Tuesday, December 10, 2013

வேலன்:-பிளிப் கிரியேட்டர்.

பிடிஎப் பைல்களில் விரும்பிய வார்த்தைகளை சேர்க்க.விரும்பிய பக்கங்களில் விரும்பிய பாடல்களை ஒலிபரப்ப.விரும்பிய பக்கங்களில் விரும்பிய வீடியோவினை ஓட வைக்க இந்த சாப்ட் வேர் பயன்படுகின்றது. 28 எம்.பி. கொள்ளளவு கொண்ட  இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து நம்மிடம் உள்ள பிடிஎப் ்பைலினை தேர்வு செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் பிடிஎப் புத்தகங்களில் உள்ள மொத்த பக்கங்களும் உங்களுக்கு இதில் தெரியவரும் .இதன் ்மேற்புறம் வலதுபுறமும் கீழ்கண்டவாறு உங்களுக்கு விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Contents.Bookmark.Add Audio.AddLink;.Add Video.Button.Picture.Design.Preview.Publish என நிறைய டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.
இதன் வலதுபுறமும் இதுபோல் Audio.Link.Video.Youtube.Flash.Button.என இன்செர்ட் பட்டன்கள்கொடுத்துள்ளார்கள்.கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
இதில் உள்ளContents கிளிக் செய்திட நமது பிடிஎப் புத்தகத்தில் உள்ள அனைத்து பகக்ங்களின் தலைப்புகளும் நமக்கு தெரியவரும்.
அதுபோல் நாம் புக்மார்க்காக ஒரு குறிப்பிட்ட பக்கங்களை வைத்துக்கொள்ள இதில் உள்ள Add பட்டனை கிளிக் செய்து வரும் சின்ன விண்டோவில் Page No தேர்வு செய்யவேண்டும். பின்னர் BookMarks நாம் விரும்பிய பெயரையோ அலலது புத்தகத்திற்கு சம்மந்தப்ட்ட பெயரையோ நாம் வைக்கவேண்டும்.வண்ணங்களை அதுவே தேர்வு செய்துகொள்ளும். இறுதியாக ஓ,கே.தந்தால் உங்கள் பிடிஎப் புத்தகத்தில் இரண்டுபுறமும் நீங்கள் வைத்த பெயருடன் புத்தகம் இருக்கும்.தேவையான பக்கத்தினை பெயரை கிளிக  செய்வது மூலம் நாம் எளிதில் செல்லலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்..
அடுத்துள்ள ஆடியோ கிளிக செய்திட வரும் விண்டோவில உங்களுக்கு எந்த பகக்த்தில் ஆடியோ வரவேண்டுமொ அந்த பக்கத்தினை  தேர்வு   செய்யவும்.
இதில் ஆடியோ வலதுபுறமா இடதுபுறமான என்பதனை தேர்வு செய்து ஒ.கே தரவும். இதுபோல உங்கள் புத்தகத்தில் நீங்கள் இணைய இணைப்பிற்கு லிங்க் தருவதானாலும் குறிப்பிட்ட பக்கத்தில் குறிப்பிட்ட இடத்தினை தேர்வு செய்து இதில் உள்ள லிங்க் கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்களுக்கான யூஆர்எல் முகவரியை பேஸ்ட் செய்துகொள்ளலாம். இதுபோலவே உங்களுக்கான வீடியோ பைல்களையும் தேவையான இடத்தில் தேவையான பக்கத்தில் இணைத்துக்கொள்ளலாம்.இவ்வாறு இணைக்கப்படட உடன் இதற்கான ஐகான்கள் நீங்கள் தேர்வு செய்த இடத்தில் அமர்ந்துகொள்ளும்.இதில் உள்ள பட்டனை கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

தேவையான ஆப்ஷனை தேர்வு செய்து ஒ.கே.தரலாம். மேலும் இதில் உள்ள பிக்ஸர் தேர்வு செய்ய உங்களிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்துஇதில் தேவையான இடத்தில் இணைத்துக்கொள்ளலாம்.அனைத்து பணிகளும் முடிவடைந்ததும் நீங்கள் இதில் உள்ள பிரிவியூ மூலம் பாரத்த்துக்கொள்ளலாம். மேலும் இதில் உள்ள பப்ளிஷ் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விருப்பமான ஆன்ட்ராய்ட்.ஐபோன்.ஐபேட் போன்றவற்றிக்கு ஏற்றவாறு பிடிஎப் பைல்களை நாம்  சுலபமாக மாற்றிக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள. கருத்துக்களை கூறுங்கள. 
வாழ்க வளமுடன் 
வேலன்.

4 comments:

  1. உபயோக மென்பொருஸ்...
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. பயனுள்ள மென்பொருள் .. பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  3. சே. குமார் said...
    உபயோக மென்பொருஸ்...
    பகிர்வுக்கு நன்றி.//

    நன்றி குமார் சார்..வாழ்க வளமுடன் வேலன்.

    ReplyDelete
  4. mtmfahath said...
    பயனுள்ள மென்பொருள் .. பகிர்வுக்கு நன்றிஃஃ


    நன்றி நண்பரே..
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete