வேலன்:- வாட் கால்குலேட் செய்ய

இப்போது எந்த பொருட்கள் வாங்கினாலும் வாட் வரி என் போடுகின்றார்கள். நாம் வாங்கும் பொருளின் வரி எவ்வளவு - வரி இல்லாமல் எவ்வளவு என சுலபமாக அறிந்து கொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 
300 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் வாட் சேர்த்து வாட் சேர்க்காமல் என இரண்டு வித காலங்கள் கொடுத்துள்ளார்கள்.
தேவையான டேபிள் தேவையான தொகையை தட்டச்சு செய்த கால்குலெட் கிளிக் செய்திட உங்களுக்கான விடை உடனே கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட

அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் மூடிவிட
நாம் பணிபுரியும் அப்ளிகேஷன்களை சிலசமயம் அவசரமாக மூடிவிட்டு செல்லவேண்டிய சந்தர்ப்பம் அமையும். அந்த சமயங்களில் ஒவ்வொரு அப்ளிகேஷன்களாக தேர்வு செய்து பின்னர் அதனை மூடவேண்டும். ஆனால் இநத சின்ன சாப்ட்வேரில் அனைத்து அப்ளிகேஷன்களையும் நொடியில் நாம் மூடிவிடலாம். 34 கே.பி. அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்தததும் உங்களுக்கு கீழ்கண்ட ஐகான் டெக்ஸ்டாப்பில் கிடைக்கும்.
இப்போது நீங்கள் பணிபுரியும் அப்ளிகேஷன்களை ஒட்டுமொத்தமாக மூடிவிடடு செல்லவிரும்பினால் இந்த ஐகானை கிளிக் செய்திடவும். அனைத்து அப்ளிகேஷன்களும் மறைந்து(குளோஸ் )ஆகிவிடும்.வேர்ட்,எக்ஸல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏதும் செய்திருந்தால் குளோஸ் ஆகும் முன் உங்களிடம் சேவ் செய்திட அனுமதிகேட்கும்.மாற்றங்களை சேமிக்க விரும்பினால் யெஸ் கொடுத்து கொடுத்துவிடவும்.வேண்டாம் என்றால் நோ கொடுக்கவும். அவ்வளவுதான் நொடியில் உங்களுக்கு அனைத்து அப்ளிகேஷன்களும் மறைந்துவிடும். பயன்படுத்திப்பர்ருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
 வாழ்க வளமுடன் 
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஸ்கேனர் பிரிட்டர்.

பிரிண்டருடன் சேர்த்து ஸ்கேனர் வாங்கினாலும் சரி - ஸ்கேனர் மட்டும் தனியாக வாங்கினாலும் சரி - அதனுடன் சாப்ட்வேர் கொடுப்பார்கள். சிலசமயம் அந்த ஸ்'கேனர் சாப்ட்வேர் சரியாக வேலை செய்திடாது. அவ்வாறான சமயங்களில் தனியாக ஸ்கேனர் சர்பட்வேர் வைத்து நாம் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளலாம்.10 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
 இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்து நமக்கு ஸ்கேனிங் டாக்குமெண்ட எந்த பார்மெட்டில்வேண்டுமோ அந்த பார்மெட்டினையும்.தேர்வு செய்துகொள்ளலாம்.
இதில் ப்ரிவியூ பார்க்கும் வசதியையும் கொண்டுவரலாம். மேலும் நாம் ஸ்கேன் செய்த டாக்குமெண்டினை நேரடியாக பிடிஎப் பைலாகவும் டெக்ஸ்ட் பைலாகவும் சேமித்துவைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
பயன்படுத்த் எளிதாக உள்ளதால் அவசரத்திற்கு இதனை பயன்படுத்திக்கொள்ளலாம். இனி ப்ரிட்டருடன் வரும் ஸ்கேனர் சாப்ட்வேர் பழுதானாலும் இதன் மூலம் சரிசெய்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் .
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வாழ்த்துஅட்டையை நாமே தயாரிக்க

புதுவருடம்.பிறந்தநாள்,திருமண நாள் என அனைத்து விஷேஷங்களுக்கும் நாம் வாழ்த்து அட்டையை வாங்கி அனுப்புவோம். அந்த வாழ்த்து அட்டையை நாமே தயாரித்தால் எவ்வாறு இருக்கும. நமக்கு விரும்பிய புகைப்படங்களையும் -நமது புகைப்படங்களையும் இணைக்கலாம்,-விரும்பிய வாசகங்களை சொந்தமாக எழுதி தயாரிக்கலாம். 24 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் கார்டின் அளவினை முதலில் தேர்வு செய்துகொள்ளுங்கள். பின்னர் எந்த மாடலில் உங்களுக்கு கார்ட் வேண்டுமோ அதனை தேர்வு செய்திட இதில் வலதுபுறம் உள்ள மாடலில் ஒன்றை தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டொவில் பாருங்க்ள.

