Wednesday, February 19, 2020

வேலன்:-வேண்டிய நிறத்திற்கான கலர் கோடிங் கண்டுபிடிக்க -Colorism

சிகப்பு,பச்சை.நீலம் ஆகிய நிறங்களை கொண்டு பல்லாயிரக்கணக்கான நிறங்களை நாம் கொண்டுவரலாம். 0 லிருந்து 255 வரையில் ஒவ்வொரு நிறத்திற்கும் என 3 நிறங்களையும் சேர்த்து எண்ணற்ற நிறங்களை கொண்டுவரலாம்'. ஒவ்வொரு நிறத்தின் கலவையும் அதற்கான குறியீட்டு எண்ணையும் கொண்டு வேண்டிய நிறத்தினை பெறலாம்.அவ்வாறு நிறங்களை கொண்டு வர இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 3 எம்.பி.கொள்ளளவுகொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
 இதில் கலர் ஜெனரேட்டர் கொடுத்துள்ளார்கள். மூன்று நிறத்திற்கான ஸ்லைட் கொடுத்துள்ளார்கள். ஸ்லைடை மெதுவாக நகர்ததுவதன் மூலம் இதற்கான விண்டோவில் நிறங்கள் தெரிவதுடன் அதற்கான கோடிங் எண்ணும் நமக்கு கிடைக்கும். நிறங்களை தனியாக சேமித்தும் வைத்துக்கொள்ளலாம்.
  அதற்கு அடுத்துள்ள கலர் பிக்கர் கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.இதில் கர்சரை கொண்டு வேறு ஒரு படத்தில் உள்ள நிறத்தினை கிளிக் செய்ய இதற்கான விண்டோவில் நமக்கு நிறம் கிடைக்கும. எப்.7 அழுத்துவதன் மூலம் நிறத்தினை சேமித்து வைத்துக்கொள்ளலாம். 
 இறுதியாக இதில் உள்ள கலர் ப்ரேவ்சர் கிளிக் செய்கையில் உங்களுக்கு கலர் விண்டோ கிடைக்கும். கர்சரை வேண்டிய இடத்திற்கு நகர்த:துவதன் மூலம் தேவையான நிறத்தினை பெறலாம்.
வேண்டிய நிறம் கிடைத்ததும் உங்களுக்கான கோடிங் எண்ணை காப்பி செய்துகொள்ளுங்கள்.இதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை நாம் எளிதில் பெறலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

1 comment:

  1. Do this hack to drop 2lb of fat in 8 hours

    At least 160000 men and women are trying a simple and secret "liquid hack" to drop 2lbs each night while they sleep.

    It is effective and it works every time.

    Here are the easy steps for this hack:

    1) Take a clear glass and fill it with water half full

    2) And now follow this crazy hack

    so you'll become 2lbs lighter the next day!

    ReplyDelete