நம்மிடம் உள்ள வீடியோக்களை நாம் 2டி மற்றும் 3 டி ஆக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.23 எம்.பி.கொளளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் பைல் ஒபபன் செய்து நம்மிடம் உள்ள வீடியோவினை தேர்வு செய்யவும்.
அதுபோலவே வீடியோக்களை பிரிக்க ஒன்றாக மாறறவும் இந்த சாப்ட்வேரில் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
3 டி எபெக்ட் நமக்கு வேண்டியவாறு செட் செய்திட இதில ஆப்ஷன்கள் கெர்டுத்துள்ளார்கள்.
கீழே உள்ள விண்டோவில பாருங்கள்.
அதுபோல குறிப்பிட்ட வீடியோவில் நீங்கள் சிறு சிறு படங்களாக - ப்ரேம்களாக மாற்ற இதில் வசதி கொடுத்துள்ளார்கள். நீங்கள் உங்களுக்கான வீடியோவினை தேர்வு செய்து பின்னர் இதில்கொடுத்துள்ள கேலரி கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில இமேஜ் ஆனது எந்த பார்மெட்டில் வேண்டுமோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்து இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும். உங்களுக்கான படம் உங்கள் கேலரியில் சேர்ந்திருப்பதை நீங்கள் காணலாம். திரைப்படங்கள்,பாடல்கள் போன்றவற்றில் குறிப்பிட்ட காட்சியை நீங்கள் படமாக மாற்ற விரும்பினால் இதன் மூலம் தத்ரூபமாக நீங்கள் செய்துகொள்ளலாம். நீங்கள் விரும்பிய படங்கள் இமேஜ் படங்களாக உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் படத்தினை 3 டி ஆக மாற்றியவுடன் இதில் உள்ள ப்ரிவியூ மூலம் பார்க்கலாம்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
உங்களுக்கான 3 டி வீடியோ படம் கீழே:-
நீங்களும் பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.