நாம் எந்த விஷேஷத்திற்காக வேண்டுமோ அதற்கான கார்டினையும் டிசைனையும் தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பார்க்கவும்.
 
இதில் முதற்பக்கம் இரண்டாவது பக்கம்.மூன்றாவது பக்கம் கடைசி பக்கம் என நாம் ஒவ்வொரு பக்கத்திற்கும் வேண்டிய புகைப்படத்தினையும் வார்த்தைகளையும் தேர்வு செய்யலாம்.
 விதவிதமான கார்ட்டுன்களும் ்வாசகங்களையும் இணைத்துள்ளார்கள்.
 நமது விருப்பமான புகைப்படத்தினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்லைடரை அட்ஜஸ்ட் செய்து கார்டினை அழகுப்படுத்தலாம்.


ஒவ்்வொரு பக்கத்தினையும் வடிவமைத்தவுடன் நீங்கள் இதில் ப்ரிவியு பார்த்து பின்னர் பிரிண்ட் செய்து எடுத்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட

இணையத்தில் வீடியோக்களை நாம் யூடியூப் மூலம் பார்ப்போம். ஆனால் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட நிறைய சாப்ட்வேர்கள இருந்தாலும் இந்த சாப்ட்வேர் சிறந்ததாக உள்ளது. 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளி்க் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில நாம் யூடியூபின் யூஆர்எல முகவரியை பேஸ்ட் செய்யவும்.அடுத்து இதில் உள்ள டூல்ஸ் டேபினை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Convert Video Formats.Want only Audio.Save only Favorite Scence.Resize the Video Size.Check the video Quality Information என ஐந்துவிதமான ஆப்ஷன்கள் கொடுத்திருப்பார்கள். தேவையானதை கிளிக் செய்துகொள்ளவும்.
 இறுதியாக இதில் உள்ள டவுண்லோடு கிளிக் செய்திட உங்களுக்கு உங்களுக்கான வீடியோ பதிவிறக்கம் ஆகிவிடும். 


பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-குழந்தை வளர்ப்பு கேள்வி பதில்கள்.

நாம் இருவர் நமக்கு இருவர் என்பது சென்று நாம் இருவர் நமக்கு ஒருவர் என குடும்பம் சுருங்கிவிட்டது. அதுபோல கூட்டு குடும்பங்களும் இப்போது குறைந்துவருகின்றது.இருக்கும் ஒரு சில கூட்டு குடும்பங்களும் இப்போது வ ரும் டிவி சீரியல்கள் பார்த்து சிதைந்துவருகின்றது.சரி இதனால் என்ன பாதிப்பு என்கின்றீர்களா? முன்பு கூட்டு குடும்பங்களில் இருக்கும் சமயம் குழந்தையை பார்த்துகொள்ள நிறைய ஆட்கள் இருந்தார்கள்.அவர்களுக்கு வரும் நோய் - தேவைகள்-ஏதாவது ஒன்று என்றால் அது பற்றி ஆலோசனை சொல்ல நிறைய நபர்கள் இருந்தார்கள். இப்போது குழந்தைக்கு ஏதாவது ஒன்று என்றால் டாக்டரிடம் சென்று ஆலோசனை கேட்க வேண்டியுள்ளது.இந்த புத்தகத்தில் பிறந்த குழந்தை முதல் 12 வயதுவரை வரும் சின்ன சின்ன சந்தேகங்களுக்கு கேள்வியையும் விரிவான பதிலையும் கொடுத்துள்ளார்கள்.4 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
பதினோறு தலைப்புகள் கொடுததுள்ளார்கள். ஒவ்வொன்றும் அறிந்துகொள்ள வேண்டியதுதான் .
குழந்தைகள் தூங்குவது முதற்கொண்டு குழந்தைகளுக்கு எந்த எந்த விளையாட்டு பொருட்கள் கொடுக்கலாம் உணவு என்ன கொடுக்கலாம் என சின்ன சின்ன விஷயங்கள முதல் பெரிய பெரிய விஷயங்கள் வரை கேள்விகள் கேட்டு அதற்கு விரிவான பதிலாக கொடுத்துள்ளார்கள்.
புதியதாக திருமணமானவர்கள்,வளைகாப்பு முடிந்து பிரசவத்திற்காக காத்திருப்பவர்கள் என அனைவருக்கும் பயனுள்ள புத்தகம் இது.படித்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-எண்கள் சேர்ககும் மேஜிக் விளையாட்டு

விளையாட்டுக்கான பதிவுகளை போட்டு நீண்ட நாட்களாகின்றது. அதனால் இன்று சிறிய விளையாட்டினைகாணலாம். முன்பு எல்லாம் திருவிழா சமயங்களில் சிறிய பிளாஸ்டிக் டப்பாவில் ஒன்றிலிருந்து பதினைந்து வரை எண்கள் இருக்கும். ஒரே ஒரு காலி கட்டம் இருக்கும். ஒவ்வொரு கட்டமாக நகர்த்தி நாம் வரிசையாக எண்களை சேர்க்க வேண்டும். விளையாட அருமையாக இருக்கும. அந்த விளையாட்டு இன்றைய நவீன உலகில் கம்யூட்டரிலும் வந்துள்ளது700 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக்செய்யவும்.இதனை இன்ஸ்டால்  செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் காலியாக உள்ள இடத்தில் தேவையான எண்ணை நகர்த்தி வைத்து எண்களை வரிசையாக சேர்க்க வேண்டும். இதிலியே நமக்கு நேரம் கொடுத்துள்ளார்கள். 
நாம் வெற்றி பெற்று விட்டால் நமது பெயரை பதிவு செய்துகொள்ளலாம்.இதில் உள்ள நியூ கேம் கிளிக் செய்திட வெவ்வேறு அலைன்மெண்டில் எண்கள் டிஸ்பிளே ஆகும். விளையாடிப்பாருங்கள. பொழுது நன்கு போகும்..
 வாழ்க வளமுடன் 
வேலன்


பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-மனித உடல் பற்றி அறிந்துகொள்ள


நமது உடலின் அமைப்பை எளிதில் அறிந்துகொள்ள இந்த பிடிஎப் புத்தகம் உதவுகின்றது. 5 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து புத்தகத்தை திறந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 ஒவ்வொரு தலைப்பிலும விரிவாக விவரித்துள்ளார்கள்.

 எளிய படங்கள் உள்ளதால் படிக்கும் மாணவர்கள் ப்ராஜட் செய்திட இதிலிருந்தே நோட்ஸ் எடுத்துக்கொள்ளலாம்.
 மாரடைப்பு எதனால் ஏற்படுகின்றது:. முதலுதவி போன்ற விவரங்களையும்  கொடுத்துள்ளார்கள்.


குழந்தைகளுக்கு மிகவும் பயன்படும் புத்தகம் இது. படித்துப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
 வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோஷாப்-பிரஷ்களின் டிசைனகளை அறிநதுகொள்ள

போட்டோஷாப்பில் பிரஷ்கள் நாம் பயன்படுத்தி வருகின்றோம். நிறைய டிசைன்கள் சேர்ந்து ஒரே பிரஷ் பைலாக நமக்கு கிடைக்கும் நாம் போட்டோஷாப்பினை திறந்து அதில் அந்த பிரஷ் பைலினை லோட் செய்து பின்னர்தான அதில் உள்ள டிசைன்களை பார்க்க முடியும் ஆனால் இந்த சின்ன சாப்ட்வேரில் நாம் நம்மிடம் உள்ள பிரஷ் பைல்களில் வரும் டிசைன்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். கே.பி. அளவில் உள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்குகிளிக் செய்யவும்.இதனை ஒப்பன் செய்ததும் உங்களுக்கு வரும் விண்டோவில் உங்களிடம் உள்ள பிரஷ் பைலினையோ பிரஷ் போல்டரையோ தேர்வு செய்யவும்.
 இதில் வலதுபுறம் உங்களுக்கு பிரஷ்களின் தம்ப்நெயில் அளவு வரும் தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம். மேலும் பிரஷ்களின் நிறமும் பின்புற நிறத்தினையும் தேர்வு செய்துகொள்ளலாம்.
 போல்டர்களை தேர்வு செய்யும் சமயம் அதில் உள்ள பைல்கள் கிடைக்கும்.ஒவ்வோரு பைல்களாக நர்ம் தேர்வு செய்தால் அதில் உள்ள டிசைன்கள் நமக்கு பக்கத்தில் ப்ரிவியு தெரியும்.
அதனை தம்ப்நெயில் படங்களாகவோ - ஐகான்களாகவோ எக்ஸ்போர்ட் செய்துகொள்ளலாம். இதன் மூலம் நாம் நம்மிடம் உள்ள பிரஷ்களின் டிசைன்களை போடடோஷாப் துணையில்லாமல் எளிதில அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-எம்.பி.3 பைல்களை டிவிடியாக மாற்ற

நம்மிடம் உள்ள எம்.பி.3 பாடல்களை ஒன்றாக சேர்த்தோ - தனிதனியாகவோ டிவிடி பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 19 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதில் உள்ள Add Files கிளிக் செய்து உங்களிடம் உள்ள எம்.பி.3 பைல்களை தேர்வு செய்யவும்.பின்னர் நீங்கள் டிவிடியாக சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.
 இறுதியாக இதில் உள்ள Start கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 பிறகு டிவிடியாக மாற்றும் பணி நடைபெறும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 அனைத்து பணிகளும் முடிந்ததும் உங்களுக்கு Done என தகவல் வரும்.
நீங்கள் சேமித்து வைக்க சொன்ன இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான எம்.பி.3 பாடல்களானது டிவிடியாக மாறிற இருக்கும். டிவிடியின் முகப்பினை நீங்கள் விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம். பயனப்டுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-எளிய முறையில் படங்களை வரைய-பிடிஎப் புத்தகம்

சித்திரம் கைபழக்கம் செந்தமிழ் நாபழக்கம் என்று சொல்லுவார்கள். வரைவரையதான சித்திரம் அழகுபெறும். இந்த புத்தகத்தில் எளிய முறையில் பச்சைக்கிளி,பூக்கள்,விலங்குகள் என வரைவதை எளியமையாக விளக்கிஉள்ளார்கள்.7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். 
 பூக்களை விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள். இதில் சூரியகாந்தி்ப்பூவினை ஒவ்வொரு ஸ்டெப்பாக வரைவதற்கு எளிய முறையில் சொல்லி கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 படம் வரைவதற்கு உபயோகிக்கும் பென்சில் வகைகளையும் உபயோகிக்கும் முறையையும் எளிய முறையில் விளக்கிஉள்ளார்கள்.கீழேஉள்ள விண்டோவில் பாருங்கள்.
குழந்தைகளுக்கு இதனை பதிவிறக்கம் செய்து கொடுத்துவிடுங்கள் இரண்டுநாட்கள் விடுமுறையில் உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். அவர்களாகவே வரைந்துகொண்டு இருப்பார்கள். பயன்படுத்திப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அட்லஸ் ஆப் யூனிவர்ஸ் -பிடிஎப் புத்தகம்.

கற்றது கையளவு -கல்லாதது உலகளவு என்கின்ற சொல்லுக்கு ஏற்ப கற்றுக்கொள்வது உலகில் இன்னும் எவ்வளவோ உள்ளது. அகண்ட உலகம் பற்றி அறிந்து கொள்ள இந்த சின்ன புத்தகம் உதவுகின்றது.50 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை நீங்கள் திறந்ததம் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் தெரியும.
 இதில் நமக்கு தெரியாத பல ்விஷயங்களை எளிய முறையில் படங்களுடன் விளக்கி உள்ளார்கள்.
படிக்கின்ற குழந்தைகள் வானத்தை பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றவர்களுக்கு இந்த புத்தகம் அறிய ஒன்றாகும. ப்ரோஜட் ஓர்க் செய்வதற்கு இதில் நிறைய படங்களை  கொடுத்துள்ளார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன்
 வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-புகைப்படங்களை வீடியோ பைல்களாக மாற்ற

