Tuesday, December 31, 2013
Wednesday, December 25, 2013
வேலன்:-விதவிதமான கிருஸ்துமஸ் வால்பேப்பர்கள்.
அனைவருக்கும் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள். விதவிதமான கிருஸ்துமஸ் வால்பேப்பர்கள் இத்துடன் இணைத்துள்ளேன். 15 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை பதிவிறக்கம் செய்ததும்உங்களுக்கு விதவிதமான வால்பேப்பர்கள் கிடைக்கும்.மாதிரிக்கு சில படங்கள் கீழே:-
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Sunday, December 22, 2013
வேலன்:-டெக்ஸ்டாப்பினை அலங்கரிக்க கிருஸ்துமஸ் பொருட்கள்.
கிருஸ்துமஸ்க்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ளது. நமது டெக்ஸ்டாப்பில் விதவிதமான கிருஸ்மஸ் பொருட்களை வைத்து டெக்ஸ்டாப்பினை அலங்காரம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர்பயன்படுகின்றது. 1 எம்.பி கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். இதில மொத்தம் 21 விதமான கிருஸ்மஸ் சம்பந்தமான பொருட்கள் வைத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மொத்தம் ஏழு தலைப்புகள வீதம் ஒவ்வொரு தலைப்பிலும் மூன்று என மொத்தம் 21 அலங்கார பொருட்கள் வைத்துள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
மாதிரிக்கு சில படங்களை கீழே வைத்துள்ளேன் .உங்களுக்கு எந்த படம் தேவையோ அதனை தேர்வு செய்துகொள்ளலாம். ஒன்றுக்குமேற்பட்ட புகைப்படங்களையும் நாம் டெக்ஸ்டாப்பில் வைத்துக்கொள்ளலர்ம்.
பய்ன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Friday, December 20, 2013
வேலன்:-டிரைவ் மறைத்திட
நம்மிடம் உள்ள டிரைவ்களை முழுவதுமாக மறைத்துவைத்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும். இதில் நம்மிடம் உள்ள டிரைவ்களின் எழுத்துக்களில் எந்த டிரைவினை மறைக்க விரும்புகின்றமோ அந்த டிரைவ் எதிரில் உள்ள ரேடியோ பட்டனை கிளிக் செய்திடவும்.கீழே உள்ள் விண்டோவில பாருங்கள்.
நான் A டிரைவ் வினை தேர்வு செய்துள்ளேன் மேலும் நாம் மறைக்க விரும்பும் டிரைவ்விற்கு பாஸ்வேர்டும் கொடுத்து பாதுகாக்கலாம். இதனால் நமது டிரைவ்வானது கூடுதல் பாதுகாப்புடன் இருக்கும். இப்போது இதில் நான் டிரைவினை தேர்வு செய்தபின் விண்டோவினை மூடிவிட்டேன் இப்போது மை கம்யூட்டரை திறந்து பார்க்கையில் எனக்கு கீழ்கணட விண்டோ தெரிந்தது. இதில் நான் தேர்வு செய்த டிரைவானது முழுவதுமாக மறைந்துவிட்டதை காணுங்கள்.இப்போது மீண்டும் நான் இந்த சாப்ட்வேரினை திறந்து இதில் நான் தேர்வு செய்த டிரைவின் ரேடியோ பட்டனை நீக்கிவிட்டேன். இப்போது மீண்டும் நான் மைகம்யூட்டரினை திறந்து பார்க்க எனக்கு கீழ்கண்ட விண்டோ தெரிந்தது.
ரகசிய தகவல்கள் முக்கியமான புகைப்படங்கள் மற்றவர்கள் பார்வையில் இருந்து பாதுகாக்க இந்த சாப்ட்வேரினை பயன்படுத்திக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன
வேலன்.
Wednesday, December 18, 2013
வேலன் :-உறக்கம் பற்றிய விரிவான கேள்வி பதில்கள்.
தூங்காத கண் என்று ஒன்று ...துடிக்கின்ற மனம் என்று ஒன்று...என பிரபலமான பாடல் உண்டு. உண்ணாமல் இருந்துவிடலாம். ஆனால் உறங்காமல் இருப்பது கடினம். பஞ்சு மெத்தை.பட்டாடை.பணம் இருந்தும் நிம்மதியான உறக்கம் இல்லையென்றால் வாழ்கையே வீண்தான். நிம்மதியான உறக்கத்திற்கான கேள்வி பதில்கள் இந்த புத்தகத்தில் விரிவாக கொடுத்துள்ளார்கள். 18 எம்.பி.கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.,இந்த பிடிஎப் புத்தகத்தினை திறந்ததும் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் ஓப்பன் ஆகும்.
