Friday, February 1, 2019

வேலன்:-புகைப்படத்தின் பின்புற காட்சிகளை நீக்க-Photosissors

புகைப்படங்களில் பின்புறங்களில் உள்ள தேவையில்லாதவற்றை நீக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 10 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். 
இந்த புகைப்படத்தில் பின்புறத்தில் தேவையில்லாமல் புத்தக அலமாறி உள்ளது .அதனை எவ்வாறு நீக்குவது என பார்க்கலாம். இந்த சாப்டவேரின் வலதுபுறம் உள்ள விண்டோவில் பாருங்கள். உங்களுக்கு கீழ்கண்ட டேப் கொடுக்கப்பட்டிருக்கும்.


இதில் உள்ள பச்சை நிற பட்டனை கிளிக் செய்து புகைப்படத்தில் எந்த இடம் நமக்கு தேவையானது அதனை பச்சை நிறம் கொண்டு கிளிக் செய்யவும். உருவத்தில் முழுவதும் பச்சை நிறம் ஆனதை கவனிக்கவும்.
இப்போது அதே டேபிள் உளள சிகப்பு நிறத்தினை கிளிக் செய்து தேவையில்லாத  இடங்களில் கர்சர் மூலம் வண்ணம் பூசவும்.
முழுவதும் முடிந்ததும் பக்கத்தில் உள்ள விண்டோவில் உங்களுக்கு பின்புறம்  அற்ற புகைப்படம் கிடைக்கும்.
இதுபோல போட்டோஷாப் துணையில்லாமல் நமக்கு பின்புறம் நீக்கப்பட்ட புகைப்படம் கிடைக்கும். பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

1 comment: