வீடியோவில் வேண்டிய மாற்றங்கள் செய்திடவும்.வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிடவும்.வேண்டிய அளவு வெட்டிட.3 டி எஃபெக்ட் கொண்டுவர.வாட்டர் மார்க் கொண்டுவர என நிறைய வசதிகளுடன் இந்த சாப்ட்வேர் உள்ளது. 40 எம்.பி.கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் மாற்றவேண்டிய வீடியொவினை தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ளவீடியோ என்ஹன்சர் கிளிக் செய்யவும. உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
உங்களுக்கு எந்த விதமான மாற்றங்கள் தேவையோ அதனை தேர்வு செய்து பயன்படுத்தலாம். அதுபோல நாம் விரும்பும் வீடியோ பார்மெட்டினையும் தேர்வு செய்து அதனை எங்கு சேமிக்க விரும்புகின்றோமோ டிரைவில் அந்த இடத்தினை தேர்வு செய்யவும்.
ஓ.கே.கொடுத்தூ சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின்னர் உங்கள வீடியோவினை வேண்டிய மாற்றங்களுடன் காணலாம். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.