சிலர் பெட் ரூமில் டிவி வைத்துகொண்டு சீரியல் பாரத்துகொண்டே தூங்கிவிடுவார்கள்.அது மிகவும் கெட்ட பழக்கம் ஆகும். நமது படுக்கை அறை எந்த ஒலி ஓளி சாதனங்கள் இல்லாததாக இருந்திட வேண்டும். கீழே உள்ள கேள்வி பதிலை பாருங்கள்.நமது படுக்கைஅறையில் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என விரிவாக விளக்கியுள்ளார்கள்.
இதில் நாம் ஒரு வாரத்திற்கு உறங்கும் நேரத்தினை சார்ட் வடிவில வடிவமைத்துள்ளார்கள். எந்த எந்த நேரம் நாம் உறங்குகின்றோம். எவ்வளவு நேரம் உறங்குகின்றோம் என இதில் நாம் குறித்துவைத்துக்கொண்டு ஒரு வாரத்திற்கு உவ்வளவு நுரம் நாம் உறங்குகின்றோம் என எளிதில் அறிந்துகொள்ளலாம்.கீழே உள்ள சார்ட்டினை பாருங்கள்.
எவையெல்லாம் நமது தூக்கத்தினை கெடுக்கும் என விளாவரியாக பட்டியலிட்டுள்ளார்கள்.
குழந்தைகள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும். பெரியவர்கள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும். முதியவர்கள் எவ்வளவு நேரம் தூங்கவேண்டும் என கேள்வி பதிலாக கொடுத்துள்ளார்கள்.நல்ல உறக்கம். கோழி்த்தூக்கம்.ஆழந்த உறக்கம் என தூக்கத்தில் உளள வகைகளை வகைப்படுததி உள்ளார்கள். படித்துப்பாருங்கள்.நன்கு தூங்குங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Sunday, December 15, 2013
வேலன்:-பைல்களை விரைவாக -விரிவாக தேட
இதில் உள்ள வியூபட்டனை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் பைலின் எந்த வகை தேர்வு செய்ய விரும்புகின்றமோ அதற்கான உள்ளதை கிளிக் செய்யவும். இதில் Size.Allocated Space.% Percent CD/DVD Size File Count.Compresion Rate Values as KB.Values as MB.Values as GB.Automatic Units Sort.Decimals என கொடுத்துள்ளார்கள்.
குறிப்பிடட பைலின மீது கர்சரை வைக்க நமக்காக இந்த விண்டோ திறக்கும். இதில் அந்த பைலின் முழுவிவரமும் நமக்கு தெரியவரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள.
வாழ்க வளமுடன்
வேலன்.
Tuesday, December 10, 2013
வேலன்:-பிளிப் கிரியேட்டர்.
பிடிஎப் பைல்களில் விரும்பிய வார்த்தைகளை சேர்க்க.விரும்பிய பக்கங்களில் விரும்பிய பாடல்களை ஒலிபரப்ப.விரும்பிய பக்கங்களில் விரும்பிய வீடியோவினை ஓட வைக்க இந்த சாப்ட் வேர் பயன்படுகின்றது. 28 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் பிடிஎப் புத்தகங்களில் உள்ள மொத்த பக்கங்களும் உங்களுக்கு இதில் தெரியவரும் .இதன் ்மேற்புறம் வலதுபுறமும் கீழ்கண்டவாறு உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Contents.Bookmark.Add Audio.AddLink;.Add Video.Button.Picture.Design.Preview.Publish என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
இதன் வலதுபுறமும் இதுபோல் Audio.Link.Video.Youtube.Flash.Button.என இன்செர்ட் பட்டன்கள்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதில் உள்ளContents கிளிக் செய்திட நமது பிடிஎப் புத்தகத்தில் உள்ள அனைத்து பகக்ங்களின் தலைப்புகளும் நமக்கு தெரியவரும்.
அதுபோல் நாம் புக்மார்க்காக ஒரு குறிப்பிட்ட பக்கங்களை வைத்துக்கொள்ள இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து வரும் சின்ன விண்டோவில் Page No தேர்வு செய்யவேண்டும். பின்னர் BookMarks நாம் விரும்பிய பெயரையோ அலலது புத்தகத்திற்கு சம்மந்தப்ட்ட பெயரையோ நாம் வைக்கவேண்டும்.வண்ணங்களை அதுவே தேர்வு செய்துகொள்ளும். இறுதியாக ஓ,கே.தந்தால் உங்கள் பிடிஎப் புத்தகத்தில் இரண்டுபுறமும் நீங்கள் வைத்த பெயருடன் புத்தகம் இருக்கும்.தேவையான பக்கத்தினை பெயரை கிளிக செய்வது மூலம் நாம் எளிதில் செல்லலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்..
