வேலன்:-மவுஸ் மற்றும் கீ பேர்ட்களின் விவரம் அறிந்துக்கொள்ள


கீ போர்ட் மற்றும் மவுஸ் இல்லாமல் கம்யூட்டர் இல்லை எனலாம். நாம் உபயோகிக்கும் கீபோர்ட் மற்றும் மவுஸினை எவ்வளவு முறை பயன்படுத்துகின்றாம் என இந்த சாப்ட்வேர் மூலம் நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம். 1 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்ட்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 உங்களுடைய டாஸ்பாரில் பார்த்தீர்களேயானால் இதற்கான சின்ன ஐகான் அமர்ந்திருக்கும்.அதனை கிளிக செய்த அதில் உள்ள ஆப்ஷன் உங்களுக்கு கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் ஜெனரல் என்பதில் நமக்கான விவரங்களை இதில் உள்ள ஸ்கோரல் பட்டனை கிளிக் செய்து தேர்வு செய்து கொள்ளலாம். இதில் அடுத்த்தாக உள்ள Displayed Items கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் ஒடும் நேரம்,கர்சர் மானிட்டரில் பயணிக்கும் தூரம்,மவுஸில் நாம் ரைட் கிளிக் எவ்வளவு செய்தோம்,லெப்ட் கிளிக் எந்தனை முறை செய்தோம். டபுள் கிளிக் எவ்வளவு முறை கிளிக் செய்தோம் என எளிதில அறிந்துகாள்ளலாம். மேலும் கீபோர்டில் கீகளை எவ்வளவு முறை அழுத்தினோம் என்கின்ற விவரமும் அறிந்துகொள்ளலாம்.முக்கியமாக நீங்கள் மவுஸ் மற்றும் கீபோர்ட் உபயேகிக்காமல் எவ்வளவு நேரம் சும்மா இருந்தீர்கள் என்பதனையும் எளிதில் அறிநதுகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ எடிட்டர்

வீடியோ பைல்களை நாம் விருப்பபடி எடிட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதில் Clip.Crop.Effect.Subtitle.Watermark என வித்தியாசமான 5 ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். 32 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் நாம் எடிட் செய்ய விரும்பும் வீடியோ பைலினை தேர்வு செய்யவும். இப்போது இதில் உள்ள ப்ரிவியூவில் உங்களுக்கான வீடியோ ஓடஆரம்பிக்கும். இப்போது கீழே வலதுபுறம் விண்டோவில் உங்களுக்கு Clip,Edit.Effects.Subtitle&Watermark என ஐந்துவித ஆப்ஷன்கள் இருப்பதனை கீழே உள்ள விண்டோவில பர்ருங்கள்.
 இதில் உள்ள கிளிப் தேர்வு செய்ய வீடியோவில் உங்களுக்கு குறிப்பிட்ட பகுதி எது வேண்டுமோ அதுவரை தனியே கட் செய்துகொள்ளலாம். உதாரணத்திற்கு ஒரு திரைப்படத்தில் குறிப்பிட்ட பாடல் மட்டும் வேண்டும் என்றால் முதலில் வீடியோவினை ஓட விடுங்கள். பின்னர் நீங்கள்விரும்பும்  பாடல்வரும் வரை காத்திருங்கள். பாடல் வரும் நேரத்தினை அதில் உள்ள ஸ்டார்ட் என்பதி்ல் உள்ள கட்டத்தில் குறித்துக்கொள்ளுங்கள. அடுத்து பாடல் முடியும் நேரத்தினை இதில் உள்ள எண்ட் காலத்தில் குறித்துக்கொள்ளுங்கள்.இப்போது சேவ் கொடுங்கள. நீங்கள் விரும்பும் இடத்தில் பாடல்மட்டும் சேமிப்பாகும்.அதுபோலவே இதில் கிராப் என்கின்ற ஆப்ஷன் கொடுத்துள்ளார்கள்.இதில் வீடியோவில் நீங்கள் எந்த பாகம் மட்டும் தேவையோ அந்த அளவினை தேர்வு செய்து பார்த்துக்கொள்ளலாம். அடுத்து இதில் எபெக்ட் என்கின்ற டேப் கொடுத்துள்ளார்கள்.இதில் நமது வீடியோவின் பிரைட்னஸ்,கான்ட்ராஸ்ட்.Hue.Saturation.நாம் விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம்.அடுத்து இதில் சப்டைட்டில் என்கின்ற டேபினை கொடுத்துள்ளார்கள். இதில் வீடியோவில் நாம் விரும்பும் சப் -டைட்டில்வார்த்தைளை வீடியோ முழுவதும் வருவதுமாக கொண்டுவரலாம்.இதில் நாம் ஏற்கனவே வைத்துள்ள டைட்டில் பைலினை தேர்வு செய்து இதில் வருவதுமாக செய்யலாம்.கடைசியா இதில் உள்ள வாட்டர் மார்க்கினை வீடியொ முழுவதும் கொண்டுவருவதனை பார்க்கலாம். உங்களுக்கான வார்த்தையை தட்டச்சு செய்துகொள்ளுங்கள. வீடியோவின் நிறத்திற்கு ஏற்ப உங்களுடை வார்த்தையின் நிறத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள.வீடியோவில் எந்த இடத்தில் வரவேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்துகொள்ளுங்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இறுதியாக இதில் நாம் எந்த பார்மெட்டில் படம் வரவேண்டுமோ அந்த பார்மெட்டினை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.


 நாம் தேர்வு செய்த வீடியோவின் அனைத்துவித ப்ராபர்டீஸ் விவரங்களும ்நமக்கு தெரியவரும். தற்போதுஉள்ள வீடியோவின் பெயர்-பைல்சைஸ்,எவ்வளவு நேரம் வீடியோ ஓடும்.என்கின்ற விவரமும் ஆடியோ விவரமும் நமக்கு தெரியவரும்.
 வீடியோவின் அளவினையும் பைரேட்டினையும் நாம் தேர்வு செய்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள.
 கடைசியா இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்திட சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் கீழ்கணட் விண்டோ ஓப்பன்ஆகும்.
உங்களுக்கான வீடியோ தேவையான மாற்றங்கள்அடைந்தபின்னர் உங்களுக்காக் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் சென்று பார்த்தால் உங்களுக்கான வீடியோ இருப்பதை காண்பீர்கள். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-ஓரே மாதத்தில் 37 பவுண்ட் எடையை குறைக்க


உடல் பருமன் உள்ளவர்கள் ஒரே மாதத்தில் தங்களது எடையை 37 பவுண்ட வரை குறைக்க எளிய முறையில் உணவு முறை கொடுக்கப்பட்டுள்ளது. 3 எம்.பி.கொள்ளளவு கொண்ட பிடிஎப் புத்தகமான இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை பதிவிறக்கம் செய்திட்டு ஓப்பன் செய்தபின்னர் உங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும்.
 தினம் தினம் நாம் உட்கொள்ளவேண்டிய உணவு வகைகளின் அளவுமற்றும் வகைகளை விவரமாக வெளியிட்டுள்ளார்கள்.
ஒரு மாதம் இந்த உணவு முறையை பயன்படுத்திப்பாருங்கள்.சில விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள்.நீங்கள் பயன்படுத்தும் பொருள் திருப்தி இல்லையென்றால் உங்கள் பணம் வாபஸ் என்பது போல உங்களுடைய உடல் எடை குறையவில்லையென்றால் உங்கள் பழைய எடையே உங்களுக்கு திரும்ப கிடைக்கும் என நான் உத்திரவாதம் தருகின்றேன்..பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
 வேலன்.

பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-அன்இன்ஸ்டால் செய்திட

கணிணியில் எந்த ஒரு சாப்ட்வேரினையும் இன்ஸ்டால் செய்வது மிக எளிது. ஆனால் அதனையே ரீ இன்ஸ்டால செய்யும் சமயம் சில பைல்களை ரீஜிட்டரிலும் ஹார்ட்டிரைவிலும் அது விட்டு செல்லும். கணிணியில் அமரந்துகொண்டு போகாமலும் பிற அப்ளிகேஷன்களை நாம்திறக்கும் சமயஙகளிலும் சண்டித்தனம் செய்யும். இவ்வாறான அப்ளிகேஷன் மற்றும் சாப்ட்வேர்களை அன்இன்ஸ்டால் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது:.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
இதில் நமது கணிணியில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சாப்ட்வேர் மற்றும் அப்ளிகேஷன்கள் தெரியவரும். இதில் வலது புறம் உள்ள அப்ளிகேஷன் லிஸ்ட் கிளிக் செய்திட கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
 

இதில் Table.Large Icons.Groups.Show System and service components and Export the Applications List போன்ற ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். இப்போது ஒரு அப்ளிகேஷனை நீக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் அந்த அப்ளிகேஷனை தேர்வு செய்யவும் இப்பொது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 
அதில் அந்த அப்ளிகேஷன் பெயர்,அப்ளிகேஷன் தயாரித்த நிறுவனத்தின் இணையதள முகவரி,ரிஜீஸ்டரியில் அந்த அப்ளிகேஷன் ஐட்டம்களின்  எண்ணிக்கை.டிஸ்க் ஐட்டம்களின் எண்ணிக்கை போன்றவை தெரியவரும். கீழே உள்ள Application Tracks கிளிக் செய்திட அப்ளிகேஷன்கள் ரிஜீட்டரில் எங்கு எங்கு உள்ளதோ அதன் விவரம் நமக்கு தெரியவரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இப்போது அப்ளிகேஷனை அன்இன்ஸ்டால் செய்யுங்கள். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள பச்சை நிறங்களில் கட்டங்கள் ஓட ஆரம்பிக்கும். 
இப்போது அடுத்த நிலைக்கு உங்களுக்கு டிஸ்பிளே காண்பிக்கும். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 உங்களுடைய கணிணியில் நீங்கள் நீக்க விரும்பிய அப்ளிகேஷனின் அனைத்து பைல்களும் உப பைல்களும் முழுவதுமாக நீங்கிவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இப்போது நீங்கள் நீக்க விரும்பிய அப்ளிகேஷன் உங்கள் கணிணியில் இருந்து முழுவதுமாக நீக்கிவிட்டதை பாருங்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன். 
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-பென்டிரைவில் ரீசைக்கிள் பின் இணைக்க

கணிணி மற்றும் லேப்டாப் பயன்படுத்துபவர்கள் தாவது ஒரு பைலினை தவறுதலாக டெலிட் செய்தால் அதனை ரீசைக்கிள் பின்னிலிருந்து மீண்டும் எடுத்துக்கொள்ளலாம்..ஆனால் பென்டிரைவ் மற்றும் மற்ற டேட்டா கார்டிலிருந்து ஒரு பைலினை டெலிட் செய்தால் அதனை மீண்டும் கொண்டுவருவது சிரமம்.ஞாபக மறதி காரர்கள் இவ்வாறு பைலினை டெலிட் செய்து பின்னர் அவதிக்குள்ளவர்கள். இவ்வாறு இவர்களின் சிரம்ம் நீக்குவதற்காக இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 650 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து உங்களுடைய பென் டிரைவ் மற்றும் ரீமுவபிள் டிரைவ்களில் பொருத்திக்கொள்ளவும். பின்னர் நீங்கள் வழக்கமான பணிகளை செய்யலாம். ஏதாவது பைலினை டெலிட் செய்கையில் உங்களுக்கு கீழ்கணட விண்டா ஓப்பன் ஆகும்
இதில் மூன்று விதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். இதில் Erase it Cancel.Dump into iBin என கொடுத்துள்ளார்கள்.உங்களுக்கு பைலானது தேவையே இல்லை என்றால் இதில் உள்ள Erase it கிளிக் செய்திடவும். உங்களுடைய பைலானது பென்டிரைவிலிருந்து காணாமல் சென்றுவிடும். இதில் உள்ள Dump into iBin கிளிக் செய்தால் நீங்கள் டெலிட் செய்த பைலானது இதில் உள்ள iBin ல் இருக்கும். அங்கிருந்து நீங்கள் தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.போட்டோஸ்டுடியோ வைத்திருப்பவர்கள் அவர்கள் பயன்படுத்தும் மெமரி கார்டில் இதனை பயன்படுத்தலாம். மறதி அதிகம் உள்ளளவர்களுக்கு அவசரத்திற்கு இந்த சாப்ட்வேர்பயன்படும். 
.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-போட்டோ பிளேஸ்

புகைப்படங்களில் எடிட் செய்ய,வேண்டிய பார்ட்ர்.ஆரட் படங்கள் சேர்க்க.விதவிதமான ப்ரேம்கள் இணைக்க.தேவையான வார்த்தைகள் சேர்க்கபயன்படுகின்றது.மேலும் புகைப்படங்களை .சிடியாக மாற்ற.போட்டோக்களை பிரிண்ட்எடுக்க.,எச்டிஎம்எல் பைல்வகைகளாக மாற்ற.பயன்படுகின்றது. 33 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் https://blaze-photo.en.softonic.com/ செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் Get Photo.Preview.Edit.Create என நான்கு டேப்புகள் கிடைக்கும்ட இதில் உள்ள Get Photo என்கின்ற டேபினை கிளிக் செய்து நம்மிடம் உள்ள புகைப்பட போல்டரை தேர்வு செய்யவும். உங்கள் போல்டரில் உள்ள புகைப்படங்கள் அனைத்தும் தேர்வுஆகும். புகைப்படங்களை தம்ப்நெயில் போட்டோக்களாகவோ.பெரிய தம்ப்நெயில் போட்டோக்களாகவோ கொண்டுவரலாம். மேலும் தனிதனி புகைப்டமாகவோ தேர்வு செய்யலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தேவையான புகைப்படம் தேர்வு செய்ததும் நீங்கள் அடுத்துள்ள எடிட் கிளிக் செய்யவும். உங்களுக்கு வலதுபுறம் மூன்று ஆப்ஷன்கள் உள்ள விண்டோ கிடைக்கும். கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.இதில் முதலில் உள்ள டேபினை கிளிக்  செய்திட உங்களுக்கு Rotate.Flip,Resize.Crop கஎன நான்கு வித ஆப்ஷன்கள் கிடைக்கும் தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
 அடுத்துள்ள டேபினை கிளிக் செய்திட அதில் Red Eye Color.Blur/Sharp.Enhance என நான்குவிதமான ஆப்ஷன்கள் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இறுதியாக இதில் உள்ள டேபினை கிளிக் செய்திட அதில் Add Text.Add Clips.Add Frame.Filter என நான்குவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள். Add Text கிளிக் செய்திட வரும் விண்டொவில ்நாம் விரும்பும் வார்த்தைகளை தட்டச்சு செய்து இதில் உள்ள ஆப்ளை கிளிக் செய்திட உங்களுக்கு உங்களுக்கான டேக்ஸ்ட் ஆனது புகைப்படத்தில் வந்து அமர்ந்துகொள்ளும் வேண்டிய இடத்திற்கு அதனை நாம் நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.
 அதனை போலவே புகைப்படத்திற்கு வேண்டிய விதவிதமான ப்ரெம் களை நாம் கொண்டுவரலாம். இதில் உள்ள ப்ரேம் கிளிக் செய்திட வரும் விண்டோவில் விதவிதமான ப்ரேம்கள் கிடைக்கும். நமக்கு தேவையான ப்ரேமினை கிளிக் செய்ததும் உங்களுக்கான ப்ரேம் உடன் கூடிய புகைப்படம் ப்ரிவியூவாக தெரியும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இறுதியாக நீங்கள் மாற்றம் செய்த புகைப்படத்தினை நேரடியாக பிரிண்ட் செய்துகொள்ளலாம்.சிடியாக காப்பி செய்து கொள்ளலாம்.டிவிடியாக காப்பி செய்துகொள்ளலாம். மேலும் இதனை எச்டிஎம்எல் பைலாக மாற்றிக்கொள்ளலாம்.இமெயில் அனுப்பலாம். கீழே உள்ள விண்டோவில்பாருங்கள்.
 புகைப்படங்களை நாம் விரும்பியவாறு மாற்றிக்கொள்ளலாம். அதனுடைய பெயரைவைத்தோ,அளவினை வைத்தோ.புகைப்படம் எடுத்த நேரத்தினை வைத்தோ.அதனை வகையைவைத்தோ மாற்றிக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

 பிரிண்ட ஆப்ஷனை கிளிக் செய்திட கீழே உள்ள விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான அளவினை நாம் தேர்வு செய்து புகைப்படத்தினை நாம் பிரிண்ட் செய்துகொள்ளலாம். பயன்படுத்தி கொள்ள எளிதான உள்ளதால் பயன்படுததிப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
 வாழ்க வளமுடன் 
வேலன்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ ஸ்மார்ட் ஷோ

நமது கணிணியில் புகைப்படங்களை வீடியொ படங்களாக மாற்ற விண்டோஸ் மூவி மேக்கர் பயன்படுத்துவோம்.அதுபோல நம்மிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை முழுநீள வீடியோ படங்களாக மாற்ற இந்த சின்ன் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 35 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிற்க்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்தது்ம் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள இம்போர்ட் கிளிக் செய்திட உங்களுக்கான டிரைவ் தேர்வு செய்து உங்கடைய புகைப்படம் மற்றும் வீடியோவினை தேர்வு செய்யவும். இதில் மேற்புறம் உங்களுக்கு All.Image.Audio.Video என டேப்புகள் கிடைக்கும் தேவைபடுவதை கிளிக் செய்து பின்னர் இம்போர்ட் கிளிக் செய்யவும். தேவையான புகைப்படங்களை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்துவிடவும். பின்னர் இதில் இரண்டாவதாக உள்ள னஆடியோ போல்டரில் உங்களுக்கான ஆடியோ போல்டரை தேர்வு செய்து அதனையும் இழுத்துவந்துவிடவும்.இப்போது உங்களுக்கு Title.Media.Transtion.More Templetes.Create Import ஆகிய டேப்புகள் கிடைக்கும்.டேடிலை கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.

 இதில் Holiday.Birthday.Wedding.Baby & Family என ஐந்துவிதமான டைடில் கொடுததுள்ளார்கள்.தேவையானதை கிளிக் செய்துபின்னர் விதவிதமான டெப்ளேட்படங்கள் நமக்கு கிடைக்கும். ,இதில் புகைப்படங்களை தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள எடிட் டெக்ஸ்ட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் இடதுபுறம் நமக்கு கீழ்கண்ட விண்டோ தெரியவரும் இதில் நமக்கான டெக்ஸ்ட்டின் வார்த்தையைவேண்டிய வாறு மாற்றிக்கொள்வதுடன் எழுத்துரு அளவினை மாற்றிக்கொள்வது.நிறக்கள்மாற்றுவது என அனைத்துப்பணிகளையும் செய்யலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
தேவையான மாற்றங்கள்செய்தபின்னர் இதில் உள்ள சேவ் பட்டனை கிளிக் செய்திடவும். அடுத்து புகைப்படங்களை இழுத்துவந்துவிடவும். இதில் நமக்கான புகைப்படம் தேர்வு செய்தபின்னர் இதில் உள்ள எடிட் கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓபப்ன ஆகும். இதில் புகைபடங்களில் நிறம் கூட்டுதல்.பிரைட்னஸ் கொண்டுவருதல்.கான்ட்ராஸ்ட் கொண்டுவருதல் போன்ற பணிகளை செய்யலாம். புகைப்படங்களை திருப்புதல் தலைகீழாக மாற்றுதால் இரண்டு புகைப்படங்களை ஹாரிசாண்டலாக பிலிப் செய்தல் போன்ற பணிகளை செய்யலாம். ஒவ் வாரு ஆப்ஷனுக்கும் நமக்கு ரேடியோ பட்டனை கொடுத்துள்ளார்கள். தேவையானதை கிளிக் செய்தபின்னர் இதில் வரும் பிரிவியூவில் காணலாம். பிடித்திருந்தால் தேர்வு செய்துபின்னர் இறுதியாக ஓ.கே.தரலாம்.

