Saturday, January 26, 2019

வேலன்:-வீடியோவில் வேண்டிய மாற்றங்கள் கொண்டுவர

வீடியோவில் வேண்டிய மாற்றங்கள் செய்திடவும்.வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும்.வேண்டிய அளவு வெட்டிட.3 டி எஃபெக்ட் கொண்டுவர.வாட்டர் மார்க் கொண்டுவர என நிறைய வசதிகளுடன் இந்த சாப்ட்வேர் உள்ளது. 40 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் மாற்றவேண்டிய வீடியொவினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ளவீடியோ என்ஹன்சர்  கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.


 இதில ரோடேட்.3டி.கிராப்.எபப்கட்.என்ஹன்சர் மற்றும் வாட்டர் மார்க் என ஆறுவிதமான டேப்புகள் கொடுத்துள்ளார்கள்.

உங்களுக்கு எந்த விதமான மாற்றங்கள் தேவையோ அதனை தேர்வு செய்து பயன்படுத்தலாம். அதுபோல நாம் விரும்பும் வீடியோ பார்மெட்டினையும் தேர்வு செய்து அதனை எங்கு சேமிக்க விரும்புகின்றோமோ டிரைவில் அந்த இடத்தினை தேர்வு செய்யவும்.

ஓ.கே.கொடுத்தூ சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள வீடியோவினை வேண்டிய மாற்றங்களுடன் காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன் 
வேலன்.

Saturday, January 5, 2019

வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் அளவினை குறைக்க -BlackBird Cleaning

கேமரா மற்றும் செல்பேசி மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் அளவு அதிகமாக இருக்கும். அதனை இணையத்திலோ மற்றவர்களுக்கோ அனுப்புவது சிரமம். அவ்வாறு உள்ள புகைப்படங்களை தரம் குறையாமல் அளவினை குறைத்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்றுஇதனை பதிவிறக்கம செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன்ஆகும்.



 உங்களிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்திடுங்கள்.அதன் தரம் குறையாமல் அளவ குறைவதனை பாருங்கள்.

இதன் கீழே உள்ள விண்டோவில் தரம்.பிரைட்னஸ்,புளுர்.கலர்,கான்ட்ரஸ்ட் என ரேடியோ பட்டன்கள் கொடுத்துள்ளார்கள் நமக்கு தேவையானதை தேர்வு செய்துகொள்ளலாம்.
தனிதனி புகைப்படங்களையும் ஒரு போல்டரில் உள்ள அனைத்து புகைப்படங்களையும் மாற்றிட இந்த மென்பொருள் வகைசெய்கின்றது. 

இதில் உள்ள பேட்ச் ஆப்டிமைஷனை கிளிக் செய்து உங்கள் கணினியில் உள்ள போல்டரினை தேர்வு செய்துகொள்ளலாம். சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள் புகைப்படங்கள் அனைத்தும் அளவு குறைந்து நீங்கள் சேமித்த இடத்தில ;இருப்பதனை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்கவளமுடன்
வேலன்.

Wednesday, January 2, 2019

வேலன்:-புகைப்படங்களை ஓரே சீ)ராக மாற்றிட -Auto rotation.

புகைப்படங்கள் நாம் எடுக்கையில் சில காட்சிகளை நாம் கேமராவினை படுக்கை வசத்திலோ நேராகவே வைத்த எடுப்போம் அவ்வாறு எடுக்கப்படும் புகைப்படங்களை ஓரே சீராக மொத்தமாக மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது. இதன் இணையதளம் சென்று இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.

இப்போது உங்கள் புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்திடவும். பின்னர் அதனை ரைட்கிளிக் செய்திட வரும் விண்டோவில் Autorotate all JPEGs in Folder என்பதனை தேர்வு செய்து கிளிக் செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்கள் போல்டரில் உள்ள புகைப்படங்கள் எல்லாம் மாறியபின்னர் உங்களுடைய போல்டரை நீங்கள்சென்று பார்த்தால் உங்கள் அனைத்து புகைப்படங்களும் படுக்கை வாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் நெடுக்கை வாட்டத்தில் மாறியிருப்பதை காணலாம். பயன்படுத்திப்பாருங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.