Friday, March 30, 2012

வேலன்:-வெம்பயர் சாகா -விளையாட்டு

ஆவிகளுக்கு பிரியமானவள் என்று ஒரு தொடர் இப்போது வருகின்றது..அதுபோல் இது ஆவிகள் உலாவும் விளையாட்டு. 560 எம்...பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள படத்தில் ஒவவொரு இடத்திலும் ஒரு க்ளு இருக்கும். கார் சாவியை கண்டுபிடிக்கவேண்டும். பின்னால் உள்ள டிக்கியை திறந்து கார் டயரை மாற்றவேண்டும்.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு க்ளு கண்டுபிடித்ததும் உங்களுக்கான பொருள் கிடைக்கும். அதனை கொண்டு அடுத்த க்ளுவினை கண்டுபிடிக்கவேண்டும்.
ஆபரேஷன் தியேட்டரில மறைந்துள்ள் பொருட்களை கண்டுபிடிக்கவேண்டும்.
மார்ச்சுவரியில் ஒரு பிரேதம் இருக்கும். அதன் உடலில் இருந்து ரத்தம் எடுத்து லேபிள்(Lab) வைத்து சோதனை செய்யவேண்டும்.பிரேதத்தின் கையில் வைர நகை இருக்கும். அதை எடுக்கவேண்டும். பிரேத்திற்கு திடீரேன்று உயிர் வரும். குழந்தைகள் பயப்படபோகின்றார்கள்.விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, March 28, 2012

வேலன்:-இன் மை டைரி (In My Diary)

விதவிதமான டைரிகள் விற்பனைக்கு வருவதுபோல விதவிதமான டைரிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அந்த வகையில் இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பல வசதிகளை தருகின்றது. 6 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் டைரி - நமக்கு கிடைக்கும். அதில் தேவையான குறிப்புகளை குறித்து வைக்கலாம்.
 காலண்டரை கிளிக் செய்ய நமக்கு காலண்டர் கிடைக்கும். அதில் உள்ள + மற்றும் - குறிகளை அழுத்த காலண்டர் முன்தேதியிலும் பின்னர் வரும் தேதிகளும் கிடைக்கும்.
 இதில் இடது புறம் Notes,Contact கிடைக்கும். தேவையான விவரங்களை நாம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவரின் தொலைபேசி விவரம் முதற்கொண்டு முழுவிவரம் இதில குறித்துவைக்கலாம்.
இதிலேயே அலாரம் செட் செய்யும் வசதியும் உள்ளது:. பிறந்த நாள் மற்றும் திருமண நாட்களையும் இதில் குறித்துவைக்கலாம்.இதுநாள் வரை பிறந்தநாளோ -திருமணநாளோ-எவ்வளவு வருடம் இதுவரை கடந்துள்ளது என்கின்ற விவரமும் கிடைக்கும். பயன்படுத்திப்பர்ருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, March 25, 2012

வேலன்:-வீடியோ மேஜிக்.

வீடியோக்களை விதவிதமாக எடிட் செய்ய நிறைய சாப்ட்வேர்கள் உள்ளன. அதில் இந்த சாப்ட்வேரும் ஒன்று. 6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் தேவையான வீடியோவினை டிராப் & டிராக் முறையிலோ - பைல்மூலமோ தேர்வு செய்யலாம். 
இதில் கீழே உள்ள settings கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள போனுக்கு தேவையான பார்மெட்டினை தேர்வுசெய்யலாம்.


 இதில் உள்ள Profile கிளிக் செய்ய நமக்கு தேவையான வீடியோ கோடக் - ஆடியோ கோடக் - ப்ரேம் ரேட்- என விதவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். தேவையானதை தேர்வுசெய்து கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 அனைத்து செட்டிங்ஸ் முடிந்ததும் நாம் ப்ரிவியு பார்க்கும் வசதியும் உள்ளது:.
 இறுதியாக இதன் கீழே உள்ள Start பட்டனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்
இந்த சின்ன சாப்ட்வேர் மூலம் வீடியோவினை எடிட் செய்ய. சேர்க்க,பிரிக்க.யூ-டியூபிலிருந்து பதிவிறக்கம் செய்ய - ரிங்டோன உருவாக்க என எண்ணற்ற பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, March 20, 2012

வேலன்:-அதிகாலை ஸ்கிரீன்சேவர்கள.

அதிகாலையில் கோயம்பத்தூரிலிருந்து பொள்ளாச்சி வரை காரில் விருப்பமான பாடலை கேட்டுகொண்டே செல்கையில் மனம் ஆனந்தமடையும் . இதுபோல அதிகாலை அருமையான ஸ்கீரின் சேவரை நமது கணிணியில் அமைத்துகொள்ளலாம். விதவிதமான ஸ்கிரீன்செவர்களை 
 பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட ஸ்கிரீன்சேவர்கள் கிடைக்கும்.




இதற்கான வீடியோ தொகுப்பு கீழே:-



பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, March 18, 2012

வேலன்:-1000 அல்ஜீப்ரா ப்ராபளங்கள்.

சிலருக்கு கணக்கு என்றாலே வேப்பங்காயக கசக்கும். கணக்குக்கு பயந்துகொண்டே பெரிய வகுப்புகளில் போகும் சமயம் கணக்குவராத படிப்பாக தேர்ந்தேடுத்து படிப்பார்கள்.சற்று சிரமமாக இருந்தாலும் புரிந்துகொண்டால் இமயமலையும் நமக்கு பரங்கிமலைதான். இன்றைய பதிவில் மாணவர்களுக்கு பயன்படும் அல்ஜீப்ரா ப்ராபளம்களின் பிடிஎப் தொகுப்பினை இணைத்துள்ளென். பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும்.இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

1000 தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அதுபோல இது 1000 கணக்குகள் அடங்கிய அல்ஜீப்ரா ப்ராபளம் உள்ளது. தேர்வுநேரம் ஆகையால் இந்த பதிவு.பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்..
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, March 15, 2012

வேலன்:-போட்டோவை பென்சில் போட்டோவாக மாற்ற

போட்டோக்களை பென்சில் போட்டோ - ஆயில போட்டோ - கிரையான் போட்டோ என விதவிதமாக மாறுமாறு நாம் போட்டோஷாப்பில் செய்யலாம். ஆனால் போட்டோஷாப் துணையில்லாமல் விதவிதமாக நாம் டிசைன் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு உதவுகின்றது. 6 எம்.பீ. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் வரும் விண்டோவில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தினை தேர்வுசெய்யவும்.
இதில் இரண்டு வகையான ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒன்று Standard    மற்றொன்று Prossional . கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 நான் Standard தேர்வு செய்துள்ளேன். இதில் முதலில் கலர் பென்சில் தேர்வுசெய்து அதில் உள்ள ஸ்லைடர் மூலம் வேண்டிய அளவினை கொடுத்தேன். கீழே உள்ள விண்:டோவில் பாருங்கள்.
 அடுத்துள்ள பிளாக் அன்டுஓயிட் தேர்வு செய்து வரைந்துள்ள படம் கீழே:-
நீங்களும் உங்களுக்கு விருப்பமான புகைப்படம் தேர்வு செய்து விரும்பியவாறு மாற்றிக்கொள்ளுங்கள.பயன்படுத்திபாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்...



Monday, March 12, 2012

வேலன்:- சென்னையில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்களின்சர்வீஸ் சென்டர் முகவரிகள்

இன்றைய காலகட்டத்தில் எலக்ட்ரானிக் பொருட்கள் உபயோகிக்காதவர்களே இல்லை எனலாம். நம்மிடம் உள்ள சில பொருட்கள் அதனுடைய வாரண்டி காலத்தில் பழுதாகிவிட்டால் அந்த பொருட்களின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டிரில் கொடுத்தால்தான் பழுது நீக்கி கொடுப்பார்கள்... எனக்கு கிடைத்த சில எலக்ட்ரானிக் பொருட்களின் சர்வீஸ் சென்ட்டர் முகவரியை கீழே கொடுத்துள்ளேன்.



படத்தினை கிளிக் செய்தால் உங்களுக்கான முகவரிகள் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.. கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
    வேலன்.

Friday, March 9, 2012

வேலன்:-கோஸ்ட் டவுண்ஸ்.

தேர்வு நேரம்...இந்த நேரத்தில் விளையாட்டு பதிவா என எண்ணவேண்டாம்.இந்த விளையாட்டு சற்று பெரிய அளவிளானது. அதனால் தேர்வுக்கு முன்னரே பதிவிட்டுள்ளேன்.சுமார் 300 எம்..பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செசய்ததும் உங்களுக்கு கீழ்ககண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வரும் ஒவ்வொரு குளுவாக கண்டுபிடிக்கவேண்டும். குளு கண்டுபிடிப்பபதில் சற்று சிரமமாக உள்ளது.





குழந்தைகள் சுலபமாக கண்டுபிடித்துவிடுவார்கள். விளையாடிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, March 6, 2012

வேலன்:-ஆடியோ ரிகார்டர்.

கணிணியில் நாம் ஆடியோ பதிவு செய்வதனால் சவுண்ட் ரேகார்டர் மூலம் செய்ய வேண்டும். ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் நாம் ஆடியோவினை பதிவு செய்யலாம். பைல்களை படிக்கலாம். பைல்களை ஆடியோ பைல்களாக மாற்றலாம்.. இணையத்தில இருந்து ஆடியோவினை பதிவிறக்கம் செய்யலாம். 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.உங்களுக்கு கீழ் கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் முதலில் உள்ள ரெகார்ட் பட்டனை கிளிக் செய்து ஏற்கனவே கணிணியில் உள்ள பைல்களை ஆடியோ பைல்களாக மாற்றலாம்.மைக் மூலம் நாம் பேசி ஆடியோ பைல்களாக சேமிக்கலாம். வேர்ட். டெக்ஸ்ட் பைல்களை நாம் ஆடியோ பைல்களாக மாற்றிகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள். தேவையான பைலை தேர்வு செய்து அதனை படித்து காண்பிக்க சொல்லலாம்.
 வேண்டிய பைல்களை ஆடியோ பைல்களாக தேவைப்படும் இடத்தில் சேமித்துவைக்கலாம்.
 குறிப்பிட்ட நேரத்தில் ரெகார்ட் செய்யும் வசதியும் உள்ளதால் நேரத்தை நிர்ணயித்து கொள்ளலாம்.தேவைப்படும் இணைய முகவரியை இதில் சேமித்து வைத்து குறிப்பிட்ட நேரத்தில் பதிவிறக்கம் செய்வது போல் செட்செய்யலாம்.
4 எம்.பி. கொள்ளவு கொண்ட இந்த சின்ன சாபட்வேரில் போதுமென்கின்ற அளவிற்கு வசதிகள் கொடுத்துள்ளதே...போதாதா நமக்கு...நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, March 4, 2012

வேலன்:-மை காலண்டர் (My Calender)


நமது பெரிய பலவீனமே ஞாபக மறதிதான். இந்த சின்ன சாப்ட்வேரில் My Notes.My Schedule.Birthday Manager.To Do Manager,Digital Calender,Tools என 6விதமான டேப்புகள் உள்ளது.நமக்கு தேவையான விவரங்கள் அனைத்தையும் இதில குறித்து வைத்துக்கொள்ளலாம்.. இதனை இன்ஸ்டால் செய்ய இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நமக்கு தேவையான நோட் குறிப்புகளை எழுதிவைத்துக்கொள்ளலாம்.அதனை வகைப்படுத்தியும் நாம் பிரித்துவைத்துக்கொள்ளலாம்.
நமது செட்யூல் என்பதனை இதில் குறித்துவைத்துக்கொள்ளலாம்.
மனைவி.குழந்தைகள்.நண்பர்கள்.உறவினர்கள் என நமக்கு வேண்டப்பட்டவர்களின் பிறந்த நாளை குறித்துவைத்துக்கொள்ளலாம். இதில் என்ன விஷேஷம் என்னவென்றால் அவர்களை வகைப்படுத்திக்கொள்ளலாம். மேலும் பிறந்தநாளை குறிததுவிட்டால் அவர்களின் வயது என்ன என்பதனையும் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.
நேரவித்தியாசத்தையும் நாம் எளிதில கன்வர்ட் செய்து கொள்ளலலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
சின்ன சாப்ட்வேரில் எவ்வளவு வசதிகள் உள்ளது பாருங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, March 2, 2012

வேலன்:-மின்தடை.

இரண்டு மணி நேரத்தில் ஆரம்பித்த மின்தடை இன்று 12 மணிநேரம் வரை வந்து நிற்கின்றது.உண்மை நிலவரத்திற்கும் பத்திரிக்கை செய்திகளுக்கும் 8 மணிநேர வித்தியாசம் உள்ளது. சென்னையில் 2 மணி நேரமும் மற்ற மாவட்டங்களில் 4 மணிநேரமும் மின்தடை உள்ளதாக பத்திரிக்கைகளில் சொல்கின்றார்கள். ஆனால் காலை 9 மணி முதல் 12 மணி வரையும்,மதியம் 3 மணியிலிருந்து 6 மணி வரையிலும்,இரவு 7 முதல் 8 வரை. மீண்டும் 9 லிருந்து 10 வரை, நள்ளிரவு 12 மணியிலிருந்து நடுஇரவு 1 மணி வரை,அதிகாலை 3 மணியிலிருந்து 4 வரை, விடியற்காலை 5 மணியிலிருந்து 6 வரை மின்தடை செய்கின்றார்கள்.மின்சார தேவையிருப்பவர்கள் ஒருபுறம் என்றால் அதையே தொழிலாக கொண்டு இருப்பவர்கள் நிலமை என்ன ஆவது? 
ஒரு படத்தில் நாகேஷ் ஜோதிடகாரராக இருப்பார்..அவரிடம் ஒருவர் ஜாதக பலன் பற்றி கேட்பார்..உங்களுக்கு கஷ்ட நேரம் 6 மாதம் வரைதான் என்பார்..அதற்கு பிறகு என பலன் கேட்க வந்தவர் கேட்பார்..உங்களுக்கு அதுவே பழகிவிடும் என்பாரர்..அதைப்போலவே
இரண்டு மாதம் வரைதான் நமக்கு மின்தடை பற்றியஇந்த கஷ்டம்...பிறகு...அதுவே நமக்கு பழகிவிடும்.தொலைதொடர்பில் மட்டும் எங்கள் ஊரினை சென்னையில் இணைத்து உள்ளார்கள். இரண்டு ஊருக்கும் ஒரே எஸ்டிடி பின்கோடுதான். ஆனால் மின்சார பயன்பாட்டில்..எங்களுக்கு 12 மணி நேரம்...சென்னையில் 2 மணி நேரம்...
சில சிக்கன நடவடிக்கையை அரசாங்கம் எடுப்பதுமூலம் ஒரளவு மின்தேவையை சமாளிக்கலாம்.
1.வீதியெங்கும் டியுப்லைட் கட்டி அரசியல் மீட்டிங் நடத்துவதை கட்டுபடுத்தலாம்.
2.திருமண மண்டபங்களில் இரவு முழுவதும் எரியும் சீரியல் விளங்குகளையும் தேவையில்லாத மின்விளக்குகளையும் அணைத்துவிடலாம்.
3.மின்திருட்டு எங்கு நடந்தாலும் அதைப்பற்றி தகவல் தருபவர்களுக்கு -தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் வசூலிக்கும்அபராத தொகையில் 10 சதவீதம் வெகுமதியாக கொடுக்கலாம்.
4.இப்போது வெயில் நேரம்.மாலை 6.30 வரை சூரியன் வெளிச்சம் இருக்கும். 5 மணிக்கே தெருவிளக்குகளை போடுவதை தவிர்த்து 6.30 மணிக்கு போடலாம்.
5.தொடர்ச்சியாக எரியும் தெருவிளக்குகளுக்கு பதில் ஒன்றுவிட்டு ஒன்று எரியவிடலாம்.(இருளோ என்று இருப்பதற்கு ஒரளவுக்கு வெளிச்சம் மேல் இல்லையா)
6.வீடுகளில் ஏ.சி.உபயோகிப்பவர்கள் 1 மணிநேரம் ஏ.சி.யை ஓடவிட்டு பின்னர் நிறுத்திவிட்டு பேனை உபயோகிக்கலாம்.(இன்று மின்- பற்றாக்குறை ஏற்பட அனைத்து வீடுகளிலும் ஏ.சி.உள்ளதும் ஒரு காரணம்)
7.சோலார் மூலம் தயாரிக்கும் உபகரணங்களுக்கு அரசு மானியம் தந்து ஊக்குவிக்கலாம்.
8.வீடு-ஹோட்டல்களில் வாட்டர் ஷீட்டர் உபயோகிப்பதை தவிர்த்து சோலார் வாட்டர் ஷீட்டரை உபயோகிக்கலாம்.
9.பெரிய பெரிய துணிகடை -பாத்திர கடை - நகை கடைகளில் வீணாக எரியவிடும் விளக்குகளின் வெளிச்சத்தை பாதியாக குறைக்கலாம்.
10.ஒரு யூனிட் மின்சாரம் 17 ரூபாய் வரை ஆகின்றது. தடையில்லா மின்சாரத்திற்கு அக்ரிமெண்ட் போட்டுள்ள தொழிற்சாலைகளுக்கு 1 யூனிட் 5 ரூபாய்க்கு கொடுப்பபதற்கு பதில் நாம் வாங்கும் தொகையான 17 ரூபாயே வசூலிக்கலாம்.இதனால் மின்சார வாரியம் ஒரளவாவது நஷ்டத்திலிருந்து மீளலாம்.
மேலே சொன்ன யோசனையெல்லாம் கனவில் தோன்றியது அல்ல...கரண்ட் இல்லாமல் - தூக்கமும் இல்லாமல் கொசுக்கடியில் தோன்றிய யோசனைகள்.
கடைசியாக மின்தடை பற்றிய எஸ்எம்எஸ் நகைச்சுவை ஒன்று...
முதல் நபர்:- வீட்டில் உள்ள ஸ்விட்ச்போர்டை தண்ணீர் விட்டு கழுவிக்கொண்டு இருக்கின்றார்..
இரண்டாவது நபர்:- எங்க...பார்த்து கரண்ட் ஷாக் அடிக்கபோகின்றது.
முதல் நபர்:- நீங்கள் வெளிஊர் ஆளா?
இரண்டாவது நபர்:- அட ...எப்படி கண்டுபிடித்தீர்கள்.
முதல் நபர்:-அதனால்தான் தமிழ்நாட்டு கரண்ட் பற்றி உங்களுக்கு தெரியவில்லை..


வாழ்க தடையில்லா மின்சாரத்துடன்.
வேலன்.


பின்குறிப்பு:-தொடர்ந்த மின்தடையால் பதிவுகள் எழுதமுடியவில்லை. இப்பொது மின்தடைக்கு ஏற்ப நேரத்தை உபயோகிக்க ஓரளவுக்கு பழகிக்கொண்டேன்.பதிவுகள் தொடரும்...