நமது இல்லங்களில் நடைபெறும் பெரிய பெரிய விஷேஷங்களை நாம் வீடியோ மற்றும் போட்டோக்கள் எடுப்போம். அதற்கென உள்ள கடைகளில் கொடுத்து வேலைகளை செய்துகொள்வோம்.ஆனால் நமது இல்லங்களில நடைபெறும் சின்ன சின்ன விஷேஷங்களுக்கு நாம் கடைக்கு சென்று ஆர்டர் கொடுத்தால் கட்டுபடியாகாது. நாமே நமது புகைப்படங்களை வீடியோவாக மாற்றவதற்கும் சிலைட்ஷோ கொண்டுவருவதற்கும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் நம்மிடம் உள்ள் புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.புகைப்படங்கள் தேர்வு ஆகிவிடும். நீங்கள் கிளிக் செய்யும் புகைப்படம் வலதுபுற விண்டோவில் பெரியதாக ப்ரிவியூ தெரியும்.
புகைப்படங்களை டிராப் அன்ட் டிராக் முறையில் இழுத்துவந்து கீழே உள்ள டைம்லைன் விண்டோவில் விடவும். உங்களுக்கு புகைப்படங்கள் வரிசையாக வரும். பிறகு இதில் உள்ள ப்ராஜெக்ட் ஆப்ஷனை கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Main.Audio.Templates ஆகிய மூன்று டேப்புகள் ஓப்பன் ஆகும். இதில் உள்ள மெயின் கிளிக் செய்திட உங்களுக்கு புகைப்படத்தின் அளவு மற்றும் ஸ்லைட் டியூரஷன் டைம் மற்றும் டிரான்ஸ்ஷக்ஷன் டைம் கிடைக்கும் தேவையானதை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ஆடியேர் தேர்வு செய்து நம்மிடம் உள்ள நமக்கு விருப்பமான பாடலினை தேர்வு செய்யவும்.இறுதியாக ஓ.கே.தரவும்.
உங்களுக்கான பணி நடைபெறுகையில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.
இறுதியாக இதில் உள்ள பப்ளிஷ் கிளிக் செய்திட நமக்கு யூடியூப் மற்றும் ஏவிஐ ஆப்ஷன் கிடைக்கும் நமக்கு தேவையானதை கிளிக் செய்திட நமக்கான வீடியோ புகைப்படம் கிடைக்கும. யூடியூப் பில் பதிவேற்றம் செய்திட நாம் யூடியூப் அக்கெவுண்ட்டில் நுழைந்து பதிவேற்றம் செய்யலாம். இது முற்றிலும் இலவச சாப்ட்வேர் ஆகும்.பயன்படுத்திப்பாருங்கள் கருத்துக்களை கூறுங்கள். வாழ்க வளமுடன் 
வேலன்.

பின்குறிப்பு:- 

கல்வி.சமையல்.மருத்துவம்.ஆன்மீகம்.தத்துவம் என பல்வேறு தலைப்புகளில் பிடிஎப் வடிவில் நிறைய புத்தகங்கள் கைவசம் உள்ளன.நீங்கள் விரும்பினால் ஒவ்வொன்றாக பதிவிடுகின்றேன்.என்ன சொல்கின்றீர்கள்..?  

உங்கள் மேலான பதில்களை எதிர்பார்த்து...
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க

திருச்சியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பருடய நண்பர் திருமணத்திற்கு எடுத்த புகைப்படங்கள் வைத்திருந்த கேமரா மெமரி கார்டினை தவறுதலாக டெலிட் செய்துவிட்டோர். அதில் வைத்திருந்த அனைதது போட்டோகளும் டெலிட் ஆகிவிட்டது.போட்டோக்களை மீண்டும் கொண்டுவர ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என கேட்டடார். இணையத்தில் தேடும் சமயம் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 10 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://www.stellarinfo.co.in செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள Recover Photo.Audio & Video கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நீங்கள்  கணிணியில் உள்ள டிரைவிலிருந்தோ - எக்ஸ்டர்னல் மெமரி கார்டிலிருந்தோ போட்டோக்களை ரெக்கவரி செய்யலாம். இதில் நமக்கான டிரைவ் தேர்வு செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் குறிப்பி்ட்ட டிரைவிலிருந்து போட்டோ,வீடியோ.ஆடியோ ஆகியவனை ரெக்கவரி ஆகும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
புகைப்படங்கள் வீடியோக்கள் ப்ரிவியூபார்க்கும் வசதியும் உள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் கீழே உள்ள ரெக்கவரி கிளிக செய்திட உங்களுக்கான புகைப்படங்கள் வீடியோக்கள் ஆடியோக்கள் ரேக்கவரி ஆகும். கீழே உள்ள விணடோவில் பாருங்கள்.
இறுதியாக இதில் ப்ரிவியூவினையும் காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
அனைத்து பைல்களும் ரெக்கவரி ஆனதும் இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
நாம் சேமிக்கும் இடத்தினை தேர்வு செய்து அதற்கான இடத்தினை குறிப்பிட்ட உடன் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உங்களுக்கு ஆடியோ,வீடியோ.புகைப்படங்கள் தனிதனி போல்டராக உள்ளதை காணலாம். தேவையானதை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்தி்ப்பாருங்கள.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...