நீங்கள் அரசின் எந்த ஒரு கல்வித்தகுதி பெற்றிருந்தாலும் அதனை பதிவு செய்வது அவசியமாகும். இது உங்கள் அரசின் வேலைவாய்ப்புக்கு உதவிகரமானதாக இருக்கும்.மாணவர்களின் அடிப்படை கல்வித்தகுதியாக பத்தாம் வகுப்பு கல்விதகுதியை வைத்துள்ளார்கள். நீங்கள் பத்தாம் வகுப்பு முடித்திருந்தால் உங்கள் கல்விதகுதியை இதில் பதிவேற்றம் செய்யலாம். அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு கூடுதல் தகுதியையும் நீங்கள் பதிவேற்றிக்கோண்டே செல்லலாம். முதலில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் எவ்வாறு பதிவேற்றம் செய்வது என பார்க்கலாம். முதலில் தமிழக அரசின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in/Empower/LoginAction.htm என்கின்ற பகுதிக்கு செல்லுங்கள். அதனை ஓப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில வலதுபுறம் லாகின் செய்கின்ற விண்டோ கொடுத்துஇருப்பார்கள். நாம் ஏற்கனவே பதிவிட்டிருந்தால் யுசர் ஐடி கொடுதது உள்செல்லலாம் நாம் புதியதாக பதிவு செய்ய இருப்பதால் இதில் உள்ள நீயூ யூசர் ஐடி என்பதனை கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள அக்ரிமெண்ட்டில் நீங்கள் ஒப்புக்கொண்டு கிளிக் செய்யவும்.
வரும் விண்டோவில் பதிவு செய்பவர் பெயர்.பாலினம். தந்தை பெயர்.யூசர் ஐடி.பாஸ்வேர்ட்.பிறந்த தேதி.உங்கள் மொபைல் எண்.போன்ற விவரங்களை கொடுத்துவிட்டு சேவ் கொடுக்கவும்;.நட்சத்திர குறியிட்ட எந்த காலத்தினையும் காலியாக விடவேண்டாம்.
பதிவு செய்பவரின் பெயர்.தகப்பனார் பெயர்.தாய் பெயர்.பிறந்த தேதி.பாலினம்.திருமண தகவல்.மதம்.ஜாதி.ஜாதி சான்றிதழ் எண்.ஜாதி சான்றிதழ வழங்கிய அதிகாரி விவரம்.கைபேசி எண் போன்ற விவரங்களை கொடுக்கவேண்டும். பின்னர் இதில் உள்ள சேவ் கிளிக் செய்யவும்.
அடுத்து வரும் விண்டோவில் கல்வி தகுதி;.தேர்ச்சி பெற்ற ஆண்டு.படித்த மொழி.துணை மொழி.வாங்கிய மதிப்பெண்.மதிப்பெண் சா ன்றிதழ் எண் போன்ற விவரங்களை அளித் சேவ் கிளிக் செய்யவேண்டும்.
தட்டச்சு மற்றும் தொழில்நுட்ப தகுதி ஏதும் இருப்பின் அதன் விவரங்களை உள்ளீடு செய்யவேண்டும். கடைசியாக சேவ் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
தகவல்கள் சரியாக இருப்பின் ஓ.கே.தரவும். உங்களுக்கு பதிவு செய்த விவரம் பிடிஎப் வடிவில் கிடைக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
ஆன்லைன் மூலம் பதிவு செய்ததால்உங்களுக்கு அலுவலக அதிகாரி கையேப்பம் இருக்காது.இதனுடைய யூசர் நேம் மற்றும் பாஸ்வேர் கொண்டு உங்கள் கூடுதல் தகுதிகளை பதிவேற்றம் செய்துகொள்லலாம்.மேலும் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மறக்காமல் ரீனிவல் செய்துகொள்ளவும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.