புதுவருடம்.பிறந்தநாள்,திருமண நாள் என அனைத்து விஷேஷங்களுக்கும் நாம் வாழ்த்து அட்டையை வாங்கி அனுப்புவோம். அந்த வாழ்த்து அட்டையை நாமே தயாரித்தால் எவ்வாறு இருக்கும. நமக்கு விரும்பிய புகைப்படங்களையும் -நமது புகைப்படங்களையும் இணைக்கலாம்,-விரும்பிய வாசகங்களை சொந்தமாக எழுதி தயாரிக்கலாம். 24 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கார்டின் அளவினை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர் எந்த மாடலில் உங்களுக்கு கார்ட் வேண்டுமோ அதனை தேர்வு செய்திட இதில் வலதுபுறம் உள்ள மாடலில் ஒன்றை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டொவில் பாருங்க்ள.
நாம் எந்த விஷேஷத்திற்காக வேண்டுமோ அதற்கான கார்டினையும் டிசைனையும் தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பார்க்கவும்.
இதில் முதற்பக்கம் இரண்டாவது பக்கம்.மூன்றாவது பக்கம் கடைசி பக்கம் என நாம் ஒவ்வொரு பக்கத்திற்கும் வேண்டிய புகைப்படத்தினையும் வார்த்தைகளையும் தேர்வு செய்யலாம்.
விதவிதமான கார்ட்டுன்களும் ்வாசகங்களையும் இணைத்துள்ளார்கள்.
நமது விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்லைடரை அட்ஜஸ்ட் செய்து கார்டினை அழகுப்படுத்தலாம்.
ஒவ்்வொரு பக்கத்தினையும் வடிவமைத்தவுடன் நீங்கள் இதில் ப்ரிவியு பார்த்து பின்னர் பிரிண்ட் செய்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.