Saturday, March 4, 2017

வேலன்:- இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்திட -ஈகிள் கெட்

இணையத்திலிருந்து புகைப்படங்கள்.வீடியோக்கள்.அப்ளிகேஷன்கள் போன்றவற்றை பதிவிறக்கம் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. இதனை பதிவிறக்கம் செய்திடஇங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


உங்களுக்கான டவுண்லோடு லிங்கை தேர்வு செய்து அதனை இதில் பேஸ்ட் செய்யவும்.
நீங்கள் விதவிதமான பைல்களை டவுண்லோடு ஒரே சமயத்தில் செய்யமுடியும் வீடியொ பைல்களை வேண்டிய பார்மெட்டுக்கும் நாம் சுலபமாக மாற்றிவிடமுடியும்.
நீங்கள் குரோம் உபயோகிப்பராக இருந்தால் இன்பில்டாக இந்த சாப்ட்வேர் அமர்ந்துகொள்ளும். நீங்கள் பதிவிறக்கம் செய்கையில் உங்கள் பணி சுலபமாக இருக்கும். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

No comments:

Post a Comment