வீடியோ மற்றும் புகைப்படங்களை கையாள்வதற்கு சிறந்த தாக இந்த வீடியோ ப்ளிக் சாப்ட்வேர் பயன்படுகின்றது. நம்மிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.32 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதன் கீழ்புறம் கீழ்கண்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் Share,Edit,Create என மூன்று காலங்கள் கொடுத்துள்ளார்கள். முதலில் உள்ள Share காலத்தில் Share.E-Mail.Greating Card என மூன்று தனிதனி டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
நமக்கான வீடியோஉள்ள டிரைவினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள Share காலத்தல் கிளிக் செய்து அதில் உள்ள Share கிளிக் செய்திட கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள வீடியோக்களை நண்பர்கள் மூலம் எளிதில் பகிர்ந்துகொள்ளலாம். யூடியூப் மூலம் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் மெயின் விண்டோவில் இருந்து நீங்கள் ஜஸ்ட் வீடியோக்களை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்தால் போதுமானது.மேலும் இதில் நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை Youtube.Youku.Tudou போன்ற வீடியோ சார்ந்த இணையதளங்களிலும் புகைப்படங்களுக்கான பைல்களை Flickr போன்ற இணையதளங்களிலும் எளிதில் பதிவேற்றலாம்.அடுத்துள்ள டேபில் கிளிக் செய்தால் நம்மிடம் உள்ள புகைப்படங்களை நமது நண்பர்களுக்கு எளிதில் இ-மெயில் மூலம் அனுப்பிவைக்க்லாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் நம்முடைய பெயரையும் நம்முடைய இமெயில் முகவரியையும் தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் நாம் யாருக்கு மெயில் அனுப்பபோகின்றமோ அவர்களுடைய முகவரியை தட்டச்சு செய்யவும். பின்னர் எந்த பொருளில் அனுப்புகின்றோமோ அதனையும் குறிப்பிட்டு தகவல் ஏதாவது இருந்தால் அதனையும் குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும். இறுதியாக இதில் உள்ள Send பட்டனை கிளிக் செய்தால் போதுமானது. உங்களுக்கான புகைப்படம் உங்கள் நண்பர்களுக்கோ.உறவினர்களுக்கோ எளிதில் சென்று சேர்ந்துவிடும்.அடுத்ததாக இதில் உள்ள GreetingCard கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் விதவிதமான டெப்ளேட்கு்கள் உங்களுக்கு தோன்றும். இதில் உங்கள் புகைப்படம் எது சம்பந்தப்பட்டதோ அதனை தேர்வு செய்யவும்.வீட்டில் நடக்கும் சிறுசிறு விஷேஷங்களா - கிருஸ்மஸ் பண்டிகையா - சுற்றுலா சென்ற சமயம் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என நீங்கள் எதனையும் இதில் எளிதில் இணைக்கலாம்.வீடியோவினையும் நீங்கள் தேர்வு செய்யலாம். அடுத்து நம் காணப்போவது எடிட். இதில் நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியோக்களை ஒரே வீடியோவாக மாற்றிக்கொள்ளலாம்.
வீடியாக்களிலிருந்து ஸ்னாப்ஷாட் எடுக்கவும் மேலும் வீடியாயாக்களுக்கு நீங்கள் விரும்பும் இசையையும் டைட்டிலையும் இதில் எளிதில் சேர்க்கவலாம்.இதிலிருந்து நாம் வாழ்த்து
அட்டைகளையும்,விரும்பிய வெப்சைட்டுக்கு நமது புகைப்படங்களை
பதிவேற்றம் செய்யலாம்.மேலும் இமெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
ஹெச்டிஎம்எல் ஆல்பமும் தயாரிக்கலாம்.இந்த
சாப்ட்வேர் மூலம் கீழ்கண்ட பார்மெட்டுக்களில் ASF, AVI, MP3, AAC,
MP2, AC3 etc. You can also share them by making CD or DVD as you like. நமது வீடியாக்களை மாற்றலாம். இந்த சாப்ட்வேர் வீடியாக்களில் *.AVI, *.WMV,
*.ASF, *.MPG, *.MPEG, *.MPE, *.M1V, *.MPV2, *.MP4, *.DAT, *.MOV, *.VOB, *FLV
etc. பார்மெட்டினையும் புகைப்படங்களில் JPG, BMP,
TIF, GIF, PNG, WMF, EMF, etc.பான்ற பார்மெடுக்களையும் சப்பார்ட் செய்கின்றது.வீடியோக்களில் இருந்து நாம் ஸ்னாப் ஷாட் எனப்படும் குறிப்பிட்ட வீடியொவில் குறிப்பிட்ட புகைப்படத்தினை தனியே எடுக்கலாம். மேலும் இதில் நாம் தயாரித்த அனைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை சிடி மற்றும் டிவிடி என தனியே காப்பி செய்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தும் சமயம் தான் இதனுடைய பயன்கள் நமக்கு தெரியவரும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்