Thursday, February 28, 2013

வேலன்:-அடம்பிடிக்கும் சாப்ட்வேர்களை அன்இன்ஸ்டால் செய்ய

சில சாப்ட்வேர்களை நாம் இன்ஸ்டால் செய்வோம். சில நேரங்களில் சில சாப்ட்வேர்கள் தற்காலியமாக தேவைப்படும்.தேவை முடிந்ததும் அதனை நாம்அன்இன்ஸ்டால் செய்துவிடுவோம்.அவ்வாறு அன்இன்ஸ்டால் செய்தும் சில சாப்ட்வேர்கள் நமது கணிணியில் இருந்து வெளியாறாது.அவ்வாறான சாப்ட்வேர்களை சுலபமாக அன்இன்ஸ்டால் செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இதில் புதியதாக நிறுவிய சாப்ட்வேர்களும்,பழைய சாப்ட்வேர்களும் இருக்கும். மேற்புறம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ இருக்கும். இதில் சாப்ட்வேர்களை இன்ஸ்டால் அன்இன்ஸ்டரல் செய்ய கூடிய டேப்புகள் இருக்கும்.
வலதுபுறம் உங்களுக்கு ஆட்டோ ரன் மேனேஜர்,ஜங்க் பைல் கிளினர்,ப்ரவுசர் கிளினர்,மைக்ரோ ஆபிஸ் கிளினர்,விண்டோஸ் கிளினர் என விதவிதமான டேப்புகள் இருக்கும். தேவையானதை கிளிக் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


நீக்க விரும்பும் பைலை தேர்வு செய்ததும் இதில் உள்ள அன்இன்ஸ்டால் கிளிக்செய்யவும்.உங்களுக்கு மூன்றுவிதமான படிநிலைகள் கிடைக்கும். இறுதியில் அடம்பிடிக்கும் சாப்ட்வேர் காணமல் சென்றுஇருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் நாம் கம்யூட்டர் துவங்குகையில் உள்ள ப்ரோகிராம்களின் பட்டியலை காணலாம். அதன் மூலம் தேவையில்லாததை நீக்கிவிடலாம்.கீழே உள்ள் விண்டோவில் பாருங்கள்.


இதில் உள்ள விண்டோ கிளினர் கிளிக் செய்ய உங்கள் விண்டோவில நீங்கள் பயன்படுத்திய recent document history.startmanu history.clear the find file history.clear the printers.computers and people find history.ms paint history.ms wordpad.regedit .delete the start menu usage logs மற்றும். லோக்கல் ஹார்ட்டிஸ்கில் உள்ள ரீ சைக்கிள்பின் கிளிக்போர்ட் பைல்களை டெலிட் செய்துவிடும். 
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள
வாழ்க வளமுடன்.
வேலன்.

Tuesday, February 26, 2013

வேலன்:-ஏன்?எதற்கு? எப்படி?-கேள்வி பதில் புத்தகம்.

நமக்கு தெரிந்த விஷயம் கொஞ்சமே..தெரியாத விஷயங்கள் அதிகம் உள்ளது. வளரும் குழந்தைகள் விதவிதமான கேள்விகள் கேட்டு நம்மை வியப்பில் ஆழ்ததுவார்கள்.சில கேள்விகளுக்கு நமக்கு விடை தெரியும்.பெரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரியாது.அவ்வாறு நமக்கு தெரியாத கேள்விகளுக்கான விடையை இந்த புத்தகம் தருகின்றது.இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட புததகம் கிடைக்கும்.

வானவியல்அதிசயங்கள் அதிகம். அதனைபற்றி விரிவாக விளக்கி உள்ளார்கள்.
 பாம்பென்றால் படையும் நடுங்கும். இதில்பாம்புகளை பற்றி விரிவான தகவல்களை கொடுத்துள்ளார்கள்.

இது தவிர உலக நாடுகளில் உள்ள ஒவ்வொரு நாட்டினை பற்றியும் அதன் கலாச்சாரம்.நடை.உணவு.மக்கள் விலங்குகள் என அனைத்து தகவல்களும் இதில் உள்ளது.வண்ண வண்ண படங்களும் விதவிதமான கேள்விகளும் அதற்கான விளக்கங்களும் அருமையாக உள்ளது. படிக்கும் குழந்தைகள் அனைவருடைய இல்லங்களிலும் இருக்கவேண்டிய அவசியமான புத்தகம் இது. பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.

Sunday, February 24, 2013

வேலன்:-ஈக்கள்.மூட்டைபூச்சி மற்றும் கரப்பான்பூச்சிகளை டெக்ஸ்டாப்பில் வரவழைக்க


வெயில் காலம் ஆரம்பித்துவிட்டாலே ஈக்கள்தொல்லை ஆரம்பித்துவிடும.அதுவும் ஆடி மாதம் என்றால் ஈயை பற்றி சொல்லவே வேண்டாம். இந்த சாப்ட்வேரில்நாம் நமது கம்யூட்டர் மானிட்டரில் ஈக்களை கொண்டுவரலாம்.இதனை பதிவிற்க்கம் செய்தவுடன் 5  ஈக்களாக ஒவ்வொரு கிளிக்குக்கும் வரஆரம்பிக்கும.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
வீட்டிற்கு விருந்தினர் குழந்தைவந்திருந்தான். சாப்பிட்டு கை கழுவாமல் கம்யூட்டரில் விளையாடினால் இவ்வாறுதான் மானிட்டரின் உள்ளே ஈக்கள் மொய்கும் என்று சொன்னேன். உடனே ஹிட் எடுத்துவந்துவிட்டான்.ஈ மருந்து அடித்து ஈக்களை விரட்டபோகின்றானாம்...
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
------------------------------------------------------------------------------------------------------------
முன்பெல்லாம் தியேட்டருக்கு படம்பார்க்கசென்றால் நம்முடன் முட்டைபூச்சியும் உடன் வந்துவிடும். நாம் உஷாராக இல்லையென்றால் வீடு முழுவதும் பரவிவிடும். நாம் நமது கம்யூட்டரில் அதுபோல் மூட்டை பூச்சியை வரவழைக்கலாம்.  இதனை பதிவிறக்கம் செய்ததும் நமது டாக்ஸ்பாரில் அதனுடைய ஐகான் வந்து அமர்ந்துகொள்ளும். நமக்கு 5 மடங்குகளில் ஒவ்வொரு கிளிக்க்கும் வரஆரம்பிக்கும. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதனுடைய ஐ கானினை நாம் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் வேண்டிய செட்டிங்ஸ் நாம் செய்துகொள்ளலாம்.
பயன்படுத்திபாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
------------------------------------------------------------------------------------------------------------
இதைப்போல எனது முந்தைய கரப்பான்பூச்சியைப்பற்றிய பதிவு
கரப்பான்பூச்சிக்கு பயப்படாதவர்கள் இருப்பார்களா...
இன்றைய பதிவில் கம்யூட்டரில் கரப்பான்பூச்சியை
வரவழைப்பதை காணலாம். இந்த கரப்பான்பூச்சி 2 எம்.பி.க்குள்
தான் உள்ள சின்ன சாப்ட்வேர். இதை கிளிக் செய்து டவுண்லோடு செய்து கிளிக் செய்தபின்
உங்கள் கம்ப்யூட்டரில் கரப்பான் பூச்சி குறுக்கும்
நெடுக்கும் ஒடுவதை காணுங்கள்.எனது மகனுக்கு சின்ன வயதில் இந்த சாப்ட்வேரை போட்டு
நீ கம்யூட்டரில் ஏதாவது செய்தால் இந்த மாதிரி கரப்பான்பூச்சி
வரும்டா என சொன்னேன். குடுகுடு என ஓடியவன் ஒரு
கட்டையை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். கொஞ்சம்
நான் கவனிக்காமல் விட்டிருந்தால் அவ்வளவுதான். மானிட்டர்
காலியாகி இருக்கும்.இதை ஏன் இங்கு சொல்கின்றேன் என்றால்
உங்கள் மகனோ -மகளோ இதுபோல் நீங்கள் இல்லாதபோது
கட்டையை எடுத்துவந்து மானிட்டரில் உள்ள கரப்பான் பூச்சியை அடிக்கபோகின்றார்கள்.
பதிவினை பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
மேற்கண்ட மூன்று சாப்ட்வேர்களையும் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
வாழ்க வளமுடன்,
வேலன்.

Thursday, February 21, 2013

வேலன்:-கீபோர்ட் டிரேசர்.

நாம் கீபோர்ட்டில் எந்த கீ யை அழுத்தினாலும் எந்த அப்ளிகேஷனை திறந்து என்ன தட்டச்சு செய்தாலும் அது அப்படியே நாம் குறிப்பிடும் இடத்தில் பதிவு ஆகிவிடும். நாம் இல்லாதபோது நமது கம்யூட்டரில் யார் என்ன பணி செய்தாலும் நமக் குதெரிந்துவிடும. 1 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். 

இதில் உள்ள பற்சற்கரம் போன்ற ஐகானை கிளிக் செய்து ரீகார்ட் செய்யும் டாக்குமெண்ட் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். இதில் உள்ள சிகப்பு நிற ரிக்காரட் பட்டனை கிளிக் செய்து ரேக்கார்டினை ஆரம்பிக்கவும்.தேவையில்லாதபோது இதில் உள்ள ஸ்டாப் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இப்போது நீங்கள் சேமித்த வைத்திருந்த இடத்தில் சென்று பார்த்தீர்களே யானால் உங்களுக்கான கீபோர்டின் டிரேசர் காப்பி இருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒரு சாப்ட்வேரில் எவ்வளவுக்எவ்வளவு வசதிகள் உள்ளதோ அந்த அளவு ஆபத்தும் அதில் அடங்கிஉள்ளது. ப்ரவ்சிங் சென்டர்களில் சில விஷமிகள் இந்த சாப்ட்வேரினை பயன்படுத்தி உங்கள் அந்தரங்க தகவல்களை பாஸ்வேர்டகளை அறிந்துகொள்ளும் ஆபத்தும் உள்ளது.எனவே வெளியிடங்களுக்கு செல்கையில் எச்சரிக்கை தேவை...
பயன்படுததிப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, February 19, 2013

வேலன்:-தேவையான பைல்களை தேட NEED FILE SEARCH.


வழக்கமாக பைல்களை நாம் தேட Start-Search-For Files and Folders என முறையாக சென்று தேவையான பைல்களை தேடவேண்டும. ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் நமக்கு என்ன தேவையோ அதனை உடனே நிறைவேற்றி தேடி தருகின்றது. 700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக செய்யவும்.. இதனை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 

 இதில் Search Folder என்பதில் உங்கள் கணிணியில் உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.Files என்பதில் எதிரில் உள்ள Grapic.Video.Audio.Ms Word.Ms Excel.Archives..Pdf..exe..txt..*.,என எந்த பைல் வேண்டுமோ அதனை தேர்வு செய்யவும. 
கடைசியாக இதில் உள்ள Start Search கிளிக் செய்யவும்..இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதிலிருந்து தேவையான பைல்களை நாம் சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Friday, February 15, 2013

வேலன்:-ஜோடிப்பொருத்தம் கண்டுபிடிக்க

நீங்கள் திருமணத்திற்கு ஆண் அல்லது பெண் தேடுகின்றீர்களா? உங்களுக்கான சாப்ட்:வேர் இது.இதில் நம்மை பற்றி 7 கேள்விகள் கேட்கின்றார்கள்.விவரங்களை நாம் சப்மிட் செய்தால் நமக்கு ஏற்ற துணையை பற்றி விவரம் தெரிவிப்பார்கள்.இதனை முதலில் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
நீங்கள் ஆணா -பெண்ணா என்கின்ற விவரம் தெரிவிக்கவும். 
உங்கள் வயதினை தேர்வு  செய்யவும்.
 உங்கள் உயரம் எடை ஆகிய விவரங்கள் தெரிவிக்கவும்.
இறுதியாக இதில் உள்ள Finish பட்டனை கிளிக் செய்யவும். சிறிது நேரம் காத்திருக்கவும். சர்வர் கன்க்ட் ஆகும்.
டேட்டா பேஸினை  தேர்வு செய்யவும்.
 இறுதியாக உங்களுக்கான துணைபற்றி தகவல்கள் கிடைக்கும. கம்யூட்டர் உலகத்தில் வரன்பற்றிய தகவல்கள்தான் எவ்வளவு சுலபமாகிவிட்டது பார்த்தீங்களா....பிடித்திருந்தால் மேற்கொண்டு தகவல்கள் பரிமாறிக்கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.

