இணையத்தில் சில பைல்களை E-PUB பார்மெட்டில் வெளியிட்டிருப்பார்கள். நாம் அதற்காக epub ரீடரை பயன்படுத்தவேண்டும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நம்மிடம் உள்ள epub பைல்களை நாம் விரும்பும் பார்மெட்டிற்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம். 50 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம்செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும்உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம்உள்ள epub பைலினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் கொடுக்கப்பட்டுள்ள Kindle.AZW:.PDF,DOC,Text & Custom என எந்த பார்மெட்டிற்கு பைல்தேவையோ அதனை தேர்வு செய்யவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் கொடுக்கப்பட்டுள்ள பிற வசதிகள்:-
It includes (All-In-One):
- EPUB to PDF Converter
- PDF to EPUB Converter
- EPUB to MOBI Converter
- MOBI to EPUB Converter
- MOBI to PDF Converter
- PDF to MOBI Converter
- Kindle to PDF Converter
- PDF to Kindle Converter
- AZW to PDF Converter
- PDF to AZW Converter
- EPUB to DOC Converter
- EPUB to TXT Converter
பொதுவாக பைல்களை கன்வர்ட் செய்யும் சமயம் நமக்கு ஒரிஜினல் பைலில் எந்த பாண்ட் அளவு உள்ளதோ அதே அளவு நமக்கு கிடைக்கும். ஆனால் இந்த சாப்ட்வேரில் நமக்கு தேவையான அளவிற்கு எழுத்துருக்களையும் மார்ஜினையும் தேர்வு செய்துகொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.தேவையானதை தேர்வு செய்து இறுதியில் ஓ.கே.தரவும்.
இப்போது உங்களுக்கு தேவையான பார்மெட்டினை தேர்வு செய்துவிட்:டீர்களா..;இனி இதில் நீங்கள் எந்த இடத்தில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். இறுதியாக இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக்செய்யவும். சில நிமிடங்களில் உங்களுக்கான பைலானது மாறிஉள்ளதை காணலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
பயன்படுத்த எளிதாகவும் சுலபமாகவும் உள்ளது. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.