Thursday, March 9, 2017

வேலன்:-வேண்டிய பைல்களை உடனடியாக திறக்க

தேவையான பைல்களை.போல்டர்களை.அப்ளிகேஷன்களை.விருப்பமான வற்றை உடனடியாக திறக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.2 எம்.பிக்கும் குறைவான  இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் ;செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் இதன் ஐகான் உங்களுக்கு டாக்ஸ்'பாரில் வந்து அமர்ந்துகொள்ளும்.  அதனை ரைட் கிளிக் செய்து வரும் விண்டோவில் செட்டிங்ஸ் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இதில் போல்டர். டாக்குமெண்ட்.அப்ளிகேஷன்.ஸ்பேஷல் போல்டர்.லிங்க்.சப்மேனு.குருப் என எதுவேண்டுமோ அதனுடைய ரேடியோ பட்டனை கிளிக்செய்து கன்டினியூ கிளிக் செய்யவும். பின்னர் உங்களுக்கு கீழ்கண்ட விணடோ ஓப்பன் ஆகும். 
 இதில் உங்களுக்கான பைல் இருக்கும் இடத்தினை தேர்வு செய்து கீழே உள்ள ஆட் கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கான பேவரிட் மெனு இதனுடைய லிஸ்டில் சேர்ந்துவிடும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் சி டிரைவ்.விண்டோ,ப்ரோகிராம் பைல்.நோட்பேட்.மைஸ்பேஷல் போல்டர் என நிறைய பைல்கள் உள்ளன.தேவையான பைல்களை நாம்இதன் மூலம் நேரடியாக திறந்து பயன்படுத்தலாம். இதன்மூலம் நமக்கு நிறைய நேரம் சேமிப்பாகும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

2 comments:

  1. Nagendra Bharathi said...

    அருமை

    நன்றி நண்பரே...

    வாழ்க வளமுடன்
    வேலன்

    ReplyDelete