Wednesday, February 13, 2013

வேலன்:-மனித உடல் என்சைக்லோபீடியா.

இறைவன் படைப்பில் அனைத்துமே அதியசங்களே..நமது உடற்கூறு பற்றி அக்குவேறு ஆணிவேறாக இந்த புத்தகம் அலசுகின்றது. படிக்கின்ற குழந்தைகள் முதல்  மெடிக்கல் படிக்கின்றவர்கள் வரை அவசியம் அறிந்துகொள்ளவேண்டிய அறிய தகவல்கள் உள்ளது.16 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இரத்தத்தை பற்றி விரிவாக விவரித்துள்ளார்கள்.


மனித உடலின் நரம்புகளை பற்றியும் அதன் நெட்ஓர்க்குகளையும் அழகாக விவரித்துள்ளார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உறக்கும் முறையையும உறக்கும் நேரத்தையும் அழகாக விவரித்துள்ளார்கள்.
படிக்கும் ஆர்வம் உள்ள அனைவரும் இதனை பயன்படுத்தி உடற்கூறு பற்றி அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்                                                                                                                             வேலன்.

Monday, February 11, 2013

வேலன்:-பாண்ட்களை சுலபமாக சேர்க்க -நீக்க

போட்டோஷாப்.டிடிபி.வேர்ட்,எக்ஸெல் என பாண்ட்களை எங்கு எங்கு உபயோகிக்கின்றோமோ அந்த இடங்களில் இந்த பாண்ட் லோடர் மிகவும் பயன்படும். விதவிதமான பாண்ட்களை விரும்புகின்றவர்கள் அதனை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்துவிடுவார்கள். மொத்தமாக பாண்ட்கள் சேர்ந்து அவசரத்திற்கு ஒரு டிசைன் கிரியேட்டிவ் செய்யவேண்டுமானால் நாம் அனைத்து பான்ட்களையும் ப்ரிவியு பார்க்கவேண்டும். ஆனால் அதனை தவிர்த்து தேவையானபோது மட்டும் பாண்ட்டை அப்லோடு செய்து பயன்படுத்திவிட்டு கையோடு அதனை அன்இன்ஸ்டால் செய்துவிடலாம்.இதனை நமக்கு ஹார்டிஸகில் தேவையில்லாத பைல்கள் சேர்வதை தடுக்கலாம். 200 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய 
இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள செலக்ட்பாண்ட் கிளிக் செய்து உங்களுக்கான பாண்ட்டை தேர்வு செய்யுங்கள். அடுத்து இதில் உள்ள லோடு பாண்ட் கிளிக் செய்யுங்கள்.உங்களது பாண்ட்ஆனது சி டிரைவில் சென்று அமர்ந்துகொள்ளும். உங்கள் பணியை செய்துமுடியுங்கள். அடுத்து உங்கள் அனைத்து வேலைகளும் முடிந்தபின் இந்த சாப்ட்வேரினை மீண்டும் கிளிக்  செய்து உங்களுக்கான பாண்டை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள அன்லோடு பாண்ட்ஸ் கிளிக் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவீல் பாருங்கள்.

உங்களது பாண்ட் சிடிரைவிலிருந்து நீக்கியபின் உங்களுக்கு கீழ்கண்ட தகவல் வரும்.


நீங்கள் இன்ஸ்டால் செய்த பாண்ட்; ஆனது இப்போது காணாமல் போய்இருக்கும். இந்த வசதி உள்ளதால்  நாம் அதிகபடியான பாண்ட்களை பயன்படுத்த முடியும்.சுலபமாக இன்ஸ்டால் செய்யலாம். வேலை முடிந்ததும் அன்இன்ஸ்டால் செய்யலாம்.பயன்படுத்திப்பாருங்கள்..கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, February 6, 2013

வேலன்:-ஐகானில் நமது புகைப்படத்தினை கொண்டுவர



கம்யூட்டர் பயன்படுத்துகையில் நாம் விதவிதமான போல்டர்கள் வைத்திருப்போம். ஒவ்வொரு போல்டர்களும் டீபால்டாக ஒரே விதமான ஐகான் வைத்திருப்பார்கள். ஆனால் கம்யூட்டரிலேயே சில ஐகான் படங்களை கொடுத்திருப்பாரகள்.ஆனால் நாம் விரும்பும் புகைப்படங்களை நாம் ஐகான் படங்களாக கொண்டுவரலாம். அதற்கு இந்த சின்ன சாப்ட்வேர் நமக்கு பயன்படுகின்றது.8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய நீங்கள் இங்குகிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம்செய்து இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் மேல்புறம் உங்களுக்கு நிறைய டேப்புகள் கொடுத்திருப்பார்கள். கீழே உள்ள படத்தினை பாருங்கள்.
முதலில் நீங்கள் உங்கள் ஐ-கானுக்கான அளவு விண்டோவினை தேர்வு செய்துகொள்ளவும்.பின்னர் இதில் உங்கள் கம்யூட்டரில் உள்ள உங்களுடைய புகைப்படத்தினை இம்போர்ட் செய்துகொள்ளுங்கள்.நீங்கள் வேறு புகைப்படங்கள் எடுக்க விரும்பபினாலும் நீங்கள் இதில் உள்ள கேப்ஸர் கிளிக் செய்தால் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.அதில் உள்ள பாக்ஸினை அட்ஜஸ்ட் செய்து தேவையான அளவினை தேர்வு செய்தபின் அதில் உள்ள டிக் மார்கினை கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான புகைப்படங்கள் வீடியோவாக இருந்தால் வீடியோவினை ஓடவிட்டு இதில் உள்ள ஸ்கீரீன்ஷாட் கிளிக் செய்து புகைப்படத்தினை தேர்வு செய்துகொள்ளலாம்.
அளவுகளில் மாற்றங்களோ பெயரோ கொண்டுவரவேண்டுமானால் இதில் உள்ள டூல்ஸ் வீண்டோவினை நீங்கள் பய்ன்படுததிக்கொள்ளலாம்.
அதன் கீழே உள்ள டூல்ஸ் விண்டோவினை பாருங்கள்.

இப்போது நீங்கள் புகைப்படம் ரெடிசெய்துவிட்டீர்கள்.சுலபமாக எடுக்கும் இடத்தீல் அதனை சேவ் செய்துவிடுங்கள்.இப்போது பைல்மெனுவில் உள்ள இமேஜ் இம்போர்டிங் கிளிக் செய்யுங்கள்.இப்போது வரும் விண்டோவினை பாருங்கள்.

புகைப்படத்தின் முகம் மட்டும் எடுத்தால்தான் நமது ஐகான்கள் பார்க்க அழகாக இருக்கும். எனவே இதில் நான்காவதாக உள்ள டேபினை கிளிக் செய்தால் வரும்  ஸ்டேன்டர்ட் அளவுகளில் நாம் நமது  இமேஜினை ஸ்டேன்டர்டாக பெறலாம்.அல்லது நாம் விரும்புமாறு அளவு தேர்வு செய்ய இதில் மூன்றாவதாக உள்ள ஐகானினை கிளிக் செய்ய உங்களுக்கான படத்தின் அளவினை நீங்கள் எளிதாக தேர்வு செய்யலாம்.பின்னர் இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுடைய படம் சிறுசிறு கட்டங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெறும். நீங்கள் மீண்டும் கிளிக் செய்து உங்கள் புகைப்பபடத்தினை எளிதில் எடுக்கும் வண்ணம் சேவ் செய்யுங்கள். புகைப்படம்மானது ஐகான் பைலாக சேவ் ஆவதை கவனியுங்கள்.இப்போது நமது புகைப்படத்துடன் கூடிய ஐகான் ரெடி. இதனை எவவாறு நமது கம்யூட்டரில் ஐ-கானாக மாற்றுவது. நீஙகள் உங்கள் கம்யூட்டரில ஏதாவது ஒரு போல்டரை ஓப்பன் செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இப்போது இந்த போல்டரில் நான்கு ஐகான்கள் உள்ளது. இதில் ஏதாவது ஒரு கான் மீது ரைட்கிளிக்செய்யுங்கள்.கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்


