Sunday, January 12, 2020

வேலன்:-ஆன்லைனில் புகைப்படங்களின் ஓரங்களை மடிக்க-Roundpic

நம்மிடம் உள்ள புகைப்படங்களின் ஓரங்களை நாம் ரவுண்ட்டாக மாற்ற போட்டோஷாப் பயன்படுத்துவோம். ஆனால் இந்த இணையதளம் நம்மிடம் உள்ள புகைப்படங்களை ஆன்லைனில் வேண்டிய அளவிற்கு ரவுண்டாக மாற்றிகொடுக்கின்றது.இந்த இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இந்த தளம் சென்றதும் உங்களுக்கான புகைப்படத்தினை கணிணியில் இருநது தேர்வு செய்யவும். பின்னர் இதில் உள்ள ரவுண்ட் இட் பட்டனை கிளிக் செய்யவும்.அதில் உங்களுக்கான புகைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கும்..

 கீழ்கண்ட விண்டோ வரும் அதில் புகைப்படத்தில் உள்ள நான்கு மூலைகளில் எந்த இடத்தில் புகைப்படத்தினை மடிக்க வேண்டுமோ அந்த இடத்தினை தேர்வு செய்யவும். நான்கு புறமும் வேண்டும் என்றால் அனைத்து மூலைகளையும் தேர்வு செய்திடவும்.மூலை எந்த அளவிற்கு வளைவு வேண்டுமோ அதற்கான ஸ்லைடரை நகர்த்துவது மூலம் படத்தின் அளவினை நாம் தேர்வு செய்திடலாம்.அனைத்து பணிகளும் முடிந்ததும் இதில் உள்ள ரவுண்ட் ஐகானினை கிளிக் பண்ண சில நொடிகளில் உங்களுக்கான புகைபடம் ரவுண்ட் ஷெப்பில் வந்துவிடும். ரவுண்ட் அதிகமாகவும் புகைப்படங்களின் அளவுகளில் மாற்றங்கள் தேவையேன்றாலும் நாம் இதில் உள்ள  ஸ்லைட் பாரினை நகர்த்துவது மூலம் சரிசெய்துகொள்ளலாம்

மடிக்கப்பட்ட ஓரங்களில் பின்புறத்திற்கு எந்த நிறம் நமக்கு பிடித்துள்ளதோ அந்த நிறத்தினை   தேர்வு  செய்யலாம்.
சில மாதிரி புகைப்படங்கள் கீழ் உள்ளது:-

. பயன்படுத்திப்பாருங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

1 comment:

  1. Blogger TEX WILLER said...
    பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே
    ஒற்றை கண் வேலனை எப்படி உருவாக்குவது என தெரிவிக்கவும்
    சிங்கம் சிங்கிளா கிளம்பிரிச்சி
    இப்போது நிறைய பதிவுகள் வருவதை தான் எப்படி சொன்னேன்
    மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள்
    வெங்கடராமன் திருவையாறு
    சார் வணக்கம். வாழத்துக்கள்.
    திருவையாறு எப்போது சென்றீர்கள்.அங்கேயே செட்டில் ஆகிவிட்டீர்களா?
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete