Sunday, March 22, 2020

வேலன்:-பேஸ்புக்கில் பிடிஎப் பைல்களை இணைக்க-Add PDF File To Facebook

பேஸ்புக்கில் நாம் காண்கின்ற பிடிஎப் பைல்களை எவ்வாறு இணைப்பது என பார்க்கலாம். பிடிஎப் பைல்களை நாம் முதலில் இணையத்தில் அப்லோடு செய்திட வேண்டும். அவ்வாறு இணையத்தில் அப்லோடு செய்கின்ற தளங்கள் கீழே:-

https://issuu.com/

https://www.scribd.com/


இந்த இணையதளங்களில் சென்று உங்கள் இமெயில் முகவரி மூலம் சைன் இன் செய்துகொள்ளவும். பின்னர் அதில் உங்கள் பிடிஎப் பைலினை அப்லோடு செய்யவும். 
 உங்களின் பிடிஎப் பைலானது அப்லோடு ஆகியபின்னர் டிஸ்பிளே ஆகும். அதில கீழே உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதிலிருந்து நீங்கள் நேரடியாக பேஸ்புக் கணக்கிற்கு அப்லோடு செய்யலாம். 
 இல்லையென்றால் இதில் உள்ள எம்பேடட் கிளிக் செய்தால் உங்கள் பிடிஎப் பைலிற்கான எம்படேட்  லிங்க் கிடைக்கும். 

அதனை அப்படியோ காப்பி செய்து உங்கள் பேஸ்புக் கணக்கினில் பேஸ்ட் செய்து போஸ்ட் செய்யலாம். பயன்படுத்திப்பபாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள். 
வாழ்கவளமுடன்
வேலன்.

1 comment: