யூடியுப்பிலிருக்கும் வீடியோக்களை டிவிடியாக மாற்றுவது எப்படி என்று திரு.பழனி கந்தசாமி அவர்கள் கேட்டிருந்தார்கள்.அவருக்காக இந்த பதிவு. முதலில் நீங்கள் டிவிடியாக மாற்றவேண்டிய யூடியூப் வீடியோக்களை உங்கள் கணிணியில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின்னர் 35 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும். உங்கள் பதிவிறக்கம் முடிந்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள import கிளிக் செய்து உங்கள் யூடியுப் விடியொக்களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.எத்தனை படங்கள் வேண்டுமானாலும் நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்.
நீங்கள் யூடியுப் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.உங்கள் படம் தேர்வானதும் கீழே உள்ள ஸ்லைடரில் படத்திற்கான அளவினை காணலாம். அதைப்போல டிவிடியின கொள்ளளவு எத்தனை ஜி.பி.என்பதனையும் நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இதனை ப்ரிவியுவும் பார்க்கும் வசதி உள்ளது.
இதில் உள்ள மெனு தேர்வு செய்தால் எட்டுவிதமான ஸ்லைடுக்ள உங்களுக்கு கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
நீங்கள் தேர்வு செய்ததனை ப்ரிவியு பார்க்கும் வசதி உள்ளதால் ப்ரிவியு பார்த்து மாற்றங்கள் ஏதும் தேவையிருப்பின் செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
கடைசியாக பார்ன் கொடுங்கள். அதற்குமுன் உங்கள் டிவிடிக்கு பெயரையும் நீங்கள் வைக்கலாம்.
எல்லா வழிமுறைகளும் முடிநதபின் நீங்கள் கீழே உள்ள Burn கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
அவ்வளவுதான் உங்கள் டிவிடி ரெடி;. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.