அடுத்து மூன்றாவதாக உள்ள டிரான்ஸ்சிடியன் கிளிக் செய்து வரும் விண்டோவில் நமக்கான எபெக்ட் களை தேர்வு செய்துகொள்ளுங்கள்.ஒவ்வொன்றாக ஒவ்வொரு படத்திற்கும் இடையில் இழுத்துவந்துவிடவும். 

 இறுதியாக இதில் உள்ள கிரியேட் கிளிக் செய்திட நமக்கான புகைப்படங்கள் ஆனது வீடியொவாக மாற ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.

 இறுதியாக இதில் உள்ள ஆவுட் புட செட்டிங்ஸ் கிளிக் செய்திட உங்களுக்கு Device.Format.FaceBook என மூன்று டேப்புகள் கிடைக்கும். அதில் டிவைஸ் என்பதில் விதவிதமான செல்போன் மாடல்கள் கொடுத்துள்ளார்கள். அதுபோல் பார்மெட் என்பதில் எந்த பார்மேட்டுக்கு நமக்கு வீடியோ வேண்டுமோ அதனை தேர்வு செய்யவேண்டும். இறுதியாக பேஸ் புக் கொடுத்துள்ளார்கள் பேஸ்புக் கணக்கு ஓப்பன் செய்து அதில நேரடியாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். பயன்படுததிப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள.
 வாழ்க வளமுடன்
வேலன்.



பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலன்:-வீடியோ ப்ளிக்-Video Flick

வீடியோ மற்றும் புகைப்படங்களை கையாள்வதற்கு சிறந்த தாக இந்த வீடியோ ப்ளிக் சாப்ட்வேர் பயன்படுகின்றது. நம்மிடம் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.32 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதன் கீழ்புறம் கீழ்கண்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் Share,Edit,Create என மூன்று காலங்கள் கொடுத்துள்ளார்கள். முதலில் உள்ள Share காலத்தில்  Share.E-Mail.Greating Card என மூன்று தனிதனி டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
 நமக்கான வீடியோஉள்ள டிரைவினை தேர்வு செய்து பின்னர் இதில் உள்ள Share காலத்தல் கிளிக் செய்து அதில் உள்ள Share கிளிக் செய்திட கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நம்மிடம் உள்ள வீடியோக்களை நண்பர்கள் மூலம் எளிதில் பகிர்ந்துகொள்ளலாம். யூடியூப் மூலம் எளிதில் மற்றவர்களுக்கு அனுப்பலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதில் மெயின் விண்டோவில் இருந்து நீங்கள் ஜஸ்ட் வீடியோக்களை டிராக் அன்ட் டிராப் முறையில் இழுத்துவந்தால் போதுமானது.மேலும் இதில் நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை Youtube.Youku.Tudou போன்ற வீடியோ சார்ந்த இணையதளங்களிலும் புகைப்படங்களுக்கான பைல்களை Flickr போன்ற இணையதளங்களிலும் எளிதில் பதிவேற்றலாம்.அடுத்துள்ள டேபில் கிளிக் செய்தால் நம்மிடம் உள்ள புகைப்படங்களை நமது நண்பர்களுக்கு எளிதில் இ-மெயில் மூலம் அனுப்பிவைக்க்லாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.

இதில் நம்முடைய பெயரையும் நம்முடைய இமெயில் முகவரியையும் தட்டச்சு செய்யவேண்டும். பின்னர் நாம் யாருக்கு மெயில் அனுப்பபோகின்றமோ அவர்களுடைய முகவரியை தட்டச்சு செய்யவும். பின்னர் எந்த பொருளில் அனுப்புகின்றோமோ அதனையும் குறிப்பிட்டு தகவல் ஏதாவது இருந்தால் அதனையும் குறிப்பிட்டு அனுப்பிவைக்கவும். இறுதியாக இதில் உள்ள Send பட்டனை கிளிக் செய்தால் போதுமானது. உங்களுக்கான புகைப்படம் உங்கள் நண்பர்களுக்கோ.உறவினர்களுக்கோ எளிதில் சென்று சேர்ந்துவிடும்.அடுத்ததாக இதில் உள்ள GreetingCard கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில் விதவிதமான டெப்ளேட்கு்கள் உங்களுக்கு தோன்றும். இதில் உங்கள் புகைப்படம் எது சம்பந்தப்பட்டதோ அதனை தேர்வு செய்யவும்.வீட்டில் நடக்கும் சிறுசிறு விஷேஷங்களா - கிருஸ்மஸ் பண்டிகையா - சுற்றுலா சென்ற சமயம் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் என நீங்கள் எதனையும் இதில் எளிதில் இணைக்கலாம்.வீடியோவினையும் நீங்கள் தேர்வு செய்யலாம். அடுத்து நம் காணப்போவது எடிட். இதில் நம்மிடம் உள்ள சிறிய சிறிய வீடியோக்களை ஒரே வீடியோவாக மாற்றிக்கொள்ளலாம்.


வீடியாக்களிலிருந்து ஸ்னாப்ஷாட் எடுக்கவும் மேலும் வீடியாயாக்களுக்கு நீங்கள் விரும்பும் இசையையும் டைட்டிலையும் இதில் எளிதில் சேர்க்கவலாம்.இதிலிருந்து நாம் வாழ்த்து அட்டைகளையும்,விரும்பிய வெப்சைட்டுக்கு நமது புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம்.மேலும் இமெயில் மூலமாகவும் அனுப்பலாம். ஹெச்டிஎம்எல் ஆல்பமும் தயாரிக்கலாம்.இந்த சாப்ட்வேர் மூலம் கீழ்கண்ட பார்மெட்டுக்களில் ASF, AVI, MP3, AAC, MP2, AC3 etc. You can also share them by making CD or DVD as you like. நமது வீடியாக்களை மாற்றலாம். இந்த சாப்ட்வேர் வீடியாக்களில்  *.AVI, *.WMV, *.ASF, *.MPG, *.MPEG, *.MPE, *.M1V, *.MPV2, *.MP4, *.DAT, *.MOV, *.VOB, *FLV etc. பார்மெட்டினையும் புகைப்படங்களில்  JPG, BMP, TIF, GIF, PNG, WMF, EMF, etc.பான்ற பார்மெடுக்களையும் சப்பார்ட் செய்கின்றது.வீடியோக்களில் இருந்து நாம் ஸ்னாப் ஷாட் எனப்படும் குறிப்பிட்ட வீடியொவில் குறிப்பிட்ட புகைப்படத்தினை தனியே எடுக்கலாம். மேலும் இதில் நாம் தயாரித்த அனைத்து வீடியோ மற்றும் புகைப்படங்களை சிடி மற்றும் டிவிடி என தனியே காப்பி செய்து வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்தும் சமயம் தான் இதனுடைய பயன்கள் நமக்கு தெரியவரும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள. 
அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். 
வாழ்க வளமுடன் 
வேலன்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...