இதில் உள்ள பிராபர்டீஸ் கிளிக் செய்யுங்கள்.வரும் விண்டோவில் கஸ்டமைஸ் கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் உள்ள சேஞ்ச் ஐகான் கிளிக் செய்ய வரும் விண்டோவில் உங்கள் புகைப்படத்துடன் கூடிய ஐகானை தேர்வு செய்யுங்கள்.கீழே உள்ள விண்டோ உங்களுக்கு கிடைக்கும்.

ஓகே தாருங்கள். இப்போது உங்களுக்கான போல்டரில் சென்று பார்த்தால் போல்டர் ஐகானில் உங்களது படம் இடம் பெற்று இருக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் புகைப்படங்களையும் இவ்வாறு ஐகான்களாக மாற்றி பின்னர் அவர்கள் சம்பந்தமான பைல்களை அதில் போட்டுவிட்டால் எடுத்து பயன்படுத்த மிகவும் சுலபமாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.

பின்குறிப்பு:- இன்று (07.02.2013) எனது திருமணநாள்.உங்கள் அனைவரது அன்பும் ஆசிர்வாதமும் வேண்டி.....

வாழ்க வளமுடன்
வேலன்.

Sunday, February 3, 2013

வேலன்:-போட்டோ விஸ்



புகைப்படங்களில் விதவிதமான மாறுதல்கள் செய்யவும் ரகசிய தகவல்களை அனுப்பவும் இந்த போட்டோ விஸ் பயனபடுகினறது;. 7 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்https://download.cnet.com/photoviz/3000-12511_4-10337074.htmlசெய்யவும்.;. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.



இதன் வலது புறம் நமது புகைகப்படங்களின் டைரக்டரியும் இடது புறம் நமது புகைப்டங்களின் தம்ப்நெயில் வியுவும் கிடைக்கும்.
  கீழே உள்ள விண்டோவில் அதற்கான டூல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.


இதில் உள்ள ஆப்ஷனை பயன்படுத்தி புகைப்படங்களில்  பார்மெட்  மாற்றுவது;,அளவுகளை மாற்றுவது.ஆட்டோ கான்ட்ரஸ்ட்,ஆட்டோ கலர்,ஆட்டோ லெவல் போன்ற பணிகளை செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேற்கண்ட பணிகள் அல்லாது இமேஜ் ப்ராபர்டீஸ் ஆப்ஷன்களும் நாம் சுலபமாக செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இந்த சாப்ட்வேரில கூடுதல் வசதியாக நாம் புகைப்டங்கில் தகவல்கள் அனுப்பலாம். சாதாரணமாக தகவல்களை அனுப்பிய புகைகப்படங்களை பார்த்தால் நமக்கு வித்தியாசம் தெரியாது.இந்த சாப்ட்வேரரில் புகைப்டங்களை திறந்து பின்னர் பாஸ்வேர்ட் கொடுதத்ததால்தான் தகவல்ககளை நாம் பார்க்க முடியும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் பைல் ப்ராபர்டிஸ்,புகைப்படங்களை அளவு மாற்றுதல்,சுழற்றுதல்,மொத்தமாக அளவு மாற்றுதல் போன்ற பணிகளை செய்யலாம்.பயன்படுத்திப்பர்ருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.