் எங்கிருந்து வந்துள்ளது- மற்றும் அதன் சப்ஜெக்ட் எதை பற்றி என்றும் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் நாம் மெயில் திறந்து பார்க்கும் நேரம் மிச்சமாகும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, February 6, 2012

வேலன்:-புகைப்படங்களை வேண்டியவாறு மாற்ற

நம்மிடம் உள்ள புகைப்படங்களை அளவினை மாற்ற - கன்வர்ட் செய்ய -  பெயர் மாற்றம் செய்ய - வலது இடது புறம் மாற்ற - திருப்ப -வாட்டர் மார்க் செய்ய என எண்ணற்ற பணிகள் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது.2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான படத்தினை தேர்வு செய்யவும். தனி தனி புகைப்படமாகவோ - மொத்தமாக போல்டரில் உள்ள புகைப்படங்களையோ நாம் தேர்வு  செய்யலாம்
தேர்ந்தெடுக்க வசதியாக இதன் மேற்புறம் நிறைய டேப்புகள் உள்ளது;. தேவைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க்லாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அளவுகளையும் குறைக்கவோ அதிகமாக்கவோ செய்யலாம். இதில் உள்ள ஸ்கேரல் பார் மூலம் அளவினை  தேர்ந்தெடுக்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்களது அனைத்து பணிகளும் முடிவடைந்தபின்னர் நீங்கள் இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக்செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இறுதியாக நீங்கள் சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தீர்களோயானால் நீங்கள் விரும்பிய படி புகைப்படம் இடம்பெற்று இருக்கும். ஸ்டுடியோ வைத்திருக்கும் அன்பர்களுக்கு இந்த சாப்ட்வேர் நிச்சயம் பயன்படும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, February 1, 2012

வேலன்:-திருக்கழுக்குன்றம் கழுகுகள் உணவருந்தும் அரிய வீடியோ காட்சிகள்.

திருக்கழுக்குன்றத்தில் நண்பகலில் மலைமீது இரண்டு கழுகுகள் தினமும் வந்து உணவருந்தி செல்லும்.அதன் காரணமாகவே ஊருக்கு திருக்கழுக்குன்றம் என பெயர் வந்தது. புகைப்படம் மூலமே இதுவரை கண்டு களித்தவர்கள் இந்த வீடியோ மூலம் கழுகுகள் வந்து உணவருந்தும் காட்சியை கண்டு ரசிக்கலாம்.வீடியோ கேமரா அவ்வளவாக வராத காலத்திலேயே இந்த வீடியோவினை எடுத்து வைத்துள்ளார்கள்.இந்த வீடியோவினை காலத்தால் அழியாத இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் வரும் சந்ததியினரும் இதன் அருமையை அறிந்துகொள்ளலாம்.சில பதிவுகள் நமக்கு பூரண மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். இந்த வீடியோவினை பதிவிடுவதில் நான் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் அடைகின்றேன்.





வீடியோவினை கண்டு களித்தவர்களுக்கும் வீடியோ உதவிய calicocentric நண்பரருக்கும் மனமார்ந்த நன்றி .


வாழ்க வளமுடன்
வேலன்.