Monday, February 24, 2014

வேலன்:-மாணவர்கள் தேர்வுகளில் வெற்றி பெற

அடுத்தமாதம் ஆண்டுத்தேர்வுகள் ஆரம்பமாகப்போகின்றது. மாணவர்கள் தேர்வில் எளிதில்வெற்றி பெற அறிய ஆலோசனைகள்.குறிப்புகள்.எளிதில் நினைவுகொள்ளும் வழிகள் ஆகியவற்றை இந்த புத்தகத்தில் கொடுத்துள்ளார்கள். 1 எம்.பி.க்கும் குறைவான இந்த புத்தகத்தினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

 இதன் இன்டெக்ஸ் பக்கத்தில் உங்களுக்கு மொழி மற்றும் கணக்கு,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் எவ்வாறு குறிப்பெடுப்பது;.கணக்கு பாடங்களில் பார்முலாக்களை எவ்வாறு நினைவில் கொள்வது. சமூக அறிவியலில் எவ்வாறு வரலாற்று குறிப்புகளை நினைவில்கொள்வது என விரிவாக விளக்கிஉள்ளார்கள். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 ஒரு செங்கோண முக்கோணத்தில் sin o என்பது எதிர்பக்கம் மற்றும் அடுத்துள்ளபக்கதினை குறிக்கும் என படித்துள்ளோம். அதையே எளிதில் நினைவில் கொள்ள Sir Oliver's Horse Came Ambling Home To ;Oliver's Aunt என வாக்கியமாக நினைவில் கொண்டால் நமக்கான பார்முலா எளிதில் நினைவுக்கு வரும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதுபோல அவர்கள் அறிவியல் வரலாறு புவியியல் என ஒவ்வொன்றிற்கும் எளிய விளக்கங்கள் புரிந்துகொள்ளும் வகையில் கொடுத்துள்ளார்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

2 comments:

  1. Blogger சே. குமார் said...
    உபயோகமான பகிர்வு...//

    நன்றி குமார் சார்.
    வாழ்க வளமுடன்
    வேலன்.

    ReplyDelete