அடுத்துள்ள ஆடியோ கிளிக செய்திட வரும் விண்டோவில உங்களுக்கு எந்த பகக்த்தில் ஆடியோ வரவேண்டுமொ அந்த பக்கத்தினை தேர்வு செய்யவும்.
இதில் ஆடியோ வலதுபுறமா இடதுபுறமான என்பதனை தேர்வு செய்து ஒ.கே தரவும். இதுபோல உங்கள் புத்தகத்தில் நீங்கள் இணைய இணைப்பிற்கு லிங்க் தருவதானாலும் குறிப்பிட்ட பக்கத்தில் குறிப்பிட்ட இடத்தினை தேர்வு செய்து இதில் உள்ள லிங்க் கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கான யூஆர்எல் முகவரியை பேஸ்ட் செய்துகொள்ளலாம். இதுபோலவே உங்களுக்கான வீடியோ பைல்களையும் தேவையான இடத்தில் தேவையான பக்கத்தில் இணைத்துக்கொள்ளலாம்.இவ்வாறு இணைக்கப்படட உடன் இதற்கான ஐகான்கள் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் அமர்ந்துகொள்ளும்.இதில் உள்ள பட்டனை கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Sunday, December 8, 2013
வேலன்:-ஒரு மில்லியன் தகவல்கள் -படங்களுடன்.
சமச்சீர் கல்வி வந்ததிலிருந்து மாணவர்களுக்கு ப்ராஜெக்ட்டுக்கு அதிகம் தகவல்களும் அதற்கான புகைப்படங்களும் தேவைப்படுகின்றது. இந்த பிடிஎப் புத்தகத்தில் ஒரு மில்லியன் தகவல்களும் அதற்கான புகைப்படங்களையும் கொடுத்துள்ளார்கள். புகைப்படங்களுடன் அதற்கான விளக்கங்களும் கொடுத்துள்ளதால் குழந்தைகளின் ப்ராஜெக்ட்டுக்கு பிரிண்ட் எடுத்து கொடுக்கலாம்.. 125 எம்.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்செய்யவும். இதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட பக்கம் ஓப்பன்ஆகும்.
விதவிதமான பறவைகளின் முட்டைகளும் அதற்கான பெயர் மற்றும் புகைப்படங்களை கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள புகைப்படத்தினை பாருங்கள்.
குழந்தைகளின் கரு வளர்ச்சிபற்றி விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
கணிணி சார்ந்த பொருட்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
மின்சாரம் பற்றி விளக்கம் கொடுத்துள்ளார்கள்.
இதில் Nature.Human Body.Science and Technology.Space.Earth.People and Places.History.Art and Culture.என எட்டுவிதமான தலைப்புகளில் 300 பக்கங்களுக்கு படங்களுடன் விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள். பதிவின் நீளம் கருதி சிறிதளவே விளக்கம் கொடுத்துள்ளேன்.முழுவதும் அறிந்துகொள்ள இதனை பதிவிறக்கி அறிந்துகொள்ளுங்கள். உங்கள் குழந்தைகள் மற்றும் நண்பர்களுக்கு கொடுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Saturday, December 7, 2013
வேலன்:-ஹார்ட்டிஸ்க் தரம் அறிந்துகொள்ள
மனித உடலுக்கு எப்படி இதயமோ அதுபோல் கணிணியின் இதயம் என ஹார்ட் டிஸ்கினை சொல்லலாம். கணிணியின் இதயம் எப்படி இருக்கின்றது என சோதனை செய்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும்உ ங்களுக்கு உங்கள ஹார்ட் டிஸ்கின் முமுழுவிவரமும் தெரியவரும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் நமது கணிணியில் உள்ள ஹார்ட்டிஸ்கின் சீரீயல் எண்,ஹார்ட்டிஸ்கில் உள்ள டிரைவ்கள்.தற்போதைய வெப்பநிலை.ஹார்டிஸ்கின் தரம் முதலியவற்றை எளிதில் அறிந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் இதனை காப்பி செய்தும் நாம் வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள. வாழ்க வளமுடன்
வேலன்.
Wednesday, December 4, 2013
வேலன்:- மூவி கிரியேட்டர்.
