Monday, March 31, 2014

வேலன்:-வீடியோக்களை 3D மற்றும் 2D வீடியோக்களாக மாற்ற

நம்மிடம் உள்ள வீடியோக்களை நாம் 2டி மற்றும் 3 டி ஆக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.23 எம்.பி.கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் பைல் ஒபபன் செய்து நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும்.

 இதில் வீடியோ தேர்வானதும் அதனை கிளிக் செய்து மேலே உள்ள எடிட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். சில வீடியோக்கள் Brightness Contrast Hue.Saturation போன்றவை குறைவாக இருக்கும். இதில உள்ள ஸ்லைடரை அட்ஜஸ்ட் செய்வது மூலம் நாம் விரும்பும் மாற்றங்களை கொண்டுவரலாம்.
 அதுபோலவே வீடியோக்களை பிரிக்க ஒன்றாக மாறறவும் இந்த சாப்ட்வேரில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 3 டி எபெக்ட் நமக்கு வேண்டியவாறு செட் செய்திட இதில ஆப்ஷன்கள் கெர்டுத்துள்ளார்கள். 
கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
 அதுபோல குறிப்பிட்ட வீடியோவில் நீங்கள் சிறு சிறு படங்களாக - ப்ரேம்களாக மாற்ற இதில் வசதி கொடுத்துள்ளார்கள். நீங்கள் உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்து பின்னர் இதில்கொடுத்துள்ள கேலரி கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில இமேஜ் ஆனது எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கான படம் உங்கள் கேலரியில் சேர்ந்திருப்பதை நீங்கள் காணலாம். திரைப்படங்கள்,பாடல்கள் போன்றவற்றில் குறிப்பிட்ட காட்சியை நீங்கள் படமாக மாற்ற விரும்பினால் இதன் மூலம் தத்ரூபமாக நீங்கள் செய்துகொள்ளலாம். நீங்கள் விரும்பிய படங்கள் இமேஜ் படங்களாக உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் படத்தினை 3 டி ஆக மாற்றியவுடன் இதில் உள்ள ப்ரிவியூ மூலம் பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்களுக்கான 3 டி வீடியோ படம் கீழே:-
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Tuesday, March 25, 2014

வேலன்:- பைல்களை சிடியில் காப்பி செய்திட

நமது கணிணியில் உள்ள தகவல்களை சிடியில் மாற்றிட நாம் நீரோ சாப்ட்வேரினை பெரும்பாலும் பயன்படுத்துவோம். அதுபோல இந்த மூவை சில்லி பர்னர் சாப்ட்வேர் பயன்படுகின்றது. 23 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் வலதுபுறம் கீழ்கண்ட டேப்புகள் கொடுத்துள்ளார்கள். நாம் காப்பி செய்யப்போவது சிடியா.டிவிடியா.ஆடியோ.புளுரே என தேவையானதை தேர்வு செய்யவும்.உங்களுடைய தேரவு ஏற்ப கீழே உள்ள ஸ்லைடரில் அளவுகள் மாறுவதை காணலாம்.
நமக்கான பைலானது டேடா.ஆடியோ.வீடியோ.காப்பி என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும். 
 பின்னர் இதில் உள்ள ஆட் கிளிக் செய்து நமக்கான பைலினை தேர்வு செய்யவும். பின்னர் நமக்கான பைலானது ஐஎஸ் ஓ அல்லது சிடிபர்னர் என எதுதேவையோ அதனை தேர்வு செய்யவும்.இப்போது உங்களுக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கான சிடிடிரைவில் சிடியை போடவும்.இதில் உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கான சிடியில் பைல்கள் காப்பி ஆனதை நீங்கள். காணலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்க வளமுடன்
வேலன்.


Friday, March 21, 2014

வேலன்:-வீடியோக்களை தரம் குறையாமல் அளவினை குறைக்க

வீடியோக்களை நாம்நேரடியாக படம் பிடித்து கணிணியில் பதிவிறக்கம் செய்யும்சமயம் அதனுடைய கொள்ளளவு அதிகமாக இருக்கும். 1 மணிநேரம் ஓடும் வீடியோவானது 4 ஜி.பி. அளவிற்கு மேல் செல்லும் .நமக்கான வீடியோவினை நண்பர்களுக்கோ -உறவினர்களோக்கோ இணையம் மூலம் பகிரந்துகொள்வதுஅதன்  அளவு அதிகமாக இருப்பதால் சிரமம்.இந்த சிரமத்தினை போக்க நாம்வீடியோக்களை குறைந்த அளவாக மாற்ற அளவில் சிறிய எம்.பி.4 பைல்களை பயன்படுத்துகின்றோம். எம்.பி.4 பார்மெட்டை காட்டிலும் குறைவாக வீடியோவினை மாற்ற - அளவு குறையாமல் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது:. 9 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் உள்ள ஓப்பன் கிளிக் செய்து நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும்.இதில் file size.Birate.Video Format.Audio Format video Birtate.Duration.width.Height என இதில் நிறைய ஆப்ஷன்கள் உள்ளது.
 இதில் உள்ள ஆப்ஷன் கிளிக் செய்திட Desired Video Size கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் 10 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நாம் வீடியோவினை தேர்வு செய்யலாம். 
 இதில் நாம் வீடியோவினை கட் செய்யவும் அளவினை குறைக்கவும்.வீடியோவினை Aspect Ratio படி நாம் குறைத்துக்கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள். 
இதில் உள்ள Compress  கிளிக் செய்திட சிலநொடிகளில் நமக்கான வீடியோ அளவில் குறைந்து கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
சில நொடிகளில் நமக்கான வீடி யோ அளவில் :குறைந்து உள்ளதை காணலாம். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, March 17, 2014

வேலன்:-போட்டோ ஸ்லைட் ஷோ

புகைப்படங்களை வீடியோவாக மாற்றும் சாப்ட்வேர் அதிகம் இருந்தாலும் புதியதாகவும் வித்தியாசமாகவும் இந்த ஸ்லைட்ஷோ சாப்ட்:வேர் உள்ளது. 40 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நம்மிடம் உள்ள புகைப்படங்களை டிராக்அன்ட் டிராப் முறையிலோ புகைப்படங்களை தேர்வு செய்தோ எடுத்துக்கொள்ளலாம். பிறகு இதில் உள்ள நெக்ஸ்ட் பட்டனை கிளிக் செய்யவும்.
புகைபடங்களை வேண்டிய அளவிற்கு செட் செய்துகொள்ளலாம். மேலும் நமக்கு விருப்பமான பாடல்களையும் இதில் எளிதில் சேர்க்கலாம்.அடுத்து இதில் உள்ள எபெக்ட் கிளிக் செய்திட நமக்கான எபெக்ட்கள் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.ட
இதில் ப்ரிவியுவும் பார்க்கும் வசதி உள்ளது. தேவைப்பட்டால் மாற்றங்கள் செய்துகொள்ளலாம்.அடுத்து உள்ள நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் விரும்பும் வீடியோ பைலாகவோ அல்லது நேரடியாக சிடியில் காப்பிசெய்தோ வைத்துக்கொள்ளலாம்.உங்களுக்கான ஆப்ஷன்  தேர்வு செய்ததும் உங்களுக்கான பணி ஆரம்பமாகும். நான் வீடியோ பைலினை தேர்வு செய்துள்ளேன். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இது டிரையல்வெர்ஷன் காப்பிதான் உங்களுக்கு பிடிதத்திருந்தால் முழுவெர்ஷனை வாங்கிக்கொள்ளலாம் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Wednesday, March 12, 2014

வேலன்:-அனைத்து கணிணி செயல்களும் ஒரே கிளிக்கில் ஒப்பன் செய்திட

கணிணியில் பயன்படுத்தும் இருபதுக்கும் மேற்பட்ட பணிகளை சுலபமாக நாம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு உங்களுடைய டாக்ஸ்பாரில் வந்து அமர்ந்துகொள்ளும். இதில் உள்ள ஐகானை கிளிக் செய்திட கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் Basic.Memo.Color.Shurtcut.Clock.Calender.Wedget.Share என 8 டேப்புகள்கொடுத்துள்ளார்கள் கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.தேவைப்படும் டேபினை கிளிக் செய்து தேவையானதை நாம் தேர்வு செய்துகொள்ளலாம்.
 
இதில் உள்ள ஷார்ட்கட் கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் எந்த ப்ரோகிராம் அடிக்கடி பயன்படுத்த விரும்புகின்றமோ அந்த ப்ரோகிராமின் ஷார்ட்கட்டாக தேர்வு செய்துகொள்ளலாம். விரும்பும் ஷார்ட்கட் கீயை தேர்வு செய்திட உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள காலண்டர் கிளிக்செய்து நமக்கு தேவையான பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களை குறித்துவைத்துக்கொள்ளலாம்.
திருமண நாளிகை குறித்துவைததிட ஏதுவாக வந்துள்ள விண்டோவினை பாருங்கள்.
 இதில் உள்ள விட்ஜெட் டில் ரவுண்ட விட்ஜெட் கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் தேர்வு செய்த ப்ரோகிராம்கள் வட்டவடிவில் நமக்கு டெக்ஸ்டாப்பில் கிடைக்கும்.தேவையானதை கிளிக்செய்திட நமக்கான விண்டோ ஓப்பன் ஆகும்.




நமக்கு விருப்பமான டேப்புகளை நாம் விரும்பியவாறு இதில் செட் செய்திட இதில் உள்ள ஐகானினை கிளிக் செய்திட விண்டோ ஓப்பன் ஆகும். இதில்தேவையான ப்ரோகிராமினை எளிதில் தேர்வு செய்துகொள்ளலாம்.




இதில் எளிதில் கணிணியை லாக் செய்துகொள்ளலாம். கணிணியை ஆப் செய்துகொள்ளலாம். காலண்டர் கொண்டுவரலாம். விண்டோவினை கேப்சர் செய்துகொள்ளலாம்.கணிணி ப்ரோகிராமினை லாக் செய்து கொள்ளளலாம்.கணிணியின் ஒவ்வொரு செயலுக்கும் நாம் தனிதனியே செல்லாமல் ஒரே இடத்தில் இருந்து அனைத்தையும் ஒரு கிளிக்கில் முடித்துவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.





Saturday, March 8, 2014

வேலன்:-வித்தியாசமான யூடியூப் வீடியோ டவுண்லோடர்.

சாதாரண யூடியூப் டவுண்லோடர் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நவீன வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர் உள்ளது.அதிகம்பேரால் பார்க்கப்பட்ட வீடியோக்கள்.பகிரப்பட்ட வீடியோக்கள்.என அதிக வசதிகளுடன் இந்த யூடியூப் டவுண்லோடர்  உள்ளது. 11 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நாம் பார்க்கவிரும்பும் வீடியோவின் யூஆர்எல் காப்பிசெய்து இதில் உள்ள டவுண்லோடு லிங்க்கில் பேஸ்ட் செய்யவும்.இதில் டவுண்லோடின் வீடியோ தரத்தினை நாம் நிர்ணயித்துக்கொள்ளலாம். அதுபோல நாம் எந்த பார்மெட்டுக்கு வீடியோவினை பதிவிறக்கம் வேண்டுமோ அந்த பார்மெட்டினையும்முடிவுசெய்துகொள்ளலாம்.இதில் 20க்கும் மேற்பட்ட வீடியோ பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். அதுபோல ஆடியொவிற்கும் விதவிதமான பார்மெட்டுக்கள் கொடுத்துள்ளார்கள். இதுதவிர 20 வகையான டிவைஸ்களின் மாடல்கள் கொடுத்துள்ளார்கள். அதற்கேற்பவும் நாம்விடியோவினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 மேலும் இதில் உள்ள சர்ச் கிளிக் செய்திடவரும் விண்டோவில்  நாம் விரும்பும் தலைப்பினை தட்டச்சு செய்யவேண்டும். வீடியோ விரும்பிய அளவில் எதுவேண்டுமோ அதனை தேர்வு செய்திட இதில் வசதி செய்யப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



 இதில் உள்ள யூடியூப் கிளிக் செய்திட வரும் விண்டோவில் இன்றைக்கு பிரபலான வீடியோ.அதிகம் பேரால் பகிர்ந்துகொண்ட வீடியோ.அதிகம்பேரால் பார்வையிடபட்ட வீடியோ.என எந்த கேட்டகிரியில் ;உங்களுக்கு வேண்டுமொ அதனை தேர்வு செய்து பார்வையிடலாம். அதுமட்டுமல்லாது மொத்த கேட்டகிரியில் உள்ள வீடியோக்களையும் நாம் சுலபமாக பார்வையிடலாம்.
 அவர்கள்கொடுத்துள்ள விவரங்களை கீழே பாருங்கள்.
இதில் நாம் ஒப்பன் செய்ததும் நமது டெக்ஸ்டாப்பில் இதற்கான ஐகான் ஒன்று அம்புகுறியில் உங்களுக்கு தெரியும்.நாம் விரும்பும் வீடியோவினை நாம் இழுத்துவந்து இதில் விட்டால் நமக்கான வீடியொ பதிவிறக்கம் ஆகும். மேலும் நாம் இதனை புக்மார்க்காக வைத்துக்கொண்டும் நமக்கான வீடியோவினை சுலபமாக பதிவிறக்கலாம். கீழே உள்ள விண்டோவில்
 பாருங்கள்.



பயன்படுத்த சுலபமாகவும் பதிவிறக்கம் செய்யும் சமயமே நாம் விரும்பும் பார்மெட்டில் பதிவிறக்கம் செய்திடவும் வசதிஉள்ளதால் இது அனைவராலும் விரும்பப்படும் என்பதில் சந்தேகமில்லை. நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Thursday, March 6, 2014

வேலன்:-டிக்‌ஷனரி மற்றும் மொழி மாற்றம் செய்திட

டிக்ஷனரி மற்றும் மொழி மாற்றம் செய்திட இந்த சாப்ட்வெர் பயன்படுகின்றது. 11 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 நாம் இதில் எந்த வார்த்தைக்கு விளக்கம் தேவையோ அந்த வார்த்தையை இதில் தட்டச்சு செய்யவும். அதற்கான விரிவான விளக்கம் நமக்கு உடனே கிடைக்கும்.மேலும் அது சம்மந்தமான தொடர்புடைய வார்த்தைகளும் நமக்கு அதன் அருகிலேயே விரிவாக கிடைக்கும். கீழே உள்ள விண்டூவில் பாருங்கள்.
 மேலும் நாம் தேர்வு செய்த வார்தைக்கான மொழி உச்சரிப்பை ஒலி வடிவில் கேட்கலாம். இதில் மேற்புறம் உள்ள சின்ன ஐகானில் கிளிக் செய்திட நமக்கான ஒலி கிடைக்கும். மேலும் நமது வார்தைக்கான சரியான இதர மொழி களில் நமக்கான வார்த்தைக்கான மொழியாக மாற்றிக்கொள்ளலாம். நான் கம்யூட்டர் என்பதனை இந்தியில்எவ்வாறு வரும் என தட்டச்சு செய்தேன். எனக்கு கீழ்கண்ட வாறு விண்டோ தோன்றியது. 
 மேலும் இதில்உள்ள Appendices Options கிளிக் செய்திட நமக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Currency Converter.International Dialog Codes.Time Zone Converters.Currency Converts என பலவிதமான ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். நமக்கு எது தேவையோ அதனை இதன் மூலமாக இன்ஸ்டால்செய்துகொள்ளலாம். 
 பல்வேறு நாடுகளின் கரன்சி மற்றும் மொழியை கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 இதன் மூலம் நமக்கு Irregular Verbs அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 பல்வேறு நாடுகளின் அப்போதைய உலக நேரத்தினை இதன் மூலம் எளிதில் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
 உலோகங்களின் பெயர்.அதன் எண்.அதன் கோட்;.அதன் எடை.அது உருகும் தன்மை என பல்வேறு உலோகங்களை எளிதில் அறிந்துகொள்ளலாம். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஒரு சின்ன சாப்ட்வேரில் பல்வேறு வசதிகள் உள்ள தால் மாணவர்களுக்கு இது பெரிதும் பயன்தரும். நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Monday, March 3, 2014

வேலன்:-டெக்ஸ்டாப்பில் கணிணி தகவல்கள்.

டெக்ஸ்டாப்பிலேயே அனைத்து விவரங்களையும் எளிதில் அறிந்துகொள்ள இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 400 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



இதில் கோர் டெம் ரசர்.லேப்டாப்பாக இருந்தால் பேட்டரி சதவீதம். சிபியூ தகவல்கள்.ரேமின் மொத்த அளவு மற்றும் பயன்படும் அளவு,நமது ஐ.பி. முகவரி.பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் அளவுகள் செகண்டில்.மேலும் நமமிடம் உள்ள டிரைவ்களில் பயன்பாட்டுக்கு உள்ள அளவு மற்றும் மீதம் உள்ள அளவு என அனைத்து விவரங்களும் நமது டெக்ஸ்டாப்பிலேயே எளிதில் அறிந்துகொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்
வாழ்கவளமுடன்
வேலன்.

Saturday, March 1, 2014

வேலன்:-புதிய ஆங்கில வார்த்தையை கண்டுபிடிக்க

ஆங்கிலத்தில் புதிய புதிய வார்த்தைகள் அறிந்துகொள்ளவும் நாமே புதிய வார்த்தைகளை உருவாக்கவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. ஆங்கில ;அறிவினை வளர்ப்பதற்கும் ஆங்கிலத்தில் மேதையாவதற்கும் இது உதவுகின்றது. 800 கே.பி. அளவுள்ள இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால்செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் ஒருவரோ அல்லது இரண்டுபேரோ விளையாடலாம்;. இந்த சாப்ட்வேரினை இன்ஸ்டால் செய்து கிளிக் செய்ததும் வரும் விண்டோவில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.இதில் உள்ள 25 கட்டங்களில் ஒவ்வொரு ஐந்து கட்டங்களுக்கும் ;முதலில் எழுத்துக்கள் வரும் .நாம் வார்தையை முடிவு செய்து அந்த எழுத்தினை கிளிக் செய்தால் கீழே உள்ள விண்டோவில் அந்த எழுத்துக்கள் வார்தையாக தெரியவரும். வார்தை சரியாக இருந்தால் இதில் உள்ள வேர்ட் கிளிக் செய்தால் பக்கத்தில் உள்ள வேர்ட் லிஸ்ட் வார்ததை தெரியவரும். குறைவான நேரத்தில் நீங்கள் எவ்வளவு வார்த்தைகளை உருவாக்குகின்றீர்களோ அதற்கு ஏற்ப மதிப்பெண்கள் வழக்கப்படும். இதனை இரண்டுபேராகவும் விளையாடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.