நம்மிடம்
உள்ள புகைப்படங்கள் வீடியோபடங்களை நாம் விருப்பபடி ஆடி யோ மற்றும் டிரான்ஸ்செக்ஷன்
சேர்த்து மூவி கிரியேட் செய்ய இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்த்தும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Photo/Video Library.Audio
library,Transtions என மூன்றுவிதமான டேப்புகள் கொடுத்திருப்பார்கள்.இதில் முதலில் உள்ள Photo/Video Library என்பதனை கிளிக்
செய்து நமது கணிணியில் உள்ள புகைப்படங்களை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்
நீங்கள் தேர்வு செய்த புகைப்படங்கள் கிடைக்கும். இதனை டிராப் அன்ட் டிராக் முறையில் இழுத்துவந்து
வலதுபுறத்தில் கீழே உள்ள விண்டோவில்
விடவும்.
இப்பாது
உங்களுக்கு மேற்கண்டவாறு டிஸ்பிளே ஆகும்.இதில் நமது புகைப்படங்கள் டைம் லைனில் டிஸ்பிளே ஆகும. இதில மூன்று விதமான காலங்கள் கொடுத்துள்ளார்கள். டெக்ஸ்,டிரான்ஸ்சிக்ஸன்.ஆடியோ என உள்ளது. இதில் உள்ள டெக்ஸ்ட் கிளிக் செய்ய கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்
நமக்கான வார்த்தையை தட்டச்சு செய்து புகைப்படத்தில்எந்த இடத்தில் வார்த்தை வரவேண்டுமோ அதனை தேர்வு செய்யவும். மேலும் பாண்ட்களையும் தேர்வு செய்யவும். பின்னர் பாண்ட்களுக்கு
தேவையான நிறத்தினையும் தேர்வு செய்யவும். இறுதியாக ஓ.கே.தரவும்.
அடுத்த
தாக உள்ள டிரான்ஸ்சிஸன் தேர்வு செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில்
விதவிதமான டிரான்ஸ்சிஸன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு தேவையாதை தேர்வு செய்ய நமக்கு ஒவ்வாரு
எபெக்ட்களும் நமக்கு டிஸ்பிளே ஆகும்.
இதில்
அடுத்த்தாக உள்ள ஆடியோ தேர்வு செய்து நமது கணிணியில் உள்ள ஆடியோவினை தேர்வு செய்யவும். இப்பாது உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பாடலுக்கு தேவையான இடத்தினை தேர்வு
செய்துகாள்ளலாம்.
அனைத்து பணிகளும் முடிந்த்தும் நீங்கள்
இதில் மேற்புறம் உள்ள பைலில் Save Us Video கிளிக் செய்து வரும்
விண்டோவில் எந்த பார்மெட் வேண்டுமா அதனை தேர்வு செய்யவும். கீழே
உள்ள விண்டோவினை பாருங்கள்.
தேவையாதை
தேர்வு செய்தபின் இதில் உள்ள
Go கிளிக் செய்யவும.
இதில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன ஆகும்.
இறுதியாக
உங்களுக்கான மூவி வீடியோ ஆனது நாம் தேர்வு செய்த இடத்தில் சேமிப்பாக மாறியிருக்கும்.பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன
வேலன்.
பின்குறிப்பு:- எனது பிறந்தநாளுக்கு நேரிலும்,தொலைபேசியிலும் பிளாக்கின் மூலமும் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
பின்குறிப்பு:- எனது பிறந்தநாளுக்கு நேரிலும்,தொலைபேசியிலும் பிளாக்கின் மூலமும் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
வாழ்க வளமுடன்
வேலன்.
Sunday, December 1, 2013
வேலன்:-50 ஆவது பிறந்தநாள் வாழ்த்து.
அனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில்
முக்கிய விஷேஷம்.. பிறக்கும்போது
கொண்டுவரவில்லை.இறக்கும்போதும் கொண்டு செல்ல
போவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்
முடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து 900 (தொள்ளாயிரம் )பதிவுகள் பதிவிட்டுள்ளேன்.இன்று
இதுவரை சுமார் 25,00,000 பார்வையாளர்கள்
எனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.இது எனக்கு மிகுந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. எனக்கு தெரிந்த
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.எனக்கு
தெரியாததையும் சொல்லிதாருங்கள்.கற்றுக்கொள்கின்றேன்.
இணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.
அந்தவகையில் உண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.
பதிவில் என்ன வி்ஷேஷம் என்றால் இன்று எனது 50 ஆவதுபிறந்தநாள்
02.12.2013தொடர்ந்து உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...
என்றும் அன்புடன்..
வேலன்.